சிறுகதைகள்
– பெரிய பெரிய விஷயங்களைக் கூட சில பக்கங்களில் சொல்லி விடக்கூடிய வித்தை சிலருக்கு
மட்டுமே கைகூடி வரும். நாவல், ஒரு பக்கக் கதை, ஒரு பாரா கதை என பலவும் இருந்தாலும்,
சொல்ல வரும் விஷயத்தினை சில பக்கங்களில் சிறுகதையாகச் சொல்வதென்பது ஒரு கலை! தலைநகர்
வந்த பிறகு தமிழ் சிறுகதைகள் மட்டுமல்லாது வேறு மொழி சிறுகதைகளும், குறிப்பாக வட இந்திய
சிறுகதைகள் படிப்பது எனக்கு ஒரு பொழுது போக்காக இருந்தது. அதுவும் ஹிந்தி எழுத, படிக்கக்
கற்றுக் கொண்ட பிறகு ஹிந்தியில் சிறுகதைகள் படிக்க ஆரம்பித்தேன். வார இதழ்களாக இருந்தாலும்
சரி, மாத இதழாக இருந்தாலும் சரி, முதலில் படிப்பது சிறுகதையாகத் தான் இருக்கும்.
படம்: நூல் ஆசிரியரின் வலைப்பூவிலிருந்து...
வலையுலகில்
எழுத ஆரம்பித்த பிறகு புத்தகங்கள் படிப்பது வெகுவாகக் குறைந்திருக்கிறது. தில்லி வந்த
புதிதில், நானும் என்னுடைய அறை நண்பர் பாலாஜியும் போட்டி போட்டுக் கொண்டு புத்தகங்கள்
வாசிப்போம். தினம் தினம் Lending Library-யில் புத்தகங்கள் வாடகைக்கு எடுத்து படிப்பதை
வழக்கமாக வைத்திருந்தோம். மாதத்திற்கு இவ்வளவு கட்டணம், எத்தனை புத்தகம் வேண்டுமானாலும்
எடுத்துக் கொள்ளலாம் என்று வைத்திருந்த நூலக முதலாளி, எங்களுக்கு மட்டும் கட்டணம் அதிகம்
கேட்க ஆரம்பித்தார் – மற்றவர்கள் மாதத்தில் மூன்று நான்கு புத்தகங்கள் படிக்க, நாங்கள்
பதினைந்து இருபது புத்தகங்கள் படிப்ப்போம் என்பதால்!
இப்போது
மீண்டும் படிக்க ஆரம்பித்திருக்கிறேன் – புஸ்தகா – WWW.PUSTAKA.CO.IN தளத்தில். வலைப்பூ நண்பர்களின் நூல்கள் தவிர
மற்ற பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்களும் இங்கே சேர்த்திருப்பதால், கொஞ்சம் கொஞ்சமாக
- வாரத்திற்கு ஒரு புத்தகமாவது படிக்க ஆரம்பித்து இருக்கிறேன். அப்படி இந்த வாரம் படித்த ஒரு மின் புத்தகம் –
“என் அம்மாச்சியும் மகிழம்பூக்களும்”. பத்து
சிறுகதைகள் கொண்ட ஒரு தொகுப்பு. ஆசிரியர், நமக்குத் தெரிந்தவர் தான். கீதமஞ்சரி என்கிற வலைப்பூவில் எழுதி வரும் கீதா மதிவாணன்.
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இவரது வலைப்பூவில் பல சிறப்பான விஷயங்களை எழுதி வருபவர்.
சிறுகதைகள்,
நாவல்கள் என படிக்கும்போது கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் நமக்குள்ளே இருக்கும் அந்த
கதாபாத்திரங்களின் குணாதியசங்களைக் கொண்ட நண்பர்களையோ, அல்லது நம்மையோ நினைக்க வைக்கும்.
