நேற்று
மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். பேருந்து நிறுத்தத்திலிருந்து
வீடு திரும்புகையில் மனதுக்குள் யோசனை – என்ன சமையல் செய்வது? காலையும் மதியமும் சப்பாத்தி
சாப்பிட்டாயிற்று. இரவுக்கு சாதம் வைத்து கொஞ்சம் ரசமும், தொட்டுக்கொள்ள ஏதேனும் செய்து
விடலாம் என யோசித்தபடியே நடந்த போது வரிசையாக அலைபேசியில் குறுஞ்செய்திகள்… என்ன என்று
பார்த்தால் அலுவலத்தில் இருந்த போது Jammer காரணமாக நிறைய அழைப்புகள் வரவில்லை போலும்!
பத்து பன்னிரெண்டு மிஸ்டு கால் வந்ததாக குறுஞ்செய்தி.
ஒவ்வொருவராக
அழைத்து என்ன விஷயத்திற்காக அழைத்தார்கள் எனக் கேட்டுக்கொண்டே வந்தேன். நண்பர் ஒருவரிடமிருந்து
மட்டும் ஒன்பது Missed Call என குறுஞ்செய்தி – ஏர்டெல்லிலிருந்து வந்தது! இத்தனை முறை
அழைத்திருக்கிறாரே என்ன விஷயமோ, என அவரை அழைத்துக் கேட்க, ”எத்தனை முறை அழைத்தேன்…
Call போகவே இல்லையே…” என்று சொன்னதோடு இப்போது எங்கே இருக்கிறேன் எனக் கேட்டார். விஷயம்
இது தான்! அவரது மூன்று வயது மகளுக்கு பிறந்த நாள் என்றும் வீட்டுக்கு வந்து பார்ட்டியில்
கலந்து கொள்ள வேண்டும் என்று சொல்ல, தர்மசங்கடமாகி விட்டது!
இத்தனை
Short Notice-ல் அழைத்தால், பிறந்த நாள் கொண்டாடும் அவரது மகளுக்கு என்ன Gift கொடுப்பது?
முதலில் தெரிந்திருந்தால் ஏதாவது வாங்கி வைத்திருக்கலாம். அதுவும் மார்க்கெட் சென்று
வாங்கிச் செல்லலாம் என்றால் அதற்கு நேரம் கொடுக்காது உடனே வர வேண்டும் எனச் சொல்லி,
வந்திருக்கும் அனைவரும் எனக்காகக் காத்திருப்பார்கள் எனச் சொன்ன பிறகு நேரம் எடுத்துக்
கொள்வது நன்றாக இருக்காது! சரி வழியில் இருக்கும் கடையில் சாக்லேட் வாங்கிக் கொண்டு
செல்லலாம் என என் வீட்டுக்குச் செல்லாமல் அவருடைய வீட்டிற்குச் சென்றேன்.
நான்
சென்று சேர்ந்தவுடன் மெழுகுவர்த்தி அணைத்து, கேக் வெட்டி, ஹாப்பி பர்த்டே பாடல் பாடி
கொண்டாட்டம் துவங்கி விட்டது. வாங்கிக் கொண்டு சென்ற சாக்லேட்டுகளை குழந்தையிடம் கொடுத்து
நண்பர்களுடன் அரட்டை துவங்கியது – பர்த்டே கேக் உண்டபடியே. அது சாப்பிட்ட சில நிமிடங்களுக்குப்
பிறகு அங்கிருந்து புறப்படலாம் என நண்பரிடம் சொல்ல, “இரவு உணவும் அங்கே தான் எனச் சொல்லி அமர வைத்துவிட்டார்.
உடனே சாப்பிடுவது கடினம் என்பதால் மேலும் அரட்டை தொடர்ந்தது.
