புதன், 13 மார்ச், 2013

சென்சார் மற்றும் லஞ்சம் – இரு குறும்படங்கள்





சென்ற பதிவில் வாரத்திற்கு ஒரு புத்தகமாவது படிக்க நினைத்திருப்பது பற்றி எழுதி இருந்தேன். அங்கே எழுதாத இன்னொரு முடிவு – அவ்வப்போது சில குறும்படங்கள் பார்ப்பது தான். ஒரு முழு நீள சினிமாவினை பார்ப்பதற்கு வாய்ப்புகளும் இங்கே குறைவு. தொலைக்காட்சியில் பார்க்க நினைத்தால் பல விளம்பரங்கள் போட்டு இரண்டே கால் மணி நேர படத்தினை மூன்று-நான்கு மணி நேரம் வரை இழுத்தடிக்கிறார்கள். பல சமயங்களில் அது எரிச்சலூட்டுகிறது. அந்த அளவிற்குப் பொறுமையும் இல்லை!

இந்த குறையின்றி, சொல்ல வந்த விஷயத்தினை குறும்படங்கள் நச்சென்று சொல்லிவிடுகின்றன. அதுவும் குறைவான நேரம் தான் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதால் அவை மிகவும் பிடித்துப் போனது.  யூ-ட்யூபில் நிறைய குறும்படங்கள் கொட்டிக் கிடக்கின்றன.  மொழி ஒரு பிரச்சனை அல்ல – தமிழ், ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் என நன்கு தெரிந்த மொழிகளில் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன்.  சென்ற வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட பத்து குறும்படங்களைப் பார்த்தேன்.

அப்படி பார்க்கும் படங்களில் சிலவற்றை அவ்வப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணியிருக்கிறேன். ஒரு சிலர் இந்தப் படங்களைப் பார்த்திருந்தாலும் பார்க்காதவர்கள் இத்தளம் மூலம் பார்க்க முடியும் என்பதில் ஒரு திருப்தி.  அப்படி பார்த்த படங்களில் இன்று இரு குறும்படங்களைப் பார்க்கலாமா?

சென்சார் – திரைப்படம், விளம்பரங்கள், தொலைக்காட்சி ஆகியவற்றில் வரும் விஷயங்களுக்கென்று சென்சார் இருக்கிறது. ஆனால் பொது இடங்களில் நடக்கும் விஷயத்தினை சென்சார் செய்ய யார் இருக்கிறார்கள் எனக் கேட்கிறது Sense or Censor எனும் குறும்படம்.  தில்லியின் பல பூங்காக்களில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது குறும்படம் கேட்கும் கேள்வியில் உள்ள ஆழம் புரிபடுகிறது. 

பரிதோஷ் பை எனும் நபர் இயக்கி 1TAKEMEDIA வெளியிட்ட இந்த குறும்படத்தினை நீங்களும் பாருங்களேன்.



அடுத்த படம் PHONE BOOTH என்ற தலைப்பில் கீத் ஷர்மா என்பவரின் இயக்கத்தில் வெளிவந்த குறும்படம். இதுவும் 1TAKEMEDIA வெளியீடு தான்.

ஒரு பள்ளி மாணவி – தனது பள்ளிச் சீருடையில் மகிழ்ச்சியோடு வந்து கொண்டிருக்கிறாள். வழியில் ஒரு பொது தொலைபேசி. தன்னிடம் இருந்த ஒற்றை ரூபாய் நாணயத்தினை போட்டு பேச முயல, நாணயம் திரும்பி வருகிறது. மீண்டும் தொலைபேசி எண்ணை அழுத்தி, நாணயத்தினை அதில் போட, பேச முடியவில்லை – ஆனால் நாணயம் உள்ளேயே தங்கிவிடுகிறது! பக்கங்களிலும், மேலும் கீழும் தட்டிப் பார்க்க நாணயம் வெளியே வரவில்லை!

உடனே தனது பையிலிருந்து ஒரு சாக்பீஸ் எடுத்து அந்த தொலைபேசியின் கீழே ये पैसे खता हे पर काम नहीं करता। என எழுதி வைக்கிறாள் அச்சிறுமி.  அதாவது இந்த தொலைபேசி பணத்தினை விழுங்கி விடுகிறது ஆனால் வேலை செய்வதில்லை! என ஹிந்தியில் எழுதி வைக்கிறாள். 

கூடவே ஆங்கிலத்தில் இந்த வரிகள் வருகின்றன “WITH CORRUPTION EVERY ONE JUST PAYS…. LET’S STOP IT.  STOP GIVING BRIBE… STOP TAKING BRIBE”

நீங்களும் பார்த்து ரசிக்கலாமே!


