அன்பின் நண்பர்களுக்கு,
20.03.2013 அன்று வெளியிட்ட கவிஞர்களுக்கு/கதாசிரியர்களுக்கு
ஒரு அழைப்பு! எனும் பதிவின் அழைப்பினை ஏற்று, வந்திருக்கும் மூன்றாம்
கவிதையை இன்று இங்கே பகிர்ந்துள்ளேன். அம்பாளடியாள்
எனும் வலைப்பூவில் எழுதி வரும் சகோ அம்பாளடியாள் எழுதிய கவிதையினை இன்று
பகிர்ந்துள்ளேன்.
இதோ அன்னம் விடு தூது
பகிர்வுகள் வரிசையில் மூன்றாவது கவிதை!
பட
உதவி: சுதேசமித்திரன் 1957
தூது சொல்
அன்னப் பறவையே ..
வனத்திலே தேவதை போல்
வந்திருக்கும் தாயே உன்
அழகினைக் கண்டு உள்ளம்
ஆனந்தம் கொண்டதிங்கே !..
நிடதநாட்டிலே மன்னனாக
நீ விரும்பும் அழகுடனே
நளன் என்னும் நாமத்துடன் உன்
நாயகன் அவனும் அவதரித்தான்
ஏழ் பிறப்பிலும் இணைந்திருக்க
இறைவன் அவன் ஆசிபெற்ற
மணப்பெண்ணே உன்னை இன்றே
மணமாலை சூடக் காத்திருக்கின்றான்
அழகென்ன அழகென்று
அகம் மகிழ்ந்து போவாயம்மா
உனதன்பு விழி மகிழ
உனக்காகவே பிறந்த மன்னன்!...
குணத்திலும் உயரியவன்
நற் கொள்கையிலும் உயர்ந்த மன்னன்
சரி என்றே சொல்லிடவா இந்த
சாந்தமான முகத்தைக் கண்டு !
வெள்ளை மனம் கொண்ட உன்றன்
கள்ளமில்லா மனம் அறிவேன்
அன்னமென வந்த குருவே நல்
ஆசி கொடு இக்கணமே ........
மன்னவனை மணம் முடித்து
மகிழ்வுடனே நான் வாழ நீ
சொன்ன தொரு சேதி கேட்டு
மனம் சொக்கி நிக்குது தன்னாலே.......
வந்திருக்கும் தாயே உன்
அழகினைக் கண்டு உள்ளம்
ஆனந்தம் கொண்டதிங்கே !..
நிடதநாட்டிலே மன்னனாக
நீ விரும்பும் அழகுடனே
நளன் என்னும் நாமத்துடன் உன்
நாயகன் அவனும் அவதரித்தான்
ஏழ் பிறப்பிலும் இணைந்திருக்க
இறைவன் அவன் ஆசிபெற்ற
மணப்பெண்ணே உன்னை இன்றே
மணமாலை சூடக் காத்திருக்கின்றான்
அழகென்ன அழகென்று
அகம் மகிழ்ந்து போவாயம்மா
உனதன்பு விழி மகிழ
உனக்காகவே பிறந்த மன்னன்!...
குணத்திலும் உயரியவன்
நற் கொள்கையிலும் உயர்ந்த மன்னன்
சரி என்றே சொல்லிடவா இந்த
சாந்தமான முகத்தைக் கண்டு !
வெள்ளை மனம் கொண்ட உன்றன்
கள்ளமில்லா மனம் அறிவேன்
அன்னமென வந்த குருவே நல்
ஆசி கொடு இக்கணமே ........
மன்னவனை மணம் முடித்து
மகிழ்வுடனே நான் வாழ நீ
சொன்ன தொரு சேதி கேட்டு
மனம் சொக்கி நிக்குது தன்னாலே.......
என்ன நண்பர்களே கவிதையினை ரசித்தீர்களா? கவிதைக்கான பாராட்டுகளுக்கு உரியவர்
ஆசிரியர் மட்டுமே! கவிதை எழுதிய அம்பாளடியாள் அவர்களுக்கு ஒரு பூங்கொத்து!
அடுத்த பதிவில்
சந்திக்கும் வரை.....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
அழகான கவிதை படைத்து அனுப்பி, அருமையான பூங்கொத்து வென்றுள்ள கவிதாயினிக்கு என் அன்பான பாராட்டுக்கள், இனிய நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபகிர்ந்துகொண்ட தங்களுக்கு என் ந்ன்றிகள், வெங்கட் ஜி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குஅம்பாளடியாள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஅழகான படத்துக்கு அழகான கவிதை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.