இந்த கதைத் தொகுப்பும் அப்படியே. பத்து கதைகளிலும் ஏதோ ஒரு சோகம் மெல்லிய இழையோடுவது
போல எனக்குத் தோன்றியது. என் அம்மாச்சியும் மகிழம்பூக்களும் கதையில் நாம் வளர்ந்த இடம்,
பல வருடங்களுக்குப் பிறகு அங்கே செல்கையில் ரொம்பவே மாறிப் போய் இருப்பது தெரிந்து,
அதே போல எனது ஊருக்கு நான் சென்றபோது கிடைத்த அனுபவம் நினைத்து மனதுக்குள் சோகம் வந்தாலும்,
முடிவில் மகிழ்ச்சியே….
ஒவ்வொரு
கதைத் தொகுப்பிலும் ஏதாவது ஒரு விஷயத்தினை நான் கற்றுக் கொள்கிறேன். இந்தத் தொகுப்பிலும்
அப்படி சில வார்த்தைகள் கற்றுக் கொண்டேன் – சவுரி என்றே எனக்குத் தெரிந்திருந்ததை
“இடுமயிர்” என்றும் குறிப்பிடலாம் எனத் தெரிந்து கொண்டது என்
அம்மாச்சியும் மகிழம்பூக்களும் சிறுகதையில். “என் இரண்டங்குலக்
கூந்தலோடு, இடுமயிர் வைத்துப் பின்னலிட்டு, இறுதியில் குஞ்சலங்கட்டி அழகு பார்த்தவர்
என் அம்மாச்சி. குஞ்சலம் ஆடவேண்டுமென்று, நான் ஆட்டி, ஆட்டி நடந்த நடையில், கொத்துக்
கதம்பத்தோடு இடுமயிர்ப் பின்னலும் எங்கோ அவிழ்ந்து விழ, அதைக் கூட உணராமல் நான் விளையாடிக்
கொண்டிருந்ததை இப்போது நினைத்தாலும் இதழ்க் கோடியில் எழுகிறது ஒரு புன்னகை!”
தன்னுடைய
ஆசிரியரை மன நிலை சரியில்லாத நிலையில் பார்க்க எந்த மாணவனுக்குத் தான் பிடிக்கும்.
அப்படி பார்த்த ஒரு மாணவனின் நிலையைச் சொல்லும் கதை குருகாணிக்கை
– தொகுப்பில் இரண்டாம் கதையாக. “டேய் சண்முகம்” என்ற குரல் இப்போது வரை கேட்டுக்கொண்டிருக்கிறது…..
கணவனை
விட்டு பிரிந்து வந்த அனிதாவின் கதை சொல்லும் உனக்கென இருப்பேன்
கதை, சிறு வயதிலேயே கணவனை இழந்து விட்டாலும், கணவனின் சொத்தை நல்ல முறையில் நிர்வகித்து,
ஊர் மக்களுக்கும் நல்லது செய்த ஓட்டாத்தா என அழைக்கப்படும் ஓட்டு வீடு ஆத்தா, கடைசியில்
ரொம்பவும் கஷ்டப்படுவதைப் பார்க்க நேர்ந்த “நிறக்குருடு” கதை என ஒவ்வொரு கதையும் நம்
உணர்வுகளை மீட்டும் கதைகள்.
அப்பா வருவார்
என்ற கதை “சந்தேகம்” எனும் நோய் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விடுவதைச் சொல்லும் கதை.
முடிவு நல்ல முடிவாக இருந்தது – ”வேணாம்மா, இனி நம் வாழ்க்கையில்
சந்தேகம்கிற வார்த்தைக்கே இடந்தர வேணாம். நம்புவோம்! நம்பிக்கை தானே வாழ்க்கை!” என்று
மஞ்சரி எடுத்த முடிவு எனக்குப் பிடித்திருந்தது.
சந்தேகம் என்கிற பெரும்நோயால் வாழ்க்கை இழந்த நண்பர் ஒருவர் பற்றிய எண்ணங்கள்
மனதுக்குள் இன்னும் தழும்பாய்……
நேர்த்திக் கடன்:
கணவனுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி, அக்காவிடம் பணம் வாங்கிச் செல்லும் தங்கை,
அதற்கு உடன்போகும் அம்மா… பாவம் அக்காவை நினைத்தால் ரொம்பவே வருத்தப் படுகிறது மனது.
