முகப்புத்தகத்தில்
நான் - 14
பாவம் அவரே
கன்ஃபீஸ் ஆயிட்டாரு - 1
நேற்று பரபரப்பான காலை வேளை…. எழுந்ததே லேட்! எப்போதும் போல ஆறு மணிக்கு எழுந்திருந்தால்,
காலை மற்றும் மதிய உணவுக்கு சப்பாத்தி, தொட்டுக்கொள்ள ஏதோவொரு சப்ஜி தயார் செய்திருக்கலாம்!
எழுந்ததே லேட் என்பதால் காலை உணவுக்கு ஏதாவது கலந்த சாதம் மட்டும் செய்து சாப்பிட்டு,
மதியத்திற்கு அலுவலகத்தில் வாங்கிக் கொள்ளலாம் என முடிவு செய்தேன். சாதம் வைத்து, வாழைக்காய்
பொரியல், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் செய்து விடுவதாய் திட்டம்!
சாதம்
வைத்த பிறகு, அடடா, போஸ்ட் பப்ளிஷ் ஆயிருக்குமே, ஃபேஸ்புக்-ல, WhatsApp குழுமத்துல,
மின்னஞ்சல்ல, திரட்டில – இப்படி பல இடங்கள்ல இணைக்கணுமே, சாதம் வைச்ச குக்கர் விசிலடிச்சு
கூப்பிடறதுக்குள்ள இந்த வேலையெல்லாம் செய்யலாமேன்னு மடிக்கணினியை உயிர்பித்து அதைச்
செய்ய ஆரம்பித்தேன். இந்த வேலை செய்யணும்னு ஆரம்பிச்சது, இன்னும் சில நண்பர்களின் பதிவுகளைப்
படிச்சு கருத்தளித்துன்னு போயிட்டே இருந்தது. விசில் சப்தம் கேட்டு அடுப்பை நிறுத்திட்டு
வந்து ப்ளாக்ல மூழ்கிவிட்டேன்.
சில
நிமிடங்களுக்குப் பிறகு வேகவேகமா சமையல் வேலை நடந்தது. ஏதேதோ சிந்தனைகள், என்ன சமைக்கிறேன்னு
தெரியல அப்போ! பரபரன்னு எல்லா வேலையும் முடிச்சு, குளிச்சு, ஆஃபீஸ்க்கு ரெடியாகி கிச்சன்
போய் பார்த்தா, எனக்கே கொஞ்சம் சிரிப்பா வந்தது – என்னை நினைச்சு! அப்படி என்ன தான்
செஞ்சு வச்சேன்னு கேட்கறீங்களா?
சாதம்
ரெடியா இருக்கு, வாழைக்காய் ஃப்ரை, எலுமிச்சை சாதம் கலக்க, தயாராக வாணலியில் தாளித்தது
இருக்கு. பக்கத்துலயே Copper Bottom பாத்திரத்தில்
வெங்காயம் போட்ட வத்தக்குழம்பு! எலுமிச்சை சாதம்னு முடிவு பண்ணப்பறம் அதையும் செய்து,
கூடவே வத்தக்குழம்பு ஏன் வச்சேன்னு புரியல! ”பாவம் அவரே கன்ஃபீஸ் ஆயிட்டாரு”னு வடிவேலு
காவலன் படத்தில் சொல்லற மாதிரி நானே என்கிட்ட சொல்லிக்கிட்டேன்! எலுமிச்சை சாதம் செய்து
சாப்பிட்டு, வத்தக்குழம்பை பழேத்து பொட்டில ஏத்தியாச்ச்…. சாயங்காலம் வீட்டுக்கு வந்து
சாதம் மட்டும் செஞ்சுக்கலாம்! வேறென்ன பண்ண!
பாவம்
அவரே கன்ஃபீஸ் ஆயிட்டாரு – பார்ட் 2!
யாருக்கோ பிறந்த நாளாம்...
எனக்கு எதுக்கு தொப்பி?
இந்த நாள் இனிய நாள்:
பிறந்த நாள் வாழ்த்து
சொல்ல பல நாட்களில் மறந்து விடுகிறேன். இது பெரும்பாலான ஆண்களுக்கும் இருக்கும் பிரச்சனை!
