வியாழன், 11 ஏப்ரல், 2013

திருவரங்கம் ‘[G]கோ ரதமும் ஆண்டாளும்





திருவரங்கம் ஆண்டாள்!

திவ்யதேசங்களில் முதலாம் தலமான திருவரங்கம். இங்கே உற்சவம் இல்லாத நாளே குறைவு. எல்லா நாட்களும் திருவிழா கோலம் தான். புறப்பாடு, உலா வருதல், தேர், பல்லக்குகள் என ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டே இருக்கும் அணுதினமும். 

இப்படி நடக்கும் திருவிழாக்களில் ஒவ்வொரு வருடமும், பங்குனி மாதத்தில் “ஆதி பிரம்மோத்ஸவம்எனப்படும் பங்குனி உத்திர திருவிழா நடக்கும். இந்த வருடம் மார்ச் மாதம் 18ஆம் தேதி அன்று பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது.  பங்குனி உத்திரமான மார்ச் 27-ஆம் தேதி திருவரங்கத்தில் சேர்த்திஎனப்படும் சிறப்பான விழா நடக்கும். இதன் கதை எல்லோருக்கும் தெரிந்திருக்குமென நம்புகிறேன். தெரியாதவர்களுக்காக இங்கே ஒரு கதைச் சுருக்கம்:

திருச்சி அருகிலிருக்கும் இரண்டாவது திவ்யதேச ஸ்தலமான உறையூரில் கமலவல்லி நாச்சியார் கோவில் இருக்கிறது. இங்கே இருக்கும் கமலவல்லி நாச்சியாருக்கு தனது கணையாழியை அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டு திருவரங்கம் திரும்புகிறார் நம்பெருமாள். நம்பெருமாளிடம் கணையாழி இல்லாதது தாயாரின் கண்களிலிருந்து தப்பிவிடுமா என்ன? ஆரம்பித்தது பிரச்சனை! அவர் அது பற்றி கேட்க, நம்பெருமாள் சாமார்த்தியமாக, கொள்ளிடக் கரையில் தொலைந்து விட்டது என பொய் சொல்கிறார்.


தேர் ஒரு தோற்றம்!

தேடிக் கொண்டுவந்தால் தான் ஆச்சு என நம்பெருமாளை விரட்ட அவரும் தங்கக் குதிரையில் சென்று கொள்ளிடக் கரையில் தேடுவதாக பாவனை செய்துவிட்டு சித்திரை வீதியில் வையாளிஆட்டம்போட்டு வெறும் கையோடு திரும்புகிறார். சும்மா இருப்பாரா தாயார்! மட்டையடி தான். ஒவ்வொரு வருடமும் இது போல் மட்டையால் அடித்து விளாசும் “மட்டையடி உற்சவம்நடக்கும்.

அதன் பிறகு ஊடல் முடிந்து பக்தர்களுக்கு திருவரங்கத்தில் நம்பெருமாளும் தாயாரும் சேர்ந்து ‘சேர்த்திதரிசனம் தருவார்கள். வருடத்தில் ஒரு முறை தான் சேர்த்திதரிசனம் என்பதால் நிறைய பக்தர்கள் இங்கே கூடுவார்கள். இந்த வருடம் சேர்த்தி அன்று நான் திருச்சியில் இருந்தாலும் திருவரங்கத்தில் இல்லை! அருகே உள்ள வேறு ஒரு ஊருக்குச் சென்று விட்டேன். அது பற்றி வேறொரு பகிர்வில்!


தேரோட்டம்!


அடுத்த நாள் தான் கோ ரதம்! கோ ரதம்எனச் சொல்லப்படும் பங்குனி மாத ரதத்தில் பெருமாள் வீதிவுலா நடைபெறும். திருவரங்கத்தில் இந்த ரதம் நிறுத்தி வைத்திருக்கும் இடத்தில் ஒரு ‘[G]கோ சாலைஇருந்ததாலும் இப்பெயர். காலை 06.30 மணிக்கே தேரோட்டம் தொடங்கி இருக்கவேண்டியது. ஏதோ பிரச்சனையால், பொறுமையாக பத்து மணிக்கு தான் ஆரம்பித்தது. அதுவே பிரச்சனையாகவும் ஆனது! என்ன பிரச்சனை என்றால் வெய்யில் தான்!


தேரில் சில சிற்பங்கள்!

தேர் இழுப்பவர்களுக்கும், தேரின் முன் செல்லும் கோவில் யானையான ஆண்டாளுக்கும் வெய்யிலின் கொடுமை! ஆனால் மனிதர்கள் சக மனிதனுக்கு உதவுகிறார்களோ இல்லையோ ஆண்டாளுக்கு உதவி செய்தார்கள். ஒவ்வொரு வீட்டின் முன்னரும் மூன்று நான்கு பக்கெட்டுகளில் தண்ணீர் வைக்க அதை தனது தும்பிக்கையால் உறிஞ்சி நடுத் தெருவில் குளியல் போட்டாள் ஆண்டாள். ஆண்டாளுக்குக் குளிர்ச்சி! இங்கே பாருங்களேன் அதன் ஆனந்தத்தினை!  



