வெள்ளி, 26 ஏப்ரல், 2013

ஃப்ரூட் சாலட் – 43 - ஷம்ஷாத் பேகம் – கெய்ல் புயல் - சபலம்



இந்த வார செய்தி:

திரையுலகிற்கு பின்னணி பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸ் அவர்களின் இழப்பின் வருத்தம் தீர்வதற்குள் இன்னுமொரு இழப்பு. 1919-ஆம் வருடம் பிறந்த ஷம்ஷாத் பேகம் அவர்கள் தனது 94-ஆவது வயதில் சென்ற செவ்வாய்க் கிழமை மரணமடைந்தார். பல பிரபலமான பாடல்கள் பாடியிருக்கும் இவர் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி 1919 ஆம் வருடம் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் பிறந்தவர்.

அவரது அறிமுகப் பாடல் 1947 ஆம் ஆண்டு பெஷாவர் ரேடியோவில் ஒளிபரப்பாகியது. அவர் பாட்டு பாடுவதில் அவரது தந்தைக்குச் சிறிதும் விருப்பமில்லை. அதனால் சில கட்டளையோடு தான் பாடல்கள் பாட அனுமதி தந்தாராம் – அவரது முகத்தினை எப்பொழுதும் வெளி உலகிற்குக் காட்டக்கூடாது – புகைப்படங்கள் வெளியிடக் கூடாது என்பது தான் அந்தக் கட்டளைகள். அதை பல வருடங்கள் கடைபிடித்து வந்தாராம் பேகம் அவர்கள்.

இந்திய சுதந்திரத்தின் பிறகும், இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளிலும் பிரபலமாக இருந்தது இவரது பாடல்கள். கஜ்ரா மொகப்பத் வாலா, லேகே பெஹ்லா பெஹ்லா ப்யார், மேரி பியா கயே ரங்கூன் போன்ற சில பாடல்களை பல முறை கேட்டிருக்கிறேன் – தில்லி வந்த பின்பு! தமிழகத்தில் இருந்தவரை ஹிந்தி பாடல்களில் அத்தனை ஈர்ப்பு இல்லை.

தில்லி வந்த பிறகு பழைய ஹிந்தி பாடல்கள் கேட்பதில் நாட்டம் ஏற்பட்டு, ஷம்ஷாத் பேகம், சேகல், முகம்மது ரஃபி, என பல பாடகர்களின் பாடல்களைக் கேட்டதுண்டு. அதுவும் ஷம்ஷாத் அவர்களின் கஜ்ரா மொஹப்பத் வாலா பாடலை மிகவும் ரசித்திருக்கிறேன். எனக்குப் பிடித்த அவரது இரண்டு பாடல்களை நீங்களும் ரசிக்க இங்கே இணைத்திருக்கிறேன்.



ஆரம்பகாலத்தில் புகழின் உச்சியில் இருந்தாலும் அவரது பிந்தைய நாட்களில், அதுவும் சென்ற இரண்டு மூன்று ஆண்டுகளாக மிகவும் ஏழ்மையில் வாடிக் கொண்டிருந்தபோது சினிமா உலகம் அவரை அவ்வளவாக கவனிக்கவில்லை என்பது வருத்தமான விஷயம்.

சில நல்ல நபர்களின் முயற்சியால் இந்திய அரசாங்கம் அவருக்கு கொஞ்சம் பண உதவி செய்தது. இருந்தாலும் அவரது திறமைக்கு இந்த உதவி கொஞ்சமே....

திருமதி ஷம்ஷாத் பேகம் அவர்களது ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்.
     
இந்த வார முகப்புத்தக இற்றை:

வாழ்க்கை – நாம விரும்பற பாட்டை போட்டுக் கேட்க வாழ்க்கை ஒண்ணும் MP3 ப்ளேயர் இல்லை. அது FM RADIO மாதிரி. அதுவா போடற பாட்டை ரசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த வார குறுஞ்செய்தி

YOU CAN MAKE MORE FRIENDS IN TWO MONTHS BY BECOMING INTERESTED IN OTHER PEOPLE THAN YOU CAN IN 2 YEARS BY TRYING TO GET OTHER PEOPLE INTERESTED IN YOU –DALE CARNEGIE.

ரசித்த புகைப்படம்: 



இன்னும் எவ்வளவு நாளுக்கு இந்த கஷ்டம் என யோசிக்கிறாரோ இந்த மூதாட்டி....

