திங்கள், 22 ஏப்ரல், 2013

மஹா கும்பமேளா – ஒரு பயணம் – பகுதி 6 – ஜோதா அக்பர் மற்றும் ராமர்மஹா கும்பமேளாஒரு பயணம்பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5

சென்ற பகுதியின் கடைசியில் சொன்ன யானைப் பலி விஷயம், படகோட்டி மூலம் கேட்டறிந்த போது எனக்கு ஏற்பட்ட அதே அதிர்ச்சியும் பாவ உணர்வுகளும் எனது பகிர்வினைப் படித்த அனைத்து நண்பர்களுக்கும் உண்டாகியதில் சந்தேகமில்லை. கனத்த மனதுடனே தான் படகுப் பயணம் செய்ய முடிந்தது.....

அக்‌ஷய் வட் அடையாளம்

கோட்டை இன்னும் பலப் பல விஷயங்களை தன்னுள்ளே அடக்கி வைத்துள்ளது. இதே கோட்டையினுள் தான் அக்‌ஷய் வட் எனும் அழிவே இல்லாத மரம் இருக்கிறது. இந்த அக்‌ஷய் வட் பற்றி எனது முந்தைய பயணத் தொடரிலும் எழுதியது இங்கே இருக்கிறது. கோட்டையினுள் சென்று பார்க்க முடியாதவர்களுக்காக, இதன் அடையாளமாக கோட்டைச் சுவற்றில் ஒரு இடத்தினை சிவப்புக் கல் கொண்டு குறித்து வைத்திருக்கிறார்கள். அதன் படம் தான் நீங்கள் மேலே பார்த்தது!


ஜோதா அக்பர் வழி

படகுப் பயணத்தின் போது எங்கள் படகோட்டி குகன் ஒரு கதவு போன்ற இட்த்தினைக் காண்பித்து இந்த இடம் என்ன தெரியுமா எனக் கேட்கவே [தெரிந்திருந்தால் உடனே சொல்லி இருப்பேனே, என மனதுக்குள் நினைத்தபடி] ‘தெரியாதுஎன மண்டையை ஆட்டினோம்! சொல்லுமுன் 75 வயதிலும் அவருக்கு வெட்கம்! :) ‘மூடியிருந்த கதைவைக் காட்டி ஜோதா அக்பர் இந்த வழியே தான் குளிக்க வருவார்கள்என வெட்கப்பட்டுக் கொண்டே சொன்னார்.


கங்கை.... யமுனை...  இங்கு தான் சங்கமம்.... :)
தண்ணீரில் வண்ணம் மாறி இருக்கிறது தெரிகிறதா....

அதெல்லாம் சரி சங்கமம், சங்கமம்னு சொல்றீங்களே ஏதாவது புகைப்படம் போட்டா நாங்களும் சங்கமத்தினைப் பார்போமே எனச் சொல்லும் நண்பர்களுக்காகவே மேலுள்ள புகைப்படம். நடுவே வண்ணம் கலப்பதைக் கவனியுங்கள். கறுப்பு நிறத்தில் இருப்பது யமுனை, மண் நிறத்தில் இருப்பது கங்கை.....  சங்கமத்தினைக் கடக்கும் போது பல பயணிகள் அங்கே தூவிய பூக்களையும் காண முடியும்.


கரையில் பறந்து கொண்டிருக்கும் பறவைகள்..


கோட்டை ஒரு தோற்றம்....


சரஸ்வதி குண்ட்

மேலே உள்ள படம் கோட்டையின் ஒரு வழியை அடைத்து வைத்திருக்கும் படம். இந்த இடம் முன்பு திறந்திருந்தது. ராணுவம் கோட்டையை பயன்படுத்த ஆரம்பித்த பிறகு அடைத்து வைத்திருக்கிறார்கள். இப்போது அடைத்து வைத்திருக்கும் இந்த வழியே தான் ராம-லக்ஷ்மணர்கள் யமுனையைக் கரைக்கு வந்தார்களாம்! அங்கிருந்து தான் குகன் இவர்களைக் கரையேற்றினாராம். இதைச் சொல்லும் போது எங்கள் குகனுக்குப் பரவசம்.  என்ன நண்பர்களே பயணக் கட்டுரையின் இந்தப் பகுதியினை ரசித்தீர்களா? இன்னும் என்னென்ன இடங்களைப் பார்த்தோம் என அடுத்த பகுதியில் பார்க்கலாமா? அது வரை உங்களுக்கு என்ன தேவை என்பதை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்குக் கிடைக்க வழி என்ன என அடுத்த பதிவில் சொல்கிறேன். சரியா?