நரசிம்மர் வேடம் அணிந்த பெரியவர்!

தேர் ஓட்டத்தின் போது ஒரு பெரியவர் நரசிம்மர் வேஷமணிந்து கொண்டு தேரின் முன் வந்து கொண்டிருந்தார். சிலர் அவருக்குக் காசு கொடுக்க, சிலர் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள். நானும் அவரை புகைப்படம் எடுக்க, எனது அருகே வந்து சிங்கமுகத்தினைக் கழட்டி விட்டு புகைப்படத்தினைக் காண்பிக்கும்படி கேட்டார். பார்த்துவிட்டு மகிழ்ச்சியுடன் நான் இப்படி வேஷம் கட்டிக்கொண்டு திருப்பதி, திருவரங்கம் என பல இடங்களுக்கு சென்றபடியே இருப்பது வழக்கம். தமிழகம் முழுவதும் என்னையறியும்!  என்று சொன்னபடியே சிங்கமுகத்தினை மாட்டிக்கொண்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தார்!


புகைப்படம் பிடிக்க எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கு!

தேர் இழுப்பது என்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! எத்தனை பேர் சேர்ந்து இழுக்கிறார்கள். அதுவும் தேரைத் திருப்பும்போது மனிதர்கள் படும் கஷ்டம். நான் கூட சில அடிகள் தேர்வடம் பிடித்து வந்தேன்! அதைவிட படம் பிடித்தது தான் அதிகம் என்பது உண்மை. நான் தெருவில் நின்று படம் பிடித்தால் ஒருவர் [ஏதாவது பத்திரிக்கைக்காரராக இருக்கலாம்!] தெருவினில் தண்ணீர் கொட்டியபடிச் சென்ற தண்ணீர் லாரி மேல் உட்கார்ந்து புகைப்படம் எடுத்தார்! இப்படியாக நிறைய காட்சிகளைக் கண்டபடியே  நாங்கள் சென்றோம்!

திருவிழாக்கள் என்றாலே மகிழ்ச்சி தானே! நாங்கள் ரசித்த திருவிழாவினை நீங்களும் ரசிக்க வேண்டாமா? தேரோட்டத்தினை நீங்களும் காண வேண்டி தேரோட்டத்தின் ஒரு காணொளி கீழே!
 
 



என்ன நண்பர்களே, நீங்களும் பங்குனி உத்திர திருவிழாவின் ஒரு பகுதியான தேரோட்டத்தினை ரசித்தீர்களா? மீண்டும் வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

50 கருத்துகள்:

  1. ஆனந்தக் குளியல் அற்புதம்! தேரோட்டம் கண்கொள்ளாக் காட்சி! நல்லதொரு பதிவு! பகிர்விற்கு நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

      நீக்கு
  2. படங்களும் விவரங்களும் பிரமாதம். மட்டையடி என்றால் நிஜமாகவே தானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிஜம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

      நீக்கு
  3. திருவிழா என்றாலே ஜாலிதான். ஆண்டாளின் உற்சாகம் நமக்கும் தொற்றிக் கொள்கிறது. பாவம் அதன் இடுப்பில் காயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

      நீக்கு
  5. பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.விழா படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  7. படங்களும் விளக்கங்களும் அருமை... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  8. பெருமாளுக்கே அடிகிடைக்குதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

      நீக்கு
  9. படங்கள் பிரமாதம்.

    மட்டையடி உற்சவத்தை ஷைலஜாக்கா குழுமங்களில் பகிர்ந்திருந்தார். வாசித்து ஆச்சரியமாப்போச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

      நீக்கு
  10. ஹைய்யோ!!!!! யுகாதிப்பண்டிகை தினம் ஆண்டாளின் அழகுப்படம்!

    தேரைச் சொல்லவா...'அவளை'ச் சொல்லவா!!!!!

    இதுக்குத்தான் ஒரு வருசம் அங்கே வந்து இருக்கணும் என்றது!!!!

    பதிவு முழுசும் தேன் தேன்!!! மனம் குளிரக் கண்டேன்,வாசித்தேன் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆண்டாள் உங்க தோஸ்த் ஆச்சே.... அதான் உங்க பதிவில் வந்து தகவல் அளித்தேன்...


      தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  11. அழகான படங்களுடன் அருமையான கட்டுரை. மனதுக்கு மகிழ்ச்சியளித்தது. பாராட்டுக்கள் வெங்கட்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  12. சிங்க முகதிர்க்குள் மனித மனம் தானே உள்ளது.. அதான் ஆவலாய் வந்து வாங்கி பார்த்துள்ளார்

    மிக ரசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

      நீக்கு
  13. ஆஹா யானை அழகை என்ன சொல்வது. பங்குனி வெயில் சுட்டெரிக்குமே.
    பங்குனித் தேர் என்ன மட்டையடி உற்சவம் என்ன.

