எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, March 20, 2013

கவிஞர்களுக்கு/கதாசிரியர்களுக்கு ஒரு அழைப்பு!
சில மாதங்களுக்கு முன்பு கவிதை எழுதுங்க என்ற தலைப்பில் ஒரு ஓவியத்தினை பகிர்ந்து, அதற்கேற்ப கவிதை எழுதும்படி அழைப்பு விடுத்திருந்தேன். சிலர் கவிதைகள் எழுதி அதை தங்களுடைய வலைப்பூவில் பகிர்ந்த பின் என்னுடைய பக்கத்திலும் பகிர்ந்து கொண்டேன்.

அது போலவே இப்போதும் ஒரு ஓவியம் கொடுத்து கவிஞர்களுக்கு/கதாசிரியர்களுக்கு ஒரு அழைப்பு விடுக்கிறேன். கீழே கொடுத்துள்ள படத்தினை பாருங்கள். இந்த படம் 1957-ஆம் ஆண்டு வரையப்பட்ட ஒரு ஓவியம். 


பட உதவி: சுதேசமித்திரன் 1957

ஒரு அழகிய இளம்பெண் ஆற்றங்கரையில் மரத்தடியில் அமர்ந்து ஆற்றில் மிதந்து வரும் அன்னப் பறவைகளிடம் பேசிக் கொண்டிருக்கிறாள். நள சரித்திரத்தில் இருப்பது போல அன்னப் பறவையிடம் தூது போகச் சொல்லி கேட்பதாகவும் இருக்கலாம்! இந்த படம் எந்தப் பாடலுக்காக வரையப்பட்டது என்பதை பிறகு சொல்கிறேன்.

படத்தினைப் பார்த்து கவிஞர்கள்/கதாசிரியர்கள் செய்ய வேண்டியது இது தான்.  படத்தினைப் பார்க்கும் போது உங்கள் மனதில் தோன்றும் எண்ணத்தினை ஒரு கவிதையாகவோ, கதையாகவோ எழுதி உங்களுடைய வலைப்பூவில் பகிர்ந்து கொள்வதோடு இப்பகிர்வின் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.  எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தால் எனது வலைப்பூவிலும் வெளியிடுகிறேன் [எழுதும் உங்களுக்கு ஆட்சேபணை இல்லை எனில்!]

எழுதினால் என்ன கிடைக்கும் என கேட்பவர்களுக்கு! – உங்களுக்கு மனதிற்கு திருப்தியும் என்னிடமிருந்து ஒரு பூங்கொத்தும்! :) புத்தகங்கள் வாங்கி பரிசளிக்க எண்ணினாலும், பரிசளிப்பதில் இருக்கும் சில நடைமுறை சிக்கல்கள் என்னைத் தடுக்கின்றன. அதனால் தான் பூங்கொத்து!

இந்தப் படமும் இந்த கவிதை/கதை முயற்சிகளும் உங்களுக்குப் பிடித்திருந்தால், இன்னும் சில படங்கள் எனது பக்கத்தில் வெளியாகலாம். எல்லாம் இந்தப் பகிர்வுக்குக் கிடைக்கும் வரவேற்பினைப் பொறுத்தது!

என்ன நண்பர்களே கவிதை/கதை எழுத உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டி எழுப்பி விட்டீர்களா! 

தொடங்கட்டும் கவிதை/கதை மழை. 

மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

54 comments:

 1. குதிரை டயர்டா படுத்துக் கிடக்கு. மாலையில எழுப்பிவிட முயற்சிக்கிறேன். படம் அழகோ அழகு வெங்கட்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்....

   பயணம் சுகமாக இருந்ததா? பயணக் கட்டுரைகளை ஆவலுடன் எதிர்பார்த்து!

   Delete
 2. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
  2. சுதேசமித்திரன் 1957 வெளிவந்துள்ள அந்த ஓவியம் மிகவும் அழகாக உள்ளது.

   ஓவியத்தைப்பார்த்து காவியம் படைக்க அழைத்துள்ளீர்கள். நல்ல முயற்சி. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள், வெங்கட்ஜி.

   Delete
  3. தங்களது வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி வை. கோ. ஜி!

