புதன், 8 மார்ச், 2017

பெண்மை போற்றுதும் – என்னைப் பற்றி நான்….


பெண்மை போற்றுதும்….



இன்று சர்வதேச மகளிர் தினம். இணையம், ஊடகங்கள் என எங்கு பார்த்தாலும் மகளிர் தின வாழ்த்துகளும், கொண்டாட்டங்களும்….. மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துவதில் நானும் இணைந்து கொள்கிறேன்…

ஒரே ஒரு நாள் மட்டுமே மகளிர் தினம் கொண்டாடி விட்டால் போதும் என்று தோன்றவில்லை. சிலர் மகளிர் தினமாகக் கொண்டாடாமல், மகளிர் மாதம் என மார்ச் மாதம் முழுவதும் கொண்டாட்டங்கள், சிறப்பு நிகழ்வுகள் நடத்துகிறார்கள். மீதமுள்ள பதினோறு மாதங்களும் அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்பதல்ல….. எல்லா நாளிலும் பெண்களைப் போற்றுவோம். 

என்று ஒரு பெண் நடு இரவில் பயமின்றி தனியாக நடந்து போக முடிகிறதோ அன்று தான் நமக்கு சுதந்திரம் என்று மகாத்மா சொன்ன சுதந்திரம் கிடைத்து விட்டதா என்றால்…. நடு இரவினை விடுங்கள், பட்டப் பகலில் கூட பயமின்றி நடக்க முடிவதில்லை. கண்களாலேயே கற்பழிக்கும் கூட்டங்கள் இங்கே உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை. பெண்ணை போகப் பொருளாக மட்டுமே பார்க்கும் நிலை தான் – குறிப்பாக வட இந்தியாவில்.  எத்தனை நிர்பயாக்கள் இங்கே…..

சின்னக் குழந்தைகளைக் கூட சிலர் விட்டு வைப்பதில்லை. பச்சிளம் சிட்டு பாவம் என்ன செய்தது…. கிழவிகளைக் கூட விடுவதில்லை சிலர். இச்சையைத் தீர்க்கும் எந்திரம் அல்ல பெண்கள் என்பதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள் இந்த காமுகர்கள்….

வருடா வருடம் ஒரே ஒரு நாள் மட்டும் பெண்களுக்கு வாழ்த்து சொல்லி விட்டால் தீரப் போவதில்லை பெண்மைக்கு வரும் துயரங்கள். பெண்களை மதிக்கும் உணர்வை ஒவ்வொரு பெற்றோரும் தனது மகன்களுக்குச் சிறு வயது முதலே சொல்லித் தர வேண்டும். காமம் கொள்வதற்கு நேரம் வரும், அதற்கெனவே சமயம் வரும் என்பதையும் சொல்லித் தரவேண்டும். பெண்மையை போதைப் பொருளாகவே காட்டும் சினிமாவும், ஊடகங்களும் கொஞ்சமாவது மாற வேண்டும். 

இந்த நாளில் மட்டுமல்லாது வரும் எல்லா நாட்களிலும் பெண்மையைப் போற்றுவோம்…..  நேற்று பார்த்த ஒரு குறும்படம், இந்த சர்வதேச பெண்கள் தினத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. நீங்களும் பாருங்களேன்….
  

என்னைப் பற்றி நான்….

தலைப்பில் சொன்ன இரண்டாம் விஷயத்திற்கு வருவோம்…..



மனசு எனும் வலைப்பூவில் எழுதி வரும் பரிவை சே. குமார் அவர்கள் தனது தளத்தில் சக பதிவர்களிடம் கேட்டு வாங்கி “என்னைப் பற்றி நான்” என்ற தலைப்பில் பதிவுகள் வெளியிடுவதைப் பார்த்திருக்கலாம்…. இதுவரை இத்தலைப்பில் ஏழு பதிவுகள் வந்திருக்கின்றன.








[மஞ்சள் வண்ணத்தில் க்ளிக் செய்தால் பதிவரின் வலைப்பூவிற்கும், பச்சை வண்ணத்தில் க்ளிக் செய்தால் “மனசு” தளத்தில் வெளியான “என்னைப் பற்றி நான்” பதிவும் படிக்கலாம்….]

இந்த வரிசையில்…. அடியேனையும் களத்தில் இறக்கி இருக்கிறார் பரிவை சே. குமார்.  அவர் கேட்டபடி எழுதி அனுப்பிவிட்டேன். விரைவில் அவரது தளத்தில்…. இங்கே ஒரு சிறு முன்னோட்டம்….

நான்…  நான்….  ஏனோ குணா பட கமல் நான், நான் என்று கடிதம் எழுதும் போது சொல்வது நினைவுக்கு வருகிறது! கூடவே இன்னுமொன்றும்.  அது பாலகுமாரனின் புத்தகம் ஒன்றில் வந்த கவிதை! 
 ”எனக்குள்ளே ஒரு மிருகம் உண்டுஅதை உன்னிடம் சொல்வதெப்போ…..நாளை, நாளை மறுநாள்!”
 ….என்று துவங்கும் அந்தக் கவிதை போல நம் எல்லோர் மனதிற்குள்ளும் மிருக குணம் ஒளிந்து கொண்டிருக்கிறது.  மிருக குணம் மட்டுமல்ல, பல மனிதர்களின் மனதில் அழுக்குகளும் ஒளிந்து கொண்டிருக்கின்றன.    பெரும்பாலும் முயற்சி செய்து இந்த மிருக குணத்தினை தடைபடுத்தி, மனதுக்குள் பூட்டி வைத்திருந்தாலும், அவை அவ்வப்போது தலைகாட்டாது இருப்பதில்லை. எனக்குள்ளும் இப்படி அழுக்குகள் இருக்கலாம் – எனக்குத் தெரிந்த ஒரு அழுக்கு/மிருகம்……….

