எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, April 16, 2013

கலகல இளவரசி – திருமதி ரஞ்சனி நாராயணன் [அன்னம் விடு தூது – 12]அன்பின் நண்பர்களுக்கு, 20.03.2013 அன்று வெளியிட்ட கவிஞர்களுக்கு/கதாசிரியர்களுக்கு ஒரு அழைப்பு! எனும் பதிவின் அழைப்பினை ஏற்று, வந்திருக்கும் ஒரு கல கல கதையை இன்று இங்கே பகிர்ந்துள்ளேன். தனது பெயரியிலேயே வலைப்பூவில் எழுதி வரும் திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்கள் எழுதிய கதை இது.

அன்னம் விடு தூது பகிர்வுகள் வரிசையில் இது பன்னிரெண்டாம் பகிர்வு.

பட உதவி: சுதேசமித்திரன் 1957

கலகல இளவரசி!

கலகல....கலகல.........

‘இளவரசி! நிதானம் நிதானம்.....இத்தனை சிரிப்பு வேண்டாம்.....

‘இல்லையடி பேடையே! எப்போதோ வந்த எனது படத்திற்கு இத்தனை வரவேற்பா?

57 ஆம் வருடம் வந்த ஓவியம் இது. அப்படியானால் இப்போது உங்களுக்கு.... வயது...

‘ஷ்.....! சும்மா இரு. வயதைப் பற்றி ஏன் பேசுகிறாய்?

(ம்...ம்....இளவரசியும், பேடையும் ரொம்பத்தான் வழியறாங்க.....!)

‘அதுவும் சரி தான்..... உங்கள் இளமை ஊஞ்சல் ஆடுகிறதே!

‘என்ன, என்னவோ முணுமுணுப்புக்கேட்கிறதே! யாரது?

‘அது.....அது.....ஒன்றுமில்லை இளவரசி...என் காதலன் தான்....கொஞ்சம் உடல்நிலை சரியில்லை....

‘ம்ம்ம்.....கொஞ்சம் அந்தப் பக்கம் போகச் சொல்லு....குறுக்கே வரவேண்டாம்....!

‘அப்படியே...இளவரசி......!

(இத்தனை வருடத்துக்கு அப்புறமும் இளவரசியா? மகாராணி பட்டம் சூட்டிக் கொண்ட பிறகும்.....!)

‘அப்புறம் நீ சொல்லடி பேடையே! எத்தனை பேர் இதுவரை கவிதை எழுதியிருக்கிறார்கள்?

‘நிறைய  பேர் கவிதை. ஸ்ரவாணி என்று ஒருவர் கதையில் கவிதை எழுதியிருக்கிறார்....!

‘கலகல......கலகல.....! சிரிக்கிறாள் இளவரசி.
(யாரோ எழுதி வைச்சிட்டாங்க... கலகலன்னு சிரிச்சாள் இளவரசி ன்னு அதுக்காக இப்படியா ‘கலகல....! எனக்கு சந்திரமுகி ‘லகலக ஞாபகம் வருகிறது!)

‘ஏய்! இங்க வா. உனக்கு என்ன வேண்டும்?

‘ஒன்றுமில்லை....

‘சும்மா முணுமுணுக்காதே! என்ன வேணும்?

எனக்காக நீங்க தூது போகணும்...!

‘உனக்காக நானா? ஏனடி பேடை கேட்டாயா உன் காதலன் பேசுவதை?

‘இளவரசி! அதுக்கு கொஞ்சம் மரை கழண்டிருக்கிறது. அதான்....நீங்க போங்கம்மா, நான் அதுகிட்ட பேசிக்கிறேன்...!

‘ம.கொ.தா.க.  சங்கத்துக்கிட்ட போகவேண்டியதுதான்....!

‘என்ன என்ன, சங்கமா? முதற் சங்கமா, இடைசங்கமா. கடைச்சங்கமா?

