எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, March 23, 2013

அன்னம் விடு தூது – 2 – சங்கீதா


அன்பின் நண்பர்களுக்கு, 20.03.2013 அன்று வெளியிட்ட கவிஞர்களுக்கு/கதாசிரியர்களுக்கு ஒரு அழைப்பு! எனும் பதிவின் அழைப்பினை ஏற்று, வந்திருக்கும் இரண்டாம் கவிதையை இன்று இங்கே பகிர்ந்துள்ளேன். சங்கீதா எனும் வலைப்பூவில் எழுதி வரும் சங்கீதா RG எழுதிய கவிதையினை இன்று பகிர்ந்துள்ளேன்.


அன்னத்தினை தூது மட்டுமா விட முடியும். அன்னத்திடம் கேள்விகளும் கேட்கமுடியுமே என்று நினைத்து எழுதிய கவிதை.பட உதவி: சுதேசமித்திரன் 1957


சித்திரக்கவிதை

அன்னமே என்ன பார்க்கிறாய்?
என்ன கேட்க தயங்குகிறாய்?
காடழிந்து கான்க்ரீட் கட்டடங்களாய்
குளம் வற்றி மண் வெடிப்புகளாய்
இருக்கும் காலத்தில்
இத்தகைய காட்சியை
சித்திரத்தில் மட்டுமே
பார்க்க முடிகிறது என்றா?

முக நூலிலும் அலை பேசியிலும்
பேசும் பெண்கள் நிறைந்த காலத்தில்
வடிவாய் அழகாய் அன்னத்திடம்
பேசும் நங்கையை 
சித்திரத்தில் மட்டுமே
பார்க்க முடிகிறது என்றா?

என்ன செய்வது விளைவை
யோசிக்காமல் மாறியும் மாற்றியும் விட்டோம்
இப்பொழுது கவலையுடன் யோசிக்கிறோம்
என்ன செய்வது என்று
நீயே வழி சொல் அன்னமே!!!!-          சங்கீதா.


என்ன நண்பர்களே கவிதையினை ரசித்தீர்களா? கவிதைக்கான பாராட்டுகளுக்கு உரியவர் ஆசிரியர் மட்டுமே! கவிதை எழுதிய சங்கீதா அவர்களுக்கு ஒரு பூங்கொத்து!

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....நட்புடன்வெங்கட்.
புது தில்லி.


22 comments:

 1. ;))))) கவிதை எழுதி பூங்கொத்து பெற்றவருக்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  பூங்கொத்து கொடுத்து பதிவிட்டு சிறப்பித்த தங்களுக்கும் என் பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 2. காடழிந்து கான்க்ரீட் கட்டடங்களாய்
  குளம் வற்றி மண் வெடிப்புகளாய்
  இருக்கும் காலத்தில்
  இத்தகைய காட்சியை
  சித்திரத்தில் மட்டுமே
  பார்க்க முடிகிறது என்றா?//

  உண்மை .
  சித்திரத்தில் மட்டுமே இக்காட்சியைப் பார்க்க முடியும்.
  கவிதை எழுதிய சங்கீதாவிற்கு வாழ்த்துக்கள்.
  பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

   Delete
 3. வித்தியாச சிந்தனை. மாற்றி யோசித்திருக்கும் சங்கீதா அவர்களுக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. வித்தியாசமான சிந்தனை சங்கீதா, நன்று. 

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 5. அருமையான ஓவியத்தை எங்கிருந்து தேடிப்பிடித்து வெளியிட்டிருக்கிறீர்கள்? இப்போதெல்லாம் இந்த மாதிரி அழகிய வண்ண ஓவியங்களைப்பார்க்க முடிவதேயில்லை! அழகியதொரு வண்ண ஓவியத்தை காலத்தால் மறந்து போன ஓவியத்தை இங்கே வெளியிட்டிருப்பதற்கு அன்பு நன்றி!!

  ReplyDelete
  Replies
  1. இன்னும் இது போன்ற சில ஓவியங்களை தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறேன். சில நாட்கள் கழித்து வெளியிடுகிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோம்மா.

   Delete
 6. பூங்கொத்து பெற்றுக் கொண்ட தோழி சங்கீதாவுக்கு என்
  இனிய வாழ்த்துக்கள் .பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரா .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 7. கவிதை யதார்த்தம்.
  பூங்கொத்து அளித்தவருக்கும் பெற்றுக் கொண்ட தோழிசங்கீதாவுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயந்தி ரமணி ஜி!

   Delete
 8. நானும் டோக்கன் வாங்கிக்கினு உக்காந்துகினு இருக்கேன்.
  என்னோட டர்ன் எப்ப வரும்னு தெரியலயே !!

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. உங்களது கவிதை என் பக்கத்தில் வரும் 28-ஆம் தேதி வெளிவரும்.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.

   Delete
 9. சங்கீதாவின் சங்கீத சிந்தனைக்கு பாராட்டுகள், நன்றி பகிர்வுக்கு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.

   Delete
 10. வடிவாய் அழகாய் அன்னத்திடம்
  பேசும் நங்கை ...! அழகு..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 11. என் கவிதையை தங்களுடைய வலை பூவில் வெளியிட்டு பூங்கொத்து கொடுத்த வெங்கட் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி


  என் கவிதையை படித்து பாராட்டிய அனைவர்க்கும் என் நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சங்கீதா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....