வியாழன், 16 மார்ச், 2017

ஹனிமூன் தேசம் – குளு குளு குலூ மணாலி


ஹனிமூன் தேசம் – பகுதி 2

தொடரின் முதலாம் பகுதி ஹனிமூன் தேசம்– பயணத் தொடர் படிக்க தலைப்பில் சுட்டலாமே!

இலையுதிர் காலம்....  ஆனாலும் மீண்டும் துளிர்த்துவிடும் இந்த மரத்திலிருந்து நாமும் கற்றுக் கொள்வோம்.....
 
தொடர்ந்து மூன்று தினங்கள் [வெள்ளி, சனி, ஞாயிறு] அலுவலக விடுமுறை வர, வியாழனும் விடுமுறை எடுத்துக் கொண்டு, குலூ-மணாலி சென்று வர முடிவு எடுத்தோம். தலைநகர் தில்லியிலிருந்து குலூ-மணாலி செல்வதற்கு பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது சாலை வழியைத் தான். கிட்டத்தட்ட 550 கிலோமீட்டர் தொலைவு பயணிக்க வேண்டும் – அதுவும் சண்டிகர் நகருக்குப் பிறகு மலைப்பாதையில் பயணிக்க வேண்டும்.  நேரடியாக குலூ-மணாலி செல்ல ரயில் பாதை கிடையாது.  குலூ வரை விமானம் மூலம் பயணிக்கலாம் என்றாலும் ஏர் இந்தியா மட்டுமே விமான சேவை வைத்திருக்கிறது! பயணக் கட்டணமும் அதிகம் [இன்றைய ஒரு வழிக்கட்டணம் சுமார் 10000/- ஒருவருக்கு!].


கரடு முரடான மலைப்பாதை என்றாலும், அதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் இருக்கிறது....



மலை, ஆறு, பசுமை, நடுவே ஒரு வீடு...... இங்கே தங்குவோமா?

ஹிமாச்சலப் பிரதேச மாநில போக்குவரத்துத் துறையின் வோல்வோ பேருந்துகளும், தனியார் வோல்வோ பேருந்துகளும் நிறையவே குலூ-மணாலி வரை செல்கின்றன. என்றாலும் நாங்கள் தில்லியிலிருந்து எங்களுக்குத் தெரிந்த ட்ராவல்ஸ் மூலம் Tempo Traveller எடுத்துக் கொண்டோம். தெரிந்த ஓட்டுனர் என்பதால், நாம் நினைத்த இடங்களில் வண்டியை நிறுத்தலாம், நினைத்த நேரத்திற்குச் செல்ல முடியும். போக்குவரத்து தயார், குலூ மணாலி பகுதியில் தங்குவதற்கு ஏற்பாடும் சக பயணி ஒருவர் செய்திருந்தார். இப்படி முன்னேற்பாடுகளோடு மார்ச் மாதத்தின் கடைசி வார புதன் கிழமை, இரவு எட்டு மணிக்கு தலைநகரிலிருந்து புறப்பட்டோம்.


 மனிதன் தன் சுகத்திற்காக இயற்கையையும் விடுவதில்லை....
பாறைகளை வெட்டி பாதை.....

 எத்தனை பெரிய கல்லாயிருந்தாலும், என் சக்திக்கு முன்னால் தூசு என்று சொல்கிறதோ சலனமற்று ஓடும் தண்ணீர்.....

இரவு எட்டு மணிக்கு எங்கள் பகுதியிலிருந்து அனைத்து நண்பர்களுடன் புறப்பட்டது எங்களது தங்கரதம்! அச்சமயத்தில் தான் ஹோலி [அடுத்த நாள்] என்பதால், தலைநகரிலிருந்தே Gகுஜியா வாங்கிக் கொண்டு வந்திருந்தேன். மற்றவர்களும் ஏதேதோ தின்பண்டங்கள் வைத்திருக்க, “ஸ்வீட் எடு, கொண்டாடு” என பயணம் துவங்கியது. அலுவலகத்திலிருந்து வீடு வந்து உடனே புறப்பட வேண்டும் என்பதால் வழியில் இரவு உணவு சாப்பிடலாம் என நினைத்திருந்தோம். ஆனால் குழுவில் வந்திருந்த நண்பர் தெரிந்த சமையல் கலைஞரிடம் சொல்லி விட, அவர் சப்பாத்தி, சப்ஜி என கொண்டு கொடுத்து விட்டார்!


வழியில் பார்த்த ஒரு ஆலயம்!
வாகனத்திலிருந்து ஒரு ஷாட்!


அதிகாலை நேரத்தில்....  சூரியன் உதிக்கலாமா வேண்டாமா என யோசிக்கும் தருணத்தில்....
 
