எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, March 11, 2013

குபேரவன காவலும் புருஷா மிருகமும்

நண்பர் மின்னல் வரிகள் பால கணேஷ் சில மாதங்கள் முன்பு தனது பக்கத்தில் மனம் திருடிய குபேரவனம்என்ற தலைப்பில் காலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் எழுதிய குபேரவன காவல் நாவல் பற்றி எழுதியிருந்தார். அவரது பதிவு படித்ததிலிருந்தே இப்புத்தகத்தினை படித்து விட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. சென்ற சென்னைப் பயணத்தின் போது கணேஷ் அவர்களிடமிருந்து புத்தகத்தினை வாங்கிக் கொண்டு வந்தேன்.

தில்லி வந்த பின் வேலைப் பளுவும் வலையும் என்னை ஆட்கொள்ள, புத்தகம் படிக்க முடியவில்லை. சில வாரங்கள் முன் திடீரென ஒரு ஞானோதயம் – இனி வாரத்திற்கு ஒரு புத்தகமாவது படித்தே தீருவது என.  அந்த ஞானோதயத்தில் சில புத்தகங்களை படிக்க ஆரம்பித்திருக்கிறேன். அப்படிப் படித்த ஒரு புத்தகம் குபேரவன காவல்”.

ஒரு வியாழன் இரவு அலுவலகத்திலிருந்து வீடு வந்தபின் பத்தேகால் மணிக்கு படிக்க ஆரம்பித்தேன். படித்து முடித்த போது இரவு 02.15 மணி. தூக்கம் வருகிறது என கண்கள் கெஞ்சினாலும் படித்து முடிக்கும் வரை கீழே வைக்க மனது விடவில்லை! ஆரம்பத்திலிருந்தே விறுவிறுப்பு.

கண்ணன் செய்த எச்சரிக்கைஎன ஆரம்பித்து ஐம்பது பகுதிகளாக கதையை நகர்த்திக் கொண்டு சென்றிருக்கிறார் கதை ஆசிரியர் காலச்சக்கரம் நரசிம்மா.  இவர் எழுதிய நான்கு புத்தகங்களில் நான் படிக்கும் இரண்டாவது புத்தகமிது. மற்ற இரண்டு புத்தகங்களையும் விரைவில் படிக்க ஆவல். “சித்ராலயாகோபு அவர்களின் மகன் இவர்.

பாண்டவர்கள் ராஜசூய யாகம் நடத்த முடிவு செய்த யாரையெல்லாம் அழைப்பது என முடிவு செய்து கொண்டிருந்தார்கள். செல்வத்திற்கு அதிபதியான குபேரனை அழைக்க பீமனை அனுப்பவதாக முடிவு செய்யப்பட்டது. கண்ணபிரான், குபேரவனத்தினை மனித முகமும், சிங்க உடலும் கொண்ட புருஷா மிருகத்தினால் காவல் காக்கின்ற விஷயம் சொல்லி, அங்கே உள்ளே நுழையும் அனைவரையும் அது அடித்துக்கொன்று புசித்து விடும் என அதில் இருந்த ஆபத்தினை எடுத்துரைக்கிறார். ஆபத்தினை மட்டும் சொல்லாது, அதிலிருந்து தப்பிக்கும் உபாயத்தினையும் சொல்கிறார். புருஷா மிருகத்திடமிருந்து பீமன் எப்படி தப்பித்து வருகிறார் என்பதில் ஆரம்பிக்கிறது ஸ்வாரசியமான கதையோட்டம்.

புருஷா மிருகம் சிவ பூஜை செய்யும்போதெல்லாம் தனது சக்தியை ம்ருகரஞ்சிகா என்ற யட்சிணிப் பெண்ணிடம் கொடுத்து அவளை குபேரவனத்திற்கு காவல் வைத்துச் செல்லுமாம். அப்படி ம்ருகரஞ்சிகா காவல் இருக்கும் சமயத்தில் குபேரவனத்திற்குள் ஒரு கந்தர்வன் நுழைந்துவிட, அவனைத் துரத்திக் கொண்டு சென்ற ம்ருகரஞ்சிகா பதினோறு பிறவிகளில் அந்தக் கந்தர்வனை அழித்து விடுகிறாள்.

