இந்த வார
செய்தி:
யூ-ட்யூபில்
இந்த வாரம் ஒரு காணொளி பல முறை [இதை எழுதும் போது கிட்டத்தட்ட ஒன்பது லட்சம்
ஹிட்ஸ்] காணப்பட்டு இருக்கிறது. அப்படி என்ன காணொளி அது. கார் பந்தயங்களில் பங்கு
கொள்ளும் திறன் பெற்ற ஃபெராரி வண்டியை ஓட்டும் காணொளி இது. வெளியிட்ட ஏப்ரல்
10-ஆம் தேதியிலிருந்து இது வரை இத்தனை ஹிட்ஸ்.
அப்படி என்ன
இந்த காணொளியில் இருக்கிறது எனச் சந்தேகத்தோடு[!] படிப்பவர்களுக்கு, தவறான
நினைப்பு வேண்டாம்.... ஃபெராரி வண்டி
எத்தனை வேகமாகச் செல்லும் திறன் கொண்டது என்பதைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
மிகவும் வேகமாகச் செல்லும் இந்த வண்டியை ஓட்டுவதற்கு தனித் திறமையும் கவனமும்
தேவை. சாதாரண சாலைகளில், அதுவும் நமது இந்தியாவின் சாலைகளில் இதைச் செலுத்துவது
கடினம்.
கேரளாவில் உள்ள
ஷோபா சிட்டி எனும் தனியார் இடத்தில் இந்த ஃபெராரி வண்டியை மிகச் சுலபமாக இரண்டு
ரவுண்டுகள் ஓட்டி வந்ததைப் பற்றிய காணொளி தான் இப்படி பிரபலமாக ஆயிருக்கிறது.
வண்டியை ஓட்டியது ரொம்பவும் பழகிய ஓட்டுனர் அல்ல! ஒரு ஒன்பது வயது சிறுவன். அவனது
பிறந்த நாளுக்குப் பரிசாக ஃபெராரி வண்டி ஓட்டக் கொடுத்திருக்கிறார்கள்.
சிறு வயதிலேயே
இந்த ஓட்டும் திறமை இருப்பது பாராட்டத் தக்க விஷயம் என்றாலும், மிகவும் ஆபத்து
நிறைந்த விளையாட்டு இது. ஒன்பது வயது சிறுவன் வண்டியை ஓட்ட, அருகில் அவனை விட
சிறியவன் உட்கார்ந்து செல்வதைப் பார்க்க முடிகிறது – அதாவது அவ்வண்டியில்
பெரியவர்கள் யாருமே இல்லை!
அவசரமாய் முடிவு
எடுக்க வேண்டிய நிலையில் இச்சிறுவனால் என்ன செய்து விடமுடியும்.... வேகமாய்ச் செல்லும் போது அவனுக்கும் சக சாலைப்
பயணிகளுக்கும் எத்தனை ஆபத்து காத்திருக்கிறது இது போன்ற செயல்களால். நினைக்கவே வேதனையாக இருக்கிறது.
காணொளியை
நீங்களும் பார்க்க விரும்பினால் இங்கே
பார்க்கலாம்.
இந்த வார முகப்புத்தக இற்றை:
இந்த
வார குறுஞ்செய்தி:
LAUGHING AT YOUR OWN MISTAKES, CAN LENGTHEN YOUR LIFE – SHAKESPEARE.
BUT……
LAUGHING AT YOUR WIFE’S MISTAKES, CAN SHORTEN YOUR LIFE – SHAKESPEARE’S
WIFE.
ரசித்த
புகைப்படம்:
இந்தப் புகைப்படத்தினைப் பார்த்தவுடன்
உங்களுக்கு ஒரு கண் போலத் தோன்றுகிறதா? ஆனால் இது கண்ணின் படம் இல்லை! இது என்ன
படம், பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்! :)
ரசித்த பாடல்:
பழைய படங்களில் பாடிய பலரில் எனக்கு மிகவும்
பிடித்த பாடகர் இந்த வாரம் இறைவனடி சேர்ந்த திரு பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ்
அவர்கள். அவர் பாடிய பல பாடல்களை ஒலிப்பேழைகளில் கேட்டு ரசித்திருக்கிறேன். இந்த
வார ஃப்ரூட் சாலட்-ல் அவரது நினைவாக அடுத்த வீட்டு பெண் திரைப்படத்திலிருந்து
“மாலையில் மலர் சோலையில்” எனும் இந்த பாடல் உங்கள் ரசனைக்கு.
