வெள்ளி, 29 மார்ச், 2013

ஃப்ரூட் சாலட் – 39 – பலியான ஜேம்ஸ் – குறும்பு - தமிழ் மொழி


இந்த வார செய்தி:

தில்லியில் இருக்கும் ப்ரீதி வர்மா என்பவருக்கு சிங்கப்பூரில் வேலை கிடைக்க, தன்னுடனேயே ஜேம்ஸையும் அழைத்துச் செல்ல அவருக்கும் சேர்த்து பயணச்சீட்டினை பதிவு செய்திருக்கிறார். ஜேம்ஸ் என்பது அவருடைய செல்ல பூனைக்குட்டி. அவருக்கான தனி கூண்டில் நல்ல பூட்டினைப் போட்டு கட்டியது மட்டுமல்லாது ஒரு கம்பியைக் கொண்டும் கட்டி வைத்திருக்கிறார்.

தனது பயணத்தினைத் தொடங்கும் நேரத்தில் அவருக்குக் கிடைத்த அதிர்ச்சியான செய்தி – ரன்வேயில் ஒரு வண்டியில் அடிபட்டு ஜேம்ஸ் இறந்துவிட்டது என்று. ஒரு கூண்டில் பூட்டு போட்டு வைத்திருந்த பூனை எப்படி ரன்வேயில் ஓடியது, யார் திறந்து விட்டார்கள் என்பதெல்லாம் தெரியாது ப்ரீதி வர்மா அதிர்ச்சியில் சிசி டிவீ பார்க்க அனுமதி கேட்டிருக்கிறார். 

தனது செல்ல பூனைக்குட்டி இறந்து போனது மட்டுமல்லாது விமான நிலையத்தில் அவரை ஊழியர்கள் கிண்டல் செய்யவே அதிர்ச்சியில் ஆழ்ந்த ப்ரீதி முறையீடு செய்த பின், அவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறது நிர்வாகம்.

சாதாரணமாகவே உடமைகளை அனுப்புவதிலேயே நிறைய குளறுபடிகள் இருக்க, இது போன்ற செல்லப் பிராணிகளை அனுப்புவதிலும் குழப்பங்கள். செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு, தங்களது செல்லங்களை இது போல இழக்கும்போது ஏற்படும் அதிர்ச்சியும் வலியும் மிகவும் அதிகமே.

பாவம் ஜேம்ஸ்…. ப்ரீதி வர்மாவும் தான்.

இந்த வார முகப்புத்தக இற்றை:

DON’T BELIEVE ANYTHING YOU HEAR. THERE ARE ALWAYS THREE SIDES TO A STORY – YOURS, THEIRS AND THE TRUTH.

இந்த வார குறுஞ்செய்தி

DIFFERENCE BETWEEN TRUTH AND LIE. TRUTH IS A DEBIT CARD, PAY FIRST AND ENJOY LATER. WHILE LIE IS A CREDIT CARD, ENJOY FIRST AND PAY LATER.

ரசித்த புகைப்படம்: என்ன ஒரு குறும்பு!

ராஜா காது கழுதை காது:

மார்ச் மாதம் கூட இன்னும் முடியவில்லை. அதற்குள்ளாகவே கோடையின் தாக்கம் அதிகரித்து விட்டது தமிழகத்தில். இந்த வாரம் திருவானைக்கோவில் சென்ற போது அங்கிருந்த ஒரு பொது தண்ணீர் குழாயில் தண்ணீர் பிடித்து தனது முகத்தினைக் கழுவி, நிறைய நீரை அருந்திய வயதான ஆண் புலம்பியது – ‘’என்னா வெயில்… பாழாப்போன வெயில்… ஆளை அடிச்சுக் கொல்லுதேப்பா!”

ரசித்த பாடல்:

இங்கேயும் ஒரு கங்கை படத்திலிருந்து இளையராஜாவின் ஒரு பாடல் இன்றைய ரசித்த பாடல். ”சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்” இதோ.
படித்ததில் பிடித்தது:

