ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

அருவியில் உணவகம்!



சாதாரணமாகவே அருவி என்றாலே உங்களுக்குள்ளும் மகிழ்ச்சி அருவியாய் பொங்கிவிடும்.  அந்த அருவியின் அருகிலேயே அதுவும் அருவியிலிருந்து விழும் தண்ணீர் உங்கள் கால்களை நனைத்துக் கொண்டு ஓடும் இடத்தில் உணவகமும் இருந்து அங்கே அமர்ந்தபடி உணவு உட்கொள்ள வசதி இருந்தால்......

கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்! நமது குற்றால அருவி - பாறையில் தண்ணீர் விழுந்து ஓடும் இடத்தில் சில இருக்கைகள் போட்டு வைத்து அங்கே சுடச் சுட உணவு கொடுத்தால் எப்படி இருக்கும்! இப்படி ஒருவர் யோசித்து இருக்கிறார். ஆனால் நம் நாட்டில் இல்லை என்பது தான் வருத்தம். இந்த அருவி உணவகம் இருப்பது ஃபிலிப்பைன்ஸ் நகரத்தில்.

Villa Escudero Resort எனும் இடத்தில் அமைந்துள்ள இந்த உணவகத்தில் மூங்கில்களால் ஆன இருக்கைகளில் நீங்கள் அமர்ந்து கொள்ள, உங்களுக்கு உணவு பரிமாறப்படுகிறது. வேறு சில வசதிகளும் இந்த ரிசார்ட்டில் உண்டு! இங்கே பாருங்களேன் சில படங்களை.... இந்த வார ஞாயிறின் படங்களாக!





என்ன நண்பர்களே படங்களை ரசித்தீர்களா! என்ன கொஞ்சம் வயிறு தான் பசிக்க ஆரம்பித்து இருக்கும்! :)

அடுத்த ஞாயிறன்று வேறு சில சுவையான படங்களோடு உங்களைச் சந்திக்கும் வரை!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

42 கருத்துகள்:

  1. சமீபத்தில கொடை விசிட்டின் போது ஒரு அருவி விசிட் இடம் பெற்றது. சமையற்காரர்களை அழைத்துச் சென்று அருவிக் கரையிலேயே சமைத்து சுடச்சுடச் சாப்பிட்டோம். ஆனால் இங்கே அருவிக் கரையில் அழகாய் ஹோட்‌டலே அமைத்திருப்பதைப் பார்க்கையில் வியப்பு! மகிழ்ச்சி! மிக ரசிக்க வைத்த படங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

      நீக்கு
  3. rainforest என்று ஒரு நிறுவனம் இப்படிப்பட்ட themeகளில் 90களில் restaurant அமைத்தது. அருவி நீரினால் ஆபத்து அதிகமானதும் (வழுக்கி விழுந்து அடி, பிறகு liability lawsuit) சத்தம் போடாமல் restaurant themeகளை மரங்களடர்ந்த காடு போல் மாற்றிவிட்டார்கள். இந்த அருவி restaurant ரொம்ப டேஞ்சரான சமாசாரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழுக்கி விழுந்து விடும் அபாயம்.... உண்மை தான்.

      இங்கே பல நீர் நிலைகளில் [தண்ணீரை தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட] இடங்களில் வழுக்கும் அபாயம் உண்டு. சமீபத்தில் கூட குருக்ஷேத்ரா சென்றபோது பார்த்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

      நீக்கு
  4. வியப்பாக இருக்கிறது... படங்கள் அருமை...

    கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி - எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ, இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  5. //நமது குற்றால அருவி - பாறையில் தண்ணீர் விழுந்து ஓடும் இடத்தில் சில இருக்கைகள் போட்டு வைத்து அங்கே சுடச் சுட உணவு கொடுத்தால் எப்படி இருக்கும்!//

    சூப்பராகத்தான் இருக்கும். சூடான பஜ்ஜிகள் மட்டுமாவது தரலாம்.;)))))

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூடான பஜ்ஜி! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  6. சுப்பர் படங்கள்..
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கருண்.

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  7. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  8. சுவையான படங்கள்..
    இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  9. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ...தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்...
    (எப்பொழுது அழைத்து செல்வீர்கள் இங்கு !!!!!!!!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அப்பாஜி!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  10. குளுகுளு அருவியில் சுடச்சுட சாப்பாடு ஜூப்பராகத்தான் இருக்கும். ஆனால் அதிலும் ஆபத்து உண்டு என்னும்போது வேண்டாம் என்றே தோன்றுகிறது.

    இனிய விஜய வருடப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  11. ஜிலுஜிலு சாரலில் சுடச்சுட சாப்பிடவேண்டுமே. சாப்பிடுவது கைதவறினால் போச்சு.படங்களெ ல்லாம் அழகாயிருக்கு. பிலிப்பைன்ஸ் போகணுமா? இந்தியாவிலும் வந்து விடும். வாழ்த்துக்கள்.
    அழகான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா....

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  12. அருவிக்கரையில் உணவகம் புதுமை.

    உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய சித்திரை புதுவருட வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  13. பார்க்கும் போது குற்றால அருவியில் குளித்து வந்தது போல் இருக்கிறது
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  14. அழகா இருக்கு ,ஆச்சரியம் ,படு சுத்தமா இருக்கும் ஏனா அருவியே கொட்டுது ஆனா வழுக்காம இருக்கும்படி பார்த்துகிட்டா நல்லாதான் இருக்கும் பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பூவிழி.

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  15. முதலில்....
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய அன்பான சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    வியக்க வைக்கும் அருமையான காட்சிகள்.... பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ...:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இளமதி...

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  16. அருமையான படம். நம்ம ஊர்ல இருந்தா அடிக்கடி அங்கே போயிடலாம்!

    உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் மற்றும் சக வாசக நண்பர்களுக்கும் எங்கள் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  17. அருமையான பகிர்வு.

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  18. சாதாரணமாகவே அருவி என்றாலே உங்களுக்குள்ளும் மகிழ்ச்சி அருவியாய் பொங்கிவிடும். அந்த அருவியின் அருகிலேயே அதுவும் அருவியிலிருந்து விழும் தண்ணீர் உங்கள் கால்களை நனைத்துக் கொண்டு ஓடும் இடத்தில் உணவகமும் இருந்து அங்கே அமர்ந்தபடி உணவு உட்கொள்ள வசதி இருந்தால்......//

    கற்பனை செய்துப் பார்க்கும் போது மிக அருமையாக இருக்கிறது.
    உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  19. அருவிக்குள் உணவகம்...
    போட்டோ அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

      நீக்கு
  20. படங்களைப் பார்க்கும்போது சாப்பிடப் போகிறார்களா இல்லை வேறெதற்கோ என்று சந்தேகமாக இருக்கிறது. சாப்பிடும்போதும் உள்ளுக்குள் பயம் இருக்குமா இல்லையா... யாரைக் கேட்பது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாப்பிடும் ஒருவரைப் பிடித்து வர முயற்சிக்கலாமா? :)

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஷாஜஹான் ஜி!

      நீக்கு
  21. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....