ரசித்த
விளம்பரம்:
SN Brussels
Airlines விளம்பரம்
இது. தனது பயணிகளுக்கு இவர்கள் தரும் மரியாதையைப் பாருங்களேன்..... நான் ரசித்த இந்த விளம்பரத்தினை நீங்களும்
ரசிப்பீர்கள் என நம்புகிறேன்.
படித்ததில் பிடித்தது:
மரம்
வீட்டின் முன் உள்ள மரம் ஒன்று
எங்களை இத்தனை பாடுபடுத்தக் கூடாது.
பழுத்து வெடித்த கோணைப்புளியம்பழங்களால்
அடர்ந்து நிறைந்தது அது.
அதன் சிவந்த கனிவு
பாதசாரிகளை மறிக்கிறது.
‘இத்தனை பழங்கள் பழுத்திருக்கின்றனவே…
அவற்றைப் பறித்துண்ண முடியாத
புளி ஏப்பக்காரனா இவ்வீட்டுக்காரன் ?’
பார்த்துச் செல்பவர் பார்வையிலிருந்து
பழுத்துதிர்கிறது பொறாமை.
ஆள் அயரும் சந்தர்ப்பத்திற்காக
பெரும் சிறார் கூட்டம் ஒன்று
ரகசிய போலீஸ்போல
வீதிகளில் திரிகிறது.
மரத்தை
அடிக்கடி இட்டுப் பார்க்கிறது
எங்கிருந்தோ வரும் ஒரு கல்.
முனையில் கேள்விக்குறி மாட்டிய குச்சியோடு
செல்லும் ஒருவன்
வீட்டில் யாருமில்லாவிட்டால்
கொத்துக் கொத்தாய்ப் பறித்துவிட அலைகிறான்.
அது முள்மரமாக இருப்பதால்
யாராலும் தழுவி ஏறப்படாமல் தப்பித்திருக்கிறது.
நாங்களும் பழங்களைப் பறித்துண்பதில்லை.
யாரையும் பறிக்க விடுவதில்லை.
மாற்றான் தோட்ட மலரையும்
மாற்றான் வீட்டு மங்கையையும்
மாற்றான் மரத்துக் கனியையும்
காலந்தோறும்
கவர்ந்துகொண்டேயிருந்திருக்கிறது இவ்வுலகம்.
கனிமரத்தைக் கண்டுசெல்வோனின் கண்ணிலும்
அதே கள்மம் சுடர்கிறது.
அவர்களுக்குத் தெரியுமா
இந்தப் பழமரத்தை நம்பி
பத்துக் கிளிகள் இருக்கின்றன என்பது ?
பதினைந்து தூக்கணாங்குருவிகள்
தினமும் வந்து போகின்றன என்பது ?
சிட்டுகள் சில கூடி
சித்திரம் பயில்வது ?
நெய்வேலியில் இருந்த போது வீட்டில் பல சீதாப்பழ மரங்கள். பல நேரங்களில், அணில்கள் உண்வதற்கென்றே பழங்களைப் பறிக்காது விட்டு விடுவோம். அது நினைவில் வந்து மனதைக் கொஞ்சம் நனைத்தது!
என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
சிட்டுகள் சில கூடி
பதிலளிநீக்குசித்திரம் பயில்வது ?
நினைவில் வந்து மனதைக் கொஞ்சம் நனைக்கும் நினைவுகள் பழுத்து நிறைக்கிறது ...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குKitchen Sink?
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி....
நீக்குஇன்று மாலை விடை சரியானதா என்பதைச் சொல்கிறேன்.... :)
சிறு வயதிலேயே இந்த ஓட்டும் திறமை இருப்பது பாராட்டத் தக்க விஷயம் என்றாலும், மிகவும் ஆபத்து நிறைந்த விளையாட்டு இது.//
பதிலளிநீக்குஉண்மை. நீங்கள் சொல்வது.
முகப்புத்தக இற்றை சொல்லும் கருத்து நன்று.
ரசித்தபுகைப்படம் கண் இல்லை, வாஸ்பேஸின்.
நீங்கள் ரசித்தபாடலை நானும் ரசித்தேன், அருமையான காலத்தை வென்ற பாடல். , நேற்றும், இன்றும், என்றும் ரசிக்கும் பாடல்.
விளம்பரம் ரசித்தேன்.
//இந்தப் பழமரத்தை நம்பி
பத்துக் கிளிகள் இருக்கின்றன என்பது ?
பதினைந்து தூக்கணாங்குருவிகள்
தினமும் வந்து போகின்றன என்பது ?
