முஸ்கி: இத்தொடரின் முந்தைய பகுதியான மஹா கும்பமேளா – ஒரு
பயணம் – பகுதி 4 – குகனின் வழித்தோன்றலுடன்
ஒரு பேட்டி ஏனோ என்னைத் தொடரும் நண்பர்களின் டாஷ்போர்டில்
அப்டேட் ஆகவில்லை. படிக்காதவர்கள் படித்துவிட்டு இங்கே வரலாமே!
அமிதாப் கட்டிய படகுத் துறை
சென்ற பதிவின் முடிவில் படகில் பயணித்த போது பார்த்த விஷயங்களை இந்தப்
பகிர்வில் சொல்கிறேன் எனச் சொல்லி இருந்தேன். நாங்கள் படகில் ஏறி அமர்ந்த இடம்
யமுனை ஆற்றில் இருக்கும் படகுத் துறை. இங்கிருந்து கங்கையை நோக்கிச் செல்லும் போது
தான் அலஹாபாத் கோட்டை வரும். அதற்கு முன்னர் நடிகர் அமிதாப் பச்சன் அவர்கள் இந்த
பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினராக இருந்தபோது கட்டிய படகுத் துறை வருகிறது. கோவா
போலவே இங்கும் ஒரு அழகிய படகுத் துறை வேண்டுமென கட்டினார் என எங்கள் குகன்
சொல்லிக் கொண்டு வந்தார்.
ஆற்றின் நடுவில் மிதவை!
ஆற்றின் நடுவே பெரிய கயிறு
கொண்டு பல டின்களை இணைத்து மிதவையாகப் போட்டு வைத்திருந்தார்கள் இராணுவ வீரர்கள்.
மிதவைக்கு அப்பால் படகுகளோ, சுற்றுலா வந்த பயணிகளோ சென்று விடக்கூடாது என
எச்சரிக்கை செய்யவே இந்த தடை. தடைக்கு அப்புறம் அவ்வப்போது விரைவுப் படகுகளில்
அவர்கள் ரோந்து செல்வதை பார்க்க முடிந்தது. கோடிக்கணக்கில் பயணிகள் பல படகுகளில்
பயணிக்கும் சமயத்தில் இது போல ஏற்பாடுகள் அவசியம் தான்.
பறவைகளுக்கும்
உணவு!
நீங்கள் படகில்
பயணிக்கும்போது உங்கள் அருகே வரும் படகொன்றில் ஒரே ஒரு படகோட்டி மட்டும்
பார்க்கலாம். அவர் வேறு யாருமல்ல. தின்பண்டம் விற்பவர். கடலை மாவு கொண்டு
செய்யப்பட்ட இந்த தின்பண்டம் நீங்கள் உண்ண அல்ல! பறவைகளுக்கு அளிக்க! ஐந்து
ரூபாய், பத்து ரூபாய் என சிறிய பாக்கெட்டுகளும், நூறு ரூபாய் பாக்கெட்டுகளும்
வைத்திருக்கிறார். நீங்கள் அவரிடமிருந்து வாங்கி கொஞ்சமாக எடுத்து அப்படியே
காற்றிலே வீச, உங்களை நோக்கி நூற்றுக் கணக்கில் பறவைகள் அப்படியே பறந்து வந்து
தண்ணீரில் அமர்ந்து, அவ்வுணவினை சாப்பிடும் அழகே அழகு.
பறவைக் கூட்டம்!
கோட்டையை நோக்கி
முன்னேறுவோம். கோட்டை அக்பர் காலத்திய கோட்டை. இங்கே பல சேதங்கள் தற்போது ஏற்பட்டு
இருக்கிறது. கோட்டையின் சுவர்களில் பல இடங்களில் மரங்கள் வளர்ந்து இருப்பதைப்
பார்க்கலாம். கோட்டை பற்றிய விவரங்கள் எனது முந்தைய காசி-அலஹாபாத் பயணத் தொடரில் அக்பர் கட்டிய அலஹாபாத்
கோட்டை எனும் கட்டுரையில் பகிர்ந்ததை உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்.
இடிபட்ட கோட்டைச்
சுவர் – மீன்பிடிக்க ஏதுவாய்
கோட்டை கட்ட
ஆரம்பிக்கும்போது பல தடங்கல்கள் ஏற்பட்டதாம். யமுனையின் கரையோரம் கட்டிய சுவர்
இடிந்து விழுந்து கொண்டே இருக்க, என்ன செய்வதென்று புரியாது தவித்த போது
அவர்களுக்கு கிடைத்த வழி ஒரு பலி! அதுவும் கஜராஜனைப் பலி கொடுக்க வேண்டும் என்ற
வழி! அக்பரது யானைப் படையிலிருந்து ஒரு யானையைப் பலி கொடுத்து அதன் பின் கோட்டை
கட்டுவதை தொடர்ந்தார்களாம்.
யானையை பலியிட்ட
இடம்.
தலைகீழ் யானை
வடிவினை பூஜிக்கும் பெண்மணி
அந்த யானையை பலி கொடுத்த
இடத்தில் இப்போதும் ஒரு யானையின் உருவத்தினை கோட்டைச் சுவரில் பார்க்க முடிகிறது.
சிவப்பு வண்ணம் பூசி யானையை தெய்வமாக வழிபடுகிறார்கள் பலர். சிலபயணிகள் படகில்
சென்று அதற்கு அருகே இறங்கி பூஜை செய்வதைப் பார்க்க முடிந்தது. யானைப் பலி! அப்பா
என்ன ஒரு கொடுமை. நினைக்கவே பரிதாபமாக இருந்தது எனக்கு. படகில் பயணிக்கும் போது
அந்த யானைக்கு எவ்வளவு வலித்திருக்கும் என நினைத்தபடியே தான் பயணிக்க முடிந்தது!