ரசித்த பாடல்:

இந்த வார ரசித்த பாடலும் ஷம்ஷாத் பேகம் அவர்களின் பாடல் தான்...



ஐ.பி.எல். கார்னர்:

ஐ.பி.எல். 2013 – ல் கெய்ல் எனும் புயல் அடித்தது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கும். என்னவோர் ஆட்டம்! கடைசி மூன்று ஓவர்களில் தான் அவரது ஆட்டத்தினைப் பார்க்க முடிந்தது. இதில் மகிழ்ச்சி இருந்தாலும், 24-ஆம் தேதி 40 வயதினைத் தொட்ட நமது சச்சினுடைய தற்போதைய விளையாட்டு “அவர் எப்போது விளையாடுவதை விட்டு விலகுவார் என்ற கேள்வியை அதிகப் படுத்தி வருகிறது. பார்க்கலாம் விரைவில் விலகுவாரா என.


படித்ததில் பிடித்தது:

சபலம்

காலக் கிழவா பொறுத்திடுவாய்!
கால்க்ஷணம் சகடம் நிறுத்திடுவாய்!
பாலரென் மைந்தர் மழலையினைப்
பரிவுடன் இன்னும் செவியுறவென்
சாலவும் வளர்ந்து தெளிவுற்றுச்
சளசளப் பேச்சை யவரிழந்தால்
ஞால மீ தெளியென் செவிக்கின்பம்
நல்கிட வேறென் கிடைக்குமையா?

சிறியதன் பாதம் நடைதடுக்கச்
சிரித்துப் பின்னால் பதுங்கிவந்தே,
அறியுமுன் கண்ணை அவள்கரத்தால்
அணைத்துப் பொத்தி விளையாட்டாய்
‘தெரியுமோ அம்மா?என விளம்பும்
சிறுமியும் விரைவில் வளர்ந்துவிட்டால்,
பெரியதோர் இன்பம் போய்விடுமே
பிறகெவ்விதம் நான் களித்திருப்பேன்?

சோலையில் குதித்துப் புழுதியுடன்
சோர்வுற என்றன் மடிவிழுந்து,
காலையே கட்டிக் கதைகேட்போர்,
கண்களின் ஜொலிப்பைப் கண்டிலனேல்,
மாலையென் கால்கள் துடிக்குமையா,
வளர்ந்திடும் வீணே பொழுதனைத்தும்;
வேலை யிலுள்ள துயரமெல்லாம்
வேறெவ் வழியில் விலகிடுமோ?

காலனே! கிழவா? பொறுக்காயோ?
கால்க்ஷணம் சகடம் நிறுத்தாயோ?

-          குமுதினி, பாடல் எழுதப்பட்ட வருடம் 1936. நன்றி ஆ.வி.


என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

46 கருத்துகள்:

  1. ஃபுரூட் சாலட் சுவை.சந்தித்ததும் சிந்தித்ததும் இபோதுதான் பார்த்தேன். மாற்றப்பட்ட வடிவமைப்பு நன்றாக உள்ளது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  2. ப்ரூட் சாலட் அருமை .அதில் சச்சின் பற்றியதுதான் காரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

      நீக்கு
  3. ஷம்சத்தின் நிறைய பாடல்கள் ஜாலியாக இருக்கும் கேட்க.. அந்த நாள் ஞாபகம்..ஹ்ம்ம்ம்.. எல்லாரும் கிளம்பிட்டிருக்காங்க போல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /எல்லோரும் கிளம்பிட்டிருக்காங்க போல// உண்மை தான்.... நேரம் வந்து விட்டது போலும்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை.

      நீக்கு
  4. 1936ம் வருட ஆ.வி. கவிதை அருமை. ஷம்சத்தின் பாடல்கள் நான் கேட்ட நினைவில்லை. இப்போது கேட்டுப் பார்க்கிறேன். கெய்ல் என்னும் புயல் அடித்த சமயம் நான் பார்க்காமல் போய் விட்டேனே என்றுதான் எனக்கும் தோன்றியது கேள்விப்பட்டபோது! டேஸ்ட்டி ஃப்ரூட் சாலட்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

      நீக்கு
  5. பாடல்கள் அருமை... முகப்புத்தக இற்றை - சூப்பர்... சுவையான ஃப்ரூட் சாலட்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. பேகம் அவர்களுக்கு எனது அஞ்சலிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

      நீக்கு
  7. ப்ரூட் சாலட் அருமை அருமை அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அவர்கள் உண்மைகள்.

