எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, April 6, 2013

தூது போவாய் அன்னமே – அருணா செல்வம் [அன்னம் விடு தூது – 8]

அன்பின் நண்பர்களுக்கு, 20.03.2013 அன்று வெளியிட்ட கவிஞர்களுக்கு/கதாசிரியர்களுக்கு ஒரு அழைப்பு! எனும் பதிவின் அழைப்பினை ஏற்று, வந்திருக்கும் எட்டாம் கவிதையை இன்று இங்கே பகிர்ந்துள்ளேன். அருணா செல்வம் - கதம்ப வலை எனும் வலைப்பூவில் எழுதி வரும் அருணா செல்வம் எழுதிய கவிதையினை இன்று பகிர்ந்துள்ளேன்.

இதோ அன்னம் விடு தூது பகிர்வுகள் வரிசையில் எட்டாவது கவிதை!பட உதவி: சுதேசமித்திரன் 1957

தூது போவாய் அன்னமே..!! (கவிதைக் கதை)வளம்கொழித்த இளம்மங்கை! நிலவின் வண்ணம்!

     வதனமுகம் கொண்டயிவள் எண்ணம் என்ன?

களம்கொழித்த நாட்டைவிட்டு நம்மை நாடி

     கயல்துள்ளும் குளக்கதைக்கு வந்த தேனோ?

இளம்மனது கொண்டஅந்த வெள்ளை அன்னம்

     “ஏனிந்த  இன்முகத்தில் வாட்டம் என்றே

விளக்கிவிடு! உன்துயரம் போக்க நானும்

     விழைக்கின்றேன் அழகுபெண்ணே!“ என்ற(து) அன்னம்!உண்மைநிறம் கொண்டநல்ல வெள்ளை அன்னம்

     உதவிக்கு வருதென்றே அறிந்த நங்கை

“கண்சிறைக்குள் நுழைந்துவிட்ட காதல் கள்வன்

     கற்பென்ற திண்மைதன்னை அழித்து விட்டான்!

பெண்நிலையென் மாற்றத்தைக் கண்ட பெற்றோர்

     பேசுகின்றார் மணமுடிக்க வேற்றான் தன்னை!

பண்பற்று போனதில்லை என்தன் உள்ளம்

     பாவைஉயிர் போவதற்குள் போய்சொல்“ என்றாள்.வஞ்சிசொன்ன காதலினைக் கேட்ட அன்னம்,

     வலிகொடுத்த வேதனையை தன்னில் ஏற்று

“நெஞ்சிநிறை கொண்டதுந்தன் நேர்மை காதல்!

     நெடுந்தூரம் என்றாலும் போவேன் தூதாய்!

அஞ்சிநீயே அழிந்திடாதே! உண்மை காதல்

     அகிலமுள்ள வரையினிலே நிலைத்தி ருக்கும்!

கொஞ்சகாலம் பொறுத்திருப்பாய்! கோதை உன்னை

    குழைந்தழைப்பான் என்றுசொல்லி போன(து) அன்னம்!!-          அருணா செல்வம்.


என்ன நண்பர்களே, அருணா செல்வம் அவர்கள் எழுதிய கவிதையை ரசித்தீர்களா? கவிதைக்கான பாராட்டுகளுக்கு உரியவர் ஆசிரியர் மட்டுமே! கவிதை எழுதிய அருணா செல்வம் அவர்களுக்கு ஒரு பூங்கொத்து!அடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

36 comments:

 1. மரபுக்கவிதையின் கிக் தனி.
  கவிதை அருமை.


  //[அன்னம் விடு தூது – 8].. வந்திருக்கும் ஏழாம் கவிதையை..
  ஆறா ஏழா ஏழா எட்டா? :-)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 2. அருமையாக எழுதியிருக்கிறார் அருணா செல்வம் மேடம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 3. உண்மை காதல்

  அகிலமுள்ள வரையினிலே நிலைத்தி ருக்கும்

  அன்னம் விடு தூது -அருமை..!

  அருணா செல்வம் அவர்களுக்கு ஒரு பூங்கொத்து!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 4. அருணா செல்வம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 5. படித்தேன்,ரசித்தேன் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கண்ணதாசன்.

   Delete
 6. //அஞ்சிநீயே அழிந்திடாதே! உண்மை காதல்
  அகிலமுள்ள வரையினிலே நிலைத்தி ருக்கும்!
  கொஞ்சகாலம் பொறுத்திருப்பாய்! கோதை உன்னை
  குழைந்தழைப்பான்”//

  அழகான படைப்பு. பூங்கொத்து பெற்றவருக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள், வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 7. ////[அன்னம் விடு தூது – 8].. வந்திருக்கும் ஏழாம் கவிதையை..
  ஆறா ஏழா ஏழா எட்டா? :-)//

  அப்பாதுரை அவர்களுக்கு நன்றி. தங்களது பின்னூட்டத்தை பார்த்து சரி செய்து விட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. சரி செய்ததற்கு நன்றி.

   Delete
 8. உண்மை காதல்

  அகிலமுள்ள வரையினிலே நிலைத்தி ருக்கும்!
  - அருமை அருணா செல்வம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி.

   Delete
 9. உண்மை காதல்

  அகிலமுள்ள வரையினிலே நிலைத்தி ருக்கும்!//
  உண்மை ,உண்மை.
  கவிதை அருமை.
  வாழ்த்துக்கள் அருணாசெல்வம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 10. அருமையான கவிதை...
  கவிஞர் அருணா செல்வத்திற்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 11. அற்புதக்கவிபாடும் வல்லமைகொண்டவர் தோழி அருணா செல்வம்.
  அழகிய கவிதை! சிறந்த சிந்தனை!
  உண்மையில் வலையுலகில் இவர்களின் கவிபுனையும் ஆற்றல்கண்டு வியக்கின்றேன்.

  மீண்டுமொருமுறை இங்கு அவர்களை வாழ்த்துவதில் மகிழ்வுறுகிறேன்.
  பூங்கொத்துப் பெற்றமைக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள் அருணா செல்வம் அவர்களே!

  சகோதரரே... அருணா செல்வத்தின் கவியினை எம்முடன் பகிர்ந்துகொண்டமைக்கு உங்களுக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 12. இதுபோன்ற நல்ல பதிவுகள் பகிரப்பட வேண்டும் எல்லோரும் பயனடிய வேண்டும்

  --
  www.vitrustu.blogspot.com
  VOICE OF INDIAN
  256 TVK Qts TVK Nagar,
  Sembiyam,
  Perambur,
  Chennai 600019

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாலா சுப்ரமணியன்.

   Delete
 13. ரசித்தேன். என்னுடைய வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுகைத் தென்றல்.

   Delete
 14. வாழ்த்துக்கள் தோழி சிறப்பான கவிதை வரிகளுக்கு !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 15. வணக்கம் நாகராஜ் ஜி.

  என் கவிதையையும் வெளியிட்டு
  என்னைப் பெருமை படுத்தியடைக்குத்
  தலை வணங்கி நன்றி கூறுகிறேன்.

  அழகான மலர் கொத்துக்கு மிக்க நன்றி.

  வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றியை
  இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

  அன்புடன்
  அருணா செல்வம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 16. அழகான கவிதை படைத்த ஆசிரியருக்கு வாழ்த்துகள் பகிர்ந்த தங்களுக்கும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.

   Delete
 17. திருமதி அருணா செல்வம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
  கவிஞர்கள், எழுத்தாளர்கள் சார்பில் திரு வெங்கட் நாகராஜன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயந்தி ரமணி ஜி.

   Delete
 18. கவிதை அருமை! பகிர்விற்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....