இப்போது பனிரெண்டாவது பிறவியாக, அந்த கந்தர்வன் 1919-ஆம் வருடம் சிதம்பரத்தில் புருஷோத்தமனாக பிறக்க, ம்ருகரஞ்சிகா என்ற அந்த யட்சிணி, ம்ருகநயனானி என்ற பெயரோடு பிறந்து இருக்கிறாள். பதினாறு வகை யட்சிணிகளில் படுபயங்கரமான மதனபயங்கரியான ம்ருகநயனானி புருஷோத்தமனை இப்பிறவியிலும் அழித்து விடுகிறாளா, என்பதைத் தான் இந்த நாவலில் விறுவிறுப்புடன் சொல்லி இருக்கிறார் கதாசிரியர்.

ம்ருகரஞ்சிகாவிடமிருந்து புருஷோத்தமனை காக்க ஒரே வழி அவனுக்கு விரைவில் திருமணம் செய்துவித்து ஒரு குழந்தையும் பெறுவது தான் என மனித உடலில் உள்ள நாடிச்சக்கரங்களின் ஓட்டத்தினை வைத்து ஒருவரின் எதிர்காலத்தினை துல்லியமாக கணித்துக் கூறும் சகடவாக்கியர் நம்பாடுவான் கூறிவிட அப்படியே திருமணம் நடக்கிறது – குழந்தை அமுதனும் பிறக்கிறான்.

மிருகநயனானி, புருஷோத்தமன், அமுதன், ஜ்யோத்ஸ்னா, மாடில்டா, என பல பாத்திரங்களோடு நாவல் பரிமளிக்கிறது. நாவல் மூலம் சகடவாக்கியம், யட்சிணி, வசியம், உடன்கட்டை ஏறுதல் என பலப் பல பரிமாணங்களில் சொல்லும் கதைக்கான களன், சிதம்பரம், சென்னை, உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான், ஊட்டி, வெளிநாடு என பல இடங்களில் நடக்கிறது.

கதை பற்றிய தனது முன்னுரையில் கதாசிரியர் கூறியிருப்பது உங்களுக்கு கதை பற்றிய சில விஷயங்களைச் சொல்லும்! இனி கதாசிரியரின் வார்த்தைகள் –

இது ஒரு புதுமையான கதை. பெயர் குபேரவன காவல். சரித்திரம் அல்ல; ஆனால் சரித்திரம் பேசும்! காதல் கதையல்ல, ஆனால் காதலைப் பற்றி பேசும். மாயமந்திர கதையல்ல, ஆனால் மர்மமான நிகழ்வுகளைப் பற்றி பேசும்! குடும்பக் கதை அல்ல, ஆனால் குடும்பப் பெருமைகளைப் பற்றி பேசும்.

மொத்தத்தில் உங்களுக்கு இது ஒரு புது அனுபவத்தை தரப் போகிறது. ஆனால் முன்பே கூறிவிடுகிறேன்! இதில் ஒரு பெண் மிக மிக பயங்கரமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறாள். இதனால் பெண்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது!

இந்த நாவலின் மூலக்கருவே ஆண்-பெண் உறவுதான். ஆண் பலமானவனா இல்லை பெண் பலமானவளா?

சிறப்பான ஒரு நாவலைப் பற்றி அவரது பதிவு மூலம் தெரிவித்த நண்பர் பால கணேஷ் அவர்களுக்கு எனது நன்றி. நீங்களும் இந்த விறுவிறுப்பான நாவலைப் படிக்க வேண்டுமா? 432 பக்கங்கள் கொண்டு வானதி பதிப்பகம் வெளியிட்டு இருக்கும் இந்த நாவல் விலை 175 மட்டுமே. கிடைக்குமிடம்: வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை – 17.