    நன்றி வெங்கட்.துளசி சொல்வது போலக் கொஞ்சம் ஸ்ரீரங்கத்து தூசி எங்கள் மேல் தெளித்தீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

      நான் கண்டதை உங்களுக்கும் பகிர்ந்து கொள்வதில் எனக்கும் திருப்தி!

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  15. அற்புதக்காட்சிகள்! பார்த்துப் பரவசமானேன். திருவரங்கனுக்கே மட்டையடியா? கஷ்டம்!

    ஆண்டாளின் ஆனந்தக் குளியல் கொள்ளை அழகோ அழகு!
    நீங்களும் ஓடிஓடி அருமையான காட்சிகளை படமாக்கிப் பகிர்ந்தமையும் மிகச்சிறப்பு.

    அனைத்தையும் ரசித்தேன். நல்ல பதிவு + பகிர்வு. மிக்க நன்றி சகோதரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓடி ஓடி எல்லாம் படம் பிடிக்கவில்லை தோழி! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி!

      நீக்கு
  16. தொடர்ந்தாற்போல இரண்டு வருடங்கள் சேர்த்தியும், கோரதமும் சேவித்தேன். இந்த வருடம் போக முடியவில்லை. உங்களது தேரோட்ட காணொளியும், ஆண்டாளின் ஆனந்தக் குளியலும் என் வருத்தத்தைப் போக்கியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

      நீக்கு
  17. திருவரங்கம் தேரோட்டத்துக்கு அழைத்துச் சென்று வெயிலின் தாக்கம் இன்றிக்காண்பித்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குட்டன்.

      நீக்கு
  18. சூப்பராஇருக்கு உங்கள் பங்குனி திருவிழா பதிவில் ஆண்டாளின் ஆனந்தம் ஜில் என்று அருமை கடவுளும் டபாய்கிறார் கடவுளிடம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.

      நீக்கு
  19. ஆண்டாளின் ஆனந்த குளியல், நரசிம்மர் வேடம் அணிந்த பெரியவர், ஆண்டாள் குளியல் காணொளி, தேர் காணொளி எல்லாம் திருவரங்கத்தில் பங்குனி திருவிழாவில் கலந்து கொண்ட அனுபவம் கிடைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  20. பாவம்...பெருமாள்...
    மட்டையடி வாங்கியதையும் விழாவாக்கி இருக்கிறார்கள்...
    ஆண்டாள் குளியல் அற்புதம்.
    பாவம் ஆண்டாளும் தான்...!!

    பகிர்விற்கு நன்றி நாகராஜ் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

      நீக்கு
  21. திருமதி அருணா செல்வம் சொல்வதைப் போல் பெருமாள் மட்டையடி வாங்கியதும் திருவிழாவா?
    தெரிந்த ஊர் தெரியாத கதை. அருமையான கதை சொன்னதற்கு நன்றி.
    ஆண்டாள் குளித்தது ஆண்டாளுக்கு ஆனந்தமோ இல்லையோ உங்கள் காணொளி பார்க்கும் அனைவருக்கும் ஆனந்தம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!!

      நீக்கு
  22. திருவரங்க உலா நன்றாக இருந்தது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  23. வையாளியும் சேர்த்தியும் முன்பே திருச்சிக்கார பதிவர்களின் மூலம் தெரிந்தாச்சு. மிச்சமெல்லாம் தங்கள் வழி. கானொளியும் புகைப்படங்களும் காணாதவர்களும் கண்டுகளிக்கும் படி. உங்க வழி தனி வழி தான் சகோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

      நீக்கு
  24. When I went there in Jan and came to know of the grandeur of Panguni Brahmotsavam, I really wished my trip was planned for this month! But then 'ellam nanmaikke'. If I had gone there now, I would have seen the places properly due to the crowd!
    Loved the video of the elephant bathing!!! Wish some more trees are planted around and some shade is improved!!!
    Thanks for this post Venkat! :)
    Indian Fashion n Travel Blogger! - Bhusha's INDIA TRAVELOGUE

    பதிலளிநீக்கு
  25. ஊரில் இருந்த நாட்களீல் கோரதம் சேவித்திருக்கிறேன் மட்டையடி முடிஞ்ச கையோட இதற்கும் நாங்கள் தயாராவோம்..உங்கள் பதிவும் படங்களும் அப்படியே என்னை திருவரங்கத்துக்கு அழைத்துப்போகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் ஸ்ரீரங்க நினைவுகளை மீட்டெடுத்தது என்று அறிந்து மகிழ்ச்சி....

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஷைலஜா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....