தில்லியின் எல்லையைக் கடந்து, சில மணி நேரங்கள் பயணித்த பிறகு வழியில் கர்னால் அருகே உள்ள ஒரு உணவகத்தில் எங்கள் வாகனத்தினை நிறுத்தினோம். இயற்கை உபாதைகளை முடித்துக் கொண்டு, வாகனத்தில் அமர்ந்தபடியே, கொண்டு வந்திருந்த இரவு உணவினை சாப்பிட்டு முடித்தோம்.  என்ன தான் மார்ச் மாதக் கடைசி, ஹோலி வந்துவிட்டது என்றாலும், இரவில் நல்ல குளிர். அதுவும் நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது நிறுத்திய அந்த இடத்தில் சுற்றிலும் திறந்தவெளி என்பதால் குளிர் நன்றாகவே தெரிந்தது.  சாப்பிட்டு முடித்ததும், குளிருக்கு இதமாக அனைவருக்கும் தேநீர் தேவையாக இருந்தது. 

 எந்தப் பாதையையும் கடப்போம்......
இருசக்கர வாகனத்தில் குருத்வாரா பயணிக்கும் சீக்கிய இளைஞர்கள்...

தேநீர் குடித்த பிறகு புறப்படலாம் என நினைக்க, குழுவில் ஒருவர் பதட்டமாக இருந்தார். என்ன விஷயம் என்று கேட்க, கையில் போட்டிருந்த இரண்டு தங்க மோதிரங்களைக் காணவில்லை என்று சொன்னார். லூசாக இருந்ததைக் கழட்டிக் கழட்டி போட்டுக் கொண்டிருந்தார் போலும்! கீழே விழுந்துவிட்டது என்று சொல்ல, அந்த இருட்டில் மோதிரம் தேடும் பணி துவங்கியது! நல்ல வேளையாக என் கண்களுக்கு அந்த மோதிரங்கள் அகப்பட, அவற்றை எடுத்து உரிமையாளரிடம் “பத்திரம், பத்திரம்” என்று பலமுறை சொல்லி கொடுத்தேன்! ஆனாலும் அந்த மோதிரங்கள் அவரிடம் தங்கவில்லை! அது பற்றி பிறகு சொல்கிறேன்!

 இதோ 96 கிலோமீட்டர் தான் குலூ.... 
போக ரெடியா?

தொடர்ந்து பயணிக்கத் துவங்கினோம்.  இரவின் மடியில் குழுவினர் அனைவரும் உறங்க, நானும் ஓட்டுனர் ஜோதியும், மெல்லிய ஒலியில் பழைய பாடல்களைக் கேட்டவாறே விழித்திருந்தோம்.  நடுநடுவே பேசிக் கொண்டே இருந்தேன். இரவுப் பயணம் என்பதால், ஓட்டுனர் கொஞ்சம் உறங்கிவிட்டாலும், குழுவினர் அனைவருக்குமே பிரச்சனை தானே. அதிலும், அந்த இரவு நேரப் பயணத்தில் ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களைக் கடக்கும் போது பெரும்பாலான ஓட்டுனர்கள் காட்டு வேகத்தில் ஓட்டுவார்கள்! கொஞ்சம் உறங்கினாலும் குலூ-மணாலி சென்று சேர்வதற்கு பதிலாக குளுகுளு பெட்டிக்குள் போகும் வாய்ப்பு அதிகம்!

 தொலைவிலிருந்து தொங்குபாலம்!

குருக்ஷேத்திரம், அம்பாலா, சண்டிகர், என பல ஊர்களைக் கடந்து பயணித்துக் கொண்டிருந்தோம். பஞ்சாப் எல்லை அருகே வண்டியை நிறுத்தி, தில்லி வண்டி பஞ்சாப் செல்ல கட்ட வேண்டிய வரியைக் கட்டி, அந்த இடத்தில் இருந்த ஒரு தேநீர்க் கடையில் தேநீர் அருந்தி அங்கிருந்து புறப்பட்டோம். அதிகாலை நேரம் காலைக்கடன்களுக்காக நாங்கள் வண்டியை நிறுத்திய போது காலை ஆறு மணி. ஹிமாச்சலப் பிரதேசத்திற்குள் வந்திருந்தாலும், இன்னமும் குலூ நகரை அடையவில்லை.

யாருப்பா அது பாறை மேலே?

இரவு முழுவதும் வாகனம் செலுத்திய ஓட்டுனர் ஜோதிக்கும் கொஞ்சம் ஓய்வு தேவை. அவர் சற்றே ஓய்வெடுக்க, நாங்கள் சுடச் சுடத் தேனீர் அருந்தி கொஞ்சம் ஓய்வெடுத்தோம். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டோம்.  அடுத்ததாய் நாங்கள் சென்ற இடம் என்னவென்று அடுத்த பகுதியில் சொல்கிறேன்…..

