எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, April 25, 2013

சென்று நாளை வா – வேதா. இலங்காதிலகம் [அன்னம் விடு தூது – 16] - நிறைவு

அன்பின் நண்பர்களுக்கு, 20.03.2013 அன்று வெளியிட்ட கவிஞர்களுக்கு/கதாசிரியர்களுக்கு ஒரு அழைப்பு! எனும் பதிவின் அழைப்பினை ஏற்று, வந்திருக்கும் ஒரு கவிதையை இன்று இங்கே பகிர்ந்துள்ளேன். வேதாவின் வலை எனும் வலைப்பூவில் எழுதி வரும் திருமதி வேதா. இலங்காதிலகம் அவர்கள் எழுதிய கவிதை இது.

அன்னம் விடு தூது பகிர்வுகள் வரிசையில் பதினாறாம் பகிர்வாக இங்கே!

 பட உதவி: சுதேசமித்திரன் 1957

சென்று நாளை வா!

அன்னமே நீரில் தோரணமே!

உன் பிரசன்னக் காரணம்
முன்னைத் தூதெனும் ஆரணமோ!
பின்னோக்கம்  சங்ககாலப் புராணம்.

நீள் விசும்பு பிரதிபலிக்கும்
நீருள் நீந்தும் சோடியே!
நீராடுகிறோம் வாழ்விலுன்னைப் போல்
நீளட்டுமெம்மின்பமும் நிலைக்க!

தோதுடன் அன்பன் அருகிருக்க
தூது எனக்கேன் அன்னமே!
சாதுரிய மனித குணத்திற்கு
சாகித்தியத்தில் பேர் கொண்டாயே!

நிறைகுடமாமெனன்பன் வரும் வரை
நின்றிடுவாய்!  நின்றிடுவாய்!  பின்
சென்று நாளை வா!
நன்று நிலவரம் பேசுவோம்!

( ஆரணம் - வேதம்.  தோதுடன் வசதி, பொருத்தம், தொடர்பு.
சாதுரிய திறமை, நாகரிகம்.  சாகித்தியம் இலக்கியம்.)பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்

என்ன நண்பர்களே இப்பகிர்வினை ரசித்தீர்களா? பகிர்வுக்கான பாராட்டுகளுக்கு உரியவர் ஆசிரியர் மட்டுமே! பகிர்வினை எழுதிய திருமதி வேதா. இலங்காதிலகம் அவர்களுக்கு ஒரு பூங்கொத்து!கடந்த 20.03.2013 அன்று படத்தினை வெளியிட்டு அன்னம் விடு தூது கவிதைகளை எழுதி அனுப்பச் சொன்னதற்கு மொத்தமாக பதினாறு க[வி]தைகள் வந்தன. பதினாறாவது க[வி]தை நான் சொல்லிய கடைசி தேதியாகிய 05.04.2013 க்குப் பிறகு வந்திருந்தாலும், கடைசி பதிவாக வெளியிட்டு இருக்கிறேன்.எனது அழைப்பினை ஏற்று க[வி]தைகளை எழுதி அனுப்பிய அனைவருக்கும் நன்றி. பதினாறாம் கவிதையான இக்கவிதை தவிர வந்த மொத்த கவிதைகளின் சுட்டிகள் கீழே.
தவிர, படம் கண்ட திருமதி மனோ சாமிநாதன் அவர்கள் தனது வலைப்பூவில் கீழ்க்கண்ட பகிர்வினை வெளியிட்டு இருந்தார். அவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

அன்பென்பது....!!!


படத்திற்குக் கவிதை எழுதச் சொல்லும் இம்முயற்சி உங்களுக்கு பிடித்திருந்தால், சற்றே இடைவெளிக்குப் பின் எனது பக்கத்தில் தொடரும். [கவிதை அலர்ஜி எனும் நண்பர்கள் பயந்து விடவேண்டாம் – சற்று இடைவெளிக்குப் பிறகே தொடரும்!].

தொடர்ந்த ஆதரவிற்கும் கருத்துப் பகிர்தல்களுக்கும் மிக்க நன்றி நண்பர்களே.

மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


30 comments:

 1. வேதாம்மாவின் வலையில் படித்த போது ரசித்ததை இங்கும் சற்றும் குறைவின்றி ரசிக்க முடிந்தது. அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்....