மீண்டும் வேறொரு புத்தகத்தினைப் படித்த அனுபவத்துடன் உங்களைச் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

50 comments:

 1. விறு விறுப்பான நாவல் என்று உங்கள் விமர்சனம் மூலம் தெரிகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 2. திருமதி . இராஜராஜேஸ்வரி அவர்களும் புருஷமிருகத்தைப்பற்றி இன்று எழுதி இருக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஓ... தகவலுக்கு நன்றிம்மா. படிக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 3. ஆஹா... ஒரே நாளி்ல் ஒரே மூச்சில் நான் படி்த்து அனுபவித்த மகிழ்வை நீங்களும் அடைந்தீர்களா? என் நண்பரின் நாவல் உங்களையும் கவர்ந்ததில் மிகமிக சந்தோஷம் எனக்கு! வாரம் ஒரு புத்தகமேனும் படிப்பது என்ற உங்கள் முடிவை இரு கரம்தட்டி வரவேற்கிறேன். நான் சாதாரணமாகவே அப்படித்தான்! என் ‘மனம் திருடிய குபேரவ0னம்’ லிங்கை பாத்ததும் மேலும் குஷி! நன்றி நண்பா!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கணேஷ்.

   Delete
 4. சிறப்பான ஒரு நாவலைப் பற்றி அருமையான அறிமுகத்திற்கு பாராட்டுக்கள்..

  எமது பதிவை இங்கு குறிப்பிட்ட
  கோமதி அரசு அவர்களுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

  http://jaghamani.blogspot.com/2013/03/blog-post_11.html
  கோபாலா , கோவிந்தா ..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   தங்களது பதிவினையும் படிக்கிறேன். தகவலுக்கு நன்றி.

   Delete
 5. தங்களின் இந்த பதிப்பு மிக மிக அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, http://www.tamilkalanchiyam.com என்கிற இணையதளத்திலும் பகிரும் மாறு வேண்டிகொள்கிறோம். வாழ்க தமிழ்... வளர்க தமிழ்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷக்தி தாசன்.

   Delete
 6. அடடா , இரண்டு பெரிய்ய பரிந்துரைகள் வந்து விட்டனவே ..
  படித்தாகணுமே...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   Delete
 7. ஒரே நாளில் அதுவும் ஒரே மூச்சில், அடடா.. வாழ்த்துகள். வாசிப்பில் உங்களின் ஈடுபாடு... பிரமிக்க வைக்கிறது. கற்றுக்கொள்ளவேண்டும் உங்களிடம். கதை புரிவதற்குக் கொஞ்சம் கடினமாக இருக்கும் போலிருக்கு..!! பெயர்களே கண்ணைக் கட்டுகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி.

   புரிவது கடினமில்லை. படித்துப் பாருங்கள்!

   Delete
 8. நாவல் விமர்சனம், நாவல் பழமாய் சுவைக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.

   Delete
 9. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 10. நல்லதொரு நாவலைப்பற்றிய விமர்சனம் அருமை...

  பகிர்ந்து, பாலகணேஷ் அவர்களையும் சிறப்பித்தமைக்கு நன்றி....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 11. படிச்சுடுவோம்.......... ...அவரோட சங்கதாரா படிச்சுட்டு வேற ரெண்டு நாவல் வாங்கி வந்து வச்சிருக்கேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 12. ரசனை மிக்க விமரிசனம்.படிக்க ஆசை எழுகிறது
  த.ம.6

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 13. புத்தக விமர்சனப் பதிவுக்கு நன்றி. பாராட்டுக்கள் வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 14. அன்பு நண்பா
  "குபேரவன காவலும் புருஷா மிருகமும்" கதை விமர்சனம் மிக அருமை.. கதை பாத்திரங்களை புரிந்து கொள்வது கடினமென தோன்றுகிறது. கூடிய விரைவில் வாங்கி படிக்க எண்ணம்.
  தங்களுக்கு வாழ்த்துக்கள்
  விஜய்