நமது தமிழ்மொழி ஒரு அரியமொழி. அதன் சொற்களைப் பிரித்துப் பார்க்கத் தெரிந்தாலே போதும். நமக்கு பொருள் தானாகத் தெரிய வந்துவிடும். வெறும் சப்தமாக நமது தமிழில் சொற்கள் இருந்ததே இல்லை. உதாரணமாக மா, பலா, வாழை என்கிற முக்கனிகளை எடுத்துக்கொண்டால் அதன் பெயரிலேயே அதன் பொருள் புதைந்திருப்பது தெரிய வரும். மாம்பழம் என்றால் பெரிய பழம் என்று ஒரு பொருள். அன்னையைப் போல கருணை உடையது என்று இன்னொரு பொருள். இந்த இரண்டுமே அந்தப் பழத்துக்குப் பொருந்தும். தாய்க்குப் பிறகு தாய்ப்பாலின் சக்தியை தன்னுள் கொண்டு தன்னை உண்பவர்களுக்குத் தருவது மாம்பழமே. ‘மாம்பழம் தின்றால் சூடு’ என்று சிலர் கூறுவர். அளவறிந்து உண்டால் சூடும் இல்லை. குளிர்ச்சியும் இல்லை. மாம்பழம்தான் எல்லா ஊட்டச்சத்தும் தரவல்லது.

மாதா தராததை மாம்பழம் தரும் என்பார்கள்.

அதே போல் தான் பலா… ‘பல சுளைகளை தன்னிடம் உடையது’ என்பதே மருவி பலா என்றானது. வாழையும் இப்படித்தான்… இது வாழ்ந்தபடியே இருக்கும். வாழையை நட்டுவைத்தால் எவர் தயவுமின்றி அதை நாம் பல தலைமுறைகளுக்குப் பயிரிட்டுக் கொண்டு இருக்கலாம். ஒரு வாழை குலை தள்ளியவுடன் ஒரு குட்டி வாழையைத் தந்துவிட்டே மடியும். வாழ்வாங்கு வாழ்வது வாழை. அப்படியே இந்த சொற்காரணங்களோடு ‘சிற்பம்’ என்கிற சொல்லிடம் வந்தால் அதனுள் சிறப்புடைய விஷயங்களைக் கொண்டது என்றும் பொருள் இருக்கக் காணலாம். அல்பம் என்றால் அகலுதல் கொண்டது. அகலுதலில் உள்ல ‘அ’வும் இறுதி எழுத்து ‘ல்’லும் சேர்ந்து அல்பம் ஆகியிருக்கக் காணலாம். ‘அற்பம்’ என்றும் உரைப்பர்… அதில் ‘அற்றுப்போதல்’ என்னும் பொருள் இருக்கும். இப்படிச் சொல்லிலேயே பொருள் கொண்ட மொழி நமது மொழி.

- ’கல்லுக்குள் புகுந்த உயிர்’ என்னும் நாவலில் இந்திரா சௌந்தரராஜன்.

என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

46 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   நீக்கு
 2. பாடலும் பகிர்வும் அருமை!..மேலும் தொடர வாழ்த்துக்கள் மிக்க நன்றி சகோதரா பகிர்வுக்கு .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   நீக்கு
 3. எல்லாப் பகுதிகளையும் ரசித்தேன். குறிப்பாக... நண்பர் இ.செள.ராஜனின் தமிழ் விளக்கத்‌தை! கல்‌லுக்குள் புகுந்து .உயிர் படிச்சாச்சா வெங்கட்? அதைப் படிச்சப்புறம் எந்தக் கோயிலுக்குப் போனாலும் நந்தி சிலையை உத்துக் கவனிச்சுட்டுத்தான் அப்பால நகர்றேன் நான் - எங்க கண்ணசைக்குமோ, வாயசைக்குமோன்னு! ஹா... ஹா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. க.பு.உ. படிச்சாச்சு. நீங்கள் சொன்ன நிலை தான் எனக்கும்! :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பால கணேஷ்.

   நீக்கு
 4. ரசித்த புகைப்படம்: ...என்ன ஒரு குறும்பு!

  மிகவும் மனம் கவர்ந்தது ...பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 5. பழத்திற்கான விளக்கம் அருமை..இப்பதான் மாம்பழம் சாப்பிட்டுவந்தேன்.. உம்ம்ம் யம்மிமிம்மீயீயீயீயீ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அவர்கள் உண்மைகள்.

   நீக்கு
 6. பார்த்தேன். சுவைத்தேன். ரசித்தேன்.
  இது தேன் என நினைத்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   நீக்கு
 7. படித்ததில் பிடித்தது எங்களுக்கும் பிடித்தது. பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பூந்தளிர்.

