சில்லென்று ஒரு பயணம் போகலாமா.....
வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்!
ஏழு
சகோதரிகள் பயணத் தொடரில் வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்று வந்த பயணம் பற்றி எழுதிய
நான் இப்போது இந்த ஹனிமூன் தேசம் தொடரில் எழுதப் போவது ஒரு வட மாநிலத்தில் உள்ள இடங்களுக்குச்
சென்று வந்த போது கிடைத்த அனுபவங்கள், பார்த்த இடங்கள் பற்றி. ஏழு சகோதரிகள் பயணத் தொடர் முடிந்த உடனேயே இந்தத்
தொடரை ஆரம்பிக்கலாமா வேண்டாமா என்று ஒரு சிறு குழப்பம். அதனால் தான் பயணங்கள் முடிவதில்லை – அடுத்த பயணம் போகலாமா? என்ற பதிவு எழுதி இருந்தேன்.
மாலையும் இரவும் சந்திக்கும் வேளையில்.....
எங்கும் கட்டிடம் கட்டுவோம்!
மலையெங்கும் வீடுகளும், தங்குமிடங்களும்!
பயணம்
சென்று வந்து சில மாதங்கள் ஆன பிறகும் எப்படி நினைவில் வைத்து எழுதுகிறீர்கள் என்ற
கேள்வியும் வந்த வண்ணமே இருக்கிறது. பயணம் செல்லும்போது எடுத்த புகைப்படங்களைப் பார்க்கும்போது
அப்பயணத்தில் கிடைத்த பல அனுபவங்களும் மனதில் வந்து போகும். தவிரவும், ஒவ்வொரு பயணத்திலும்
அலைபேசியில் Notes பகுதியில் பார்க்கும் இடங்களைப் பற்றிய குறிப்பு எழுதிக்கொண்டே இருப்பேன்
– ஒரு இடத்திலிருந்து அடுத்த இடம் பயணிக்கும் போது! இது முடிந்து சாலையில் பார்க்கும்
காட்சிகளும் படம் பிடிக்க ஆரம்பித்து விடுவேன்.
எப்படி இருந்த நான்........
இன்னமும் சிறிதாகி கூழாங்கல் ஆகி மணலாகி......
கொட்டி இருக்கும் பனியிலும் நாங்கள் வளர்வோம்....
என்று சொல்லுகின்றனவோ இம்மரங்கள்!
அது
தவிர, ஒவ்வொரு இரவும் தங்குமிடம் சென்றதும் அன்றைய தினம் நடந்த நிகழ்வுகள், பார்த்த
இடங்கள் என பலவும் குறிப்புகளாக சேமித்து வைத்துக் கொள்வேன். இந்தக் குறிப்புகள் மற்றும் புகைப்படங்கள் பயணக்
கட்டுரைகள் எழுதும்போது உதவியாக இருக்கும்! இந்த வேலைகள் பயணிக்கும்போது என்றால், பயணம்
செய்ய திட்டமிட்டவுடன் செல்லும் இடங்கள் பற்றி இணையத்திலும் தேடித் தேடி குறிப்புகள்
எடுத்து வைத்துக் கொள்வதும் உண்டு. தவிர அவ்விடங்களுக்குச் செல்லும் போது பார்க்கும்
நபர்களிடம் பேசுவதன் மூலமும் அவ்விடம் பற்றிய நிறைய குறிப்புகள் கிடைக்கும். ஒரு சில
குறிப்புகள், அந்தந்த மாநிலத்தின் சுற்றுலாத் துறையின் தளத்திலிருந்தும் கிடைக்கும்.
பச்சைப் பசேலென.....
பனி பொழிந்திருக்கும் பாதையில் ஒரு நடை.....
இந்தக்
குறிப்புகளை இங்கே கொடுக்க ஒரு காரணம் – பயணம் செய்யும் மற்ற பதிவர்களுக்கும் உதவியாக
இருக்கும் என்பது. கூடவே சில சந்தேகங்களையும் போக்கலாமே என்பது தான். இன்னுமொரு விஷயமும்
இங்கே சொல்ல வேண்டும். பதிவுகள் எழுதுவதற்கென்று மட்டுமே பயணங்கள் செல்வதில்லை. அப்படிச்
செல்வதும் சரியாக இருக்காது. பயணம் செய்யும் ஆவல் இருப்பவர்கள் மட்டுமே பயணம் செய்வது
நல்லது! பயணம் செய்யும் ஆவல் இருப்பதால் தான் பயணமே தவிர, இங்கே பதிவுகள் எழுதுவதற்காக
அல்ல! நமக்குப் பிடித்த பயணம் சென்று வந்த பிறகு, அங்கே அடுத்து பயணம் செல்பவர்களுக்கு
நமது அனுபவங்கள் உதவியாக இருக்குமே என்பதால் மட்டுமே எழுதுவது.
ஏரியிலிருந்து குளு குளு காற்று, இயற்கைச் சூழல்....
அப்படியே கொஞ்சம் நேரம் உட்கார்ந்து ரசிக்க சாலையோரத்தில் ஒரு பாறை.... வேறென்ன வேணும்!
