எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, March 8, 2013

ஃப்ரூட் சாலட் - 36 – இந்தியாவின் முதல் ரயில் – தாய் - முகம்
இந்த வார செய்தி:

சென்ற வெள்ளியன்று மாலை தில்லியின் ஆனந்த் விஹார் ரயில் நிலையத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. எதற்கு என பிறகு சொல்கிறேன்! புது தில்லி ரயில் நிலையத்தில் இருக்கும் ஜன நெரிசலை தவிர்க்க சில வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது தான் அந்த ரயில் நிலையம்.  தில்லியிலிருந்து உத்திரப் பிரதேசம், பீஹார் போன்ற இடங்களுக்கு பெரும்பாலான ரயில்கள் இங்கிருந்து தான் செல்கின்றன. 

அங்கே பயணிகள் தங்குமிடம் மற்றும் நடைமேடைகளில் ரயில் சம்பந்தமான பலவிதமான புகைப்படங்களை காட்சிப்படுத்தி இருந்தார்கள். இந்தியாவின் முதல் ரயில் எது தெரியுமா?1853-ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 16-ஆம் நாள், இன்றைய மும்பையின் ஒரு பகுதியான போரிவல்லி-யிலிருந்து தாணே வரை உள்ள 34 மைல் தொலைவு சென்ற ரயில் தான் இந்தியாவின் முதல் ரயில்.  இந்த ரயிலை சுல்தான், சாஹிப் மற்றும் சிந்த் என்ற மூன்று இயந்திரங்கள் கொண்டு இயக்கினார்களாம்! அப்போது புகைப்படம் எடுக்கவில்லையோ என்னமோ, அக் காட்சியை ஒரு ஓவியர் வரைய, அது ஒரு தபால் தலையாகவும் வெளியிடப்பட்டது!

படிப்படியாக ரயில்வே துறை எப்படி வளர்ந்தது, ரயில் நிலையங்கள் எப்படிக் கட்டுமானம் செய்யப்பட்டது, பாலங்கள் நிர்மாணிக்க எவ்வளவு செலவு ஆனது, என்ற விவரங்களோடு பல புகைப்படங்களை அங்கே பார்வைக்கு வைத்திருந்தனர்!
சட்லஜ் நதியின் குறுக்கே ஃபில்லோர் என்ற இடத்தில் 1865 வருடத்தில் கட்ட ஆரம்பித்து, 1870-ஆம் வருடம் முடிக்கப் பட்டது! அப்போது அதற்கான செலவு வெறும் லட்சங்களில்! – அதாவது ரூபாய் 33,60,076/-! பாட்டியாலா மஹாராஜா அவர்கள் இந்த பாலத்தினை 15 அக்டோபர் 1870 அன்று திறந்து வைத்தாராம்! பாதி கட்டப்பட்ட நிலையில் இருந்த பாலத்தின் படம் தான் நீங்கள் மேலே பார்ப்பது!


1877-78 ஆம் வருடத்தில் தில்லியிலிருந்து ரயிலில் பயணம் செய்த நபர்கள் எண்ணிக்கை 1,19,056 – அவர்களிடமிருந்து கட்டணமாக வசூலித்த தொகை  - ரூபாய் 85,165/-!

இது போன்ற பல தகவல்களை இங்கே புகைப்படங்களாக வைத்திருக்கிறார்கள்! மேலும் சில புகைப்படங்களையும் அவற்றின் குறிப்பினையும் பிறிதொரு சமயம் ஞாயிறு புகைப்படங்களாக பகிர்ந்து விடுகிறேன்!

இன்று பல விழுதுகளோடு நிற்கும் இந்த ஆலமரத்தில் பல பிரச்சனைகள் – சரியான கவனிப்பு இல்லாதது, சுத்தமின்மை, நேரம் காப்பதில் இருக்கும் பிரச்சனைகள், சுகாதாரமில்லாத உணவு, பயணிகளை விட அதிகமான எண்ணிக்கையில் கரப்பு, எலி போன்ற சீட்டு வாங்கா பயணிகள்! இருந்தாலும் இதன் பிரம்மாண்டம் நினைக்கும் போது வியப்பாய்தான் இருக்கிறது!

அது சரி, நான் எதற்கு ஆனந்த் விஹார் ரயில் நிலையத்திற்குச் சென்றேன் என நினைவுடன் கேட்டவர்களுக்கு ஒரு பூங்கொத்து - அட அடுத்த பயணம் தான்! விரைவில் பயணக் கட்டுரை[கள்] தொடங்கலாம்!

இந்த வார முகப்புத்தக இற்றை:

ஒவ்வொரு முறை என் தாயுடன் கோவிலுக்குச் செல்லும் போதும், கோயில் சிலையிடம் காட்டி விட்டு வருகிறேன் என் கடவுளை.

