எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, April 29, 2013

மஹா கும்பமேளா – ஒரு பயணம் – பகுதி 7 – மன்காமேஷ்வர் மந்திர் – சில உணவு வகைகள்....


மஹா கும்பமேளா ஒரு பயணம்பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6

இத்தொடரின் சென்ற பகுதியான மஹா கும்பமேளா ஒரு பயணம் பகுதி 6 ஜோதா அக்பர் மற்றும் ராமர் பதிவினை இப்படிச் சொல்லி முடித்திருந்தேன்.என்ன நண்பர்களே பயணக் கட்டுரையின் இந்தப் பகுதியினை ரசித்தீர்களா? இன்னும் என்னென்ன இடங்களைப் பார்த்தோம், அடுத்த பகுதியில் பார்க்கலாமா? அது வரை உங்களுக்கு என்ன தேவை என்பதை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்குக் கிடைக்க வழி என்ன என அடுத்த பதிவில் சொல்கிறேன். சரியா?யோசித்து வைத்திருப்பீர்கள் என நினைக்கிறேன்! அது கிடைக்கவேண்டுமானால் நீங்கள் ஒரு முறை அலஹாபாத் நகருக்குச் செல்ல வேண்டும்! இல்லையெனில் கீழுள்ள விஷயத்தினைப் படித்து விடுங்களேன்.

மன் காமேஷ்வர் மந்திர்யமுனைக் கரையோரமாகவே வரும்போது உங்களுக்குத் தெரியும் இன்னுமொரு இடம் தான் நீங்கள் மேலே பார்க்கும் மன்காமேஷ்வர் மந்திர்.  இந்தக் கோவிலில் வழிபட்டால் நீங்கள் நினைக்கும் நல்ல விஷயங்கள் நடக்குமாம். யமுனையில் படகில் சென்று கொண்டிருந்ததால் நாங்கள் அங்கிருந்து பார்த்து விட்டோம். மனதில் என்ன நினைத்தேன்! :) ஒன்றும் பெரிதாக நினைத்து விடவில்லை. வேண்டிக்கொள்ளவும் இல்லை! நமக்கு என்ன தர வேண்டுமென எல்லாம் வல்லவனுக்குத் தெரியும் என்ற நினைப்பு தான்!எருமைக் குளியல்!நாங்கள் குளித்து விட்டு படகில் வந்து கொண்டிருந்தபோது 15-20 எருமைகளும் “இவங்களே குளிக்கறாங்க! நாம ஏன் குளிக்கக் கூடாது?என்ற எண்ணத்தோடு யமுனையில் கரையோரமாகவே இறங்கி குளித்துக் கொண்டிருந்தன! அவற்றை ஓட்டிக் கொண்ட மனிதர் கரையோரமாகவே நடந்து வந்தார்! அவருக்கு குளிப்பது பிடிக்காது போல! இல்லை எருமையோட எருமையா குளிக்கறான் பாருன்னுயாராவது சொல்லிடுவாங்களோன்னு பயமா தெரியல!