என்ன நண்பர்களே, அந்த
யானையின் மரணம் உங்களையும் பாதித்து இருக்குமென நம்புகிறேன். பயணக் கட்டுரையின்
அடுத்த பகுதியில் உங்களைச் சந்திக்கும் வரை.....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
நூற்றுக் கணக்கில் பறவைகள் அப்படியே பறந்து வந்து தண்ணீரில் அமர்ந்து, அவ்வுணவினை சாப்பிடும் அழகே அழகு.
பதிலளிநீக்குயானை கலங்கவைத்தது ...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குயானைப் பலி - என்னவொரு கொடுமை...
பதிலளிநீக்குபடங்கள் அழகோ அழகு... பயணத்தை தொடர்கிறேன்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஅந்தக் காலத்தில், அணைகட்ட, கோட்டைக் கட்ட என்று பலி கொடுப்பது சகஜமாய் இருந்து இருக்கிறது .இதை படிக்கும் போது மனம் வேதனைப்படுகிறது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்குரசித்தேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.
நீக்குஆம் உண்மையிலேயே பாதித்துவிட்டது மற்ற எதையும் ரசித்தது மறந்துவிட்டது
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.
நீக்குபடக்குத் துறை மிக அழகு!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
நீக்கு//ஒரு பலி! அதுவும் கஜராஜனைப் பலி கொடுக்க வேண்டும் என்ற வழி! அக்பரது யானைப் படையிலிருந்து ஒரு யானையைப் பலி கொடுத்து அதன் பின் கோட்டை கட்டுவதை தொடர்ந்தார்களாம்.//
பதிலளிநீக்குஇது மிகவும் கொடுமையாக உள்ளது.
பதிவு அருமை. பாராட்டுக்கள், வெங்கட்ஜி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குநான் என் பக்கத்தில் தான் அப்டேட் ஆகவில்லை என்று நினைத்தேன்.
பதிலளிநீக்குயானையைப் பலியை கொடுத்ததும் அணை கட்ட முடிஞ்சதாமா. என்ன கொடுமை. என்ன மூடத்தனம்.மற்றப் படங்கள் மிக அழகு.
கோட்டை கட்டியிருக்கிறார்கள்.... என்ன கொடுமை!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.
அருமையான படங்கள்.
பதிலளிநீக்குஅமிதாப் கட்டிய படகுத்துறை பிரமாதம்!
யானை பலி படிக்கக் கஷ்டமாகத்தான் இருக்கிறது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஅலகாபாத்தில் ஈராண்டுகள் இருந்தும் நீங்கள் சுற்றிக்காட்டிய சில இடங்களைப் பார்க்கவில்லை!அருமையான படங்கள்.நன்றி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.
நீக்குஅதே ஊரில் இருந்தாலும் பல இடங்களை பார்க்க முடிவதில்லை! தில்லியில் நான் பார்க்காத இடங்கள் பல! :(
நல்லவிதமாக உங்கள் பயணக்கட்டுரை, படங்களை ரசித்துவந்த எனக்கு இறுதியில் நீங்கள் எழுதிய யானைப் பலி... அப்படியே இதயத்தை உலுக்கிவிட்டது.
பதிலளிநீக்குஅந்த வலி உங்கள் அருமையான கட்டுரையின் சுவாரஸ்யத்தை அப்படியே தூக்கிச் சாப்பிட்டுவிட்டது...:(
ஆயினும் பகிர்வுக்கு நன்றி சகோ...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.
நீக்குகேட்டபோது எனக்கும் அதே உணர்வுகள் தான்.....
பதிலளிநீக்குயானையா ?
கொடுமை..
அக்பர் நல்லவர அப்படின்னு நான் படிச்ச போது சரித்திர புத்தகத்திலே
போட்டிருந்ததே...
அது வேற அக்பரா. !!
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
நல்லவர் தான். சில சமயங்களில் இப்படி பலியிடுவது வழக்கமாக இருந்திருக்கலாம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.
நீங்க கொடுத்து வைத்த மகராசன் .நிறைய பார்கிறீங்க எழுதுறீங்க.வாழ்த்துக்கள் நண்பரே
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.
நீக்குஅடுத்த டூர்ல உங்களையும் கூட்டிட்டு போறேன்! சரியா...
பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று உங்கள் அனுவத்தைப் பகிர்ந்து கொள்ளுதல் மிகச் சிறப்பு. கங்கை , அக்பர் காலத்துக் கோட்டை இவற்றை பார்ப்பதற்கு கொடுத்துவைத்திருக்க வேண்டும்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சந்திரகௌரி.
நீக்குபாவம் யானை..
பதிலளிநீக்குமகா பாவம் அந்த யானை!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.
படங்கள் மிக தெளிவாக உள்ளன!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.
நீக்குஇப்போதுதான் உங்க ஐந்து பதிவுகளையும் படித்தேன். யானையைப் பலி கொடுத்த சேதி..... மனம் கலங்கிப் போச்சு:(
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்....
நீக்குயானை பாவம். :( மனசே சரியில்லை போங்க. :((((((
பதிலளிநீக்குஆமாம்... கீதாம்மா.... கேட்டபோது எனக்கும் ரொம்ப கஷ்டமாயிடுச்சு.....
நீக்கு