வியாழன், 4 ஏப்ரல், 2013

அன்னமே சொர்ணமே - ஜெயந்தி ரமணி [அன்னம் விடு தூது – 7]



அன்பின் நண்பர்களுக்கு, 20.03.2013 அன்று வெளியிட்ட கவிஞர்களுக்கு/கதாசிரியர்களுக்கு ஒரு அழைப்பு! எனும் பதிவின் அழைப்பினை ஏற்று, வந்திருக்கும் ஆறாம் கவிதையை இன்று இங்கே பகிர்ந்துள்ளேன். மணம் (மனம்) வீசும் எனும் வலைப்பூவில் எழுதி வரும் திருமதி ஜெயந்தி ரமணி எழுதிய கவிதையினை இன்று பகிர்ந்துள்ளேன். 

இதோ அன்னம் விடு தூது பகிர்வுகள் வரிசையில் ஆறாவது கவிதை!

பட உதவி: சுதேசமித்திரன் 1957

அன்னமே, சொர்ணமே
அழகான வண்ணமே,
அன்றொருநாள்,
பூர்வஜென்ம புண்ணியத்தால்
வேடனும், வேடுவச்சியும்
அரச குடும்பத்தில்
நளன், தமயந்தியாக அவதரிக்க
அவர் இணைய தூது சென்று
இணைத்தும் வைத்தாயே.
இன்றும் தூது செல்வாயா?
நான் ஒன்றும் அரச பரம்பரையில்லை.
சாதாரண சிற்பியின் செல்ல மகள்.
எனக்கேற்ற மணாளன்
எங்கிருக்கிறான்
என்று சொல்வாயா?
கன்னியாகிய நான்
முதிர் கன்னியாகும் முன்பே
சொல்லிவிடு.
நீ ஒன்றும் சும்மா சொல்ல வேண்டாம்.
என் தந்தையிடம் சொல்லி
நீ பெருமையடைய, இல்லை இல்லை,
உன் குலமே பெருமையடைய
சிலை ஒன்று செய்துவைக்கச் சொல்லுகிறேன்.
-          ஜெயந்தி ரமணி.   

என்ன நண்பர்களே, திருமதி ஜெயந்தி ரமணி அவர்கள் எழுதிய கவிதையை ரசித்தீர்களா? கவிதைக்கான பாராட்டுகளுக்கு உரியவர் ஆசிரியர் மட்டுமே! கவிதை எழுதிய திருமதி ஜெயந்தி ரமணி அவர்களுக்கு ஒரு பூங்கொத்து!



அடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.



டிஸ்கி: இன்று என் வாழ்வில் மிக முக்கியமான நாள். விவரங்கள் எனது துணைவியின் இன்றைய பகிர்வில்!!!

44 கருத்துகள்:

  1. 'எங்கள்' சார்பிலும் ஒரு பூங்கொத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பூங்கொத்து பெற்ற திருமதி ஜெயந்தி ரமணி அவ்ர்களுக்குப் என் அன்பான பாராட்டுக்கள். இனிய நல்வாழ்த்துகள்.

    தங்களுக்கு என் நன்றிகள், வெங்கட்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  3. திருப்பதிக்கே லட்டு, திருநெல்வேலிக்கே அல்வா போல எங்கள் ” மணம் (மனம்) வீசும் “ பதிவர் திருமதி ஜெயந்தி ரமணிருக்கே பூங்கொத்தா? ;))))))))))))))

    அவர்களின் பதிவுகளில் மேலும் மேலும் மணம் வீசட்டும். அதைப்பார்த்து நம் மனம் குளிரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :)

      அவரது வலைப்பூவில் மேலும் பல பகிர்வுப் பூக்கள் மணம் வீசட்டும்!

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  4. சிற்பியின் மகள் செதுக்கிய
    கவிதைச்சிற்பத்திற்கு பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  5. Happy Birthday to Roshni and many more happy returns of the day.
    ரோஷ்னிக்கு என் ஆசிகள் பல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வாழ்த்துகளும் ஆசிகளும் மகிழ்ச்சி தந்தன.

      வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

      நீக்கு
    2. அருமையான கவிதை
      வாழ்த்துக்கள்

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  6. திருமதி ஜெயந்தி ரமணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தலபானன்.

      நீக்கு
  7. செல்லம் ரோஷ்ணிக்கு வாழ்த்துகள் அன்பு அம்மாவுக்கும் வாழ்த்துகள். பெருமை பெறும் அப்பாவுக்கும் வாழ்த்துகள். கவிதை எழுதிய திருமதி ஜெயந்திக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வாழ்த்துகள் எங்களை மகிழ்வித்தது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் தமிழ் மணத்தில் நான்காம் வாக்களித்தமைக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  9. அழகான கவிதை கவிதை ஆசிரியருக்கு வாழ்த்துகள்
    உங்கள் அன்பு பிள்ளை ரோஷ்னிக்கு ,

    ஒளி பொருந்திய நாட்கள் ..
    உனக்காக மலர்கின்றன ....
    உன்னை தேடி வருகின்றன ...
    பிறந்தநாள் வாழ் த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.