இந்த வார குறுஞ்செய்தி

LIFE STARTS WITH VOICE, BUT ENDS WITH SILENCE. LOVE STARTS WITH FEAR, BUT ENDS WITH TEARS. TRUE RELATION STARTS ANYWHERE AND ENDS NOWHERE.

ரசித்த புகைப்படம்: என்னில் தான் எத்தனை வண்ணங்கள்! நல்ல வேளை இரண்டு மூன்று வண்ணங்கள் மட்டுமிருந்தால், ஏதோ கட்சியைக் குறிக்கிறேன் என வறுத்து விடுவார்கள்!

ராஜா காது கழுதை காது:

சமீபத்திய ரயில் பயணத்தின் போது பீஹார் மாநிலத்தினைச் சேர்ந்த ஒரு பயணி – மிகவும் அதிகமாக தொந்தரவு செய்த தனது இரு குழந்தைகளை நோக்கி, கோபத்துடன் – “எந்த நாயின் குழந்தைகள் நீங்கள்? அதற்கு அந்தக் குழந்தைகள் சிரித்துக் கொண்டே சொன்ன பதில் – “நீ தான் அந்த நாய்!

எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்!

ரசித்த பாடல்:

பூவிழி வாசலிலே படத்தில் வரும் “சின்னச் சின்ன ரோஜாப் பூவேஎனும் பாடல் நான் ரசித்த பாடல்களில் ஒன்று. சத்யராஜ், கிருத்திகா போன்றவர்களின் நடிப்பில் வந்த இந்தப் படத்தில் கே.ஜே. யேசுதாஸ் குரலில் இருக்கும் பாடலை நீங்களும் ரசிக்க இங்கே காணொளியாக! 
படித்ததில் பிடித்தது:

முகம்

உன்
காலடி ஓசை கேட்டவுடன்
அவசரமாய் என்னைக்
கலைத்துக் கொள்கிறேன்
காய்ச்சிய நீரையே காய்ச்சி
வேலை செய்வதாக
பாவனை செய்கிறேன்
என் ஜீவிதமான
வாசிப்பு எனக்கு
மறந்தே போனது
உனக்குப் பிடிக்கும்
உடைகளை உடுத்தி
அவலட்சணமாகிறேன்
நீ AXN பார்ப்பதால்
நான் டீ.வி. என்ற
சதுரப் பெட்டியையே மறுதலிக்கிறேன்
ஆண்களிடம் பேசுவது
பிடிக்காது என்பதால்
மகனிடம் கூட
அளந்து தான் பேசுகிறேன்
கூடலில் கூட
கூலிக்கு பாரடிப்பாய்
இத்தனை வருடங்களில்
நான் யார் என்பதே
மறந்து போனது
கண்ணாடி கூட
என் முகத்திற்குப் பதில்
உன் முகத்தைத் தான்
எப்போதும் காட்டுகிறது.

     ஆர்.கே. பொன்னி, காரைக்கால்.

இரண்டு நாட்களுக்கு முன்னரே மகளிர் தின வாழ்த்துகளைச் சொல்லியிருந்தாலும் மீண்டும் அனைத்து மகளிர்க்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்!  என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

46 comments:

 1. முகம் கவிதை நச் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 2. ரயில் தகவலும் பயணத் தகவலும் நன்று.
  இற்றை ஓகே பூவிழி வாசலிலே... இளையராஜா இல்லையா? எனக்கும் பிடித்த பாடல்களில் ஒன்று.
  கவிதை சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. இந்த முறை மற்ற பகுதிகளை விட முகப்புத்தக இற்றை மனசை கவ்விப் பிடித்தது. கவிதையும், பாடலும் ரசிக்க வைத்தவை. ரயில் புகைப்படத் தொகுப்பா? போடுங்க வெங்கட்ஜி! ஆவலுடன் வெயிட்டிங்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கணேஷ்.

   சில நாட்கள் கழித்து புகைப்படத் தொகுப்பு வெளியாகலாம்... :)

   Delete
 4. தகவல்கள் வியக்க வைக்கின்றன...

  புகைப்படம் சூப்பர்ப்...

  குழந்தைகள் செம...

  பிடித்த பாடல்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 5. முகநூல் இற்றை ஒரு கவிதையாகவே உள்ளது
  குறுஞ்செய்தி சூப்பர்.
  பொன்னிக்கு இவ்வளவு கோபமா?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளி.

   Delete
 6. குழந்தைகளிடம் ஜாக்ரத்தையா பேசணும் கோபத்தில் கூட
  கவிதை அருமை
  ரயிலின் விவரதிற்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. உண்மை. குழந்தைகளிடம் பேசும் போது நிச்சயம் ஜாக்கிரதை அவசியம்.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மலர் பாலன்.