தேங்கா-மாங்கா பட்டாணி சுண்டலை நினைவு படுத்துகிறதோ!கரையில் இறங்கி முந்தைய பதிவில் சொன்னது போல படகோட்டிக்கு கூலியைக் கொடுத்து விட்டு கொஞ்சம் நடந்து முக்கிய சாலைக்கு வந்தோம். அங்கே வெளியே சுடச் சுட சன்னா சுண்டல் – தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய் எல்லாம் துண்டு துண்டாக வெட்டி அதில் போட்டு விற்றுக் கொண்டிருந்தார். நிறைய முளை விட்டிருந்தது பார்த்தால் பழசாக இருக்குமோ என்ற ஒரு பயம் நெஞ்சில். பக்கத்திலேயே கொய்யாப் பழம் விற்க, அதை வாங்கி உண்டபடியே நடக்க ஆரம்பித்தோம். பத்து நிமிட நடையில் நாங்கள் தங்கியிருந்த வேணி மாதவ் கோவிலை அடைந்தோம்.மட்டி!வரும் வழியில் ஒரு சிறிய வீடு. வீட்டு வாசலிலேயே விறகு அடுப்பு. அடுப்பின் மேல் ஒரு பெரிய வாணலி. எண்ணை நிரம்பியிருக்கிறது. சுடச் சுட இருப்பது அதிலிருந்து வரும் ஆவியிலேயே தெரிகிறது. அப்படி என்ன தான் இங்கே பொரித்து எடுக்கிறார்கள் என ஆர்வத்துடன் எட்டிப் பார்த்தார்கள் கூட வந்தவர்கள் [நானும் தான்!] அங்கே செய்து கொண்டிருந்தது மட்டி [அ] மட்ரி என அழைக்கப்படும் ஒரு தின்பண்டம்! மைதா, கொஞ்சம் அரிசி மாவு, ஓமம், உப்பு மற்றும் வெண்ணை சேர்த்து கரகரன்னு இருக்கும் ஒரு தின்பண்டம். சாதாரணமாக சிறிய வடிவில் இருக்கும் மட்டி இங்கே அலஹாபாத் நகரில் பெரியதாக செய்கிறார்கள். அதுவும் அவ்வளவு க்ரிஸ்பியாக.....  உடனே 10 மட்டியை வாங்கிக் கொண்டு வந்தோம். நீங்க மட்டும் சாப்பிட்டீங்களே, எங்களுக்கு கண்ணுல காட்டினீங்களா?அப்படின்னு யாரும் நாக்கு மேலே பல்லு போட்டு கேட்டுட கூடாது பாருங்க! அதனால தான் அந்த மட்டியோட படத்தை போட்டு இருக்கேன்! :)சரி சரி எல்லாருக்கும் பசி வந்துருக்கும்....  அதனால என்ன திட்டாம, ஒழுங்கா சாப்பிட்டு வாங்க, அதுக்குள்ள நான் இந்த தொடரோட அடுத்த பகுதிய எழுதி முடிச்சுடறேன்... மீண்டும் அடுத்த வாரம் திங்கள் கிழமை தொடரின் அடுத்த பகுதி மற்றும் கடைசி பகுதியில் சந்திக்கும் வரை.....நட்புடன்வெங்கட்.
புது தில்லி.

44 comments:

 1. தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் பள்ளிப் பருவ நினைவுகளை மீண்டும் அசைபோட வைத்துள்ளது தங்களின் பகிர்பு. நாங்களும் சேர்ந்து பயணிக்கிறோம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் அவர்களே.....

   Delete
 2. படங்கள் அருமை என்பதோடு கண்டவுடன் நாக்கில் நீர் சுரக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 3. மட்டி’யை யாரோ கொஞ்சுண்டு கடிச்சிருக்காங்க.. :(

  ReplyDelete
  Replies
  1. கடிக்கல.... தொட்டாலே உடையும் அளவு க்ரிஸ்பி! :)

   ஒரு வேளை உங்களுக்கு முன்னாலே வந்த இரண்டு பேர்ல ஒருத்தர் கொஞ்சூண்டு எடுத்து சாப்பிட்டாரோ! :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி!

   Delete
 4. ஹல்திராம் மட்ரி இங்கே கிடைக்குது. எல்லாத்துலேயும் கல் உப்பு போட்டு வச்சுடறாங்க:(

  எருமைக் குளியல் சூப்பர் படம்!

  தொடர்ந்து வருகின்றோம்.

  ReplyDelete
  Replies
  1. ஹல்திராம்-ல் கிடைப்பது சிறிய அளவிலானது. அலஹாபாத் மட்டி தோசை அளவு இருக்கு! :)

   எருமைக் குளியல் - இது நம்ம ஆளு! :) எப்பவும் அம்மா டில்லி எருமைன்னு கூப்பிடுவாங்க! அதுனால கொஞ்சம் பாசம் அதிகம் இதுங்க மேலே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 5. மட்டி taste எப்படி இருக்கும்னு சொல்லியிருக்கலாமே?

  ReplyDelete
  Replies
  1. டேஸ்ட் நல்லாவே இருக்கும். கரகரன்னு இருக்கும்...

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துரை.

   Delete
 6. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 7. Thanks for sharing your experience.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜெயதேவ் தாஸ்.

   Delete
 8. மட்டி என்பது நம்ம ஊர் 'தட்டை' மாதிரி இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. இது கொஞ்சம் பெரிய சைஸ்!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
  2. தட்டையை விட softஆக இருக்கும் போலிருக்கிறது.

   Delete
  3. பொதுவாகவே வட இந்தியாவில் வெண்ணை அதிகம் சேர்த்துக் கொள்வார்கள். இதிலும் அப்படியே. அதனால் தட்டை போல கரடு முரடாக இல்லாமல் கொஞ்சம் சாஃப்ட் ஆகவே இருக்கிறது....