      நீக்கு
  8. அருமையான பழக்கலவை நண்பரே...
    ருசித்து ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

      நீக்கு
  9. அருமையான சாலட், ஷம்சத் பற்றி இப்பொழுது தான் கேள்வி படுகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு

      நீக்கு
  10. ஃப்ரூட் சாலட் அருமை.
    அனைத்தும் நல்ல ருசி.
    வாழ்த்துக்கள் சகோ!

    த. ம.7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

      நீக்கு
  11. கஜ்ரா மொஹ்ஹபத் வாலா எனக்கும் ரொம்பப்பிடிச்ச பாட்டு. மறுபடி இங்கே கேக்க ஒரு வாய்ப்பு தந்ததுக்கு நன்றி.

    அன்னாரின் ஆத்ம சாந்திக்கு என் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  12. செய்தித்தாள் பார்த்துதான் ஷம்ஷாத் பேகம் மறைவு தெரியும் எனக்கு.

    இற்றை, குறுஞ்செய்தி, புகைப்படம் எல்லாமே அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  13. ஷம்ஷாத் பேகம் பாடல்கள் இரண்டும் நல்ல தேர்வு.
    கேட்க கேட்க இனிமை.
    ஃப்ரூட் சாலட் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

      நீக்கு
  14. வாழ்க்கை – நாம விரும்பற பாட்டை போட்டுக் கேட்க வாழ்க்கை ஒண்ணும் MP3 ப்ளேயர் இல்லை. அது FM RADIO மாதிரி. அதுவா போடற பாட்டை ரசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

    அருமயான ரசித்த ஃப்ரூட் சாலட் ..பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  15. அருமையான ப்ரூட் சாலட், ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபக் ராம்.

      தங்களது முதல் வருகை என்னை மகிழ்வித்தது!

      நீக்கு
  16. ஃப்ரூட் சாலட் அருமை. ரசித்த புகைப்படம் அருமையான தேர்வு.. வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.

      நீக்கு
  17. முகப்புத்தக பொன்மொழி மிக அருமை! 'கஜ்ரா மொகபத் ' பாடல் மிகவும் புகழ் பெற்ற‌ ஒரு பாடல். அதை ம‌றுபடியும் கேட்டு ரசிக்க உதவியதற்கு இனிய நன்றி!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ம்னோ சாமிநாதன் ஜி!

      நீக்கு
  18. கஜ்ரா மொஹபத் வாலா.காலத்தாலழிக்க முடியாத பாடல்.
    குமுதினி அவர்களின் கவிதையும் அப்படியே.அவரும் ஸ்ரீரங்கம் தான்.
    அந்தப் படம் வயோதிகத்தின் எல்லை. சோகம் வெளிப்படும் ஒவ்வொரு துளியிலும். அருமையான பாடல்களுக்கு மிகவும் நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

      நீக்கு
  19. பாடல்கள் ,முகப்புத்தகம், பாட்டி,கவிதை என சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  20. ஷம்ஷாத் பேகம் அவர்களின் பாடல்கள் பகிர்வுக்கு நன்றி கேட்டேன் ரசித்தேன்
    குறுஞ்செய்தி மிகவும் பிடித்தது
    கவிதை அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.

      நீக்கு
  21. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கருண்.

      நீக்கு
  22. MP3-FM RADIO நல்ல ஒப்பீடு. குறுஞ்செய்தியும் நன்று.

    புகைப்படம் PiT உறுப்பினர் குழுவைச் சேர்ந்த கருவாயன் எனும் சுரேஷ்பாபு எடுத்தது.

    நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      படம் எடுத்த பிட் குழுவின் சுரேஷ் பாபு அவர்களுக்குப் பாராட்டுகள். தகவல் தெரிவித்த உங்களுக்கு எனது நன்றி.....

      படம் பார்த்தபோது சேமித்து வைத்திருந்தது. படம் எடுத்த நண்பருக்கு நன்றி சொல்ல விடுபட்டு விட்டது.......

      நீக்கு
  23. suavai anne!

    samsaath putjiya thakaval enakku ..

    mikka nantri!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....