இந்த இரண்டு குறும்படங்களும் சொல்ல வந்த விஷயத்தினை மிகச் சிறப்பாக, ஆனால் மிகக் குறைந்த நேரத்தில் சொல்லிவிடுகின்றன. எனக்கு இப்படங்கள் பிடித்திருந்தன.  உங்களுக்கும் பிடிக்குமென நினைக்கிறேன்!

நான் ரசித்த வேறு சில குறும்படங்களோடு உங்களை மீண்டும் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

40 கருத்துகள்:

  1. குறும்படங்கள் இயக்குவது சிறந்த பயிற்சி இயக்குனர்களுக்கு. குறைந்த நேரத்தில் நிறைவாக சொல்ல வந்ததைச் சொல்ல வேண்டும் என்பதில் சவால் இருக்கிறது. அதைச் சரியாகச் செய்து விட்டார்கள் எனில் நமக்க ரசனை விருந்து காத்திருக்கிறது என்பதே அர்த்தம்! உங்களோடு சேர்ந்து ரசிக்க நானும் ரெடி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.... அவ்வப்போது குறும்படங்கள் பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.

      நீக்கு
    2. அதே நேரம் குறும்படத்தில் சில சலுகைகளும் இருக்கின்றன. முழுநீள படத்தில் 3 மணிநேரமும் இரசிகர்களைக் கவரவேண்டும் அதற்குதான் பாடல்கள் நகைச்சுவை சம்பவங்களைக் கோர்க்கும் நிகழ்வுகள் போன்று தேவையில்லாத சில சமாசாரங்களையும் சேர்க்க வேண்டியுள்ளது. அதில் தான் இயக்குனர்கள் சொதப்பி ரசிகளைப் படுத்துகிறார்கள்!

      குறும்படத்தில் to the point விஷயங்களைச் சொல்ல முடியும்! (ஒரு சிறுகதை/கவிதை போல. அதனால் தான் அவை பெரும்பாலும் ரசிக்கும் வண்ணம் உள்ளன!

      நீக்கு
    3. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிடா சீனு [வேங்கட ஸ்ரீனிவாசன்]....

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  3. அழகான குறும்படங்கள் நண்பரே...
    ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி மகேந்திரன்....

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. குறும்படங்கள் சொல்லும் கதைகள் அருமை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  6. மிகவும் சிறப்பான குறும்படங்கள். நன்றி பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

      நீக்கு
  7. //தில்லியின் பல பூங்காக்களில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது...//

    என்னத்தச் சொல்லி, என்னத்தச் செய்ய!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.

      நீக்கு
  8. குறும்படங்கள் சொல்லும் கதை அருமை.
    முதல் குறுமபடம் நல்ல கருத்தை சொல்லுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  9. அருமையான குறும்படங்களின் அறிமுகம் உங்கள் பதிவினால் கிடைத்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜ்.

      நீக்கு
  10. பதில்கள்
    1. வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றிடா சீனு! [வேங்கட ஸ்ரீனிவாசன்]

      நீக்கு
  11. சிறப்பான செய்தி சொல்லும் படங்கள்.நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

      நீக்கு
  12. தமிழ் தவிர மற்ற மொழி குறும்படங்கள் இதுவரை பார்த்தது இல்லை... நானும் ஒரு பிரியன், உங்கள் மூலம் பல படங்களை தெரிந்து கொள்வது மகிழ்ச்சியே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு. அவ்வப்போது நான் ரசித்த குறும்படங்களைப் பற்றிய தகவலை இங்கே வெளியிடுகிறேன். தங்களது தொடர் ஆதரவிற்கு மிக்க நன்றி!

      நீக்கு
  13. நம்மை நீண்ட நேரம் சோதிக்காது என்பதே குறும்படங்களின் ப்ளஸ் பாயிண்ட்.
    முதல் படம் சென்ஸ் தான் வேண்டும் என்று சொல்ல வைக்கிறது. குறும்படம் ஆனாலும் செய்தி கனமானது.

    அடுத்த படம் சிறிது புன்னைகையுடன் சொல்ல வந்த செய்தியை சொல்லுகிறது.
    சிந்திக்க வைத்த படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

      நீக்கு
  14. நீங்கள் படம் பார்த்துச் சொல்லியுள்ள கருத்து நன்றாக இருக்கிறது. கு.ப பார்க்க எனக்குத்தான் பொறுமை இல்லை! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  15. சிறப்பான குறும்படங்கள்....
    பகிர்வுக்கு நன்றி...
    உங்கள் தயவில் இரண்டு படத்தையும் நானும் பார்த்துவிட்டேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சே. குமார்.

      நீக்கு
  16. குறும்படங்கள் நல்ல செய்தியை எடுத்துச் சொல்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி!

      நீக்கு
  17. இதுவரை குறும்படங்களில் ஆர்வம இல்லை. பதயுலகம் நுழைந்தபின் சற்று ஆர்வம ஏற்பட்டிருக்கிறது., பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்தபோது பாருங்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  18. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....