அதுவும் மற்றவர்களுடைய பிறந்த நாளை மறந்து விட்டால் கூட பரவாயில்லை – மனைவியின் பிறந்த
நாளை மறந்து விட்டால் – அதை அவர் நிச்சயம் மறக்க மாட்டார் – எத்தனை வருடம் ஆனாலும்!
முன்பெல்லாம் பெண்கள் எதையாவது நினைவில் வைத்துக் கொள்ள புடவை தலைப்பில் முடிச்சு போட்டு
வைத்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன் – அந்த தலைப்பு முடிச்சு பார்க்கும் போது அந்த
விஷயம் நினைவுக்கு வரும் என…. நம்ம கதையோ – முடிச்சு எதுக்குப் போட்டோம்னு நினைவு வைத்துக்கொள்ள
பல முடிச்சு போட வேண்டியிருக்கும்!
சரி மறந்து போறதுக்கு
முன்னாடியே ஃபோன் பண்ணிடணும். யாருக்குன்னு
நீங்க கேட்கறதுக்கு முன்னாடியே சொல்லிடறேன்! என் மனைவிக்கு தான்! இன்னிக்கு அவங்க பிறந்த
நாள்! மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ஆதி!
இப்படி
எழுதி வச்சுருந்தேன் இன்னிக்கு ஃப்ரூட் சாலட் போஸ்ட்ல போட! எப்பவுமே எனக்கு என் மனைவியின்
பிறந்த நாளும், எங்கள் கல்யாண நாளும் மறந்து விடும்! இல்லை என்றால் இரண்டு தேதியையும்
மாற்றி விடுவேன்! ஒன்று 24, மற்றது 25! இந்த முறையும் அதே கூத்து தான்! நேற்று ரொம்ப
சுறுசுறுப்பா, மனைவிக்கு ஃபோன் பண்ணி, ”நாளைக்கு பிறந்த நாளாச்சே, என்ன ஸ்பெஷல், கோயிலுக்கு
போகப்போறீயா?” என்று கேட்க, மனைவி, “நாளைக்கு எதுக்கு கோவிலுக்குப் போகணும், நாளைக்கு
என்னோட பிறந்த நாள் இல்லையே” என்கிறார்! எப்போதும் மறந்து விடுவேன் என கிண்டல் செய்கிறாரோ
என்ற குழப்பம் எனக்கு!
அட
லூசு! எப்பவும் போல இந்த 24, 25 குழப்பமா! இதுல, ரொம்ப சுறுசுறுப்பா, மேலே சொன்ன மாதிரி
ஃப்ரூட் சாலட்-ல ஒரு பகுதியா எழுதி வச்சுருந்தேன். இதை மனைவிகிட்ட சொன்னப்ப, ”மொதல்ல,
அதை டெலீட் பண்ணுங்க” என்று அறிவுரை!.....
எனக்கு
மட்டும் 25, 24 தலைகீழா நம்பர் நினைவுக்கு வச்சுக்கணும் இனிமே! 25 மார்ச் – பிறந்த
நாள், 24 மே கல்யாண நாள்! இந்தக் குழப்பம் இனிமேலாவது வராம இருக்கணும்!
செம
பல்பு! மீ ரொம்ப பாவம்! :(
வேறு
ஒரு பதிவுடன் நாளை சந்திக்கும் வரை…..
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி.
எல்லா வருடமும் பல்பு வாங்குறீங்களே ஜி...
பதிலளிநீக்குபல்பு வாங்கறதே பொழப்பா போச்சு ஜி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
ஹஹஹஹஹஹ் ரெண்டுமே அந்த ரகம்...ரசித்தோம்!!