தில்லியில்
ஒரு பழக்கம். இப்படி பிறந்த நாள் பார்ட்டி என அழைத்தால், வரும் குழந்தைகள் ஏதாவது பரிசு
கொண்டு வருவதைப் போலவே, பிறந்த நாள் கொண்டாடும் குழந்தையும் வரும் அனைத்து குழந்தைகளுக்கும்
ஏதாவது Return Gift தருவது வழக்கம்! ஒவ்வொருவருக்கும் ஒரு பரிசு தரவேண்டும் எனும்போது
செலவு அதிகமாகவே ஆகிறது. பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கே சிலர் லட்ச ரூபாய் செலவு செய்கிறார்கள்!
பணம் இருக்கிறவர்கள் கொண்டாடினால் பரவாயில்லை, சிலர் கடன் வாங்கி இப்படி கொண்டாடுவது
பார்க்கும்போது தான் கஷ்டமாக இருக்கிறது – அடுத்தவர் மெச்ச வேண்டும் என்பதற்காக கடன்
வாங்கி கொண்டாட வேண்டுமா…..
குறைந்த
பட்சம் இருநூறு ரூபாய்க்காவது Return Gift கொடுக்க வேண்டும் என்று ஒரு நண்பரின் மனைவி
சொன்னார். ஒரு பிறந்த நாள் பார்ட்டிக்குச் சென்றுவந்த பிறகு எல்லா குழந்தைகளுக்கும்
என்ன Return Gift கொடுக்கப் போகிறார்கள் என்ற எண்ணத்துடனேயே அழைப்பு கிடைக்கும் அனைத்து
பிறந்த நாள் பார்ட்டிக்கும் செல்கிறார்கள். அப்படிக் கிடைக்காத பட்சத்தில், “ஒண்ணுமே
கொடுக்கல அந்த Uncle-Aunty என்று சொல்லி, அவர்களின் குழந்தையையும் நட்பு வட்டத்திலிருந்து
விலக்கி விடுவதையும் பார்த்திருக்கிறேன். தங்களது
பிறந்த நாள் அன்றும் Return Gift கொடுத்தே ஆகவேண்டும் என அடம்பிடிப்பதும் உண்டு!
தவறான
ஒரு பழக்கத்தினை ஆரம்பித்து வைத்துவிட்டார்களோ என்ற எண்ணம் எனக்குள் உண்டு. பிறந்த
நாள் என்று மெழுகுவர்த்தி அணைத்து கேக் வெட்டுவது என்பதே எனக்கென்னமோ பிடிப்பதில்லை.
இப்படி செலவு செய்வதற்கு பதில், குழந்தைகளின் பிறந்த நாள் அன்று அவர்களை ஏதாவது அநாதை
இல்லத்திற்கு அழைத்துச் சென்று, அங்கே உள்ள குழந்தைகளுக்கு உணவு கொடுக்க வைத்தால் தான்
நல்ல நிலையில் இருப்பது புரியும். கூடவே எத்தனை எத்தனை பேர் உண்ண உணவில்லாமல், வளர்வதற்கு
தகுந்த ஆதரவில்லாமல் இருக்கிறார்கள் என்பதும் புரியும் அல்லவா…
அதெல்லாம்
சரி என்னதான் அங்கே சாப்பிட்டீர்கள் என்று கேட்பவர்களுக்காக…. என்ன சாப்பிட்டோம் என்பதையும்
சொல்லி விடுகிறேன்….
பூரி,
மட்டர் பனீர், கட்டல் சப்ஜி புலாவ் மற்றும் [kh]கீர்!
அது
என்ன கட்டல் சப்ஜி என்பவர்களுக்காக, ஹிந்தியில் கட்டல் என்றால் பலாக்காய்!
மீண்டும்
சந்திப்போம்….
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி.
//பிறந்த நாள் என்று மெழுகுவர்த்தி அணைத்து கேக் வெட்டுவது என்பதே எனக்கென்னமோ பிடிப்பதில்லை// முழுதும் ஒததுப்போகிறேன் உங்களுடன்.
