வழக்கமாக
ஞாயிறன்று புகைப்படங்கள் வெளியிடுவது தான். ஆனால் இன்றைய பதிவு – நான் எடுத்த புகைப்படங்கள்
அச்சில்/இணையத்தில் வந்திருப்பது குறித்து தான். கூடவே இணையத்தில் படிக்க ஏதுவாய் சுற்றுலாவுக்கென்றே
துவங்கிய ஒரு இணைய தளம், மற்றும் மின்புத்தகத் தளம் பற்றிய தகவல்களும்….. முதலில் அச்சு
இதழ்கள்….
ஹாலிடே நியூஸ் – மாத இதழ்:
நேற்று
தான் இரண்டு ஹாலிடே நியூஸ் மாத இதழ்கள் என் கைக்குக் கிடைத்தது – ஜனவரி மற்றும் மார்ச்
2017 ஹாலிடே நியூஸ் இதழ்கள்! சுற்றுலாவின் புதிய
தேடல் என்ற குறிக்கோளுடன் வெளிவரும் தமிழின் முதல் சுற்றுலா மாத இதழ் –
ஹாலிடே நியூஸ். மாத இதழின் தரத்தினையும், உள்ளடக்கத்தினையும் நோக்கும்போது இதன் விலை
அதிகமில்லை – மாதத்திற்கு ஐம்பது ரூபாய் மட்டுமே!
வனத்தில் ராமர் சீதை மற்றும் இலக்குவன்
சம்பா ஓவியமாக....
ஜனவரி
மாத ஹாலிடே நியூஸ் இதழில், ஹிமாச்சலப் பிரதேசத்தின் சம்பா ஓவியங்கள் பற்றிய குறிப்புகள்,
நான் எடுத்த புகைப்படங்களோடு வெளிவந்திருக்கின்றன. எனது பகிர்வு தவிர இணையத்தில் இருக்கும்
பல நண்பர்களின் படைப்புகளும் வெளிவந்திருக்கின்றன. ”ஆட்டியன்பாற – அறியப்படாத ஓர் அருவி” என்ற தலைப்பில்
தில்லையகத்து க்ரோனிக்கிள்ஸ் வலைப்பூவின் துளசிதரன்-கீதா அவர்கள் எழுதிய அருமையான கட்டுரையும்
புகைப்படங்களும் வந்திருக்கின்றன. ஜனவரி இதழ் அருமையான பல சுற்றுலாத் தலங்கள் – உள்நாடு/வெளிநாடு
– பற்றிய தகவல்களோடு வந்திருக்கிறது.
ஜனவரி
மாத இதழில் எனது ஒரு படைப்பு வந்திருக்கிறது என்றால், மார்ச் மாத இதழ் இன்னும் கொஞ்சம்
ஸ்பெஷல் எனக்கு – நான் எடுத்த புகைப்படம் தான் அந்த இதழின் அட்டைப்படமாக வந்திருக்கிறது.
கூடவே Cover Story-யும். குஜராத் மாநிலத்தில் உள்ள ராணி கி வாவ் பற்றி நான் எழுதிய
கட்டுரையும் நான் எடுத்த புகைப்படங்களோடு அட்டைப்படக் கட்டுரையாக வெளிவந்திருக்கிறது.
புகைப்படங்கள் மற்றும் கட்டுரை மிகவும் நன்றாக வந்திருக்கின்றது.
இப்பதிவின்
ஆரம்பத்தில் சொன்னது போல, ஹாலிடே நியூஸ் மாத இதழின் விலை ஐம்பது ரூபாய் மட்டுமே. சந்தா
செலுத்தி இதழை தொடர்ந்து வாங்க விரும்பினால் 99430 19032 அல்லது 75988 31137 ஆகிய எண்களில்
தொடர்பு கொள்ளலாம்!
ட்ராவல்ஸ் நெக்ஸ்ட்:
பயணத்தின்
புதிய பரிமாணம் என்ற தலைப்புடன் துவங்கப்பட்ட ஒரு இணைய தளம் – Travels Next. Word Press-ல் துவங்கி இருக்கும் இந்த தளத்தில்
பல சிறப்பான சுற்றுலா கட்டுரைகள் இருக்கின்றது. நேரப் பற்றாக்குறை காரணமாக எனது ஒரே
ஒரு கட்டுரை மட்டுமே இங்கே வெளியிட்டு
இருக்கின்றேன். என்றாலும், மற்றவர்கள் எழுதிய சிறப்பான சுற்றுலா கட்டுரைகள் மற்றும்
புகைப்படங்கள் இங்கே உண்டு. இத் தளத்தினை துவங்கியது
நண்பர் செந்தில்குமார். Travels Next
தளத்தினை திறந்து கட்டுரைகளை வாசிக்கலாமே…..
புஸ்தகா மின்புத்தகங்கள்:
புஸ்தகா
இணைய தளத்தின் மூலமாக எனது ”பஞ்ச் துவாரகா” பயணக்கட்டுரைகள் மின்புத்தகமாக
வெளிவந்தது பற்றி முன்னரே எனது பக்கத்தில் தகவல் வெளியிட்டு இருந்தேன். இந்தத் தளத்தில் நமது பதிவுலக நண்பர்கள் பலருடைய
ஆக்கங்கள் மின்புத்தகங்களாக வெளி வந்திருக்கிறது. புதுக்கோட்டை மற்றும் சென்னையில்
புஸ்தகா நிறுவனத்தினர் மின்னூலாக்க முகாம்கள் நடத்தியதற்குப் பிறகு நமது வலையுலக நண்பர்கள்
பலருடைய ஆக்கங்களும் தொடர்ந்து மின்புத்தகங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது. புஸ்தகாவின்
சிறப்பு – மின்புத்தகங்களை வாங்க முடிவது மட்டுமன்றி, வாடகைக்கும் எடுத்துக் கொள்ளலாம்!