   Delete
 3. ஓவியம் அருமை... கலந்து கொள்வோருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 4. அழகான ஓவியம் , ஓவியத்தைப்பார்த்த்வுடன் எனக்கும் நளச்சரித்திரம் தான் நினைவுக்கு வந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 5. படம் அழகோ அழகு. கவிதையும் எழுதிவிட்டேன். நன்றிங்க தங்கள் பகிர்வுக்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி சசிகலா. உங்கள் கவிதை நாளை எனது பக்கத்தில் வெளிவரும்! உங்களுக்கு நன்றியுடன்....

   Delete
 6. எனது முகநூல் பக்கத்தில் படம் எடுத்து வரிகளை பகிர்ந்து கொண்டேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 7. அன்புள்ள வெங்கட்

  நல்ல படம் தேர்ந்து எடுத்து இருக்கிறீர்கள்
  கவிதை அனுப்பியுள்ளேன் எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்

  சங்கீதா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. உங்கள் கவிதையை எனது பக்கத்திலும் வரும் சனிக்கிழமை அன்று பகிர்ந்து கொள்கிறேன், உங்கள் அனுமதியோடு!

   Delete
 8. எனக்கும் ஏதாவது எழுத ஆசை தான் .ஆனால் விரைவாக என்னால் எழுத முடியாது. உங்கள் படத்தை நான் காபி செய்து கொள்ளலாமா. அதைப் பற்றி எழுதுவதற்காகத் தான்.எழுதிய பின், என்னுடைய வலைப் பூவில் பகிர்ந்த பிறகு உங்களுக்கு லிங்க் அனுப்பிவிடுகிறேன்.
  படம் மனத்தைக் கொள்ளையடிக்கிறது.
  நன்றி பகிர்விற்கு.

  ReplyDelete
  Replies
  1. பொறுமையாக எழுதுங்கள். கவிதை எழுதிட கடைசி நாள் 05.04.2013. அதன் பிறகு வேறு ஒரு படத்தினை வெளியிட நினைத்திருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 9. அருமையான முயற்சி ! இது போன்ற ஓர் ஊக்குவிப்பு கிடைப்பது
  கவிதை எழுதும் எங்களுக்கு ஓர் இலகு வழி .எதைப்பற்றி எழுதுவது
  என்று தான் முதலில் தடுமாற்றம் இருக்கும் எங்களுக்கு ஆனால்
  இந்த முயற்சியை நான் பல முறை சொல்ல நினைத்தேன் ஆனால்
  செயல்ப் படுத்தவில்லை இன்று உங்கள் ஆக்கம் கண்டு மகிழ்ந்தேன் .
  என் மனக் குதிரை இப்போதே மகிழ்வுடன் ஓட ஆரம்பித்து விட்டது
  கவிதை விரைவில் என் திரையில் காண்பீர்கள் மிக்க மகிழ்ச்சி .இம்
  முயற்சி வெல்ல என் வாழ்த்துக்களும் அழைப்புக்கு நன்றி கூறி
  நிற்கின்றேன் சகோதரா !............

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் உற்சாகம் ஊட்டும் வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி.

   உங்கள் கவிதையை எனது பக்கத்திலும் வெளியிடுகிறேன் - விரைவில் - ஒவ்வொரு கவிதையாக!

   Delete
 10. முதலில் அருமையான ஓவியத்தை பகிர்ந்ததற்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மலர் பாலன்.

   Delete
 11. எனது கவிதை தயாராகி விட்டது (ஆரோ கல்லை எடுக்குற மாதிரியே
  தெரியுது :) ........)சகோதரா இதோ அதன் விபரம் ...
  http://rupika-rupika.blogspot.com/2013/03/blog-post_20.html

  ReplyDelete
  Replies
  1. கவிதை வெளியிட்டதற்கு மிக்க மகிழ்ச்சி சகோ.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 12. அழகான ஓவியம் சார்

  நல்ல முயர்ச்சியும்
  தோள் தட்டல் ஊக்கமும் பாராடுக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி செய்தாலி!

   Delete
 13. என்னடா இது! இந்த மனுஷன் நம்மை ஒரு பத்து வயது குறைய வைத்து விடுவார் போலிருக்கிறதே!

  ஓவியனின் தூரிகையை ரசிப்பதா! இல்லை
  அவன் வரைந்த காரிகையை ரசிப்பதா!