      நீக்கு
  10. என் கவிதையை உங்கள் தளத்தில் வெளியிட்டு பூங்கொத்தும் அளித்து, கௌரவப் படுத்தியதற்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் திரு வெங்கட் நாகராஜ் சார்.

    வாழ்த்திய, வாழ்த்தும், வாழ்த்தப்போகும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    மீண்டும் வருவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயந்தி ரமணி ஜி!

      நீக்கு


  11. // எனக்கேற்ற மணாளன்
    எங்கிருக்கிறான்
    என்று சொல்வாயா? //

    என்னம்மா நீயு ?
    எங்கிட்டே சொல்றியே ?

    ஏழெட்டு வருசமா நானும்
    ஏதோ ஒரு கழுதை ஒண்ணு
    வாராதா நம்ம பக்கம்
    பாராதா என் முகத்தை
    வெறுத்துப்போய் காத்திருக்கேன்.

    வந்ததெல்லாம் பிடிக்கல்ல...
    கண்டதெல்லாம் சகிக்கல்ல...
    தின்னுட்டு போன பசங்க
    கம்முனு கிடக்கிறாக.

    கருப்புன்னு சொல்ராக.
    வெறுப்பேத்தி விடறாக.
    சலித்துப்போன எந்தையிடம்
    சில்லறையைத் தேடறாக.

    சாதி பணம் பார்த்தே
    பாதி வயசு கூடிப்போச்சு.
    சேதி நல்ல ஒண்ணு
    சொல்லும் புள்ள இன்னும் வல்ல.

    என்ன உடு, உனக்கோரு
    நல்ல சேதி நானு சொல்றேன்.


    சில ஒண்ணும் எனக்கு வேண்டாம்
    சில்லறையும் தர வேண்டாம்.
    சின்ன விளக்கு ஒண்ணு ஏத்தி
    சிவகாமி பூசை செய்யு

    சீரும் சிற்ப்போட ஒரு
    சுந்தரன வந்து நிப்பான்
    வீறு நடை போட்டு வந்து
    உன்னை உடன் மணம் புரிவான்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் அருமையான பதில் கவிதைக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.

      நீக்கு
  12. குழந்தை ரோஷ்ணிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

    தூது சொல்வதற்கு அன்னத்தைக் கூப்பிட்டு, அதற்கு சிலையும் வைப்பதாகச் சொல்லும் திருமதி ஜெயந்தி ரமணி எழுதிய கவிதை அருமை.

    உங்கள் பூங்கொத்துடன் எங்கள் பாராட்டுக்கள் திருமதி ஜெயந்தி ரமணிக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

      நீக்கு
    2. உங்களது பாராட்டுக்கு மிக்க நன்றி திருமதி ரஞ்சனி நாராயணன்.

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜெயந்தி ரமணி ஜி!

      நீக்கு
  13. //நளன், தமயந்தியாக அவதரிக்க
    அவர் இணைய தூது சென்று
    இணைத்தும் வைத்தாயே.
    இன்றும் தூது செல்வாயா?//

    இப்போது தூது செல்ல வேண்டி அன்னத்திற்கு இணைய வழி கவிதை தூது! நன்று! நன்று!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.

      நீக்கு
  14. நல்ல கவிதை. வித்தியாசமான கற்பனை. கவிதை எழுதிய திருமதி ஜெயந்தி ரமணிக்கு வாழ்த்துகள்!

    உங்கள் செல்ல மகள் ரோஷினிக்கும் என் அன்பான பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!

    பகிர்வுசெய்த உங்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

      நீக்கு
  15. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!

      நீக்கு
  16. திருமதி ஜெயந்திரமணிஅவர்களின் கவிதை நன்றாக இருக்கிறது.

    அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    ரோஷிணிக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.எல்லா வளமும் பெற்று நலமாகவாழ வாழ்த்துக்கள்.
    வாழ்கவளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  17. திருமதி ஜெயந்தி ரமணி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    உங்களின் மகளுக்கும் என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

    கவிதையைப் பகிர்ந்த உங்களுக்கு நன்றி நாகராஜ் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா.

      நீக்கு
  18. உங்கள் செல்ல மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி குட்டன்.

      நீக்கு
  19. சகோ நானும் இன்று அன்னம் விடு தூது - க்கு கவிதை பகிர்ந்து இருக்கிறேன்

    ஓவியத்திற்கு ஒளியுட்ட சொன்னீர்கள்
    புலம்பிவிட்டேன் கண்டவுடன்
    பதுங்கிவிட்டேன் பகிர பயந்து
    புலம்பல்கள் எல்லாம் புகல்வீரோ என்று
    பதித்துவிட்டேன் தைரியத்துடன்
    கவிதை சாம்ராஜ்யங்களின் நடுவே
    சிற்றெறும்பாய் நான் கடிக்க வந்துவிட்டேன்
    பொறுத்தருள்வீர்

    http://poovizi.blogspot.in/2013/04/blog-post_4.html


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.

      உங்களது கவிதையையும் விரைவில் படித்து, என்னுடைய தளத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

      நீக்கு
  20. vaazhthukkal !

    kavithaikkum!
    ungalathu thunaiviyaarin 150kkum!
    kuzhanthaiyin pirantha naalukkum...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....