விலையும் அத்தனை அதிகமில்லை.
இந்தப்
பதிவினை வெளியிடும் வரை, சுமார் 1221 மின்புத்தகங்கள் புஸ்தகா தளத்தில் வெளிவந்திருக்கின்றன. புஸ்தகங்களைப் பார்க்க, தரவிறக்கம் செய்ய கீழேயுள்ள
சுட்டியில் சுட்டலாம்…..
வாசிப்பு
என்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டிருக்கும் வேளையில், வாசிப்பினைத் தொடரச் செய்ய
நல்ல முயற்சியில் இறங்கி இறக்கும் புஸ்தகா நிறுவனத்தினருக்கு வாழ்த்துகள். புஸ்தகா
மூலம் மின்புத்தகங்களை வெளியிட்டு இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த
வாழ்த்துகள். மேலும் உங்கள் படைப்புகள் வெளிவந்து,
பலரையும் சென்றடையட்டும்.
நாளை
வேறு பதிவில் சந்திக்கும் வரை….
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி.
அழகான இதழ்..
பதிலளிநீக்குஅருமையான பதிவு
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மீரா செல்வக்குமார்.
நீக்குநல்ல பதிவு ஜி...வாழ்த்துகள்...
பதிலளிநீக்குகீதா: ஆம் ஜி நானும் ஹாலிடே செய்திகள் இதழ் வாங்குகிறேன்....ட்ராவல்ஸ் நெக்ஸ்ட் தளம் வாசிக்கிறேன்....இடையில் முடியவில்லை...மீண்டும் தொடர வேண்டும். வாழ்த்துகள் ஜி...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்குஅருமை , அருமை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்டு @நொரண்டு.
நீக்குஹாலிடே நெக்ஸ்ட் பற்றி துளசிதரன்-கீதா சொல்லி இருக்கிறார்கள். சென்னை சென்றதும் வாங்கிப் பார்க்கவேண்டும். தங்கள் படமும் கட்டுரைகளும் அந்த இதழை மேலும் அலங்கரிக்கட்டும். 'FreetamilEbook.com தளத்தில் வெளியாகியுள்ள தங்கள் பயண நூல்களை இறக்கிப் படித்துக்கொண்டிருக்கிறேன். Very Good Work, Keep it up!
பதிலளிநீக்கு-இராய செல்லப்பா நியூஜெர்சி
முடிந்த போது வாசித்துப் பாருங்கள்.
நீக்குஎனது பயண நூல்களை வாசித்துக் கொண்டிருப்பது அறிந்து மகிழ்ச்சி. படித்த பிறகு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய செல்லப்பா ஐயா.
துணி வெளுக்கவே இல்லை பேசாமல் வாஷிங் மெஷினை மாற்றலாம் என்று நினைக்கிறேன் என்னும் விளம்பரமே நினைவுக்கு வருகிறது நானும் என் படைப்பு ஒன்றை மின் நூலாக்க முயன்று தோற்று விட்டேன் பேசாமல் வேறு ஒரு தளத்தை அணுகலாம் என்று இருக்கிறது
பதிலளிநீக்குஐயா, புஸ்தகா மின்நூல் நிறுவனத்தைச் சார்ந்த திரு பத்மநாபன் பெங்களூரில்தான் இருக்கிறார் அவரது அலைபேசி எண் 98 45 23 44 91
நீக்குபேசிப் பாருங்கள்,விரைவில் மின்னூல் வெளிவரும்
விரைவில் வெளிவரட்டும் ஐயா. அவர்கள் தளத்தில் சில நாட்களாகவே புதிய மின்னூல் ஏதும் வெளிவரவில்லை. எல்லோருமே தன்னார்வலர்கள் என்பதால் இப்படி தாமதம் ஏற்படுகிறது என நினைக்கிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.
புஸ்தகாவில் ஏற்கனவே பேசி இருக்கிறார் அவர் என்று சொன்னதாக நினைவு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
வாழ்த்துகள். கீதா ரெங்கனுக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குவாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குதொடர்பு எண் தகவலுக்கு நன்றி ஜி...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குவாழ்த்துக்கள்... இந்த இதழ்களில் மட்டும் அல்ல பிரபல நாளிதழ்களிலும் பயணக்கட்டுரையாளர் என்ற முத்திரை பதிக்கவும் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் உற்சாகம் தரும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ம்துரைத் தமிழன்.
நீக்கு‘ஹாலிடே நியூஸ்’ இதழ்களில் தங்களது பயணக் கட்டுரை வெளியானது அறிந்து மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்!
பதிலளிநீக்குTravels Next பற்றி இப்போதுதான் அறிகிறேன். தகவலுக்கு நன்றி!
‘புஸ்தகா’ வின் மின் நூல்கள் பற்றி திருமதி ஞா.கலையரசி அவர்களின் ‘ஊஞ்சல்’ பதிவின் மூலம் அறிவேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குவாழ்த்துக்கள் வெங்கட்.
பதிலளிநீக்குகடைசி படத்தில் உள்ள படத்தில் உள்ள எஸ். சுவாதி என் உறவினர்.
ஓ அவர் உங்கள் உறவினரா? மிக்க மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
வாவ்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....
நீக்கு