எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, March 18, 2013

மஹா கும்பமேளா – ஒரு பயணம் – பகுதி 1

கங்கையில் குளிக்க வந்திருக்கும் மனிதக் கடல்! 
படகிலிருந்து ஒரு பார்வை!
 
அலஹாபாத் நகரில் இந்த வருடத்தின் ஜனவரி மாதம் 14-ஆம் தேதி அன்று தொடங்கி மார்ச் மாதம் 10-ஆம் தேதி வரை மஹா கும்பமேளா நடந்து முடிந்தது. இந்த சமயத்தில் மஹா சங்கராந்தி [ஜனவரி 14], பௌர்ணமி [ஜனவரி 27], ஏகாதசி [ஃபிப்ரவரி 6], மௌனி அமாவாசை [ஃபிப்ரவரி 10], வசந்த பஞ்சமி [ஃபிப்ரவரி 15] பௌர்ணமி [ஃபிப்ரவரி 25] மற்றும் மஹாசிவராத்திரி [மார்ச் 10] ஆகிய தினங்கள் திரிவேணி சங்கமத்தில் குளிக்க மிக முக்கியமான நாட்கள்.

இந்த தினங்களில் கோடிக்கணக்கில் மக்கள் வருவார்கள் என்பதால் மஹா கும்பமேளா நடக்கும் 56 தினங்களில் என்றாவது ஒரு நாள் அலஹாபாத் சென்று திரிவேணி சங்கமத்தில் குளித்து வரலாம் என தில்லி நண்பர்கள் சிலர் திட்டமிட்டு, ரயிலில் சென்று வர அதற்கான முன்பதிவும் செய்தார்கள். எனக்கும் சேர்த்து தான்! ஏற்கனவே சென்ற வருடம் அலஹாபாத் – வாரணாசி ஆகிய இடங்களுக்கு சில நண்பர்களுடன் சென்று வந்திருந்தாலும் [அந்த பயணம் பற்றிய பதினாறு பதிவுகள் இங்கே], மீண்டும் ஒரு முறை மஹா கும்பமேளா சமயத்தில் அங்கே செல்வதில் எனக்கும் ஆட்சேபனை இல்லை.

மார்ச் ஒன்றாம் தேதி வெள்ளிக்கிழமை தில்லியின் ஆனந்த் விஹார் ரயில் நிலையத்திலிருந்து மாலை 05.00 மணிக்கு கிளம்பும் பாகல்பூர் கரிப் ரத் வண்டியில் கிளம்ப முன்பதிவு செய்திருந்தார்கள். அலுவலகத்திலிருந்து நேரே ரயில் நிலையம் சென்றால், இரவு பத்து மணிக்குத் தான் ரயில் கிளம்பும் என அறிவிப்பு. ஐந்து மணி நேரத்தினை கடத்தியாக வேண்டும்!

சரி என பக்கத்திலே இருக்கும் பசிஃபிக் மால் சென்று நன்றாக ஒரு சுற்று சுற்றி விண்டோ ஷாப்பிங் செய்தோம். அதாவது நான் விண்டோ ஷாப்பிங் – வேறு சிலர் ஷாப்பிங்! பயணத்தில் பொதுவாக ஷாப்பிங் செய்வது வழக்கம் இல்லையா, எங்கள் பயணம் ஆரம்பிக்கும் முன்பே ஷாப்பிங் தொடங்கி விட்டது!


பட உதவி: கூகிள்

07.00 மணிக்கு மேல் திரும்பவும் ஆனந்த் விஹார் ரயில் நிலையத்திற்கு வந்து பயணிகள் தங்கும் இடத்திற்கு வந்தால் பயணிகள் அமர ஒரு சில இருக்கைகளே இருக்க, ஆங்காங்கே விரிப்புகள் விரித்து உட்கார்ந்த படியும், படுத்த படியும் பயணிகள்.  இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வசதி இப்படி இருக்க, ஏ.சி. மற்றும் முதல் வகுப்பில் பயணம் செய்யும் பயணிகளுக்கான அறையில் சென்று பார்த்தால் மிகவும் குறைவான இருக்கைகள், மற்றும் வேடிக்கை பார்க்க முடியாதபடி அடைப்புகள்! அதனால் நமக்கு இது ஒத்து வராது என கையில் கேமராவுடன் நிலையத்தினை சுற்ற ஆரம்பித்தேன்!

