எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, March 21, 2013

அன்னம் விடு தூது – 1 – தென்றல் சசிகலா
அன்பின் நண்பர்களுக்கு, நேற்று [20.03.2013] வெளியிட்ட கவிஞர்களுக்கு/கதாசிரியர்களுக்கு ஒரு அழைப்பு! எனும் பதிவின் அழைப்பினை ஏற்று கவிதைகள் வரத் தொடங்கி விட்டன. முதல் கவிதையாக தென்றல் எனும் வலைப்பூவில் தனது கவிதைகளை பகிர்ந்து வரும் திருமதி சசிகலா சங்கர் அவர்களது கவிதையினை இன்று பகிர்ந்துள்ளேன். ஒரு நாள் விட்டு ஒரு நாள் அன்னம் விடு தூது கவிதைகள் தொடரும்.

 பட உதவி: சுதேசமித்திரன் 1957

படத்திற்கான கவிதைகளை 05.04.2013 அன்று வரை அனுப்பலாம். எனக்கு வந்த கவிதைகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் எனது பக்கத்தில் பகிர்ந்து விடுகிறேன். கவிஞர்களுக்கு/ கதாசிரியர்களுக்கு ஒரு அழைப்பு! பதிவில் சொன்னது போலவே எழுதியவர்கள் தங்களது பக்கத்திலும் வெளியிட்டுக் கொள்ளலாம்! [என்னே உங்களது பெருந்தன்மை என பாராட்ட வேண்டாம் நண்பர்களே! கவிதை உங்களுடையது, உங்கள் தளத்தில் பகிர என்னிடம் என்ன அனுமதி!]  மாறாக நான் தான் கவிதை/கதை ஆசிரியர்களுக்கு நன்றி கூற வேண்டும்!

ென்ற் சிகா அவர்கள் எழிய முதல் கவிதை இதோ!  மற்ற கவிதைகள் மேலே சொன்ன படி ஒவ்வொன்றாக இங்கே வெளியிடுகிறேன்.

அன்னம் விடு தூது – 1
  
அன்னமே என் செல்லமே-என்
கன்னமே அவனுக்கான 
மதுக்கிண்ணமே.

செல்லடி பைங்கிளியே
சொல்லடி தூது அவனிடமே

தாமரை இலைத்தண்ணீராய்
அவன் நெஞ்சம்... அதில் 
தஞ்சமாய் என் நெஞ்சம்.
                                   (செல்லடி பைங்கிளியே)

வெள்ளை நிறப்பூங்கொடியே
வெள்ளெழுத்தெனக்கு அவன் நினைவே
                                                     (செல்லடி பைங்கிளியே)
நீ மிதந்து வரும் அழகென்ன
எனை மீண்டெழ விடாத 
அவன்  நினைவென்ன.
                                       (செல்லடி பைங்கிளியே)

பசுந்தளிர் இலைகள் கூட நாணுதடி 
நான் பசித்திருக்கேன் அவனிடம் கூறடியே. 
                                  (செல்லடி பைங்கிளியே)

பாடிடுதே பறவையினம் - மனம்
தேடிடுதே அவனை தினம்.
                                     (செல்லடி பைங்கிளியே)

-          சசிகலா சங்கர்

என்ன நண்பர்களே கவிதையினை ரசித்தீர்களா? கவிதைக்கான பாராட்டுகளுக்கு உரியவர் ஆசிரியர் மட்டுமே! கவிதை எழுதிய திருமதி சசிகலா அவர்களுக்கு ஒரு பூங்கொத்து!அடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

34 comments:

 1. சசிகலா கவிதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் .பூங்கொத்து பரிசாக பெற்றதற்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 2. கவிதைக்கான பாராட்டுகளுக்கு உரியவர் ஆசிரியர் மட்டுமே! கவிதை எழுதிய திருமதி சசிகலா அவர்களுக்கு ஒரு பூங்கொத்து!

  இனிய வாழ்த்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 3. அருமை...

