வியாழன், 28 மார்ச், 2013

அன்னம் விடு தூது – 4 – திரு சுப்புரத்தினம்அன்பின் நண்பர்களுக்கு, 20.03.2013 அன்று வெளியிட்ட கவிஞர்களுக்கு/கதாசிரியர்களுக்கு ஒரு அழைப்பு! எனும் பதிவின் அழைப்பினை ஏற்று, வந்திருக்கும் நான்காம் கவிதையை இன்று இங்கே பகிர்ந்துள்ளேன். சுப்புரத்தினம் எனும் வலைப்பூவில் எழுதி வரும் திரு சுப்புரத்தினம் எழுதிய கவிதையினை இன்று பகிர்ந்துள்ளேன்.இதோ அன்னம் விடு தூது பகிர்வுகள் வரிசையில் நான்காவது கவிதை!பட உதவி: சுதேசமித்திரன் 1957நிலவு வந்த நேரத்திலே
இலவு காத்த கிளி போல
இரவெல்லாம் வாடி நின்றேன்.
இனியவனைக் காணோமே...


அன்னமே ! நீ அருகில் வாராய் !!
நின் சேதிகளை உடனே சொல்வாய் !.
என் கண்ணன் அவன் ஏதேனும்
புன்னகையாள் பின்னே ஒரு
கண்ணசைப்பில் மறைந்தானோ !!
என்னையுமே மறந்தானோ !!

மா தவத்தில் நான் இருக்க‌
மாதவி பின் சென்றானோ !!
காதலி நான் காத்திருக்க
கருமுகிலில் மறைந்தானோ !!

வெளிர்த்துப்போய் வாடிப்போய்
வேதனையில் விரகத்தில்
மயங்கிய அந்த தமயந்தி போல்
நானில்லை என்று நீ அந்த
நளனிடம் சொல்.

நாளைக்குள் வரச்சொல் . என்
நா வறளும் முன்
நயனங்கள் சோருமுன்
நல்ல சேதி சொல்லச் சொல்.என்ன நண்பர்களே கவிதையினை ரசித்தீர்களா? கவிதைக்கான பாராட்டுகளுக்கு உரியவர் ஆசிரியர் மட்டுமே! கவிதை எழுதிய திரு சுப்புரத்தினம் அவர்களுக்கு ஒரு பூங்கொத்து!

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....நட்புடன்வெங்கட்.
புது தில்லி.

44 கருத்துகள்:

 1. அருமை.மிகவும் ரசித்தேன் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 2. நயமான கவிதை.
  மாதவம் மாதவி ... ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   நீக்கு
 3. அருமையாக கவிதை எழுதிய திரு சுப்புரத்தினம் அவர்களுக்கு ஒரு பூங்கொத்து!

  இனிய் பாராட்டுக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 4. ஆண்களின் குணம் அறிந்து பதைத்து
  புனைந்த கவிதை வெகு அழகு.
  வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   நீக்கு
 5. அருமையாகக் கவிதை எழுதியுள்ளவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். இனிய நல்வாழ்த்துகள்.

  வெளியிட்டுள்ள தங்களுக்கும் என் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 6. ரொம்ப நல்ல கவிதை, எழுதியவருக்கும் அதைப்பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூந்தளிர்.

   நீக்கு
 7. சுப்புரத்தினம் ஐயாவின் கவிதை அருமை! அவரே பாடி வீடியோ அனுப்பவில்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   சுப்புரத்தினம் ஐயா பாடி அனுப்பல! :)

   நீக்கு
 8. //மா தவத்தில் நான் இருக்க‌
  மாதவி பின் சென்றானோ !!
  காதலி நான் காத்திருக்க
  கருமுகிலில் மறைந்தானோ !!//

  காதலிக்கும்போதே சந்தேகமா!

  நல்ல ரசனையான கவிதை. வாழ்க.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.

   நீக்கு
 9. நல்ல கவிதை வாழ்த்துகள் கவிதை ஆசிரியருக்கு பகிர்ந்தற்கு உங்களுக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.

   நீக்கு
 10. சுப்புரத்தினம் சார் நல்லா எழுதியிருக்கார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 11. அற்புதம் கவிதை. படமோ அதற்கேற்றார்ப்போல் இன்னும் அழகு. சுப்பு சார் தன்னையே மிஞ்சிவிட்டார். நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 12. அருமை... திரு சுப்புரத்தினம் தாத்தா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 13. வித்தியாசமான சிந்தனை.
  வாழ்த்துக்கள் சுப்பு தாத்தா.

  பகிர்ந்த உங்களுக்கும் வாழ்த்துக்கள் நாகராஜ் ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   நீக்கு
 14. பொருத்தமாய் படக் கவிதை அளித்த சுப்பு ரத்தினம் சாருக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 15. மிகவும் பொருத்தமான வரிகள்...

  வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவிதை வீதி சௌந்தர்.

   நீக்கு
 16. வண்ண வண்ண பூங்கொத்து மனதை கவர்ந்தது வரிகள் நன்றி ஐயா.

  அருமையான வாய்ப்பை எங்களுக்கு அளித்த நண்பருக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   நீக்கு
 17. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   நீக்கு
 18. மிக மிக அருமையாக உள்ளது சுப்புத்தாத்தாவின் கவிதை. நல்ல வித்தியாசமான கற்பனை. மிகவும் ரசித்தேன்.

  கவிதை எழுதிய சுப்பு ஐயாவுக்கும் பகிர்ந்த உங்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   நீக்கு
 19. தாத்தாவின் தரமான கவிதைக்கு அழகான பூங்கொத்து.

  கவிதையாளருக்கும், ரசனையாளருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயந்தி ரமணி.

   நீக்கு
 20. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 21. ரொம்ப நல்ல கவிதை, எழுதியவருக்கும் அதைப்பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சங்கீதா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....