மீதியை அவரது தளத்திலேயே படிக்கலாமே…..

மீண்டும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளுடன்…..

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி. 

36 கருத்துகள்:

  1. மகளிர் தினத்தை சிறப்பித்த பதிவு..

    உங்களைப் பற்றி சொல்லியவிதமும் அழகு!..

    குமார் அவர்களின் தளத்தில் சந்திக்கலாம்... வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வக்குமார்.

      பதிவு பரிவை சே. குமார் தளத்தில் வெளியிட்டு விட்டார்.

      நீக்கு
  3. வழக்கம் போலவே குமார் அவர்களின் தளத்தில் கருத்துரை பதிய முடியவில்லை.. கையில் இருக்கும் கேலக்ஸியிலும் - செல்லினம் - சற்றே குழப்பம் செய்கின்றது..

    தங்களைப் பற்றிய அறிமுகம் கண்டேன்..

    அன்பின் நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன பிரச்சனை எனத் தெரியவில்லையே. சில தளங்களில் இம்மாதிரி பிரச்சனை வருவதுண்டு. வேறு Browser-ல் படிக்க முயலுங்கள்....

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  4. இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்...

    நண்பர் பரிவை சே. குமார். தளத்திற்கு செல்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. வணக்கம் அண்ணா...

    என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள்.

    இன்று என் தளத்தில் தங்கள் பகிர்வு.

    இங்கு மனசு தளத்தில் இதுவரை வெளியான நம் உறவுகளின் கட்டுரைக்கான இணைப்புடன் 'என்னைப் பற்றி நான்' குறித்த பகிர்வு.

    ரொம்ப நன்றி அண்ணா...

    ஒரு நாள் மட்டும் மகளிர் தினமாக இல்லாமல் தினம் தினம் மகளிர் தினமாக இருக்கட்டும்.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய்ப்பளித்த உங்களுக்கு எனது நன்றி குமார்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

      நீக்கு
  6. மகளிர் தின வாழ்த்துக்களைச் சொல்லிச் சிறப்பித்த பதிவு. அவர்கள் செய்யும் செயல்களை நாமும் செய்யப் புகுந்தால் (சமையல், வீட்டைத் தூய்மை செய்வது, துவைப்பது போன்ற பல வேலைகள்) அவர்களின் கஷ்டம் நமக்குப் புரியும்.

    மன அழுக்கில்லாத மாந்தருக்குப் பூவுலகில் இடமேது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  7. மகளிர் தின வாழ்த்துகள் ஜி
    பதிவுக்கு நிறைய உழைத்து இருக்கின்றீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு
  9. Dear
    Wonderful and thought provoking blog. Please keep it up. All the best
    Vijay
    Delhi

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

      நீக்கு
  10. என்னைப்பற்றிநான் மனசுதளத்தில் வருவது இப்போதே தெரிந்ததுஆனால் அவர்களைப் பற்றிச் சொல்பவர்கள் சொல்லும் செய்திகளும் குறைவே ஒரு வேளை இதற்கு மேல் கூடாது என்று நினைக்கிறார்களோ வலையில் அறிந்ததை விட அதிகம் தெரிந்து கொள்ள ஆவல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

      நீக்கு
    2. வலைத்தளத்திற்கு நம் பதிவர்கள் மட்டுமல்ல பலரும் பொதுவெளியில் இருந்து வருகிறார்கள் அதனால் பொதுவாக தெரிந்த கொள்ள கூடிய விஷயங்களை மட்டுமே பதிகிறோம். நெருங்கிய பதிவர்களிடம் போனிலோ அல்லது இமெயிலோ பல நம்மை பற்றிய தகவல்களை பலரும் பகிர்ந்து கொண்டுதான் இருக்கிறோம், நான் புனைப் பெயரில் எழுதினாலும் முகம் காட்டாமல் இருந்தாலும் நேரில் சில பதிவர்கள் சந்தித்து இருக்கிறார்கள் நெருங்கிய பதிவர்களிடம் எனது போன் நம்பரும் இருக்கவே செய்கிறது அவசியம் இருந்தால் மட்டுமே அவர்கள் கால் பண்ணுவார்கள் ஆனால் அந்த விபரம் எல்லாம் பொதுவில் எல்லோருக்கும் தெரிய வேண்டிய அவசியமில்லை என்பதால்தான் பலரும் அனேக தகவல்களை பகிர்வதில்லை

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மொஹம்மத்.....

      நீக்கு
  12. எங்களுக்கான வாழ்த்துச் செய்தியும் குறும்படமும் பெருமிதம் தந்தது... நன்றி சகோ...! 'என்னைப் பற்றி நான்' நல்லதொரு முன்னோட்டம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆல் இஸ் வெல்....

      நீக்கு
  15. ஒரு வாரமாக மீண்டும் கணினி படுத்தல்களுக்கு நடுவே வலைப்பக்கம் வருவது அரிதானது. இதோ.. மனசு தளத்துக்குச் செல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  16. மகளிர் தின சிறப்புப் பதிவு அருமை!

    மனசு தளத்தில் தங்களது பதிவைப் பார்த்துவிட்டோம் ஜி! அங்கு கருத்தும் இட்டுவிட்டோம்...இணையப் பிரச்சனை தொடர்ந்ததால் வர இயலாமல் போனது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  17. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி Various Tips!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....