கடைசியில் அம்மா நினைத்துக் கொள்வதாய் முடிப்பது பொருத்தம் – “இரவு வெகு நேரம் தூக்கம் வராமல் தவித்து பின் கண்ணயர்ந்த பாக்கியத்தின்
கனவில் கெடாவுக்குப் பதில் ராஜாத்தி தலைவெட்டுப் பட்டுக் கிடந்தாள்!”
பிரம்படி
– தன் மாமியார் தன்னைக் கொடுமை படுத்தினார் என்பதற்காக, தனக்கு வரும் மருமகளையும் கொடுமை
படுத்த வேண்டுமா என்ன, தன் மகன் வயிற்றுப் பேத்தி மூலம் பாடம் கற்றுக் கொண்ட திலகவதி
கதை….
அவளா காரணம்
– கடைசியில் வைத்திருந்த வேதா ட்விஸ்ட் பிடித்திருந்தது. கதையின் தொடக்கத்தில் இப்படி
ஒரு ட்விஸ்ட் வரும் என்ற எண்ணமே தோன்றவில்லை!
ஒன்றும் அறியாத பெண்ணோ…. – என்னதான் தனது பிறந்த வீட்டில் நிறைய சுதந்திரத்தோடு,
எந்த வேலையும் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லாது இருந்தாலும், தன் குடும்பம்,
தன் வீடு என்று ஆனபிறகு, பெண்ணிற்கு எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும், சுயமாக எந்த
வேலையும் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுக்கும் கதை!
பத்துக்
கதைகளும் முத்தான கதைகள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படி ஒரு கதைத் தொகுப்பினை படிக்க
முடிந்ததில் மகிழ்ச்சி. சகோ கீதா மதிவாணன் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்….
மேலும் உங்களுடைய பல ஆக்கங்கள் புத்தகங்களாக வெளிவரட்டும்…..
மொத்தம்
98 பக்கங்கள் கொண்ட இந்த மின்னூல் WWW.PUSTAKA.CO.IN தளத்தில் கிடைக்கிறது. ஐம்பது ரூபாய் கொடுத்து
வாங்கிக் கொள்ளலாம் அல்லது வாடகைக்கும் எடுத்துக் கொள்ளலாம். இந்த மின்னூலை கணினி மற்றும்
அலைபேசியிலும் படிக்க முடியும்.
மீண்டும்
சந்திப்போம்… சிந்திப்போம்….!
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி.
சிறந்த பகிர்வு. சகோதரி கீதமஞ்சரியின் எழுத்து வன்மையைச் சொல்லவும் வேண்டுமோ!
பதிலளிநீக்குஉண்மை தான். சிறப்பான எழுத்துக்குச் சொந்தக்காரர் அவர்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
எழுத்துவன்மை இருக்கிறதோ இல்லையோ..எழுத்தால் உங்கள் மனங்களில் இடம்பிடித்திருக்கிறேன். அதுவே மகிழ்ச்சி. மிகவும் நன்றி ஸ்ரீராம்..
நீக்குவிமர்சனம் மிகவும் அருமை ஜி
பதிலளிநீக்குதிருமதி கீதா மதிவாணன் அவர்கள் இன்னும் பல நூல்கள் படைக்க வாழ்த்துகள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குவாழ்த்துக்கு மிகவும் நன்றி கில்லர்ஜி.
நீக்குநேரம் இல்லாமையால் இன்னும் புத்தகாவுக்கு இன்னும் செல்லவில்லை ,உங்கள் விமர்சனம் ஆர்வத்தைத் தூண்டுகிறது :)
பதிலளிநீக்குநேரம் கிடைத்தால் புஸ்தகா தளத்தினைப் பாருங்கள்...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
மிகவும் நன்றி பகவான்ஜி.