அப்படி சுற்றியதும் நல்லதற்கே. நிலையத்தில் பல புகைப்படங்கள் – அரிய புகைப்படங்களை மாட்டி வைத்திருந்தனர்.  ஒவ்வொரு புகைப்படத்தின் கீழும் அந்தப் புகைப்படத்தின் விவரங்கள் என நல்ல ஏற்பாடு. அனைத்தையும் கேமராவில் சுட்டுக்கொண்டேன். இரண்டு புகைப்படங்களை சென்ற வாரத்தின் ஃப்ரூட் சாலட் பதிவில் பகிர்ந்திருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இல்லையெனில் இங்கே பாருங்கள் [எல்லாம் ஒரு விளம்பரம் தான்!]

அங்கேயிருந்த வித்தியாசமான புகைப்படங்களை என்னுடைய கேமராவில் நான் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்க, ஒரு ரயில்வே போலீஸ் அதிகாரி என்னிடம் வந்து எதற்காக புகைப்படங்கள் எடுக்கிறேன் என விசாரித்தார். நான் யார் எனச் சொல்லி, புகைப்படங்கள் எடுத்து வலைப்பூவில் போடுவதைச் சொன்னவுடன், தேநீர் வரவழைக்கவா?என மரியாதையோடு கேட்டார்!

வை.கோ. ஜி ஒரு பதிவில் சொல்லி இருந்தது போல எங்களுடன் பயணம் செய்த நண்பர் ஒருவர் தனது வீட்டிலிருந்து மிளகாய்ப்பொடியில் தோய்த்த இட்லி கொண்டு வந்திருக்க அதை உண்டுவிட்டு ஒரு சுகமான ஏப்பம் விட்ட பிறகு ஒலிபெருக்கி வழியாக எங்கள் மின்வண்டிக்கான அறிவிப்பு. மூன்றாம் நடைமேடையிலிருந்து கிளம்பும் என சொன்னதால் எங்களது பயணத்தினை தொடங்க ஆயத்தமானோம்.

மூன்றாம் நடைமேடையில் வந்த வண்டியில் எங்களது குளிர்சாதனம் செய்யப்பட்ட பெட்டியில் நுழைந்தால் எங்களது இருக்கைகளில் வேறு யாரோ அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கும் அதே இடம் எனச் சொல்லவே, வெளியே வந்து பயணப் பட்டியலைப் பார்த்தோம்! 

குழப்பத்திற்கான காரணம் என்ன, யார் கட்டிக்கொண்ட புண்ணியம் என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாமா! [எந்த பயணப் பதிவு என்றாலும், தொடர் என்றாலும் பகுதியின் முடிவில் ஒரு சஸ்பென்ஸ் வைக்கணுமாம்! அதான் இங்கே சஸ்பென்ஸ்!] அடுத்த பகுதியில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

52 comments:

 1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!. பயணம் முடிந்து தமிழகம் திரும்பி விட்டீர்களா?

  ReplyDelete
 2. டிவி சீரியல் மாதிரி இந்த மாசம் முழுக்க ஓட்டிடலாம்னு நினைப்பா...

  ReplyDelete
  Replies
  1. :)

   வாங்க ஷாஜஹான் சார். அப்படியெல்லாம் பயந்துடாதீங்க! சிந்துபாத் கதை மாதிரியோ, டி.வி. சீரியல் மாதிரி எல்லாம் இழுக்க மாட்டேன்! :)

   வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 3. சுவாரஸ்யமான ஆரம்பம். தொடருங்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

   Delete
 4. நல்ல ஆரம்பம் + சஸ்பென்ஸ்... தொடருங்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 5. கும்பமேளா சென்று பத்திரமாக வீடு திரும்பியமைக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. இந்த கோயம்புத்தூர் குசும்பு! :)))

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 6. // ”தேநீர் வரவழைக்கவா?” என மரியாதையோடு கேட்டார்!// அடடே அடடடே :-)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 7. சுவாரசியமாக ஆரம்பித்து சஸ்பென்சில் முடித்து விட்டீங்களே!அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   Delete
 8. கும்ப மேளாக் கும்பலுக்குள் சென்று வந்தீர்களா!!!!!!!!!!