‘அட, நீங்க ஒண்ணு! இன்னும் அந்தக் காலத்துலேயே இருக்கீங்க! 2013 க்கு வாங்க!

‘சரி சரி இப்போ உனக்கு என்ன வேணும்?

‘ஏன் இளவரசி, உங்களுக்காக நாங்க தூது போகும்போது நீங்க எனக்காக தூது போகக் கூடாதா? அது அன்னம் விடு தூது என்றால் இது இளவரசி விடு தூது....

‘சரி நான் இப்ப என்ன செய்யணும்....?

‘பத்து நாளா சாப்பாடு இல்லை; தூக்கம் இல்லை ..

‘ஏன்? ஏன்? ஏன்?

‘ஹும்....இன்னும் சுந்தராம்பாள் காலத்துலேயே........

‘............................!?

‘ஏன் சாப்பாடு இல்லை தூக்கம் இல்லை?

‘நீங்களும் நாங்களும் இருக்கும் இந்தப் படத்தை வெங்கட் போட்டாலும் போட்டார்.....நீங்களும் இவளும் அதைப் பற்றியே பேசி பேசி.......

‘நீங்கள் சொல்லும் டயலாக் எல்லாம் இவள் என்னிடம் சொல்லி சொல்லிக் காண்பித்து வெறுப்பு ஏத்துகிறாள்....

‘அட! அப்படியா?

‘நான் இங்கு குத்துக்கல்லாட்டம் இருக்கும்போது ......

“செல்லடி பைங்கிளியே
சொல்லடி தூது அவனிடமே
தாமரை இலைத்தண்ணீராய்
அவன் நெஞ்சம்... அதில்
தஞ்சமாய் என் நெஞ்சம்......
என்று பாடுகிறாளம்மா.....

யாரவன் என்று கோபமாகக் கேட்டால்.

“வெளிர்த்துப்போய் வாடிப்போய்
வேதனையில் விரகத்தில்
மயங்கிய அந்த தமயந்தி போல்
நானில்லை .........

என்கிறாள் எங்கோ பார்த்தபடி.

யார் இந்த நளன் என்றால்

“நிடதநாட்டிலே மன்னனாக
நீ விரும்பும் அழகுடனே
நளன் என்னும் நாமத்துடன் உன்
நாயகன் அவனும் அவதரித்தான்

என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் பதில் கூறுகிறாள்.

எதுவும் புரியாமல் அவள் அருகே சென்று ‘உடம்பு சரியில்லையா என்றால்

“முக நூலிலும் அலை பேசியிலும்
பேசும் பெண்கள் நிறைந்த காலத்தில்
வடிவாய் அழகாய் அன்னத்திடம்
பேசும் நங்கை.... “
எங்கள் இளவரசி என்கிறாள்.

அப்போதுதான் எனக்குப் புரிந்தது உங்கள் படத்திற்கு வந்த கவிதைகளைப் படித்துவிட்டு இவள் இப்படிப் பேசுகிறாள் என்று.

‘புரிந்தது இல்லையா? பின் இன்னும் என்ன கோபம், அன்னமே?

‘இனிமேல் தான் அம்மா க்ளைமாக்ஸ்: ஸ்ரவாணி அவர்கள் தனது கதை+கவிதையில்

“முதலில் நீ ஒன்றை எனக்குக் கூறுவாயாக.
உனக்கு நீரையும் பாலையும் பிரித்து உண்ணக் கூடிய மாய 
வித்தையைக் கற்றுத் தந்தது யார் ?

என்று கேட்டதற்கு இவள்

“அது இறைவன் எமக்களித்த வரம் இளவரசி..

என்று சொல்லியதை பலரும் ரசித்தார்களாம். அன்றிலிருந்து இவள் என்ன செய்கிறாள் தெரியுமா?

வீட்டிலிருக்கும் பாலிலிருந்து பாலை பிரித்து சாப்பிட்டுவிட்டு எனக்கு வெறும் தண்ணீரை மட்டும் வைத்துவிட்டுப் போகிறாள்......இளவரசி.....!