  சேலையை ரசிப்பதா! இல்லை
  வனச் சோலையை ரசிப்பதா!
  அன்னத்தை ரசிப்பதா! இல்லை
  அவள் கன்னத்தை ரசிப்பதா!

  அந்த தண்மலரை ரசிப்பதா! இல்லை
  இந்தப் பெண்மலரை ரசிப்பதா!
  நகையாடும் மங்கையினை ரசிப்பதா! இல்லை
  மென்னகையோடும் மலர்முகத்தை ரசிப்பதா!

  நீரோடை சலசலப்பை ரசிப்பதா! இல்லை
  மேலாடை வனவனப்பை ரசிப்பதா!
  நீல்வான மேகத்தை ரசிப்பதா! இல்லை
  அன்னத்தின் மோகத்தை ரசிப்பதா!

  ஓவியனின் தூரிகையை ரசிப்பதா! இல்லை
  அவன் வரைந்த காரிகையை ரசிப்பதா!

  (அண்ணாத்தே! நான் இப்படி எல்லாம் ரசித்தேன் என்று போட்டுக் கொடுத்துடாதீங்க.)

  ReplyDelete
  Replies
  1. தோ இப்பவே அலைபேசியில் அழைக்கிறேன் அண்ணியை! ரொம்பவே துளிர் விட்டு போச்சு அண்ணாச்சி!

   தங்களது வருகைக்கும் இனிமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி!

   Delete
 14. படம் நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 15. உண்மைதான் சகோதரரே அடுத்தடுத்து இந்தக் கவிதைகள் அணி வகுக்க
  இருக்கும் போது இது தானாகவே தெரிந்து விடப் போகிறது .அது மட்டும்
  அல்லாமல் தாங்களே இக் கவிதைகளை வெளியிட்டு கௌரவிக்க நேரிடும்
  என்று பொறுப்பை உங்களது என்று எண்ணி நான் ஒதுங்கி விட்டேன் .மன்னிக்கவும் இதோ தங்களது இணைப்பையும் என் இணைப்புடன் தொடுத்து விடுகின்றேன் .மிக்க நன்றி மனதில் பட்ட கருத்தினை மறைக்காமல் சொன்னதற்கு .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   தவறாக எண்ணவில்லை. வருத்தம் வேண்டாம்! :)))

   Delete
 16. 1957ல் இப்படி ஒரு வண்ணப்படம் அச்சில் வந்ததா!
  கவி/தை எழுத யோசிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் கவிதை எழுதி அனுப்புங்கள் அப்பாதுரை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 17. நிலவு வந்த நேரத்திலே
  இலவு காத்த கிளி போல
  இரவெல்லாம் வாடி நின்றேன்.
  இனியவனைக் காணோமே...


  அன்னமே ! நீ அருகில் வாராய் !!
  நின் சேதிகளை உடனே சொல்வாய் !.
  என் கண்ணன் அவன் ஏதேனும்
  புன்னகையாள் பின்னே ஒரு
  கண்ணசைப்பில் மறைந்தானோ !!
  என்னையுமே மறந்தானோ !!

  மா தவத்தில் நான் இருக்க‌
  மாதவி பின் சென்றானோ !!
  காதலி நான் காத்திருக்க
  கருமுகிலில் மறைந்தானோ !!

  வெளிர்த்துப்போய் வாடிப்போய்
  வேதனையில் விரகத்தில்
  மயங்கிய அந்த தமயந்தி போல்
  நானில்லை என்று நீ அந்த
  நளனிடம் சொல்.

  நாளைக்குள் வரச்சொல் . என்
  நா வறளும் முன்
  நயனங்கள் சோருமுன்
  நல்ல சேதி சொல்லச் சொல்.

  ReplyDelete
  Replies
  1. நல்ல கவிதை. எனது பக்கத்திலும் விரைவில் வெளியிடுகிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா!

   Delete
 18. நாகராஜ் ஜி... பதிவும் படமும் அருமை.
  ஆனால் நேரமின்மையால் அவசரமாக எழுதி...
  வேண்டாம் .
  பிறகு எழுதுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. 05.04.2013 அன்று வரை நீங்கள் எழுதி அனுப்புங்கள்.....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அருணா செல்வம் ஜி.