பதிலளிநீக்குஇன்று ஒரு ஹிந்தி வார்த்தை கற்றுக்கொண்டேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சோமேஸ்வரன்.
நீக்குஉங்கள் கருத்தை நானும் ஏற்கிறேன் சகோ....கடன் வாங்கி கொண்டாடுவது வேதனை...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!
நீக்குநானும் வந்து சாப்பிட்டேன். :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
நீக்குதலைப்பில் எழுத்துப்பிழை உள்ளதே
பதிலளிநீக்குஎன்ன பிழை என்று சொன்னால் நல்லது....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராகவேந்திரன்.
சந்தித்திது vs சந்தித்தது
நீக்குSorry for being obsessive compulsive about this. Its your blog and I enjoy reading it
நீக்குதவறைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி ராகவேந்திரன். இப்போது மாற்றி விட்டேன்.
நீக்குNo need to be sorry dear.... You have every right to point out my mistakes... I will be happy to rectify my mistakes.
நீக்குதலைப்பில் தவறு என்றதும், இந்தப் பதிவுடைய தலைப்பினையே பார்த்தேன் - மேலே பார்க்கவில்லை!
தங்களது மீள் வருகைக்கும் எனது பதிவினை தொடர்ந்து ரசிப்பதற்கும் மிக்க நன்றி ராகவேந்திரன்.
ஆம். இந்த கிஃப்ட், ரிட்டர்ன் கிப்ட் கலாச்சாரத்தைப் பின்பற்றாமலிருந்தால் நலம்! பலாக்காய் சாம்பார் வைப்பார்கள் எப்போதாவது.. அதையே சாப்பிட மாட்டேன். பலாக்காய் பிடிக்காது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குபகல் கொள்ளை வகையில் இதுவும் ஒன்றோ...!
பதிலளிநீக்குமெழுகுவர்த்தி அணைத்து கேக் வெட்டுவது பற்றி நேற்றைய பதிவில் G.M. பாலசுப்ரமணியன் ஐயாவும் குறிப்பிட்டு இருந்தார்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குநம்ம ஊர் மொய் போல ஆகி விட்டதே இதுவும் :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
நீக்குஇது குறித்து நான் ஒரு பதிவு அண்மையில் எழுதி இருக்கிறேன்
பதிலளிநீக்குஉங்கள் பதிவு இன்னும் படிக்கவில்லை ஐயா. படிக்கிறேன்...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.
பிறந்த நாள் பரிசு ரிட்டர்ன் பரிசு..இதெல்லாம் வீண் ..இங்கே 16 ,50 ,18, என்றால் மிக பெரிய பார்ட்டிகள் நடக்கும்
பதிலளிநீக்குஇங்கே பார்ட்டிகளில் வரும் பிள்ளைகளுக்கு சின்ன பிளாஸ்டிக் காரிபேக் இல் சில பொருட்கள் போட்டு தருவாங்க ..இதெல்லாம் காத்து வழி கேள்வியே நான் இப்படிப்பட்ட கொண்டாட்டங்களை தவிர்ப்பேன்
மகளுக்கு 16 ஆனபோதும் நாங்க பெர்த்டே கொண்டாடல்லை. கொண்டாட்டங்களில் பணத்தை வேஸ்ட் செய்வதில் எனக்கும்கணவருக்கும் உடன்பாடில்லை .பலாக்காய் !!ஈரப்பலாக்காய் பிரெட் fruit கேரள ஸ்பெஷல் நான் செய்வேன் ஆனா கட்டல் sabji காரசாரமாயிருக்கும்போலிருக்கே ..ரெசிபிக்கு வெயிட்டிங் :)
கட்டல் சப்ஜி நன்றாகவே இருக்கும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சலின்.