  ReplyDelete
  Replies
  1. புரிந்து கொள்வது அவ்வளவு கடினமல்ல நண்பரே. படிக்க ஆவலிருந்தால் நான் தருகிறேன். படித்துப் பாருங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 15. உடனே படிக்க ஆவலைத் தூண்டுகிறது!நல்ல விமரிசனம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 16. நீங்கள் விவரமாக எழுதியிருப்பதை படிக்கும் பொழுது புத்தகத்தை உடன் படிக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றுகிறது.மிகவும் நல்லதொரு புத்தக அறிமுகத்திற்கு நன்றி, வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   Delete
 17. உங்களின் விமர்சனமே படிக்கும் ஆவலைத் துர்ண்டுகிறது.
  ஆனால் எனக்கு கிடைப்பது தான் கஷ்டம்.
  அருமையான விமர்சனம் நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. இந்தியா வரும்போது வாங்கி விடுங்கள். அது வரை காத்திருக்க வேண்டியது தான்! :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அருணா.

   Delete
 18. நன்ற அலசியுள்ளீர்கள் புத்தகத்தை.
  வாசிக்கும் உணர்வு வருகிறது.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வேதா இலங்காதிலகம் ஜி!

   Delete
 19. உங்கள் புத்தக விமர்சனம் புத்தகத்தை படிக்கத் தூண்டுகிறது.
  புருஷா மிருகம் பற்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் பதிவிலும் எழுதியுள்ளார்கள்.

  நல்ல புத்தக விமர்சனம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 20. ஒரு நல்ல தவலை மனம் கவரும் வண்ணம் எடுத்துரைத்துள்ளீர்கள்
  வாழ்த்துக்கள் .தொடர்ந்தும் இது போன்ற நன் நூல்களை வாசித்து
  உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் வாசிக்க நேரம்
  கிடைப்பவர்கள் எப்படியும் வாசித்தே தீர்வார்கள் .இப்போதெல்லாம்
  வாசிப்பு என்பது எம் மக்கள் மத்தியில் ஆரிதாகிக் கொண்டே வருகிறது தான்
  வருத்தமான ஒரு விடயம் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

  ReplyDelete
  Replies
  1. வாசிப்பு என்பது அரிதாகி வருவது உண்மை தான் சகோ.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 21. உங்கள் விமர்சனப் பகிர்வு புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டுகிறது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 22. ஹைய்யோ! குறிப்புகளைப் படிக்கும்போதே கட்டாயம் வாசிச்சுப் பார்க்கணுமுன்னு தோணுதே!

  பேசாம அந்த புருஷம்ருகத்தை நியூஸிக்கு அனுப்புங்க. நான் பாலகணேஷுக்கு நன்றின்னு பதிவு எழுதுவேன்:-)

  எப்படியும் அவர்வீட்டு விஸிட் ஒன்னு உறுதியாகிருச்சு!!!

  ReplyDelete
  Replies
  1. டீச்சர்! என் வீட்டுக்கு நீங்க விஸிட் வந்தா... எழுத்தாளர் காலச்சக்கரம் நரசிம்மாவோட ஆட்டோகிராஃபோடயே இந்தப் புத்தகத்தை .உஙகளுக்குத் தருவேன் என்பதை இங்கு தெரிவித்து மகிழ்கிறேன்!

   Delete
  2. புருஷா மிருகத்தினை உங்கள் நாட்டிற்கு அனுப்ப வேண்டுமா? அனுப்பினால் போயிற்று! :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
  3. கணேஷ் அண்ணே.... இது போங்கு ஆட்டம். எனக்கும் அவரோட ஆட்டோகிராஃப் வேணும்! :) முதல் இரண்டு புத்தகங்களில் வாங்கிக்கிறேன்! சரியா!

   Delete
 23. தங்களின் விமரிசனமே, நூலைப் படிக்கும் ஆவலைத் தூண்டுகின்றது. அவசியம் வாங்கிப் படிக்கின்றேன் அய்யா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார்.

   Delete
 24. சிறப்பான நாவல் பற்றி நன்றாக எழுதியுள்ளீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....