சிட்டுகள் சில கூடி
சித்திரம் பயில்வது ? //
மகுடேஸ்வரன் அவர்கள் கவிதை அருமை.
ஃப்ரூட் சாலட் நல்ல சுவை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குவிடை இன்று மாலை!
அவசரமாய் முடிவு எடுக்க வேண்டிய நிலையில் இச்சிறுவனால் என்ன செய்து விடமுடியும்.//ஆசை ஆபத்தில் முடியாமல் விட்டால் சரி.எல்லா பதிவுகளும் அருமை நண்பரே
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.
நீக்குஅன்புள்ள வெங்கட்,
பதிலளிநீக்குஃப்ரூட் சாலட் மிக இனிமை. புகைப்படம் - Kitchen sink? washing machine ?
நீங்கள் ரசித்த Airlines விளம்பரத்தை நானும் மிக ரசித்தேன்...
மறைந்த பாடகர் PBS -ன் மறக்க முடியாத சில பாடல்கள்...
'பார்த்தேன்... சிரித்தேன்’
'இந்த மன்றத்தில் ஓடிவரும்'
'நிலவே என்னிடம் நெருங்காதே’
'சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ’
'மயக்கமா... கலக்கமா’
'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’
'தோல்வி நிலையென நினைத்தால்'
நீங்கள் சொன்ன பாடல்கள் அனைத்துமே நானும் ரசிக்கும் பாடல்கள்.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால ஹனுமான் ஜி!...
படம் என்ன? - விடை மாலையில்.....
நிச்சயம் Kitchen sinkதான் இருக்கும் அப்படி இல்லையென்றால் காபி கப்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அவர்கள் உண்மைகள்....
நீக்குவிடை மாலையில்!
பி.பி. ஸ்ரீநிவாஸ் பாடிய பாடல்களில் எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று அது. "மாலையில் மலர் சோலையில்...''
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
நீக்குபணம் பத்தும் மட்டுமா செய்கிறது...?! தவறான முன்னுதாரணம் அப்பையனின் பெற்றோர். சக பிள்ளைகள் மனசில் ஏக்கமும் தாழ்வு மனப்பான்மையும் தரச்செய்யும் துர்க்குணத்தையும் வளர்ப்பதாய் இருக்கிறது.
பதிலளிநீக்குமுகப் புத்தக இற்றை மனித மனசின் அப்பட்டம். குறுஞ்செய்தியின் குறும்பு ரசித்தேன்.
புகைப்படத்தில் வண்டியின் பெட்ரோல் டேங்க்? நவீன கழிப்பறை மாதிரி?
பிபிஎஸ் ஆன்மா அவர் குரல் வழி என்றென்றும் நம்மோடு.
//புளியேப்பக்காரனா இவ்வீட்டுக்காரன்...
//மாற்றான் தோட்ட மலரையும்
மாற்றான் வீட்டு மங்கையையும்
மாற்றான் மரத்துக் கனியையும்
காலந்தோறும்
கவர்ந்துகொண்டேயிருந்திருக்கிறது இவ்வுலகம்.
அவர்களுக்குத் தெரியுமா... இம்மரத்தை நம்பி இருக்கும் பறவைகளை...?
மகுடம் தாங்கிய வரிகள்.
தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்....
நீக்குபடத்திற்கான விடை.... மாலை வரை காத்திருங்கள்!
அருமையான பாடல்...
பதிலளிநீக்குஃப்ரூட் சாலட் அருமை கேள்வியுடன்...
பதில் : Sink - Full of water (soapy) draining itself...?
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குகாணொளி குறித்த பகிர்வு அருமை...
பதிலளிநீக்குமற்றவை எல்லாம் நன்று...
படம் அடுப்படி சிங்க் என்று நினைக்கிறேன்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.
நீக்குஎன்னதான் திறமை இருந்தாலும் உரிய வயதில்தான் கார் ஓட்ட ஆரம்பிக்க வேண்டும். உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.
பதிலளிநீக்குபுதிரின் விடைக்குக் காத்திருக்கிறேன்.
நல்ல தொகுப்பு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குஃப்ரூட் சாலட் அருமை இம்முறையும்.
பதிலளிநீக்குதிகில், பரிவு, அவதானம், மூளைக்கு வேலை, இனிமையான பாடல் இப்படிக் கதம்பமாய் அருமையாக இருந்தது.
நானும் நீங்கள் தரும் விடைக்குக் காத்திருக்கின்றேன். வாழ்த்துக்கள் சகோ!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.