பதிலளிநீக்குகீதா: ஜி முதல் நிகழ்வு மீ டூ அப்படி செய்வதுண்டு. என்ன செய்தோம் என்பதே சில சமயம் மண்டையில் பல ஓடுவதால்....ஹிஹிஹி அப்புறம் இந்தப் பிறந்தநாள் மணநாள் வாழ்த்தெல்லாம் நான் உங்களை விட இன்னும் மோசம் ஜி. என் கசின்ஸ் எல்லாரிடமும் நான் ரொம்பவே பல்பு வாங்குவேன்...நான் சொல்லுவேன், "ஹேய் வித்து, உன் பொண்ணு ஆராதனாக்கு அடுத்த வாரம் பர்த்டே நான் மறக்கவே இல்லை பாரு...எப்படி நினைவில் வைச்சுருக்கேன் பாத்தியா!!" எனவும் அவள் சொல்லுவாள், "இத நீ அடுத்த வாரம் அந்த டே அன்னிக்குச் சொல்லு பார்ப்போம்...நான் உனக்கு நிச்சயமா சர்ப்ரைஸ் கிஃப்ட் தருவேன்" நானும் சவால் விடுவேன்....//அந்த தலைப்பு முடிச்சு பார்க்கும் போது அந்த விஷயம் நினைவுக்கு வரும் என…. நம்ம கதையோ – முடிச்சு எதுக்குப் போட்டோம்னு நினைவு வைத்துக்கொள்ள பல முடிச்சு போட வேண்டியிருக்கும்!// யெஸ் நானும் இப்படி எதையேனும் செஞ்சு வைச்சுப்பேன் மொபைலில் ரிமைண்டர், இப்படி ஆனால் அந்த ரிமைண்டரையும் கவனித்திருக்க மாட்டேன் ஹஹஹஹ் அப்புறம் என்ன அங்கிருந்து வரும் செம காய்ச்சல்கள் ஆஸ் கிஃப்ட்ஸ்....!!! "பெரிமா யு ஆர் வெரி பேட்" அப்படினு....அதுவும் பிறந்த நாளுக்கு அடுத்த நாள் கூப்பிட்டு இப்படிச் சொல்லி எதுக்கு பேட் நு கேட்டு பதில் இல்லாமல் இறுதியில் சொல்லுவாள்...இன்னிக்கு என்ன டேட் பெரிமா....அப்போ யெஸ்டெர்டே...ஓ ப்ளீஈஸ் குட்டிமா நீயே சொல்லிடேன்....உனக்கு டொனெட் பண்ணித் தரேன்...யு டின்ட் விஷ் மீ...ஓமைகாட்...பல்பு!!!!..மீ டூ பாவமாக்கும்!ஹிஹிஹி
பல சமயங்களில் பிறந்த நாட்கள், முக்கியமான நாட்கள் மறந்து விடுகிறது. :( என்ன தான் ரிமைண்டர் வைத்துக் கொண்டாலும் அதைப் பார்க்கணுமே.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
...ஹா ஹா...
பதிலளிநீக்குவாழ்த்துகள் ஜி...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குமுதல் பாதி நல்ல நகைச்சுவை
பதிலளிநீக்குஇரண்டாம் பாதி... அனேகமா பலரும் செய்துவிட்டு பல்ப் வாங்குவதுதான்
நாம் தனியாள் இல்லை விடுங்கள் பாஸ்
தம
அனேகமா பலரும் செய்து பல்பு வாங்குவது தான்! உண்மை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.
ஹா...ஹா...
பதிலளிநீக்குஅதுசரி...
எனது வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க அண்ணா...
உங்கள் வாழ்த்துகளையும் சொல்லிடறேன். நன்றி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.
ஏதோ நினைவில் சமையல் செய்தாலும் உப்பு, உறப்பு ஒழுங்காகப் போட்டு செய்திருப்பீர்கள்... அதைப் பாராட்ட வேண்டும். அப்படி உங்களை மெய்ம்மறக்க வைத்த பதிவு எது என்று தெரிந்து கொள்ளலாமா?!!
பதிலளிநீக்குஉங்கள் துணைவியாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
குறிப்பாக எந்த பதிவும் இல்லை ஸ்ரீராம். ஒண்ணு படிச்சு, அடுத்ததுன்னு படிச்சுட்டே இருந்து விடுவதுண்டு பல சமயங்களில்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
I don't understand why men forget only their wife's birthday and wedding day?something is really wrong in their memory cell.
பதிலளிநீக்குYes. May be.... I have more problems! I forget my own birthday! :)
நீக்குஉங்கள் முதல் வருகையோ? மிக்க மகிழ்ச்சி....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதியமாதவி சங்கரன் ஜி!