எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, April 20, 2013

அன்னத்தின் எண்ணம் - சேஷாத்ரி [அன்னம் விடு தூது – 14]அன்பின் நண்பர்களுக்கு, 20.03.2013 அன்று வெளியிட்ட கவிஞர்களுக்கு/கதாசிரியர்களுக்கு ஒரு அழைப்பு! எனும் பதிவின் அழைப்பினை ஏற்று, வந்திருக்கும் ஒரு கவிதையை இன்று இங்கே பகிர்ந்துள்ளேன். காரஞ்சன் சிந்தனைகள் எனும் வலைப்பூவில் எழுதி வரும் நண்பர் சேஷாத்ரி எழுதிய கவிதை இது.

அன்னம் விடு தூது பகிர்வுகள் வரிசையில் இது பதினான்காம் பகிர்வு.

பட உதவி: சுதேசமித்திரன் 1957

அன்னத்தின் எண்ணம்!

வன்னமிகு அன்னமே!

    
கயல்களெலாம் எந்தன்
    
கண்ணசைவில் மயங்கிநிற்க,
    
கூவிமகிழும் குயிலினமென்
    
குரல்கேட்கக் காத்திருக்க
    
எண்ணம் உரைத்திட -நீ
    
எந்தூதாய் வருவாயா?

ஏந்திழையே!

                 உன்னுள்ளம் நிறைந்தவர்க்கு
                 உன்நிலையை நானுரைப்பேன்!
                 திரும்பிடுவார் விரைவினில்
                 திண்ணமிது! கலங்காதே!
                 தூதுசெல்லும் எங்களுக்கும்
                துயருண்டு மனதினிலே!
                எங்கள் மனத்துயரை
                யாரிடம் யாமுரைப்போம்?

                 அன்னம் உரைத்தமொழி
                ஆயிழைக்கு வியப்பளிக்க
                என்னென்று அறிந்திட நான்
                ஏனோ தலைப்பட்டேன்!

     அன்னத்தின் மொழிகேளீர்!             

               எண்ணம் உரைத்திட
               எங்களைத் தூதுவிட்டீர்!
               இன்னுமொரு நூற்றாண்டில்
               எங்களின் நிலைஎதுவோ?

              விஞ்ஞான வளர்ச்சியிலே
             வியனுலகும் சுருங்கிடலாம்!
             விரல்நுனியில் உலகிருக்க
             அன்னத்தைத் தூதுவிட
             அந்நாளில் யார்வருவார்?

             பெருகிடும் குடியிருப்பால்
            அருகிடுமே நீர்நிலைகள்!
            காவியக் கதைகளில்தான்
            ஓவியமாய் உறைவோமோ?

             அன்னத்தின் மொழிகேட்டு
             அழுகிறதே என்னுள்ளம்!
                                                                     -காரஞ்சன்(சேஷ்)

என்ன நண்பர்களே இப்பகிர்வினை ரசித்தீர்களா? பகிர்வுக்கான பாராட்டுகளுக்கு உரியவர் ஆசிரியர் மட்டுமே! பகிர்வினை எழுதிய நண்பர் சேஷாத்ரி அவர்களுக்கு ஒரு பூங்கொத்து!அடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

40 comments:

 1. கவிதைப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 2. அருமையான கவிதை.

  //அன்னத்தின் மொழிகேட்டு
  அழுகிறதே என்னுள்ளம்!// ;(

  பூங்கொத்து பெற்ற திரு. காரஞ்சன் [சேஷ்] அவர்களுக்குப் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

  பதிவிட்ட தங்களுக்கு என் நன்றிகள், வெங்கட்ஜி. -

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 3. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை.....

   Delete
 4. அன்னத்தின் மொழி சிந்திக்க வைத்தது. ஓவியமாய் மாறிடுவோமோ என்ற ஏக்கம் நிறை வார்த்தைகள் என்னவோ செய்தது. நம்மைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறோம். அதனதன் நிலையை யோசிக்க வைத்த வரிகள். சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 5. வித்தியாசமான அருமையான
  ஆழமான சிந்தனையுடன் கூடிய
  அழகான கவிதைக்கு
  மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 6. Replies
  1. தமிழ்மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 7. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கருண்.

   Delete
 8. பெருகிடும் குடியிருப்பால்
  அருகிடுமே நீர்நிலைகள்!
  காவியக் கதைகளில்தான்
  ஓவியமாய் உறைவோமோ?

  அன்னத்தின் மொழிகேட்டு
  அழுகிறதே என்னுள்ளம்!//

  உண்மை நிலையை அன்னம் அழகாய் சொல்லி விட்டது.
  நம் மனமும் அருகிடும் நீர்நிலையை நினைத்து அழுகிறது.
  வாழ்த்துக்கள் சேஷாத்ரி அவர்களுக்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

   Delete
 9. தூது போய்க் களைத்த அன்னத்தின் கவலை நமக்கும் கவலைதான்.
  முன்பாவது அன்னம் உரைத்ததை உரைத்தபடியே சென்று சொல்லும். இப்பொழுதோ
  தூது செல்லத் தோழி கிடைத்தாலும் அவளும் மோக வலையில் விழுகிறாள்:)

  குறுஞ்செய்தி அனுப்பிப் பெரிய கவலையில் ஆழ்கிறார்கள்.

  திரு சேஷாத்ரி அவர்களின் புதிய சிந்தனைக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   Delete
 10. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 11. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் ஜி!

   Delete
 12. அருமை! அருமை! வித்தியாசமான கற்பனை. அழகான வரிகள்! மிகவும் ரசித்தேன்.
  கவிஞருக்கு என் வாழ்த்துக்கள்!

  பகிர்ந்த உங்களுக்கும் என் நன்றிகள் சகோ!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 13. அருமையான கவிதை...
  கவிஞருக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 14. வித்தியாசமான கோணத்தில் அருமையான கவிதை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 15. வண்ணமயமாய் எண்ணம் உரைத்த அன்னத்திற்கு
  வாழ்த்துகள்..பாராட்டுக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete

 16. வணக்கம்!

  அன்னத்தின் துன்பத்தை அள்ளி அளித்தகவி
  எண்ணத்தில் வாழும் இனித்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கவிஞர் பாரதிதாசன்....

   Delete
 17. நல்லதோர் கவிதை! ந்ற்றமிழில் வடித்திட்ட நண்பர் சேஷாத்ரி அவர்களுக்கு எனது சார்பாகவும் ஒரு பூங்கொத்து!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 18. வித்யாசமான கவிதை ஆசிரியருக்கு வாழ் த்துகள்இதை பகிர்ந்த தங்களுக்கும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பூவிழி.

   Delete
 19. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 20. அன்னத்தின் வார்த்தைகள் இப்போது நிஜமாகிவிட்டதோ? அன்னப்பறவைகளை இப்போது பார்க்க முடிகிறதோ?

  நல்ல சிந்தனையில் எழுந்த நல்ல கவிதை.
  திரு சேஷாத்ரிக்குப் பாராட்டுக்கள்!

  ReplyDelete
 21. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.....

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....