எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, March 26, 2013

அன்னம் விடு தூது – 3 – அம்பாளடியாள்



அன்பின் நண்பர்களுக்கு, 20.03.2013 அன்று வெளியிட்ட கவிஞர்களுக்கு/கதாசிரியர்களுக்கு ஒரு அழைப்பு! எனும் பதிவின் அழைப்பினை ஏற்று, வந்திருக்கும் மூன்றாம் கவிதையை இன்று இங்கே பகிர்ந்துள்ளேன். அம்பாளடியாள் எனும் வலைப்பூவில் எழுதி வரும் சகோ அம்பாளடியாள் எழுதிய கவிதையினை இன்று பகிர்ந்துள்ளேன்.

இதோ அன்னம் விடு தூது பகிர்வுகள் வரிசையில் மூன்றாவது கவிதை!



பட உதவி: சுதேசமித்திரன் 1957


தூது சொல் அன்னப் பறவையே ..

வனத்திலே தேவதை போல்
வந்திருக்கும் தாயே உன்
அழகினைக் கண்டு உள்ளம்
ஆனந்தம் கொண்டதிங்கே !..

நிடதநாட்டிலே மன்னனாக
நீ விரும்பும் அழகுடனே
நளன் என்னும் நாமத்துடன் உன்
நாயகன் அவனும் அவதரித்தான்

ஏழ் பிறப்பிலும் இணைந்திருக்க
இறைவன் அவன் ஆசிபெற்ற
மணப்பெண்ணே உன்னை இன்றே
மணமாலை சூடக் காத்திருக்கின்றான்

அழகென்ன அழகென்று
அகம் மகிழ்ந்து போவாயம்மா
உனதன்பு விழி மகிழ
உனக்காகவே  பிறந்த மன்னன்!...

குணத்திலும் உயரியவன்
நற் கொள்கையிலும் உயர்ந்த மன்னன்
சரி என்றே சொல்லிடவா இந்த
சாந்தமான முகத்தைக் கண்டு !

வெள்ளை மனம் கொண்ட உன்றன்
கள்ளமில்லா மனம் அறிவேன்
அன்னமென வந்த குருவே  நல்
ஆசி கொடு இக்கணமே ........

மன்னவனை மணம் முடித்து
மகிழ்வுடனே நான்  வாழ நீ
சொன்ன தொரு சேதி கேட்டு
மனம் சொக்கி நிக்குது தன்னாலே....... 

என்ன நண்பர்களே கவிதையினை ரசித்தீர்களா? கவிதைக்கான பாராட்டுகளுக்கு உரியவர் ஆசிரியர் மட்டுமே! கவிதை எழுதிய அம்பாளடியாள் அவர்களுக்கு ஒரு பூங்கொத்து!



அடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

46 comments:

 1. அழகான கவிதை படைத்து அனுப்பி, அருமையான பூங்கொத்து வென்றுள்ள கவிதாயினிக்கு என் அன்பான பாராட்டுக்கள், இனிய நல்வாழ்த்துகள்.

  பகிர்ந்துகொண்ட தங்களுக்கு என் ந்ன்றிகள், வெங்கட் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 2. அம்பாளடியாள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 3. அழகான படத்துக்கு அழகான கவிதை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 4. இவரது கவிதைகள் எப்போதும் சிறப்பாக இருக்கும் பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜ்.

   Delete
 5. இதுவும் அருமையாக இருக்கு.வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆசியா.

   Delete
 6. அம்பாளடியாள் கவிதைகள் எல்லாமே மிகவும் நன்றாக இருக்கும்.பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூந்தளிர்.

   Delete
 7. வாழ்த்துகள் கவிதை ஆசிரியருக்கும் அதை பகிர்ந்த உங்களுக்கும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.

   Delete
 8. அழகான கவிதை புனைந்துள்ளீர்கள் !
  நன்று தோழி ! வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   Delete
 9. கவிதை நன்று. கவியாசிரியருக்கும், பதிவாசிரியருக்கும் வாழ்த்துக்கள். வாழ்க!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி [பத்மநாபன்] ஈஸ்வரன் அண்ணாச்சி.

   Delete
 10. அழகான வரிகள் வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 11. அன்னமாக மாறி கவிதை எழுதிய அம்பாளடியாளுக்கு வாழ்த்துக்கள்.

  அழகான மலர்ச்செண்டு அளித்த திரு வெங்கட் நாகராஜனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயந்தி ரமணி.

   Delete

 12. இருவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் இராமாநுசம் ஐயா.

   Delete
 13. தமயந்தியின் தூதையே கவிதையாக்கிய அம்பாலடியாள் அவர்களுக்குப் பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 14. அழகான கவிதையைப் பகிர்ந்துள்ளீர்கள் நாகராஜ் ஜி.
  நானும் எழுதிட வேண்டும் ...(சற்று மனச் சோர்வு)
  மதியம் எழுதிவிடுவேன்.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா.

   உங்கள் கவிதையைப் படித்தேன். சிறப்பான கவிதையை படைத்த உங்களுக்கு வாழ்த்துகள். எனது பக்கத்தில் விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்.

   Delete
 15. நல்லதொரு தூதுக் கவிதை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 16. வணக்கம் பதிவாளர் வெங்கட் நாகராஜ் அவர்களே....
  இங்கு இப்போதுதான் முதன்முதல் வருகிறேன்.

  வரும்போதே என் மனதிற்கு இனிய கவியரங்கம் நடக்கிறதே...
  படத்திற்கு கவிதை சொல்லல் சிறப்பாக இருக்கிறது!!!

  இங்குள்ள கவிதையும் அருமை! கவியினைப் புனைந்திருக்கும் தோழிக்கும் என் இனிய வாழ்த்துக்கள்!

  அரிய படைப்புகளை படைக்கும் உங்களுக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   தங்களது முதல் வருகை! மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து சந்திப்போம்.

   Delete
 17. அஹா பூங்கொத்து எனக்கே எனக்கா :) நன்றி மிக்க நன்றி
  என் அன்பு நெஞ்சங்களின் வாழ்த்துக்களுடன் கிடைக்கப் பெற்ற
  இப் பூங்கொத்து மனதில் இன்பம் பொங்க நறு மணம் வீசுகின்றதே !!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 18. அம்பாளடியாள் அவர்களின் அழகிய பாடலுக்கு வாழ்த்துக்கள்.

  இப்படி எங்களைச் சிந்திக்கத் துர்ண்டிய உங்களுக்கும்
  என் வாழ்த்துக்கள் நாகராஜ் ஜி.

  நானும் என் வலையில் படத்திற்கான பாடலைப்
  பதித்துள்ளேன். (எனக்கும் மலர் கொத்து கிடைக்குமா?)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா.

   பூங்கொத்து உங்களுக்கும் உண்டு!

   Delete
 19. அழகான வரிகள் வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சங்கீதா.

   Delete
 20. அழகான கவிதை. வாழ்த்துகள் அம்பாளடியாள் .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 21. அழகோவியங்களை அளித்து கவிதைகளை வரவழைத்து... அருமையான பணி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 22. அழகான கவிதைக்கு இனிய வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 23. அம்பாளடியாள் கவிதை வெகு பொருத்தம் படத்துக்கு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....