சனி, 13 ஏப்ரல், 2013

எம்முயிர்காக்கத் தூது செல்லாயோ – இளமதி [அன்னம் விடு தூது – 11]


அன்பின் நண்பர்களுக்கு, 20.03.2013 அன்று வெளியிட்ட கவிஞர்களுக்கு/கதாசிரியர்களுக்கு ஒரு அழைப்பு! எனும் பதிவின் அழைப்பினை ஏற்று, வந்திருக்கும் ஒரு க[வி]தையை இன்று இங்கே பகிர்ந்துள்ளேன். இளைய நிலா எனும் வலைப்பூவில் எழுதி வரும் இளமதி எழுதிய கவிதையினை இன்று பகிர்ந்துள்ளேன்.அன்னம் விடு தூது பகிர்வுகள் வரிசையில் இது பதினொன்றாவது  பகிர்வு.


 பட உதவி: சுதேசமித்திரன் 1957


எம்முயிர்காக்கத் தூது செல்லாயோ...

♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣முன்பொரு காலத்திலே

நள தமயந்திக்கு நீதானோ

தூதுசென்றாய் அன்னமே

இன்னல்படும் தமிழர் ஈழத்திலே

பாவிகளால் பலியாவதைக்

கூற இப்போதுதூது செல்லாயோதென்னவர் தலைவர்க்கும்

சொல்லிய யாவும்

காற்றிலே போதன்னமே

எங்களின் சோதரர் கண்டிடும்

துன்பத்தை யாரும் சிந்தையில்

கொண்டதாய் காணவில்லையேஉன்னதமாய் உன்பங்கு

சங்ககாலத்தில் நிகழ்ந்தது

உண்மையென்றால் அன்னமே

இன்னமும் நம்முயிர் ஈழத்திலே

இழந்திடும் முன்னமே விரைந்து

நீ  தூது செல்லாயோ...என்ன நண்பர்களே க[வி]தையினை ரசித்தீர்களா? பகிர்வுக்கான பாராட்டுகளுக்கு உரியவர் ஆசிரியர் மட்டுமே! எழுதிய இளமதி அவர்களுக்கு ஒரு பூங்கொத்து!

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....நட்புடன்வெங்கட்.

புது தில்லி.

32 கருத்துகள்:

 1. அருமை... இளமதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தமிழ்மணத்தில் இணைத்து வாக்களித்தமைக்கு மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 3. //யாரும் சிந்தையில்

  கொண்டதாய் காணவில்லையே//

  அன்னமே
  இன்னா சேதி ?

  உனக்கொரு
  வோட்டு வங்கி உனக்கிருக்கா ?
  ஊட்டுக்கு வந்து பாரு..
  என்ன வேணும் எனக்கேளு.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.....

   நீக்கு
 4. அருமை... இளமதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   நீக்கு
 5. இன்னமும் நம்முயிர் ஈழத்திலே

  இழந்திடும் முன்னமே விரைந்து

  நீ தூது செல்லாயோ...//

  நல்ல தூதுவனாய் போய் உயிர்களை காத்து மற்றும் ஒரு முறை சரித்திரத்தில் இடம் பிடிக்க வாழ்த்துக்கள் அன்னமே!
  கவிதை அருமை இளமதி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 6. கவிதாயினி திருமதி இளமதி அவர்களின் கவிதை மாறுபட்ட சிந்தனையுடன் வெகு அழகாக எழுதப்பட்டுள்ளது. பூங்கொத்து பெற்ற அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.

  தங்களுக்கு என் நன்றிகள், வெங்கட்ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 7. உயிர்காக்க தூது செல்லும் அன்னப்பறவை
  இளைய நிலவாய் அமுதைப் பொழிந்து வெற்றிபெற வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 8. சகோதரி இளமதி அவர்கட்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள் !!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ்முகில் பிரகாசம்.

   நீக்கு
 9. வணக்கம் சகோதரரே!

  என் கவிதையையும்??...இது கவிதை என நான் கூறவில்லை... வெறும் கிறுக்கல்தான்...:)..

  நான் இப்போதுதான் இப்படி ஏதும் எழுத ஆரம்பித்துள்ளேன். இருப்பினும் அதையும் உங்கள் பதிவில் வெளியிட்டு என்னைப் பெருமைப்படுத்தியுள்ளீர்களே...

  உங்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள் சகோ..

  அழகான மலர் கொத்துக்கும் மிக்க நன்றி.

  இங்கும் வந்து வாழ்த்தும் அனைவருக்கும் என் நன்றியையும் அன்பினையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

  அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  அன்புடன்
  இளமதி.

  பதிலளிநீக்கு
 10. ஈழத்துக்குத் தூதாக இளமதி அன்னத்தை அனுப்பிடும் பாங்கை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தஙக்ளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 11. அன்னமே நீயாவது சீக்கிரம் தூது செல் .........ஆசிரியரின் கனவை நனவாக்கிவிட தோழி இளமதிக்கு வாழ்த்துகள் பகிர்ந்த உங்களுக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.

   நீக்கு
 12. அன்னத்தை ஈழத்தமிழரின் நல வாழ்வுக்குத் தூது விடும் இளமைதியின் கவிதை மனதைத் தொடுகிறது.
  அவருக்கும், அழகிய படத்தைக் கொடுத்து கவிதை எழுதச் சொல்லும் உங்களுக்கும் பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   நீக்கு
 13. கவிதை அருமை...
  உங்களுக்கும் உங்கள் இல்லத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   நீக்கு
 14. மனதிலிருந்து வந்த மொழி.
  (ஹ்ம்ம்ம். கடைசியில் அன்னத்தைத் தூது விடும் அளவுக்கு வந்துவிட்டோமே.. என்று விடியும் எங்கள் இரவு!)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   நீக்கு
 15. தோழி இளமதியின் கவிதனை இங்கு கண்டு களித்திட்டேன். அக்கவியினை
  எழுதத்தூண்டிய உங்களிற்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும்,நன்றிகளும்.
  உங்களுக்கும்,குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப்ரியசகி.

   தங்களது முதல் வருகையோ?

   உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 16. இளமதி வாழ்த்துக்கள்.

  இப்படியாவது அவர்கள் வாழ்வு சீரானால் மகிழ்ச்சிதான்.

  வித்தியாசமான சிந்தனை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயந்தி ரமணி ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....