  திருமதி சசிகலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 4. கவிதாயினிக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

  //படத்திற்கான கவிதைகளை இந்த மாதத்தின் கடைசி நாள், அதாவது 05.04.2012 அன்று வரை அனுப்பலாம். //

  இதில் இரண்டு த்வறுகள் ?????????? உள்ளனவே, வெங்கட்ஜி.

  05.04.2012 முடிந்த ஓர் ஆண்டு ஆகப்போகிறது.

  இந்த மாதத்தின் கடைசி நாள்: 31.03.2013 அல்லவா!

  ReplyDelete
  Replies
  1. தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி வை.கோ. ஜி!

   இப்போது மாற்றி விட்டேன்.

   Delete
 5. வருடிச்செல்லும் தென்றலாக கவிதை தந்துள்ள கவிதாயினிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 6. அழகான பூங்கொத்து பரிசாக பெற்றதில் மிக மிக மகிழ்ச்சியடைந்தேன். தென்றலுக்கு வரும் நண்பர்கள தானே இங்கும் வரப்போகிறார்கள் ஆதலால் இங்கே பார்த்ததிலும் மகிழ்ச்சியே. இப்படி அருமையான வாய்ப்பினைத் தந்த தங்களுக்கு நன்றி கூறி அடுத்த பதிவில் சந்திக்கிறேன். வாழ்த்திய தங்களுக்கும் பாராட்டிய சக பதிவுலக நண்பர்கள் மற்றும் சகோதர சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   தங்களது கவிதையினை எனது பக்கத்தில் வெளியிட்டதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி.

   Delete
  2. அஹா பொற் கிளியா !!....சொக்கா சொக்கா நீ எங்க இருக்கிற ?..:)வாழ்த்துக்கள் என் தோழிக்கும் நன்றிகள் உங்களுக்கும் .

   Delete
 7. //தாமரை இலைத்தண்ணீராய்
  அவன் நெஞ்சம்... அதில்
  தஞ்சமாய் என் நெஞ்சம்.//
  அழகிய வரிகள்.
  திருமதி சசிகலாவிற்குப் பாராட்டுக்கள்!
  அழகிய படத்தைப் போட்டு எல்லோரிடமும் கவிதையும், கதையும் வாங்கும் உங்களுக்கும் பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா..

   Delete
 8. கவிதை நன்றாக இருக்கிறது. கவிஞர் பாராட்டுக்கு உரியவர். வெறும் பூங்கொத்துத் தான் பரிசா? பொற்கிழி எல்லாம் கிடையாதா? :P:P:P:P

  ReplyDelete
  Replies
  1. பொற்கிழி தானே.... தந்துவிட்டால் போயிற்று....

   தங்களது வருகைக்குக் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
 9. திருமதி சசிகலாவிற்கு என் பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 10. திரு வெங்கட் நாகராஜன் அவர்களுக்கு

  அருமையான வாய்ப்பிற்கு மனமார்ந்த நன்றி.

  கவிதை தயாராக உள்ளது.

  எந்த மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும் என்று சொன்னால் அனுப்பி வைக்கிறேன்.

  ஜெயந்தி ரமணி

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகைக்கு எனது மனமார்ந்த நன்றி.

   எனது மின்னஞ்சல் முகவரி: venkatnagaraj@gmail.com

   05.04.2013-க்குள் எழுதி அனுப்பி விடுங்கள்.

   Delete
  2. மிக்க நன்றி.

   Delete
 11. கவிதாயினிக்கு பாராட்டுகள்;கவிதை பிறக்கக்காரணமான உங்களுக்கும்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 12. அருமை. சசிகலாவுக்குப் பூங்கொத்து. பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 13. சசிகலா அவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete

 14. வணக்கம்!

  வெட்கட் படம்அளித்தார்! மென்கவியைத் தென்றலாம்
  சங்கா் அளித்தார் தழைத்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கவிஞர் கி. பாரதிதாசன்.

   Delete
 15. தென்றல் சசிகலாவிற்கு வாழ்த்துகள் நல்ல கவிதை மற்றவர் திறமையை ஊக்கவிக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மலர் பாலன்.

   Delete
 16. நல்ல கவிதை...
  கவிஞருக்கு வாழ்த்துக்கள்...
  உங்களது இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....