   Delete
 19. அருமை தோழியின் சொற் சிலம்பம் மனதில் ஒலிக்கிறது இனிமையாக பாராட்டுகள் நண்பருக்கும் உங்கள மின்னஞ்சல் தெரியவில்லை எப்படி அனுப்புவது கவிதையை

  ReplyDelete
  Replies
  1. எனது மின்னஞ்சல் venkatnagaraj@gmail.com. அதில் நீங்கள் அனுப்பி வைத்து விடுங்கள் சரளா.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோவை மு. சரளா.

   Delete
 20. அழகான ஓவியம். 55 வருடங்களுக்கு முன் எந்தப் பாடலுக்காக வரையப் பட்டதென அறியவும். நண்பர்கள் படைப்புகளை வாசிக்கவும் காத்திருக்கிறேன்:)!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 21. அழகான படம் . வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 22. அருமையான அறிவிப்பு+ஊக்குவிப்பு !
  அழகிய படம் + மயக்கும் படைப்புகள் !
  இதோ என் கதைப் படைப்பையும் தான்
  சற்று ரசியுங்களேன் . இது முற்றிலும்
  என் கற்பனையே .... இந்த பெயரில் அல்லது
  கதையில் ஏதேனும் சரித்திரப் புதினங்கள் இருக்கிறதா
  எனத் தெரியவில்லை. நீங்கள் எடுத்துக் கொடுத்த
  அன்னம் விடு தூது கருத்தில் ....
  விரைவில் இப்படத்திற்கான பாடலை அறிய ஆவல்.
  என் வலைப்பூவிலும் பகிர்ந்து உள்ளேன்.

  சந்திரவதனி !
  http://sravanitamilkavithaigal.blogspot.in/2013/03/blog-post_21.html

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   உங்களது படைப்பினையும் இப்போதே படிக்கிறேன்.

   Delete
 23. தங்களின் மின்னஞ்சல் முகவரி தெரியாததினால்
  என் வலைப்பூவில் , தங்கள் வலைப்பூவிற்கு சுட்டி
  இணைப்புடன் நான் வெளியிட்டு இருக்கும்' சந்திரவதனி '
  என்ற கதைப்பதிவை தங்கள் தளத்திலும் நகல் எடுத்து
  பதிக்க வேண்டுகிறேன்.நன்றி !

  ReplyDelete
  Replies
  1. தங்கள் பதிவினை நகல் எடுத்துக் கொண்டேன். விரைவில் எனது தளத்தில் வெளியிடுகிறேன்.

   வருகைக்கும் அனுமதிக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   Delete
 24. கவிஞர்களின் கற்பனைத் திறனுக்கு நல்லதொரு வாய்ப்பு.வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள் பல.எனது கவிதையை தங்களது மின்னஞ்சலுக்கு அனுப்பி உள்ளேன்.எனது வலைப்பூவிலும் பதிந்துள்ளேன்.
  அதன் முகவரி : http://tamizhmuhil.blogspot.com/2013/03/blog-post_5507.html

  நன்றி !!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கவிதைப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் முகில் நீலமேகம்.

   தங்களது முதல் வருகை மகிழ்ச்சி அளித்தது.

   Delete
 25. 5-4 என்று எல்லைத் திகதி கொடுத்துள்ளது. நான் மிகப் பிந்தி அனுப்பியுள்ளேன் என்பது தெரிகிறது. எனக்குத் தெரியாது. ஆனால் என் பக்கத்தில் போட்டுள்ளேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா. இலங்கா திலகம் அவர்களே.

   வந்திருக்கும் அனைத்து கவிதைகளையும் வெளியிட்ட பிறகு உங்கள் கவிதையையும் வெளியிட்டு விடுகிறேன்.

   Delete
 26. இனி கலந்து கொள்ளலாமா... அல்லது நாட்கள் கடந்து விட்டதா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
  Replies
  1. அடடா, இந்த பதிவின் அறிவிப்பினை முன்பே பார்க்கவில்லையா? 05.04.2013 வரை அனுப்பலாம் என சொல்லி இருந்தேனே....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு. உங்கள் பக்கத்தில் வெளியிடுங்களேன்.....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....