   நீக்கு
 8. ’கல்லுக்குள் புகுந்த உயிர்’ என்னும் நாவலில் இந்திரா சௌந்தரராஜன்.கூறியுள்ளவைகளும்,
  ரசித்த புகைப்படம்: ...என்ன ஒரு குறும்பும் மிகவும் பிடித்தன. பாராட்டுக்கள், வெங்கட்ஜி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 9. முதலிடம் : குறும்புக் குழந்தைக்கு!
  இரண்டாமிடம்: படித்ததில் பிடித்தது. எல்லா சொற்களுக்கும் அதற்குள்ளேயே அர்த்தம் தேட வைக்கிறது.
  மூன்றாமிடம் : காணொளியும் பாட்டும். இந்தப் பாட்டில் வரும் நடிகை தாரா இப்போது கர்நாடக திரைப்பட அகாடமியின் தலைவர். தேசிய விருதும் வாங்கியிருக்கிறார். தற்போது BJP கட்சியில்.
  குறுஞ்செய்தி, முகப்புத்தாக இற்றை, ராஜா காது, கடைசியில்தான் ஜேம்ஸ்!
  செல்லப் பிராணிகள் என்றாலே அலர்ஜி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நடிகை தாரா பற்றி மேலதிகத் தகவல்களுக்கு நன்றிம்மா...

   தங்களது வருகைக்கும் எல்லா பகுதிகளையும் ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   நீக்கு
 10. கள்ளமில்லாமல் சிரிக்கும் குழந்தை அழகு.
  பாடல் அருமை.
  மா, பலா, வாழைப்பற்றிய கருத்து பகிர்வு அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 11. மாவே மாம்பழம். வாழையோ வாழையடிவாழை. பலாவோ, பலபல சுளைகள். எல்லாம் கலந்த ப்ரூட்ஸாலட் ருசிக்க ருசியோருசி. பாவம் ஜேம்ஸ். பூனைகுட்டியை மடியில் கட்டிக்கொண்டு
  சகுனம் பார்ப்பது என்பார்கள். அம்மாதிரியே ஆகிவிட்டது. நன்றி. லிங்க் கொடுத்ததற்கு. அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா.

   நீக்கு
 12. ரசித்தீர்களா? புகைப்படம் பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாலசுப்ரமணியன்.

   தங்களது முதல் வருகை என்னை மகிழ்வித்தது.

   நீக்கு
 13. பாவம் பூனை.
  சோலைப் புஷ்பங்களே எனக்கும் பிடித்த பாடல்.
  வெய்யில் ஆரம்பித்து விட்டதுதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 14. ரசித்த புகைப்படம், எல்லா ஃப்ரூட் சாலட்-யையும் சாப்பிட்டு விட்டது... அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 15. குழந்தையின் சிரிப்பு. என்ன ஒரு அழகு! நல்ல தொகுப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 16. இந்திரா சௌந்தரராஜன் நாவலா.அட. ஒரே மாய மந்திரமா இருக்குமே. எபியில் படிக்கும் ஆர்வம் குறைந்துவிட்டதுன்னு படிச்சேன். கணேஷும் நீங்களும் வெளுத்துவாங்குகிறீர்களா.:)

  உன்மையாவே வெயில் அதிகமா இருக்கு. தண்ணீரும் குறைவா இருக்கு. சாமிதான் காப்பாத்தணும்.
  செல்லப்பாப்பா எப்படித்தான் இவ்வளவு இனிமையா இருக்கா. நன்றி மா வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இ.சௌ. நாவல் - நேற்று தான் இரண்டு நாவல் கொண்ட புத்தகத்தை படித்தேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 17. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி பூவிழி.

   நீக்கு
 18. ரசித்தபுகைப்படம் கொள்ளை அழகு. படித்ததில் பிடித்தது அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 19. ஃப்ரூட் சாலட்டை கடைசியில் ஃப்ரூட்ஸ் பற்றிய தகவல் பகிர்வுடன் முடித்தது சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   நீக்கு
 20. வணக்கம் சகோ...
  வீட்டில் விருந்தினர் வருகையால் இங்கு வரத்தாமதமாகிவிட்டேன்...

  இன்றைய பதிவு அருமை. அத்தனை விடயங்களும் நன்றாகவே இருக்கின்றது.
  ரசித்த புகைப்படம் அந்தக்குட்டியின் குறும்பு மனதைக் கொள்ளை கொள்கிறது.
  அருமை. பகிர்வுக்கு மிக்கநன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   நீக்கு
 21. என்னமோ சாப்பாட்டு அயிட்டம் பற்றி சொல்லப்போறாருன்னு வந்தா....பல்சுவை விருந்து சூப்பர்ப்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒவ்வொரு வெள்ளியும் இங்கே பல்சுவை விருந்து தான் மனோ...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ.

   நீக்கு
 22. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....