வெள்ளிப் பனிமலை....
நடுவே உயரமான மரங்கள்..... பார்த்துக் கொண்டே இருக்கலாம்....
அடுத்த
பயணத் தொடரான “ஹனிமூன் தேசம்” ஆரம்பிக்கும் முன்னர் இந்தக் குறிப்புகளைத் தந்த பிற்கு
எழுத நினைத்திருந்தேன். இதோ எழுதி விட்டேன். ஹனிமூனுக்கு, அட ஹனிமூன் தேசத்திற்குப் போகலாமா?
நான் ரெடி… நீங்க ரெடியா? அது என்ன ஹனிமூன் தேசம்? அது எங்கே இருக்கிறது? என்ற கேள்விகளுக்கு
பதில் அடுத்த பத்திகளில்…..
ஆற்றின் குறுக்கே ஒரு தொங்குபாலம்...
அதில் ஆடியபடியே எடுத்த ஒரு புகைப்படம்!
”தேவ்பூமி
– ஹிமாச்சல்” என்ற பயணத் தொடரில் பார்த்த ஹிமாச்சலப் பிரதேசத்தின் வேறு சில பகுதிகளுக்குத்
தான் நாம் இந்தப் பயணத்தில் செல்லப் போகிறோம். ”தேவ்பூமி – ஹிமாச்சல்” பயணக் கட்டுரைகள்
மின்புத்தகமாகவும் வெளி வந்திருக்கிறது. படிக்காதவர்கள் கீழே உள்ள சுட்டிக்குச் சென்று
தரவிறக்கம் செய்து படிக்கலாம்…..
மலையோரம் வீசும் காற்று.....
கீழே சில்லென ஆறு....
பக்கத்தில் ஒரு வீடு! சொர்க்கம்!
கேரள
மாநிலத்தினை God’s Own Country என்று சொல்வது போல, ஹிமாசலப் பிரதேசத்தினை தேவ்பூமி
என்று அழைக்கிறார்கள். தேவலோகம் போலவே பல இடங்கள் – பனி மூடிய மலைப்பிரதேசங்கள், பாறைகளை
உருட்டியபடி ஓடும் ஆறுகள் என மிகவும் அழகிய பிரதேசம் ஹிமாச்சலப் பிரதேசம். இங்கே பார்க்க
வேண்டிய நிறைய இடங்கள் உண்டு. சென்ற ஹிமாச்சலப் பயணத்தில் வந்து குழுவில் பெரும்பாலானவர்கள்
இந்தப் பயணத்திலும் இருந்தார்கள். ஒன்றிரண்டு குடும்பங்கள் வர இயலாமல் போக, வேறு சில
நண்பர்கள் சேர்ந்து கொண்டார்கள். சென்ற பயணத்தில்
ஏற்பாடு செய்த அதே நிறுவனத்தின் வண்டி [Tempo Traveller], அதே ஓட்டுனர் ஜோதி எனும்
நாகஜோதி [தமிழர்] இப்பயணத்திலும்!
பனி உருகி ஆறாய்ப் பெருக்கெடுத்து....
இதில் குளிக்க தனி தைரியம் வேண்டும்!
குழுவில்
பெரும்பாலானவர்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்திருந்தார்கள். நான் மட்டுமே தனிக் கட்டை! செல்வது எங்கே? பெரும்பாலான
வட இந்திய புதுத் தம்பதிகள் ஹனிமூன் செல்லும் இடத்திற்கு! இப்போதெல்லாம் ஹனிமூன் என்றால்
வெளிநாட்டுக்குப் பறக்கும் பலர் இருந்தாலும், வெளி நாடு செல்ல இயலாத பல வட இந்தியர்கள்
செல்வது ஹிமாச்சலப் பிரதேசத்தின் இந்த இடத்திற்குத் தான்! மார்ச் மாதத்தில் கூட பனிப்பொழிவு
இருக்கும் இடம் என்பதால் நாங்கள் தேர்ந்தெடுத்தது அப்படி ஒரு மார்ச் மாதம் தான்!
சூரியன் ஒளிக்கதிர் இந்த வெள்ளிமலையில் பட்டால் எப்படி இருக்கும்? யோசிக்கும்போதே பிரமிக்க வைக்கிறது...
Solang Valley!
பனியால் செய்த ஃபோட்டோ Background!
இந்த இடத்தில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்!
ஹனிமூன்,
ஹனிமூன் என்று சொல்லிக் கொண்டே இருந்தாலும், என்ன இடம் என்று இதுவரை சொல்லவே இல்லையே
என்று கேட்பவர்களுக்காக…. அந்த இடம் குலூ-மணாலி!
நீங்களும் போகலாம் வரீங்களா? நீங்க ரெடின்னா நானும் ரெடி!
தொடர்ந்து
பயணிப்போம்…..
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி.
புகைப்படங்கள் ஸூப்பர் ஜி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குபடங்கள் ஒவ்வொன்றும் வழக்கம்போலவேஅற்புதம்
பதிலளிநீக்குதங்களுடன்இணைந்து பயணிக்க தயார் தயார் தயார்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஅசத்தல் படங்கள் ..