  முதல் படத்தில் உள்ள கும்பலைப் பார்த்தாலே தலை சுற்றுது எனக்கு.

  //வை.கோ. ஜி ஒரு பதிவில் சொல்லி இருந்தது போல //

  ஆஹா இங்கு எனக்கும் ஓர் ‘பொடி’ விளம்பரம்.
  [மிளகாய்ப்பொடி போல காரசாரமாகத்தந்துள்ளீர்கள்.] மிக்க நன்றி. ; )))))

  சஸ்பென்ஸுடன் முடிந்துள்ள பயணக்கட்டுரைக்கு என் பாராட்டுக்கள். வாழ்த்த்கள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள், வெங்கட்ஜி..

  ReplyDelete
  Replies
  1. நாங்கள் சென்ற நாளில் இருந்த கும்பல் ஒன்றுமே இல்லை! பதிவில் சொன்ன ஸ்னான நாட்களில் சென்றால் தான் உண்மையான கும்பல் தெரியும்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 9. இந்த மாதிரி பதிவுகள் மூலம் தான் நாங்கள் நிகழ்ச்சியை பார்க்க முடியும் தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 10. பயன கட்டுரை நன்றாக எழுதரீங்க

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மலர் பாலன்.

   Delete
 11. //நான் யார் எனச் சொல்லி, புகைப்படங்கள் எடுத்து வலைப்பூவில் போடுவதைச் சொன்னவுடன்//

  மரியாதை முதல் பாதிக்குத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்!

  //வெளியே வந்து பயணப் பட்டியலைப் பார்த்தோம்! //

  கோச் நம்பர் மாறியதா? நாளே மாறி விட்டதா?

  ReplyDelete
  Replies
  1. //மரியாதை முதல் பாதிக்குத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்!//

   இருக்கலாம்! :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். அடுத்த பகுதியில் தெரிந்து விடும் என்ன மாறியது என்று! :)

   Delete
 12. எங்களது இருக்கைகளில் வேறு யாரோ அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கும் அதே இடம் எனச் சொல்லவே, வெளியே வந்து பயணப் பட்டியலைப் பார்த்தோம்! //

  எங்களுக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டு இருக்கிறது. எங்கள் இடத்தில் உட்கார்ந்து கொண்டு அவர்கள் இடம் என்று சட்டம் எல்லாம் பேசினார்கள்.
  வை.கோ. சார் அவர்கள் சொன்னது போல் பயணத்திற்கு நன்றாக இருக்கும் மிளகாய் பொடி இட்லி சாப்பிட்டீர்களா! பயண அனுபவம் தொடரட்டும் தொடர்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

   இட்லி - மிளகாய் பொடியுடன்! :) அதன் சுவையே தனி! :)

   Delete
 13. மகாகும்பமேளாவைப் பற்றிப் படித்தாலே எங்களுக்கும் புண்ணியம் கிடைக்குமல்லவா! படிக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. எனக்குக் கிடைத்த [!] புண்ணியம் உங்களுக்கும் உண்டு! :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.

   Delete
 14. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 15. கும்ப மேளா கும்பலைப் பார்த்தாலே பயமாக இருக்கிறதே!
  பத்திரமாக அழைத்துச் சென்று திரும்ப கூட்டி வந்துவிடுங்கள், வெங்கட்!
  ஆரம்பத்திலேயே சஸ்பென்ஸா?
  தொடரட்டும்!

  ReplyDelete
  Replies
  1. பயப்படாதீங்க! பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வரேன்! :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 16. வலைச்சரம் இன்று காணவில்லையே! என்ன ஆயிற்று?