‘பத்து நாட்களாக வெறும் தண்ணீரைக் குடித்து குடித்து எப்படி என் உடம்பு வாடி விட்டது பாருங்கள்!

‘என்னை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் இளவரசி!

-          ரஞ்சனி நாராயணன்

என்ன நண்பர்களே இப்பகிர்வினை ரசித்தீர்களா? பகிர்வுக்கான பாராட்டுகளுக்கு உரியவர் ஆசிரியர் மட்டுமே! எழுதிய திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு ஒரு பூங்கொத்து!அடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

38 comments:

 1. வீட்டிலிருக்கும் பாலிலிருந்து பாலை பிரித்து சாப்பிட்டுவிட்டு எனக்கு வெறும் தண்ணீரை மட்டும் வைத்துவிட்டுப் போகிறாள்......இளவரசி.....!’

  ‘பத்து நாட்களாக வெறும் தண்ணீரைக் குடித்து குடித்து எப்படி என் உடம்பு வாடி விட்டது பாருங்கள்!’

  ‘என்னை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் இளவரசி!’.//
  ஆஹா! கோடைக்காலத்தில் பாலைவிட தண்ணீர்தான் நல்லது என்று அப்படி செய்கிறது போலும்.
  ரஞ்சனியின் கற்பனை அருமை. கவிதையும் உரையாடலும் நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 2. பாலிலிருந்து பாலை பிரித்து சாப்பிட்டுவிட்டு எனக்கு வெறும் தண்ணீரை மட்டும் வைத்துவிட்டுப் போகிறாள்......இளவரசி.....!’

  சுவாரஸ்யமான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 3. லகலக ...இல்லை இல்லை... கலகல ரஞ்சனி அம்மா அசத்திட்டாங்க...! சகோதரி ஸ்ரவாணி அவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்...

  ரஞ்சனி அம்மாவிற்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
  2. திருமதி ரஞ்சனி மேடம் ஸ்டைலில் எழுதப்பட்டுள்ள கதையும்/கவிதையும் வித்யாசமானது.

   பூங்கொத்து பெற்ற அவருக்குப் பாராட்டுக்கள். பதிவிட்ட தங்களுக்கு என் நன்றிகள்.

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 4. அருமையான கதை.... ரஞ்சனி அம்மா நிகழ்காலச் செய்திகளை வைத்து அருமையான கதையை படைதுள்ளார்கள்.... வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 5. வித்தியாசமான கற்பனை. சில இடங்களில் வாய்விட்டுச் சிரிக்க வைத்த நகைச்சுவை..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 6. அருமை! அருமை! சகோதரி நல்ல நகைச்சுவையுடன் அழகாக எழுதியதை ரொம்பவே ரசித்தேன்.
  நல்ல கற்பனை!
  நகைச்சுவையாயும் எழுதுவதற்கும் பேசுவதற்கும்கூட நிறைய ஞானம் வேண்டும். அதாவது அந்த உணர்வு சற்றும் பிசகிவிடாமல் மிகுந்த அவதானத்துடன் எழுதும் ஆற்றல் இயல்பாகவே இருத்தலும் அவசியம்.
  மிகச்சிறப்பு. சகோதரி ரஞ்சனி நாராயணனிற்கு வாழ்த்துக்கள்!

  எம்முடன் பகிர்ந்துகொண்ட உங்களுக்கும் என் நன்றிகள் சகோ!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 7. கலகல அசத்தல்தான்! பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷைலஜா ஜி!

   Delete
 8. அசத்தல் ரஞ்சனி அம்மா. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete

 9. //‘என்னை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் இளவரசி!’//

  கொஞ்ச நேரம் பொறுத்துக்கொள். ஆன் லைன் ஷாப்பில் போய்

  நெஸ்லே மில்க் ..வாங்கிண்டு வர்றென்.