மிகச் சரி.இப்படிப் பணவசதி உள்ளவர்கள்
பதிலளிநீக்குஎதையாவது ஒன்றைத் துவங்கி அடுத்தவர்களையும்
அதைத் தொடரும்படிச் செய்து
பின் சங்கடவைத்துப் போவது
இப்போதெல்லாம் சகஜமாகிப் போய்விட்டது
சிந்திக்கச் செய்து போகும் அருமையான பதிவு
வாழ்த்துக்களுடன்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்கு//தவறான ஒரு பழக்கத்தினை ஆரம்பித்து வைத்துவிட்டார்களோ என்ற எண்ணம் எனக்குள் உண்டு. பிறந்த நாள் என்று மெழுகுவர்த்தி அணைத்து கேக் வெட்டுவது என்பதே எனக்கென்னமோ பிடிப்பதில்லை. இப்படி செலவு செய்வதற்கு பதில், குழந்தைகளின் பிறந்த நாள் அன்று அவர்களை ஏதாவது அநாதை இல்லத்திற்கு அழைத்துச் சென்று, அங்கே உள்ள குழந்தைகளுக்கு உணவு கொடுக்க வைத்தால் தான் நல்ல நிலையில் இருப்பது புரியும். கூடவே எத்தனை எத்தனை பேர் உண்ண உணவில்லாமல், வளர்வதற்கு தகுந்த ஆதரவில்லாமல் இருக்கிறார்கள் என்பதும் புரியும் அல்லவா…// இதை மிகவும் சரி என்று சொல்லுவோம். எங்கள் கருத்தும் இதே!!!
பதிலளிநீக்குகீதா: மேற் சொன்ன கருத்துடன் இப்படிப்பட்ட பிறந்தநாள் விழாக்களில் ஆர்வமில்லை ஜி! ஏனென்றால் பல குழந்தைகளின் மன நிலை பாதிப்பு உண்டாகிறது. கொண்டாட முடியாதவர்களால் அந்த்க் குடும்பத்துக் குழந்தைகளுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை உருவாகத் தொடங்கியிருக்கிறது. மட்டுமல்ல பெற்றோரிடம் தங்களுக்கு வேண்டும் என்று பொருட்களை வாங்கும் மனோபாவம் உருவாகி வருகிறது. பிடிவாத குணம். காசு பற்றிய அறிவு இல்லாமல், ஒரு ஃபேண்டசி உலகில் வாழும் மனம் உருவாகி வருகிறது. காசு எறிந்தால் எல்லாம் கிடைத்துவிடும் என்ற ஒரு எண்ணம். பெற்றோரும் இதற்கு ஒரு காரணம் என்பேன் நான். சென்னையில் எல்லாம் இது ஒரு ஈவன்ட் மேனேஜ்மென்ட் என்று பெருகி வருகிறது. பணம் பணம் பணம்...இதே இது மட்டும்தான்!! இது அனைத்துமே வீண்!! அருமையான பதிவு ஜி...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்குஉங்கள் படம் கண்டதுமே கட்டல் சப்ஜி என்று புரிந்துவிட்டது கேரளத்து பாணி பலாககய் கறியும் செய்வதுண்டு....இந்தக் கட்டல் சப்ஜியும் செய்ததுண்டு. நீங்கள் சாப்பிட்ட கட்டல் சப்ஜி எப்படி இருந்தது என்று உங்கள் குறிப்பையும் கொடுங்கள் ஜி! குறித்துக் கொள்வேன்...
பதிலளிநீக்குகீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
நீக்குபிறந்த நாள் விழாவிற்கு வந்து பரிசு தரும் குழந்தைகளுக்கு பதில் பரிசு தரும் பழக்கம் தமிழ் நாட்டிலும் வந்துவிட்டது. பரிசு தரும் பழக்கத்தை ஒழித்தாலே பாதி செலவு குறைந்துவிடும். பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதுதான் தற்போதைய பிரச்சினை.
பதிலளிநீக்குபூனைக்கு யார் மணி கட்டுவது.... அதே தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
அருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மொஹம்மத்...
நீக்கு