நீக்குஅனைத்தும் அருமை. பாராட்டுக்கள், வெங்கட்ஜி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குவழக்கம்போல எல்லாமே அருமை. பெராரி கார் என்றால் சச்சின்தான் நினைவுக்கு வருகிறார்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குபடம் cofee cup என்று நினைக்கிறேன்.முகப்புத்கத்தில் ஒருமுறை இந்தப் படத்தைப் பார்த்திருக்கின்றேன்.
பதிலளிநீக்குமுகப்புத்தக இற்றை அருமை.புருட் சலட்டில் எனக்கு மிகவும் பிடித்த புருட் இது தான்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டினேஷ்.....
நீக்குபடம் washing machine ஓடும் பொது எடுக்கப்பட்டது என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குகார் ஊட்டுவது சிறுவன் என்கிற போது பயமாய் தான் இருக்கிறது.
shakespeare saying நன்றாக இருக்கிறது. ஆனால் இப்படியா மனைவியை கிண்டல் பண்ணுவது?(LOL)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!
நீக்குவழக்கம் போல அருமை சாலட். படம் கிச்சன் சிங் போலத்தான் தெரிகிறது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா ஜி!
நீக்குசிறுவனின் அசாத்தியத் துணிச்சல் அபாயகரமானது. இன்னும் காணொளி காணவில்லை. செய்தியைப் படித்ததும் பகீரென்றது.
பதிலளிநீக்குமுகப்புத்தகப் பகிர்வு மனதுக்கு இதம். குறுஞ்செய்தியோ குறும்புச்செய்தி. :)
புகைப்படம் பார்க்க ஒரு சிங்க் போலத் தெரிகிறது.
பிபிஎஸ் அவர்களை யாரால் மறக்க இயலும்? காலத்தை வெல்லும் அப்பாடல்கள் இன்றைக்கும் செவிக்கும் மனத்துக்கும் இதம்... சுகம்...
மகுடேஸ்வரன் அவர்களின் கவிதை பதிவுக்கு மகுடம்.
பகிர்ந்த அனைத்தும் ரசனையின்பம். நன்றி வெங்கட்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி....
நீக்குமேலே கொடுக்கப்பட்ட படம் கிட்சன் சிங்க்.... தண்ணீர் வடியும் போது எடுக்கப்பட்டது தான்.....
பதிலளிநீக்குஒவ்வொரு ஊருக்கும் வந்து சரியான விடை சொன்னவர்கள் முதுகில் தட்டிக் கொடுக்க முடியாததால் தங்களைத் தாங்களே தட்டிப் பெருமைப் படலாம்!
சரியாகச் சொல்லாதவர்களும், விதம்விதமாய் யோசனை செய்த தங்கள் திறமைக்கு முதுகில் தாங்களே தட்டிக் கொள்ளலாம்! :)
ஷேக்ஸ்பியர் சொன்னதைவிட அவர் மனைவி சொன்னது மிகவும் நிஜம்.
பதிலளிநீக்குபழ மரங்களை நம்பியிருக்கும் பறவைகளைப் பற்றிய நினைவு யாருக்கு இருக்கிறது?
ப்ரூட் சலாட்டின் மகுடம் இந்தக் கவிதை!
பெராரி ஓட்டும் சிறுவன் தப்பான முன்னுதாரணம்.
PBS அவர்களின் குரல் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது.
நான் வருவதற்கு விடை வெளியாகிவிட்டது. நானும் மூளைக்கு ஓய்வு கொடுத்துவிட்டேன்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....
நீக்குகுறுஞ்செய்தி top.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை.
நீக்குப்ருட் சாலட் முதலில் கலக்கியது மனதை
பதிலளிநீக்குமனம் ரசித்தது முகத்தையும் குறுஞ்செய்தியும்
பாடல் மிக மன நிறைவு
விளம்பரம் அருமை
கவிதை அருமையான பழரசம்
படம் ம்ம்.... நீங்களே சொல்லிடுங்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.
நீக்குபடம் சிங்க் தான் என சொல்லிவிட்டேனே! :)
அனைத்தும் அருமை..புகைப்படம் மற்றும் குறுஞ்செய்தி மிகவும் பிடித்திருந்தது..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.
நீக்குPBS அவர்களின் மறைவு வருத்தமளித்தது! மரம் மனதை நெகிழ்வித்தது! நன்றி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.
நீக்குpathil solla thakathamaaka vanthutten...
பதிலளிநீக்குkavithai nenjai varudiyathu..!
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.
நீக்கு