   எப்படிச் செய்வது என்பதையும் எழுதி இருக்கலாம் போல! எழுதிடறேன். :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துரை.

   Delete
 9. சரியாகக் கண்டுபிடித்து விட்டேன்! குளிக்கிற எருமையில எது டில்லி எருமைன்னுதான்.

  ReplyDelete
  Replies
  1. அட அதுதான் உங்களுக்கும் தெரிஞ்ச விஷயமாச்சே!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 10. நமக்கு என்ன தர வேண்டுமென எல்லாம் வல்லவனுக்குத் தெரியும் என்ற நினைப்பு தான்!

  அருமையான நினைவுப் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!.

   Delete
 11. Really nice pic of 'erumai' kuliyal!!! :)
  Indian Fashion n Travel Blogger! - Bhusha's INDIA TRAVELOGUE

  ReplyDelete
 12. வேண்டிக்கொள்ளவும் இல்லை! நமக்கு என்ன தர வேண்டுமென எல்லாம் வல்லவனுக்குத் தெரியும் என்ற நினைப்பு தான்!//

  நல்ல நம்பிக்கை.
  கோடைக்கு ஏற்ற எருமைகுளியல்!
  மட்டி படத்தை பார்த்துவிட்டோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 13. நமக்கு என்ன வேணும்ன்னு அவருக்கே தெரியும் . கரெக்ட். மட்டி பார்க்க நம்ம பக்கத்து எள்ளடை மாதிரியில்லே...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
  2. எள்ளடையா? அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லக்கூடாதோ?

   Delete
  3. யாரங்கே.... நிலாமகளிடம் சென்று எள்ளடை பற்றி நம்ம துரைக்கு மட்டுமல்ல, எனக்கும் சொல்லச் சொல்லுங்கள்....... :)

   Delete
 14. //நமக்கு என்ன தர வேண்டுமென எல்லாம் வல்லவனுக்குத் தெரியும் என்ற நினைப்பு தான்! //

  ந‌ல்ல‌ சிந்த‌னை!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.

   Delete
 15. காணக்கிடைக்காத காட்சிகளும்
  தகவல்களும் ...
  பகிர்வுக்கு நன்றிகள் பல நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

   Delete
 16. அப்பாதுரை சார் தட்டைமுறுக்கைத் தான் எள்ளடை என்று சிலர் சொல்வார்கள்.தட்டையில் கடலைபருப்பு, எள் போடுவதால் எள்ளடை என்று சொல்வார்கள்.

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு நன்றி கோமதிம்மா....

   Delete
 17. நம்ம ஊரிலே மிக்சரிலே சேர்ப்பாங்க. மஹாராஷ்ட்ராவில் இது அதிகம். ஆனால் பெயர் தான் வேறு. எங்க வீட்டிலே ஆசாரக்காரங்களுக்காக கோதுமை, மைதா, அரிசிமாவு கலந்து ஓமம் சேர்த்து இப்படிப் பண்ணி ரயில் பயணத்துக்கு எடுத்துச் செல்வோம். :)))))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.....

   இடத்திற்குத் தகுந்தாற்போல் பெயரும் சில பொருட்களும் மாறிவிடுகின்றன போலும்....

   Delete
 18. தட்டை வேறே எள்ளடை வேறேனு நினைக்கிறேன். தட்டைக்கும் எள் போடுவது உண்டு. தஞ்சை மாவட்டத்தில் அதைத் தட்டைச்சீடை என்றே சொல்லிக் கேட்டிருக்கேன். எங்க மதுரைப் பக்கம் தட்டை இந்த மட்ரி மாதிரி பெரிதாக இருக்கும். தஞ்சை ஜில்லாவில் உள்ளங்கை அளவு கூட இருக்காது. :))))

  சேலம் பக்கம் இதைத் தட்டு வடை என்கின்றனர். :))) தேசந்தோறும் பாஷை வேறு.,

  ReplyDelete
  Replies
  1. தட்டு வடை.... இது புதுசா இருக்கு.....

   தங்களது வருகைக்கும் மேலதிகத் தகவல்களுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
 19. மஹாராஷ்ட்ராவில் பேல் பூரியில் போடவும் இம்மாதிரிச் செய்து வைச்சுப்பாங்க. :))))

  ReplyDelete
  Replies
  1. அப்பா.... எத்தனை தகவல்கள்... நன்றி கீதாம்மா......

   Delete
 20. அருமையான தகவல்களுடன் நல்லதொரு பதிவு. பாராட்டுக்கள், வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. சார்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....