  ReplyDelete
  Replies
  1. வலைச்சரத்தில் இப்போது தான் சீனா ஐயா ஒரு பதிவிட்டு இருக்கிறார் பாருங்க ரஞ்சனிம்மா...

   Delete
 17. முடிவில் ஒரு சஸ்பென்ஸ் வைக்கணுமாம்!
  >>

  ஓ இப்படி வேற இருக்கா?! நாங்களும் பயணக்கட்டுரை எழுதுவோமில்ல! அப்போ யூஸ் ஆகும்

  ReplyDelete
  Replies
  1. அட... நீங்க எங்க பயணம் போயிட்டு வந்தீங்க... எழுதுங்க நாங்களும் தெரிஞ்சுக்கறோம்!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 18. நல்ல ஆரம்பம் .கும்பமேளா புகைப்படங்களை காண ஆவலாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜீவன்சுப்பு.

   Delete
 19. கங்கையில் குளிக்க வந்திருக்கும் பக்தர்கள்! அடேயப்பா! படகிலிருந்து படம், அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 20. வெங்கட்!கும்பமேளாவில் கலந்து கொள்வது என்பது ஒரு பேறு;அந்தப் பேற்றை இறைவன் எனக்களித்தான்.2001 இல் அலகாபாத்தில் பணியாற்றி வந்தேன்.மிக வசதியாக முதல் நாள் ஸ்நானமும்,பௌர்ணமி ஸ்நானமும் செய்தேன்;மகாசிவராத்திரியன்று வாராணசியில் சங்கர மடத்தில் மகா ருத்ரத்தில் கலந்து கொண்டேன்.மறக்க முடியாத அனுபவம்.உங்கள் பயணம் பற்றி முழுவதும் அறியக் காத்திருக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. இந்த வருட கும்பமேளா 144 வருடங்களுக்கு ஒரு முறை வருகின்ற கும்பமேளா. ஏற்பாடுகள் நன்றாக இருந்தன. மொத்தம் எட்டு கோடி மக்களுக்கு மேல் வந்து சென்று இருக்கிறார்கள். உங்களுக்கும் பழைய நினைவுகள் வரக் காரணமாக இருந்தது குறித்து மகிழ்ச்சி. ஒவ்வொரு திங்களும் இப்பயணக் கட்டுரையின் பகுதிகள் வெளிவரும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 21. கும்பமேளா கூட்டத்தைப் பார்க்க கண்கோடி வேண்டுமே :)))

  அப்புறம் .....தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 22. சரியான நேரத்தில் வந்துள்ளேன்.
  முதல் படமே அசத்தலாக உள்ளது.
  பதிவு சுவையாக உள்ளது.
  மற்றவை வாசிக்கும் ஆவலுடன்
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!

   Delete
 23. சஸ்பென்ஸ் திலகமா? சரி, அடுத்த பதிவில் பார்த்துக்கலாம். அவ்வளவு கூட்டத்தில் எப்படிப் போனீங்கனு நினைச்சாலே ஆச்சரியமாவும், திகைப்பாவும் இருக்கு. கும்பமேளா பற்றிப் பல பதிவுகள் படிச்சாச்சு. :))))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கீதாம்மா..

   விரைவில் அடுத்த பகுதி வெளியிடுகிறேன்.

   Delete
 24. மேளா அதுவும் கும்பமேளா. நல்ல தைரியம் தான்:)
  கங்கையைத் தரிசித்தது ஒரு பாக்கியம். பயணத்தின் ஆரம்பத்திலேயெ
  சீட் தகறாரா!!அடுத்த பதிவில் சரியாகிவிடும் இல்லையா வெங்கட்!!!

  ReplyDelete
  Replies
  1. அடுத்த பதிவும் நேற்று வெளியிட்டேன் வல்லிம்மா...

   சரியாகிவிடும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 25. வணக்கம். இன்றைய வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.
  http://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_25.html

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 26. வணக்கம்
  இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/01/blog-post_25.html?showComment=1390607435662#c947129308205581039
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....