பதிலளிநீக்குஅப்புறம் குலு மணாலி குறித்து பகிர்ந்தது மகிழ்வு
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.
நீக்குதம
பதிலளிநீக்குதமிழ் மண வாக்கிற்கு நன்றி மது!
நீக்குபயணம் பற்றிய அருமையான விளக்கத்துடன் அழகான படங்கள்... வாழ்த்துகள் ஜி...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குபடங்கள் மனதை மயக்குகிறது...காத்திருக்கிறோம் பயணிக்க..
பதிலளிநீக்குகீதா: நேரில் பார்த்தவை..... இப்போது உங்கள் படங்களில் மீண்டும் நினைவுகள்....பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டது. இரு முறை பயணம்...வேறு வேறு இடங்கள் இந்த பிரதேசத் தில்.....சில அட்வெஞ்சர் விளையாட்டுகளும் நானும் மகனும் செய்தோம்....குறிப்புகள் எடுக்கவில்லை....எடுத்த படங்கள் மகனிடம்.... கேட்டிருக்கிறேன்...
உங்கள் கருத்தே....பயணம் நாம் விரும்பி செய்ய வேண்டும்.....எழுதுவதற்காக என்று இல்லாமல்....உங்கள் பயண அனுபவங்களை வாசிக்க ஆவலுடன்....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்குமறுமுறை இணையத்தில் உங்களுடன் பயணிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.
பதிலளிநீக்குசுதா த்வாரகாநாதன்
நிஜப் பயணத்திலும் உடன் வந்ததோடு இப்போதும் பயணிப்பதில் மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!
படங்கள் ,நேரில் காண வேண்டுமென்ற ஆசையைத் தூண்டுகின்றன :)
பதிலளிநீக்குமுடிந்த போது நேரில் சென்று வாருங்கள்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!
உண்மையில் உங்களிடனும், துளசிமாவினதும் பயணத்தொடருக்கு நான் நீண்ட கால வாசகி, பின்னூட்டமிட்டு கருத்துக்கள் இடுவதில்லையாயினும் போனிலேனும் தொடர்ந்து படித்து விடுவேன். அதிலும் செல்லுமிடங்களில் உண்வுப்பரிமாறல், அலங்காரம் குறித்தெல்லாம் எழுதும் போது அவைகளை எனக்காக கற்றலாகவும் எடுத்து கொண்டிருக்கின்றேன்.எல்லோராலும் பயணம் செய்ய முடியும்,ஆனால் அத்தனையையும் நினைவில் வைத்து சுவாரஷ்யமாக எழுத உங்களை போன்ற சிலரால் மட்டுமே முடியும், நீங்கள் செய்யும் பயணங்களை தொடர்ந்து எழ்துங்கள். உங்கள் வலைப்பூ பயணத்தொடரால் நிரம்பி வழிந்தால் என்ன? கவிதைகளால் பக்கங்கள் நிரம்புவதை விட இம்மாதிரி பலருக்கும் பயன்படும் அனுபவக்கட்டுரைகளால் நிரம்பவும் பயன் உண்டு.
பதிலளிநீக்குமுடிந்த வரை செல்லும் ஹோட்டல்களில் உணவு பரிமாறும் முறை பவ்வே எனில் அவைகளை அலங்கரித்திருக்கும் முறைகள் குறித்தும் எனக்காக புகைப்படம் எடுத்துப்பகிருங்கள்.
விசேஷங்களில் உணவு அலங்கரிக்கும் முறை - இனிமேல் செல்லும் போது படம் எடுத்து அனுப்புகிறேன்....
நீக்குதங்களது வருகைக்கும் உற்சாகம் தரும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.
அருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!
நீக்குஎங்கு போவதானாலும் மனைவியுடன்தான் பயணம் ஆக நாங்கள் போகுமிடங்களெல்லாம் எங்களுக்கு ஹனி மூன் தேசமே குலு மணாலி சென்றதில்லை செல்ல முடியுமோ தெரியவில்லை. பதிவு நீயும் போய்ப் பார் என்கிறது
பதிலளிநீக்குமுடிந்த போது சென்று வாருங்கள்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.
இனிய புகைப்படங்கள். சுவாரஸ்யத் தகவல்கள். தொடர்கிறேன். ஆற்றோரத்திலும், ஏரிக்கரையில் வீடு இருந்தால் இரண்டு நாளில் போரடித்து விடும் வெங்கட். அதெல்லாம் அவ்வப்போது பார்த்து ரசித்து வருவதற்கு மட்டுமே! இது என் கருத்து. அங்கு வசிப்பவர்களுக்கு நரகம்... மன்னிக்கவும்! நகரம் சொர்க்கமாக இருக்கலாம்! இக்கரைக்கு அக்கரைப்பச்சை!
பதிலளிநீக்குஇக்கரைக்கு அக்கரைப் பச்சை! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்டு @நொரண்டு.
நீக்குபயணத் தொடர் எழுதுவோருக்கு தாங்கள் தந்திருக்கும் குறிப்புகள் நிச்சயம் பயனுள்ளவை. படங்கள் அருமை. தங்களுடன் பயணிக்க காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்கு