மீண்டும் மஹா கும்பமேளா பயணத்தின் அடுத்த பகுதியில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

26 கருத்துகள்:

 1. சங்கமம், பறவைகள் என படங்கள் அனைத்தும் அருமை...

  குகன் நிறைய தெரிந்து வைத்துள்ளார்... பயணத்தை தொடர்கிறோம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 2. அருமையான படங்களின் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 3. அருமையான புகைப்படங்கள். பிரமாதம்..

  பதிலளிநீக்கு

 4. கங்கையும் யமுனையும் கலக்கும் இடம் சங்கம்.
  கண்டு மனதிலோ பொங்கும் உணர்வுகள் இன்பம்.

  சங்கம் சொல் வடமொழி
  ச என்றால் சேர்ந்து ;
  கம் என்றால் செல்வது.
  ஆகவே, ச + கம் சேர்ந்து சங்கம்
  சேர்ந்து செல்வது எனப்பொருள் பெறும்.

  கங்கையும் யமுனையும் கலக்கும் இடத்தில்
  சரஸவதி என்னும் இன்னொரு நதியும் கலக்கிறது என ஐதீகம்
  இருப்பதாகச்சொல்கிறார்களே !!

  அதுபற்றி யாரேனும் அதிகத்தகவல் தருகிறார்களா ?

  தங்களது தெள்ளிய தமிழ் நடை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
  ஆரவாரமற்ற, அழகிய நடை.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha.blogspot.in

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரஸ்வதி பற்றிய சில தகவல்கள் தேடி வைத்திருக்கிறேன். முடிந்தபோது பகிர்ந்து கொள்கிறேன்....


   தங்களது வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.

   நீக்கு
 5. சுவாரஸ்யமாகச் செல்லுகிறது பயணக் கட்டுரை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   நீக்கு
 6. அழகோ அழகான படங்கள். அருமையான தெளிவான விளக்கமான பயணக்கட்டுரை பதிவு. மிகமிக அருமை. ரொம்பவே ரசிக்கின்றேன். தொடர்கின்றேன்.

  கங்கை யமுனை சங்கமம் கண்கொள்ளாக்காட்சி. வியந்துபோய்ப் பார்த்தேன். அருமை சகோதரரே!
  பகிரும் உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்!

  த.ம. 3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி இளமதி....

   நீக்கு
 7. ஹி...ஹி...ஜோதா அக்பர்னா ஐஸ்வர்யா ராய்தானே!!

  கோட்டை படங்கள் பல்வேறு கற்பனைகளைக் கிளப்பி விட்டன. சுவாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதானே... ஐஸ்வர்யா தாய் தான்! :)

   தங்களது வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.....

   நீக்கு
 8. அருமையான படங்களுடன் அழகான பதிவு. பாராட்டுக்கள் வெங்கட்ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 9. பயனக்கட்டுரை மிகவும் சுவாரஷ்யமாக இருக்கிறது.
  (முன் பகுதிகளையும் படிக்கவேண்டும்.)

  உங்களின் குகன் சொன்னதெல்லாம்
  உண்மைதானா... என்று யோசிக்கவும் தோன்றுகிறது.
  படங்களை அருமையாக எடுத்திருக்கிறீர்கள்.
  தொடருகிறேன் நாகராஜ் ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.....

   நீக்கு
 10. படங்கள் எல்லாம் மிக அருமை தொடருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி பூவிழி.

   நீக்கு
 11. சுவாரஸ்யமாக இருக்கிறது.. படங்களும் அருமை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி தியானா.

   நீக்கு
 12. இப்போது அடைத்து வைத்திருக்கும் இந்த வழியே தான் ராம-லக்ஷ்மணர்கள் யமுனையைக் கரைக்கு வந்தார்களாம்! அங்கிருந்து தான் குகன் இவர்களைக் கரையேற்றினாராம். இதைச் சொல்லும் போது எங்கள் குகனுக்குப் பரவசம்.//

  அந்த குகன் மகிழ்ச்சி அடைந்தது போல் இந்த குகனும் பரவசம் அடைந்ததை கேட்கும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 13. கோட்டையை நாங்களும் பார்த்திருக்கோம். :))) அக்ஷய வடம் உள்பட.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....