  நிசமாவெ மில்க்ன்னு எல்லோரும் சொல்றாக.

  அப்படின்னு சொல்லிவிட்டு உடன் எழுந்த இளவரசி
  அடுத்த நிமிசமே Lap Top எடுத்து ஆன் லைனில்
  e bay க்கு log on செய்கிறாள்.


  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. ஆன்லைனில் நெஸ்லே மில்க் :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.

   Delete
 10. ரஞ்சனி டச் சுடன் இருக்கிறது லகலக இல்லை இல்லை கலகல கதை.
  நல்ல வேளை அன்னம் இளவரசியை சந்திரமுகி படத்திற்கு அழைத்துப் போக சொல்லவில்லை.
  நல்ல நகைசுவை கதை.ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 11. மிகவும் அருமை நகைசுவையுடன் ஆசிரியருக்கு வாழ்த்துகள் பகிர்ந்த தங்களுக்கும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.

   Delete
 12. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 13. கருத்துரை வழங்கிய அத்தனை பேர்களுக்கும் நன்றி.
  இங்கு காணப்படும் கவிதை வரிகளுக்கு நான் சொந்தக்காரி அல்ல. இங்கு ஏற்கனவே பலர் பகிர்ந்திருந்த கவிதைகளிலிருந்து எடுத்திருக்கிறேன்.
  எனக்கும் சீரியஸ் எழுத்திற்கும் ரொம்ப தூரம்.
  பல சீரியஸ் கவிதைகளுக்கு நடுவில் என் நகைச்சுவை எடுபடுமா என்ற சந்தேகத்துடனேயே இதை திரு. வெங்கட் அவர்களுக்கு அனுப்பினேன்.
  பிரசுரித்த அவருக்கும், அவர் அனுப்பிய பூங்கொத்துக்கும், இங்கு வந்து உற்சாகமாக மறுமொழி கொடுத்த எல்லோருக்கும் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

   Delete
 14. இளவரசி என்பதைவிட மகிழ்வரசி என்று சொன்னாலும் பொருத்தமாய் இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete
 15. கருத்துரை வழங்கிய அத்தனை பேர்களுக்கும் நன்றி.
  இங்கு காணப்படும் கவிதை வரிகளுக்கு நான் சொந்தக்காரி அல்ல. இங்கு ஏற்கனவே பலர் பகிர்ந்திருந்த கவிதைகளிலிருந்து எடுத்திருக்கிறேன்.
  எனக்கும் சீரியஸ் எழுத்திற்கும் ரொம்ப தூரம்//

  ரஞ்சனி மேடம். என்ன இது.
  படித்து ரசித்தேன், சிரித்தேன்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜெயந்தி ரமணி ஜி!

   Delete
 16. நிறைந்த கற்பனை. எழுதிய சகோதரி ரஞ்சனி நாராயணனுக்கும் பகிர்ந்தளித்த திரு வெங்கட் நாகராஜ் அவர்களுக்கும் மனம்நிறைந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ருக்மணிம்மா....

   நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்கள் வருகை.... நலம் தானே...

   Delete
 17. எல்லா கவிதையும் படித்து ஒரு சுவையுள்ள மசாலா மிக்ஸ் கொடுத்து விட்டார்கள் அருமை. வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சங்கீதா.

   Delete
 18. வாவ் ரஞ்சனி.
  கதைக் கவிதையாகப் பரிமளிக்க வைத்துவிட்டீர்கள். பதிவு முழுவதும் விரவிக் கிடைக்கும் நகைச்சுவை சிரிக்க வைத்துவிட்டது.
  இதைதான் மாத்தியோசின்னு சொல்கிறார்களோ!!!
  மனம் நிறைந்த வாழ்த்துகள் மா.
  அன்பு வெங்கட்டுக்கும் நன்றி. நல்லதொரு பதிவைப் பகிர்ந்ததற்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வல்லிம்மா.....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....