நீக்குநேரம் மட்டும் போதாது, காசும் வேண்டும். மாத வாடகை நூறு ரூபாய்.
நீக்குஇனிமேல்தான் நான் சேர வேண்டும்.
-இராய செல்லப்பா நியூஜெர்சி
காசும் வேண்டும்! :) அதே தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய. செல்லப்பா ஐயா.
நூல் அறிமுகம் நன்று..
பதிலளிநீக்குவாழ்க நலம்!..
நன்றி ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
நீக்குநல்ல அறிமுகம்....
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!
நீக்குஅருமையான மதிப்புரை..
பதிலளிநீக்குவாழ்த்துகள் இருவருக்கும்
மிகவும் நன்றி சார்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மீரா செல்வக்குமார் ஜி!
நீக்குஎங்கதான் உங்களுக்கெல்லாம் நேரம் கிடைக்கிறதோ. 7 மணிவரை ஆபீஸ் (வீட்டுக்கு வந்து சேரும் நேரம் வரை). அதற்கப்புறம் வலைத்தளத்தில் எழுதணும். வீட்டிலுள்ளவர்களோடு பேசணும். சமைக்கணும். அதுக்குத் தேவையான சாமான் வாங்கணும். வீட்டைச் சுத்தம் செய்யணும். டிரெஸ் ரெடிபண்ணிக்கணும். மற்ற வலைத்தளங்களைப் படிக்கணும்/கருத்திடணும்... எங்கதான் நேரம் கிடைக்கிறதோ புத்தகம் படிக்க.....
பதிலளிநீக்குஎங்க தான் நேரம் கிடைக்கிறதோ புத்தகம் படிக்க! :) நீண்ட இடைவெளிக்குப்பிறகு இப்போது தான் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். வாரத்திற்கு ஒரு புத்தகமாவது படிக்க நினைத்திருக்கிறேன் - முன்பெல்லாம், வலைப்பூக்கள் இல்லாத சமயத்தில், தினம் ஒரு புத்தகம் படித்திருக்கிறேன்! :) இப்போது முடிவதில்லை!
நீக்குநேரம் அது எனக்குப் போதவே இல்லை! எல்லா வேலைகளும் செய்து முடிக்க!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
திருமதி கீதா மதிவாணன் அவர்களின் பத்து சிறுகதைகளின் தொகுப்பை இரத்தின சுருக்கமாகத் தந்து படிக்கும் ஆவலைத் தூண்டியமைக்கு பாராட்டுகள்! திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவாழ்த்துக்கு மிகவும் நன்றி சார்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குஇனிய அதிர்ச்சியாக என் மின்னூலை வாசித்தது மட்டுமன்றி அதைக்குறித்த விமர்சனத்தையும் பதிவாக்கி சிறப்பித்திருக்கும் உங்களுக்கு என் அன்பும் நன்றியும் வெங்கட். என்னுடைய பெரும்பாலான கதைகளில் சோகம் இழையோடுவது உண்மைதான். மிகவும் மனத்தை பாதித்த சம்பவங்களையே கதைகளாக்குவேன். என்னை பாதித்த உணர்வு வாசகரையும் சென்றடைகிறது என்பதில் மகிழ்ச்சியே. வாசிப்பில் பெரும் ஈடுபாடு கொண்ட உங்களுடைய இவ்விமர்சனத்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறேன். ஊக்கந்தரும் விமர்சனத்துக்கு மிகவும் நன்றி வெங்கட்.
பதிலளிநீக்குநல்லதோர் எழுத்துக்குச் சொந்தக்காரர் நீங்கள். மேலும் பல புத்தகங்கள் வெளி வர வாழ்த்துகள்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.
இணையம் வேகம் குறைவாக இருப்பதால் வலைப்பூக்களைத் திறப்பது மிகவும் கடினமாக உள்ளது. என்னுடையதைக் கூட திறக்கமுடியவில்லை..வாட்சப்பும் அப்டேட் ஆகவில்லை. அதனால் இப்பதிவு வந்ததே தெரியவில்லை. இந்தப்பதிவு குறித்து எனக்குத் தகவல் அனுப்பிய கலையரசி அக்காவுக்கு என் நன்றி.