   Delete
 7. இனிக்கச் செய்கிறது
  அருமையான பழக்கலவை...
  பிள்ளைகளிடம் எப்படி பேச வேண்டும்
  என்பதற்கு அந்த இரயிலில் வந்த பெண்மணி
  உதாரணம்...

  ReplyDelete
  Replies
  1. ரயிலில் அக்கேள்வி கேட்டது பெண்மணியல்ல மகேன், அது ஒரு ஆண்.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

   Delete
 8. விருந்தின் நிறைவு ! நன்றி சகோ... எங்களுக்குமான தங்கள் உழைப்புக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 9. ஒவ்வொரு முறை என் தாயுடன் கோவிலுக்குச் செல்லும் போதும், கோயில் சிலையிடம் காட்டி விட்டு வருகிறேன் என் கடவுளை./

  ஃப்ரூட் சாலட்டிம் மிகவும் ருசித்த ஃப்ரூட் ...

  மகளிர்தின வாழ்த்துகளுக்கு நன்றிகள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 10. ஒவ்வொரு முறை என் தாயுடன் கோவிலுக்குச் செல்லும் போதும், கோயில் சிலையிடம் காட்டி விட்டு வருகிறேன் என் கடவுளை.//

  அருமை.

  ரசித்தபடம், ரசித்தபாடல் மிக நன்றாக இருக்கிறது.
  பயணக் கட்டுரை படிக்க ஆவல்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 11. புகைவண்டியை பற்றிய வரலாற்று குறிப்பு , அழகான பறவை ,நல்ல கவிதைநடை , அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனி வாசன்.

   Delete
 12. அருமையான பகிர்வு. பாராட்டுக்கள் வெங்கட்ஜி.

  //ஒவ்வொரு முறை என் தாயுடன் கோவிலுக்குச் செல்லும் போதும், கோயில் சிலையிடம் காட்டி விட்டு வருகிறேன் என் கடவுளை.//

  சூப்பர் ;)))))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 13. நல்ல தகவல்கள். சிறப்பான தொகுப்பு.

  வாழ்த்துகளுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 14. உங்கள் பதிவுகளில் எப்போதும் பல தகவல்களை அறிந்துக்கொள்ளாம் அந்த வகையில் இந்த பதிவும் சிறப்பு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி K.s.s.Rajh.

   Delete
 15. நல்ல தகவல்கள்...
  ரசித்தபாடல்--- பூவிழி வாசலிலே... எனக்கும் பிடித்த பாடல்களில் ஒன்று.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதவன்.

   Delete
 16. இந்த வார சாலடில் மிகவும் ரசித்தது 'ஒரு கிளியின்' பாடல்தான். படமே பல முறை பார்த்து ரசித்திருக்கிறேன்.
  ராஜா காது துணுக்குற வைத்தது.

  பொன்னியின் கவிதை வருத்தப்பட வைத்தது. ஒரு பக்கத்தை மட்டுமே பிரதிபலிக்கும் இந்த கவிதையின் மறு பகுதியை ஒரு ஆண் - அவனது மனநிலையை - எழுதினால் எப்படி இருக்கும்? பெண் தாங்குவாளா?

  ஆனால் இப்போதெல்லாம் இந்த மாதிரிக் கவிதைக்குத்தான் வரவேற்பு அதிகம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 17. //ஒவ்வொரு முறை என் தாயுடன் கோவிலுக்குச் செல்லும் போதும், கோயில் சிலையிடம் காட்டி விட்டு வருகிறேன் என் கடவுளை.//

  அருமையான வரிகள்.
  குழந்தைகளிடம் மிக மிக ஜாக்கிரதையாக பேச வேண்டும் என்பதை உணர்த்துகிறது நீங்கள் எழுதியுள்ள சம்பவம்.

  நல்லதொரு சுவையான பழக் கலவை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 18. ரயில்வே பற்றிய சிறப்பான தகவல்கள்.முகப்புத்த இற்றை, குறுஞ்செய்தி,பட்ம்,காணொளி, கவிதை அனைத்துமே மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   Delete
 19. கவிதையும் பாடலும் அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரெவெரி.

   Delete
 20. அடுத்த பயணக்கட்டுரையா?அசத்துங்க.பழக்கலவையை ரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 21. குளிர்ப் பிரதேசத்தில் வசிக்கும் பறவையோ ?
  இப்படி அழகான கம்பளி போர்த்துக் கொண்டு இருக்கிறதே ...
  வழக்கம் போல அனைத்தும் அருஞ்சுவை .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   Delete
 22. எல்லாம் படிக்க ஸ்வாரஸ்யம். உங்கள் பயணக் கட்டுரைக்கு எனக்கு லிங்க் கொடுத்துடுங்கோ. படித்து அனுபவிப்பேன். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சி அம்மா....

   இன்னும் எழுத ஆரம்பிக்க வில்லை. எழுதியதும் தகவல் தருகிறேன்.

   Delete
 23. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....