வெள்ளி, 24 மார்ச், 2017

ஃப்ரூட் சாலட் 198 – மின் உற்பத்தி - சகலை


இந்த வார செய்தி:

காலடி அழுத்தத்தை பயன்படுத்தி மின் உற்பத்தி




காரைக்குடி: மனிதனின் காலடி அழுத்தத்தை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் சாதனத்தை, காரைக்குடி கிட் அன்ட் கிம் இன்ஜி., கல்லுாரி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.

மின்சார தட்டுப்பாட்டை போக்குவதற்கும், புதுப்பிக்கத்தக்க மற்றும் புதுப்பிக்க இயலாத தொழில் நுட்ப முறைகள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், பருவநிலை மாற்றம் மற்றும் பராமரிப்பு செலவு இதற்கு தடையாக உள்ளது. இதனை ஈடு செய்ய மனிதனின் காலடி அழுத்தம் மூலம் "பியோசோ எலக்ட்ரிக் சென்சார்' எனும் சாதனத்தை பயன்படுத்தி எளிதான முறையில், குறைந்த செலவில் மின் உற்பத்தி செய்ய முடியும் என்பதை கிட் அன்ட் கிம் கல்லுாரி மாணவர்கள் நிரூபித்துள்ளனர்.

பி.இ., இறுதியாண்டு மாணவர்கள் நிருபன்குணா, நரேந்திரன் கூறும்போது: "பியாசோ எலக்ட்ரிக் சென்சார்' என்பது இயந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் தன்மை கொண்டது. எங்களது கருவியில் நான்கு சென்சார்களை ஒரு சதுர அடியில் பொருத்தியுள்ளோம். இதன் மேல் அழுத்தம் கொடுக்கும்போது, ஒவ்வொரு சென்சாருக்கும் 5 வோல்ட் வீதம் 20 வோல்ட் மின்சாரம் சேமிக்கப்படுகிறது.

இந்த மின்சாரத்தை மின்கலத்தில் சேமித்து, அதன் வெளியீட்டில் தானியங்கி போக்குவரத்து ஒளி கட்டுப்பாட்டு அமைப்பை இணைத்து, வாகனங்களின் நெரிசலுக்கு ஏற்றவாறு சிக்னல்களை செயல்படுத்தலாம். இதன் மூலம் தடையில்லா மின்சாரம் குறைந்த செலவில் உற்பத்தி செய்ய முடியும், என்றனர். மாணவர்களை கல்லுாரிகளில் குழும தலைவர் அய்யப்பன், பொருளாளர் ராமசுப்பிரமணியன்,ஆசிரியர்கள் பாராட்டினர்.

     தினமலர் நாளிதழிலிருந்து…..

மாணவர்களுக்கு இந்த வாரத்தின் பூங்கொத்து!

இந்த வார காணொளி:

பொதுவாகவே தொலைக்காட்சி பார்ப்பதில்லை. நீயா நானா நிகழ்வு அடிக்கடி செய்திகளில் அடிபடுகிறது. சமீபத்திய ஒரு நிகழ்வில் பெண்களிடம் கல்யாணத்திற்கு என்ன என்ன சீர் எதிர்பார்க்கிறார்கள் என்பது பற்றி ஒரு நிகழ்வு நடந்ததாக முகப்புத்தகத்தில் நிறையவே இற்றைகள் வந்தன. நிகழ்வினைப் பார்க்கவில்லை என்றாலும், அது வந்த பிறகு உருவாக்கிய மீம் ஒன்று பார்த்தேன்.  செம கலாய்! Youtube-la இருக்கா பாருங்க! நான் பார்த்தப்ப இருந்தது, இப்ப இல்ல!


இந்த வார குறுஞ்செய்தி:

எப்போது பிரச்சனை ஒன்று தோன்றுகிறதோ, அப்போதே அதைத் தீர்க்கும் வழிமுறை ஒன்றும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையை உணர்ந்தால், தேவையற்ற மனவருத்தம் உண்டாவதில்லை.

இந்த வார முகப்புத்தக இற்றை:

வாழ்வதற்கு செலவு மிகக் குறைவு…..
அடுத்தவனைப் போல வாழ்வதற்கு தான் செலவு அதிகம்…..

இந்த வார WhatsApp:

மகன்: ‘சகலை’ என்றால் என்னப்பா?

அப்பா: ஒரே கம்பெனி பொருள் வாங்கி ஏமாந்தவங்க!

இந்த வார ரசித்த இசை:

சரஸ்வதி வீணா – தப்லா ஜுகல் பந்தி இசை இந்த வாரத்தில் ரசித்த இசையாக….  ஜெயந்தி குமரேஷ் மற்றும் உஸ்தாத் ஜாகிர் ஹூசைன்…  கேட்டு/பார்த்து ரசிக்க….




படித்ததில் பிடித்தது:

உசுப்பேத்தறவன்கிட்ட உம்முன்னும், கடுப்பேத்தறவன்கிட்ட கம்முன்னும் இருந்தா…….

நம்ம வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்!

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

22 கருத்துகள்:

  1. சகலை ஜோக். சட்டென்னு சிரிப்பு வந்து விட்டது. மின் உற்பத்திக்கான புஹ்டிய முயற்சிகள் ஊக்குவிக்கப் படவேண்டும். ஸ்பீட் ப்ரேக்கர்களில் வாகனங்ககள் ஏறுபோது ஏற்படும் அழுத்தம் பயன்படுத்தி மின்சாரம் தயாரித்தனர் முன்பு ஒரு கல்லூரி மாணவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  2. மாணவர்களுக்குப் பூங்கொத்து!!

    இற்றையும், குறுஞ்செய்தியும் செம!!

    ஜூகல் பந்தி இனிமை! (கீதா: நானும் மகனும் நிறைய கேட்போம் ரொம்பப் பிடிக்கும். சமீபத்தில் கூட அவன் கேட்டதை என்னுடன் பகிர்ந்திருந்தான். செமையா இருந்தது...அது நம் சங்கர் மகாதேவன் பாடியது...அதே போன்று ராஜேஷ் வைத்தியாவினுடையதும் அருமையாக இருக்கும்...)

    ஜோக் ஹஹஹஹ்

    பபி யும் நன்றாக இருந்தது!!! புன்னகையும் வந்தது!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜேஷ் வைத்தியா ஜுகல்பந்தி இணையத்தில் கேட்ட நினைவு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  3. #ஒரே கம்பெனி பொருள் வாங்கி ஏமாந்தவங்க#
    நல்ல வேளை ,ஒரே பொருளை வாங்கி ஏமாறலையே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல வேளை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது!

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார்.

      நீக்கு

  7. சகலை விளக்கம் அருமை

    காணொளி கேட்டு மகிழ்ந்தோம்

    வாழ்த்துக்களுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  8. முகப்புத்தக இற்றையும் வாட்ஸ் ஆப் செய்தியும் ரசிக்க வைத்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  10. ஜுகல் பந்தியை இரசித்தேன்! பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  11. மாணவர்களுக்கு வாழ்த்துகள்.

    காணொளி இணைக்கவில்லையா, எனக்குத்தான் தெரியவில்லையா!

    குறுஞ்செய்தியும், இற்றையும் நல்ல அறிவுரை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளியை நான் schedule செய்த பிறகு இணையத்திலிருந்து நீக்கிவிட்டார்கள். அதனால் எடுத்து விட்டேன். Youtube-ல் இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....