பதிலளிநீக்குஅட உங்கள் ஊரில் கூட இணைய வேகம் குறைவதுண்டா? இந்தியாவில் பல இடங்களில் இணைய இணைப்பே இல்லை!
நீக்குநேரப் பற்றாக்குறை காரணமாக என்னாலும் பலருடைய பதிவுகள் படிக்க இயலவில்லை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.
நாங்கள் இப்போது புதிதாய்க் குடிபோயிருக்கும் பகுதியில் போதுமான இணைய வசதி இல்லை என்பது உண்மை.. இன்னும் இரண்டு மாதத்தில் சரியாகும் என்கிறார்கள்.. பார்ப்போம்.
நீக்குகாலையில் அலைபேசியில் பார்த்துவிட்டுக் கீதாவுக்குத் தகவல் சொன்னேன். ஒவ்வொரு கதையைப் பற்றியும் சுருக்கமாகச் சொல்லிப் புத்தகத்தை வாசிக்கும் ஆவலைத் தூண்டுவதற்குப் பாராட்டுகள் வெங்கட்ஜி! நானும் படித்துவிட்டு என் கருத்துக்களைப் பகர்வேன். நீங்கள் சொல்லியிருப்பது போல், புஸ்தகா மூலம் நாம் வாங்க நினைக்கும் நூல்கள் மலிவு விலையில் கிடைப்பது நமக்கு ஒரு பெரிய வரப்பிரசாதம்! நன்றி வெங்கட்ஜி!
பதிலளிநீக்குகீதமஞ்சரி அவர்களுக்குத் தகவல் தந்தமைக்கு ஸ்பெஷல் நன்றி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஞா. கலையரசி ஜி!
சிறப்பான எழுத்தாளரின் புத்தகத்திற்கு சிறப்பாக எழுதுபவரின் விமர்சனம். அருமை! கீதமஞ்சரி சகோதரி மேலும் பல நூல்கள் படைத்திட வாழ்த்துகள்!
பதிலளிநீக்குசிறப்பான எழுத்தாளரின் புத்தகத்திற்கு சிறப்பாக எழுதுபவரின்! :) இரண்டாவது பார்ட் - இது கொஞ்சம் ஓவரா இருக்கே! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
மிகவும் நன்றி துளசி சார்.
நீக்குவலையுலகில் பலரது நேர மேலாண்மையை வியந்து பார்க்கிறேன். பாராட்டுகள்! வாழ்த்துகள். ஏனென்றால் என்னால் இயலவில்லை. பல புத்தகங்கள் வாசிக்க உள்ளன. வீட்டு வேலை, வீட்டவருடன் பேசுதல், ப்ளாக், கருத்து என்று தொடர்ந்திடவே பல..பல சமயங்களில் எழுதக் கூட மூளை வேலை செய்வதில்லை...ஹஹ்ஹஹ்
பதிலளிநீக்குவாழ்த்துகள்! பாராட்டுகள் ஜி தங்களுக்கும்!!! அதுவும் மிக அழகாக எழுதுகிறீர்கள்!
கீதா
நேரம் - பல சமயங்களில் அதனோடு போட்டி போட வேண்டியிருக்கிறது கீதா ஜி! அனைத்து வேலைகளுக்கு இடையிலும் இப்படி எழுதுவதும், படிப்பதும் கஷ்டமாகவே இருக்கிறது. என்றைக்கு நிற்கும் என்று தெரியாது.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
நல்லதொரு புத்தகத்தையும், தளத்தையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி. விமரிசனமும் அருமை. கீதமஞ்சரியின் திறமையைச் சொல்லவே வேண்டாம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
நீக்குஅன்பும் நன்றியும் கீதா மேடம்.
நீக்கு