நீக்குஇவரது கவிதைகள் எப்போதும் சிறப்பாக இருக்கும் பாராட்டுக்கள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜ்.
நீக்குஇதுவும் அருமையாக இருக்கு.வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆசியா.
நீக்குஅம்பாளடியாள் கவிதைகள் எல்லாமே மிகவும் நன்றாக இருக்கும்.பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூந்தளிர்.
நீக்குவாழ்த்துகள் கவிதை ஆசிரியருக்கும் அதை பகிர்ந்த உங்களுக்கும்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.
நீக்குஅழகான கவிதை புனைந்துள்ளீர்கள் !
பதிலளிநீக்குநன்று தோழி ! வாழ்த்துக்கள் !
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.
நீக்குகவிதை நன்று. கவியாசிரியருக்கும், பதிவாசிரியருக்கும் வாழ்த்துக்கள். வாழ்க!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி [பத்மநாபன்] ஈஸ்வரன் அண்ணாச்சி.
நீக்குஅழகான வரிகள் வாழ்த்துக்கள் தோழி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.
நீக்குஅன்னமாக மாறி கவிதை எழுதிய அம்பாளடியாளுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅழகான மலர்ச்செண்டு அளித்த திரு வெங்கட் நாகராஜனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயந்தி ரமணி.
நீக்குஇருவருக்கும் வாழ்த்துக்கள்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் இராமாநுசம் ஐயா.
நீக்குதமயந்தியின் தூதையே கவிதையாக்கிய அம்பாலடியாள் அவர்களுக்குப் பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.
நீக்குஅழகான கவிதையைப் பகிர்ந்துள்ளீர்கள் நாகராஜ் ஜி.
பதிலளிநீக்குநானும் எழுதிட வேண்டும் ...(சற்று மனச் சோர்வு)
மதியம் எழுதிவிடுவேன்.
நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா.
நீக்குஉங்கள் கவிதையைப் படித்தேன். சிறப்பான கவிதையை படைத்த உங்களுக்கு வாழ்த்துகள். எனது பக்கத்தில் விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்.
நல்லதொரு தூதுக் கவிதை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குவணக்கம் பதிவாளர் வெங்கட் நாகராஜ் அவர்களே....
பதிலளிநீக்குஇங்கு இப்போதுதான் முதன்முதல் வருகிறேன்.
வரும்போதே என் மனதிற்கு இனிய கவியரங்கம் நடக்கிறதே...
படத்திற்கு கவிதை சொல்லல் சிறப்பாக இருக்கிறது!!!
இங்குள்ள கவிதையும் அருமை! கவியினைப் புனைந்திருக்கும் தோழிக்கும் என் இனிய வாழ்த்துக்கள்!
அரிய படைப்புகளை படைக்கும் உங்களுக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.
நீக்குதங்களது முதல் வருகை! மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து சந்திப்போம்.
அஹா பூங்கொத்து எனக்கே எனக்கா :) நன்றி மிக்க நன்றி
பதிலளிநீக்குஎன் அன்பு நெஞ்சங்களின் வாழ்த்துக்களுடன் கிடைக்கப் பெற்ற
இப் பூங்கொத்து மனதில் இன்பம் பொங்க நறு மணம் வீசுகின்றதே !!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.
நீக்குஅம்பாளடியாள் அவர்களின் அழகிய பாடலுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇப்படி எங்களைச் சிந்திக்கத் துர்ண்டிய உங்களுக்கும்
என் வாழ்த்துக்கள் நாகராஜ் ஜி.
நானும் என் வலையில் படத்திற்கான பாடலைப்
பதித்துள்ளேன். (எனக்கும் மலர் கொத்து கிடைக்குமா?)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா.
நீக்குபூங்கொத்து உங்களுக்கும் உண்டு!
அழகான வரிகள் வாழ்த்துக்கள் தோழி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சங்கீதா.
நீக்குஅழகான கவிதை. வாழ்த்துகள் அம்பாளடியாள் .
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குஅழகோவியங்களை அளித்து கவிதைகளை வரவழைத்து... அருமையான பணி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
நீக்குஅழகான கவிதைக்கு இனிய வாழ்த்துகள்..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.
நீக்குஅம்பாளடியாள் கவிதை வெகு பொருத்தம் படத்துக்கு.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்கு