திருவனந்தபுரத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பது வேளி கடற்கரை காயல். வேளி நதி அரபிக்கடலோடு கலக்கும் இடம் இது. இங்கே கேரள சுற்றுலா துறை ஒரு அழகிய சுற்றுலா தலத்தினை உருவாக்கி வைத்துள்ளது.
ஒரே இடத்தில் கடலையும் ஆற்றினையும் பார்த்து, அங்கே இருக்கும் படகுத் துறையில்
படகு சவாரி செய்யும் வசதி, குழந்தைகள் விளையாட பல வசதிகள், மிதக்கும் உணவு விடுதி
என எல்லாம் இருந்துவிட்டால், சுற்றுலா பயணிகளுக்குக் கொண்டாட்டம் தானே.
அங்கேயே குதிரைகளை வைத்துக்கொண்டு சிலர் காத்திருக்கின்றனர் – உங்களுக்குக்
குதிரை சவாரி செய்ய ஆசை இருந்தால் செல்லலாம்! இனிய ஒரு சுற்றுலா தலம். அங்கே
எடுத்த சில புகைப்படங்களை இன்று உங்கள் பார்வைக்கு தருகிறேன்!
கடலும் நதியும் கலக்குமிடத்தில் குதிரை சவாரி... இயற்கையின் அழகை ரசித்தபடி.
படத்தில் தெரியும் வீட்டினை வாங்கிப் போட ஆசை! ஆனா விலை ரொம்ப கம்மியா
சொல்றாங்க! வேண்டாம்னு சொல்லிட்டேன்!
கடலை பார்த்தபடியே ”கடலை” போட்டு ஐஸ்க்ரீம் சாப்பிட வசதி...
கடலோரம் கடலோரம் அலைகள் ஓடி விளையாடும், வலை வீசு வலை வீசு வாட்டம் பார்த்து வலை வீசு!
தண்ணி அடிச்சா மிதப்புல இருப்பாங்க! தண்ணீரிலேயே இருந்துவிட்டால்! - மிதக்கும்
உணவு விடுதி
படகுத்துறையிலிருந்து ஒரு கேமரா பார்வை!
மிதக்கும் உணவு விடுதியின் முன்புறத் தோற்றம் – கடல் விலங்கினம்
வித்தியாசமாய் ஒரு பூ
என்ன நண்பர்களே இந்த வாரத்தின் புகைப்படங்களை ரசித்தீர்களா?
அடுத்த ஞாயிறன்று வேறு சில புகைப்படங்களோடு உங்களைச் சந்திக்கும் வரை....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி
வேளி கடற்கரைக்கு நான்தான் மொத ஆளா? கடற்கரை எப்போதுமே பார்க்கப் பார்க்க அலுக்காது!
பதிலளிநீக்குமிதக்கும் உணவு விடுதி கண்ணுக்குக் குளிர்ச்சி. சாப்பாடு எப்படியோ?
வித்தியாசமான பூ ரொம்ப அழகு!
படத்தில் இருக்கும் வீட்டை நான் விக்கறதாவே இல்லையே!
ஞாயிறு காலையில் கடற்கரை படங்களுடன் இனிமையாக பொழுது ஆரம்பித்திருக்கிறது.
வாழ்த்துகள்!
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...
நீக்குகேரளம் என்றாலே அங்கே அசைவ உணவு தானே! அதனால் உணவு விடுதி வெளியிலிருந்து பார்த்ததோடு சரி! :)
படங்கள் அருமை...
பதிலளிநீக்குபூ ரொம்பவே வித்தியாசம்...
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குபகிர்வும் படங்களும் அழகு..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.
நீக்குஅழகான படங்களுக்கு தாங்கள் கொடுத்துள்ள சிறப்பு வாசகங்களும் அருமையாக உள்ளன.பாராட்டுக்கள் வெங்கட்ஜி..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குபடங்கள் யாவும் அருமையாக உள்ளன. அந்தக் கடற்கரைக்கே உல்லாசப் பயணம் போய் வந்தது போல உணர்வு ஏற்படுகிறது!
பதிலளிநீக்குநீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களது கருத்துரை. மிக்க மகிழ்ச்சி கௌதமன் சார்.
நீக்குபடங்கள் அருமை அதற்கு கொடுத்த கமெண்ட்களும் அருமை கடைசியில் அந்த பூ ரொம்ப அருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மலர் பாலன்.
நீக்குபடங்கள் அழகு அதுவும் பூ படம் சிறப்பு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.
நீக்குஅருமையான இடம். அழகான படங்கள். பூவின் பெயர் யாருக்கேனும் தெரிகிறதா பார்க்கலாம்.
பதிலளிநீக்குபூவின் பெயர் அங்கே படித்தேன். நினைவில் இல்லை! :(
நீக்குவேறு யாராவது சொல்கிறார்களா பார்க்கலாம்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
படங்கள் அருமை!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஜனா சார்.
நீக்குவேளி கடற்கரைப் படங்கள் எல்லாம் அழகு.
பதிலளிநீக்குகடலும், தென்னைமரமும், வித்தியாசமானபூவும் அழகு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குகடலோரம் கடலோரம் அலைகள் ஓடி விளையாடும், வலை வீசு வலை வீசு வாட்டம் பார்த்து வலை வீசு!
பதிலளிநீக்குஉங்கள் படங்கள் இதயத்தை வலை வீசிப் பிடித்து விட்டனவே :)
அருமை ! அனுபவம் தொடர வாழ்த்துக்கள் .
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.
நீக்குகவிதையாய் படங்கள். அருமை அய்யா நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!
நீக்குNeradiyaakap paarpathaip polirundhathu pikaippadangal vaazhththukkal
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குசிறப்பான கடற்கரை படங்கள்.கடைசி படத்தில் இருக்கும் பூ,அமைப்பும் வர்ணமும் வித்யாசமாக மிக அழகாக இருக்கு. ரசித்து மகிழ்ந்தேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.
நீக்குnanum angu poiyullen...
பதிலளிநீக்குmeendum nizhalaada vaiththathu...
nantri anne..!
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.
நீக்குநீங்களும் அங்கே சென்றிருப்பது அறிந்து மகிழ்ச்சி.
எண்டே கேரளாவோ. அழகெல்லாம் சுத்தமா வைத்துக் கொள்ள தெரிந்துவைத்திருக்கிறார்கள்.
பதிலளிநீக்குஒரே நீல அழகு.நன்றாக இருக்கிறது. படங்கள் மகிழ்ச்சியை அள்ளித் தருகின்றன. நன்றி வெங்கட்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.....
நீக்குவேளி கடற்கரையின் அழகை புகைப்படத்தில் காட்டி பார்க்கத் தூண்டிவிட்டீர்கள்
பதிலளிநீக்குநன்றி
அன்புடன்
ஆ.மீ. ஜவகர்
நாகப்பட்டினம்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜவஹர்.
நீக்குதங்களது முதல் வருகை மகிழ்ச்சி தந்தது. தொடர்ந்து சந்திப்போம்.