எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, April 18, 2013

ஓவியத்திற்கு கவிதை – கவிஞர் கணக்காயன் [அன்னம் விடு தூது – 13]அன்பின் நண்பர்களுக்கு, 20.03.2013 அன்று வெளியிட்ட கவிஞர்களுக்கு/கதாசிரியர்களுக்கு ஒரு அழைப்பு! எனும் பதிவின் அழைப்பினை ஏற்று, வந்திருக்கும் ஒரு கவிதையை இன்று இங்கே பகிர்ந்துள்ளேன். கணக்காயன் எனும் வலைப்பூவில் எழுதி வரும் கவிஞர் கணக்காயன் அவர்கள் எழுதிய கவிதை இது.

அன்னம் விடு தூது பகிர்வுகள் வரிசையில் இது பதிமூன்றாம் பகிர்வு.

 
பட உதவி: சுதேசமித்திரன் 1957
 
சிற்றூரின் நீள்சாலை, ஓர்ப்பக்கம் நன்நீழல்
சுற்றுமுள ஓங்குமரம், சுந்தரியாள் அங்கமர,
பற்றோடும் ஈரன்னம், பக்குவமாய் நீருணியில்,
நற்றவமே ஆற்றல்போல், தம்மன்பை நேர்பகிர்ந்து,
புற்றரையின் மாதினுக்கு புத்திமதி சொல்கிறதோ?
வற்றாத நல்லுரவு வாகாகப் பெற்றிடற்கே?

காற்றாலே ஊருணியின் நீர்ப்பரப்பில் காண்சலனம்,
ஏற்றாற்போல் தாமரைப்பூ கூம்பியவை சற்றசைவு,
ஆற்றாமை நெஞ்சத்தே, ஆறலைக்கும் எண்ணங்கள்
சேற்றினிலே வாழ்தவளை சேர்த்தொலிக்கும் சத்தங்கள்,
தோற்றமாம் பலமீன்கள் ஒக்கனமாய் நீந்துமெழில்,
தேற்றத்தை தந்திடுமோ ஏந்திழைக்கு இச்சூழல்?
மாற்றமிலா ஏமாற்றம் மாணிழைக்கு எஞ்சிடுமோ?

-          கவிஞர் கணக்காயன்.

என்ன நண்பர்களே இப்பகிர்வினை ரசித்தீர்களா? பகிர்வுக்கான பாராட்டுகளுக்கு உரியவர் ஆசிரியர் மட்டுமே! பகிர்வினை எழுதிய கவிஞர் கணக்காயன் அவர்களுக்கு ஒரு பூங்கொத்து!அடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

28 comments:

 1. மாற்றமிலா ஏமாற்றம் - ரசித்தேன். கவிதை நன்று.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 2. மீன்கள் நீந்தும் தோற்றம் தேற்றம் தருமா என
  ஏற்றம் தந்த கவிதைக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 3. அடடா !! அப்படியே அந்த காட்சியை கண்முன்னே கொண்டு வந்து
  நீயே பாத்துக்கய்யா, இந்த சோகத்தை அப்படின்னு சொல்லுது...

  இந்தப்பொண்ணுங்களெல்லாம் நல்லபடி இருக்கணுமே....

  சுப்பு தாத்தா மனசு கேட்கல...

  கணக்காயன் அண்ணே இல்ல தம்பி... நீங்க எழுதினத படிப்பாகளோ இல்ல‌
  அந்த பொண்ணு சோறு கூட துன்னாம தூங்குதோ ...

  நான் உங்க பாட்டை பாடி எழுப்பலாம்னு இருக்கேங்க... என்ன சொல்றீக...

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha.blogspot.in
  உங்க இ மெயில் இருந்தா கொடுங்க...

  ReplyDelete
  Replies
  1. பாடி அனுப்புங்க தாத்தா.....

   நான் அவர்கிட்ட பேசிட்டு உங்களுக்கும் இ-மெயில் ஐடி அனுப்பறேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 4. ரசித்தேன்... கவிஞர் கணக்காயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 5. நல்ல கவிதை. பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 6. இரண்டு மூன்று முறை படித்து ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்!

   Delete
 7. அழகிய கவிதை. அருமை. கவிஞருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  இங்கு பகிர்ந்த உங்களுக்கும் மிக்க நன்றி சகோ!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 8. விழியில் தோன்றுதே பல மீன்கள்... அழகிய வரிகள். ஐயாவிற்கு வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். பகிர்வுக்கு நன்றிங்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 9. கவிஞ்சர் கணக்காயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  கவிதை நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 10. அருமையான கவிதை ஆசிரியருக்கு நன்றி பகிர்ந்த தங்களுக்கும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.

   Delete
 11. ஒரு படத்தைப் போட்டு எத்தனை கவிதை வரவழைத்து விட்டீர்கள்1
  த.ம.5

  ReplyDelete
  Replies
  1. அட ஒன்றும் அதிகமில்லை குட்டன். இன்னும் மூன்று கவிதை கவிதைகள் தான்.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குட்டன்.

   Delete
 12. ஆஹா! பதின்மூன்றாவது பகிர்வா? கவிதை அருமை.தொடர்ந்து பகிருங்க..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆசியா.

   Delete
 13. பூங்கொத்து பெற்றவருக்கு பாராட்டுக்கள் + வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள், வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 14. இருவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....