   Delete
 2. ஒரு ஆயிரம் சொற்கள் சொல்லாததை
  ஒரு படம் சொல்லுமென்பது சொல்வடை.

  படம் ஒன்று தான் இட்டீர்கள் எனினும்
  பதினாறு கவிதைகள் தோன்றினவே.

  நற்குளம் ஆக நீவிர் இருப்பதால் நுமை
  நாடி வரும் பறவை இனம் பலவும் உண்டே.

  கோடைக்காலத்திலே நுமது வலை
  ஓடைக்கருகினிலே ஒரு
  நீர்ப்பந்தல்.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. //நற்குளம் ஆக நீவிர் இருப்பதால் நுமை
   நாடி வரும் பறவை இனம் பலவும் உண்டே. //

   ரொம்பவே புகழாதீங்க சுப்பு தாத்தா.... வெக்கமா இருக்கு....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.....

   Delete
 3. அடேங்கப்பா கவிதை அரசிகள் ஒவ்வொரு விதமாக கலக்கி இருக்காங்களே....!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete
 4. வேதா அவர்களின் கவிதையும் அருமை.16 கவிதைகளையும் தொகுத்து அளித்தமைக்கு பாராட்டுக்கள்.தொடருங்கள் சகோ.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆசியா.

   Delete
 5. சகோதரி வேதாவின் கவிதை அழகு. அருமை. இதுவும் ஒரு வித்தியாசமான சிந்தனைக் கவிதையே!
  சகோதரிக்கு என் வாழ்த்துக்கள்!

  அனைத்துப் பதிவர்களையும் மீள ஒருதரம் பட்டியலிட்டு இங்கு தந்தமைக்கும் எங்கள் எல்லோரையும் ஊக்குவித்து அருமையான மலர்க்கொத்துகளை அன்பளிப்புச்செய்த உங்களுக்கு எங்கள் எல்லோரினதும் மனமார்ந்த நன்றிகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 6. அருமை... வேதா. இலங்காதிலகம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 7. ஒரு படம் அவரவர் எண்ணத்திற்கு ஏற்ப எத்தனை எத்தனை விதமான கற்பனைகளில் அழகிய வார்த்தைக் கோர்வைகளாக சிறப்பு. தங்களுக்குத்தான் நன்றி கூற வேண்டும். தொடருங்கள். தொடர்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 8. கவிதைச் சமையலில் பல கைப் பக்குவம் கண்டோம்! உங்களுக்கும் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 9. அருமையான படைப்புகள் உருவாகக் காரணமான தங்களுக்கு மிக்க நன்றி நண்பரே! அடுத்த படம் எப்பொழுது என ஆவலாக உள்ளேன், நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   அடுத்த படம் - சற்றே இடைவெளிக்குப் பிறகு .... :)

   Delete
 10. வேதா.இலங்காதிலகம் கவிதை அருமை.
  மறுபடி படிக்க அனைத்து சுட்டிகளும் தந்தமைக்கு நன்றி.
  படக் கவிதை எழுதுவதில் கலந்து கொண்ட அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
  உங்களுக்கும் வாழ்த்துக்கள் வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 11. வேதா அவர்களின் கவிதையை அவரது வலை தளத்தில் படித்து விட போதிலும் மீண்டும் படித்ததில் மகிழ்ச்சி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 12. நல்ல கவிதை இலக்கிய நயத்துடன் ஆசிரியருக்கு நன்றி எல்லோருடைய கவிதையை பகிர்ந்து எழுதவும் தூண்டிய வெங்கட்ஜீ க்கும் நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.

   Delete
 13. தோதுடன் அன்பன் அருகிருக்க
  தூது எனக்கேன் அன்னமே! ///நியாயமான கேள்வி ?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete
 14. கவிதை அருமை.

  வேதா. இலங்காதிலகம் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 15. சகோதரா மிக்க நன்றி. இன்று தான் புரட்டிப் பார்த்தேன். பிரசுரத்திற்கு, பூக்கொத்துக்கு நன்றி. இனிய வாழ்த்து. மீண்டும் சந்திப்போம்.வாழ்த்திய அனைவருக்கும் மிகுந்த நன்றி.
  கவிதை எழுதிய அனைவருக்கும் வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களை காணவில்லையே என நினைத்திருந்தேன்......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் அவர்களே.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....