தொடர்ந்து பயணிப்போம்…..

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

40 கருத்துகள்:

  1. நேரில் சென்று பார்க்க வேண்டிய அவசியமே இல்லாமல் அப்படியே சூழலை நேர்த்தியாகப் படம்பிடித்து தகவல்களோடு தருகிற உங்கள் பாங்கு அசத்தல்.. நன்றி வெங்கட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் உற்சாகம் தரும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

      நீக்கு
  2. அழகிய இடங்கள், அழகிய படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. உங்களின் பார்வையில் இந்தியாவை பார்க்கும் போது மிக அழகாக இருக்கிறது பதிவும் தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  4. நானும் காண வந்து கொண்டே இருக்கிறேன்... ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. அருமையான விவரங்கள், அழகிய படங்கள், பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  7. வாவ், மோதிரம் குறித்த அறிவுரைகள் சுற்றுப் பயணத்தின் பொழுது அவசியம்
    குறிப்பாக அருவிகளில் குளிக்கும் பொழுது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது...

      நீக்கு
  8. ஸ்வாரஸ்யமான ஆரம்பம் வழக்கம் போல் புகைப்படங்கள் அழகு...தொடர்கிறோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  9. வெங்கட் ஆரம்பமே கலக்கல். அடுத்தடுத்த பகுதிகளுக்கு ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்.

    சுதா த்வாரகாநாதன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!

      நீக்கு
  10. உங்களின் தனிமூன்(?) தேசத்தை நானும் காண ஆவலோடு தொடர்கிறேன்!
    (என்னோட மோதிரம் ஒன்னு இன்னும் திருச்செந்தூர் கடல்ல கிடக்குல்லாடே!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனிமூன்.... :)

      ஆஹா நீங்களும் மோதிரம் விட்டீங்களா!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....

      நீக்கு
  11. நல்ல இடங்கள். படங்களும் நல்லா வந்திருக்கு. தொங்கு பாலத்துக்கு இன்னும் ஒரு ZOOM போட்டிருக்கலாமோ. எப்படியோ ஹனிமூன் பிரதேசத்துக்குத் தனியாப் போனதுக்கு சமாதானம் வீட்டுல சொல்லியிருப்பீங்க.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொங்குபாலம் - எடுத்திருக்கலாம்!

      வீட்டுல சொன்ன சமாதானம் - பெரிசா ஒண்ணுமில்ல!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

      நீக்கு
  13. அருமையான இடம்.....அழகு...

    முதலாம் பகுதிக்கான சுட்டியில் லிங்க் இல்லையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுட்டி இப்போது சேர்த்துவிட்டேன். சுட்டியமைக்கு நன்றி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  14. /நேரில் காணும்போது கிடைக்காத திருப்தி பின்னர் அவற்றைப் படமாகப் பார்ப்பதில் கிடைக்கிறது என்று நினைக்கிறேன் /

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரில் பார்ப்பது ஒரு விதம் என்றால், படமாகப் பார்ப்பதில் வேறு விதம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

      நீக்கு
  15. என் ஆசைகளில் இங்க போவதும் ஒன்று. நான் போறதுக்குள்ள கால மாற்றத்தால் நம்மூரு மாதிரி ஆகிடப்போகுதோ என்னமோ!!! படம்லாம் அழகுண்ணே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போய் வாருங்கள்... அப்படி எல்லாம் மாறிடாது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  16. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  17. நான் டெல்லி போன போது குளிர் என்பதால் குளு மணாலி போக வில்லை . அந்தக் குறை தீர்ந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

      நீக்கு
  18. குளுகுளு குலுமணாலி சென்றுவந்த நாட்கள் மீண்டும் நினைவுக்கு வருகின்றன...

    - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நினைவுகளை மீட்டெடுக்க இப்பதிவு உதவியதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய செல்லப்பா ஐயா.

      நீக்கு
  19. வழக்கம்போல் அருமையான படங்களுடன் விளக்கங்கள். அதிலும் “குலூ-மணாலி சென்று சேர்வதற்கு பதிலாக குளுகுளு பெட்டிக்குள் போகும் வாய்ப்பு அதிகம்!” என்ற வரிகளைப் படித்ததும் சிரித்துவிட்டேன். பாராட்டுகள்! தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  20. போகனும் என்ற ஆசையைத்தூண்டுகின்றீர்கள் ஆனால் விடுமுறை. நாட்களைத்தான் நினைக்கவே போதாமல் இருக்குது. தொடர்கின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....