எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, April 23, 2013

ஓவிய தாரகை - பூவிழி [அன்னம் விடு தூது – 15]அன்பின் நண்பர்களுக்கு, 20.03.2013 அன்று வெளியிட்ட கவிஞர்களுக்கு/கதாசிரியர்களுக்கு ஒரு அழைப்பு! எனும் பதிவின் அழைப்பினை ஏற்று, வந்திருக்கும் ஒரு கவிதையை இன்று இங்கே பகிர்ந்துள்ளேன். பூவிழி எனும் வலைப்பூவில் எழுதி வரும் பூவிழி எழுதிய கவிதை இது.

ஓவியத்திற்கு ஒளியுட்ட சொன்னீர்கள்
புலம்பிவிட்டேன் கண்டவுடன்
பதுங்கிவிட்டேன் பகிர பயந்து
புலம்பல்கள் எல்லாம் புகல்வீரோ ...............
பதித்துவிட்டேன் தைரியத்துடன்
கவிதை சாம்ராஜ்யங்களின் நடுவே
சிற்றெறும்பாய் நான் கடிக்க வந்துவிட்டேன்
பொறுத்தருள்வீர் நண்பர்களே .... 

என்ற முன்குறிப்புடன் அவர் வெளியிட்ட கவிதை அன்னம் விடு தூது பகிர்வுகள் வரிசையில் பதினைந்தாம் பகிர்வாக இங்கே!

பட உதவி: சுதேசமித்திரன் 1957

அழகான
ஓவிய தாரகையே
மயக்கும் மாலை   
இள வெயிலில்
மாலை தென்றல்
மடி தவழ
யாரோடு உறவாட நீ
வந்தாய் ........

பறவைகள் இன்னிசைக்க
தாமரைகள் மலர காத்திருக்க
வானுயர்ந்த மரங்களின் நடுவே
தன்னந்தனியாய் தேவமங்கையவள்
மதிவதனம் சிந்தனையின் வசமிருக்க


ஆற்றங்கரையின் பசுமைமடியினில்
அமர்ந்த நேரம்
வெண்ணிற சிறகு அடித்து  
உன்னை காண தேவதைகள் .....
இறங்கியதோ அன்னமாய் 
வான்மீதினில் இருந்து
உன்னோடு உரையாட
மான்விழியாள் மருண்டு பார்க்க

ஏனடி இந்த விரத கோலம்
யாருக்காக இந்த வேஷம் என்றதோ
உன் சாகாகள்

என் செய்வேன் தோழி ......
பேதையாய் மாறி பெரும்துயர்
அடைந்துவிட்டேனடி
இந்த பாரினில் உள்ளவன் மேல்
காதல் கொண்டு கலந்துவிட்டேன்
மாலையிட மாறன் அவன் வருகிறேன் ...
காத்திரு என்றான்
சென்றவனை காணோம்
இங்கு வருவான் இன்று வருவான்
என காத்திருக்கிறேன் ...............
தூது செல்வார்களோ என்று .......
வியப்போடு அன்னங்கள் அவள் விழி நோக்கியதே !

என்ன நண்பர்களே இப்பகிர்வினை ரசித்தீர்களா? பகிர்வுக்கான பாராட்டுகளுக்கு உரியவர் ஆசிரியர் மட்டுமே! பகிர்வினை எழுதிய பூவிழி அவர்களுக்கு ஒரு பூங்கொத்து!அடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

30 comments:

 1. nalla kavithai anne!

  mikka nantri!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 2. சென்றவனை காணோம்
  இங்கு வருவான்
  என காத்திருக்கிறேன் ...............//
  அருமை வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete
 3. வெண்ணிற சிறகு அடித்து
  உன்னை காண தேவதைகள் .....
  இறங்கியதோ அன்னமாய்
  வான்மீதினில் இருந்து
  உன்னோடு உரையாட..

  தேவதைகளா அன்னங்கள்!
  அருமை.
  கவிதை மிகநன்றாக இருக்கிறது பூவிழி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

   Delete
 4. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. நல்லதொரு கவிதை எழுதி பூங்கொத்து பெற்றவர்களுக்கு நல் வாழ்த்துகள் + பாராட்டுக்கள். வெளியிட்டுள்ள வெங்கட்ஜிக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை. கோ. ஜி!

   Delete
 6. வெண்ணிற சிறகு அடித்து
  உன்னை காண தேவதைகள் .....
  இறங்கியதோ அன்னமாய்

  ஓவியத்திற்கு ஒலியூட்டிய
  பூவிழியின் காவிய வரிகள்.. அருமை ..
  பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 7. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துரை.

   Delete
 8. வரிகள் அருமை... பூவிழி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 9. நன்றி வெங்கட்ஜீ

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பூவிழி.

   Delete
 10. அழகிய கவிதை. அன்னம்போலவே பளிச்சென அருமையாக இருக்கிறது.
  அழகான பூங்கொத்தும் கிடைத்திருக்கிறது.

  பூவிழிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  சகோதரரே! உங்கள் அன்பு மனத்தினால் எத்தனை கவிஞர்களை நீங்கள் உருவாக்கியும் இங்கு கௌரவப்படுத்தியும் வருகின்றீர்கள். உங்கள் சேவை அளப்பரியது.
  உங்களுக்கும் இனிய வாழ்த்துக்களும் நன்றிகள் பலவும்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இளமதி.

   எல்லாப் புகழும் க[வி]தை எழுதிய நண்பர்களுக்கே! :)

   Delete

 11. பூவிழிக்கு ஒரு பூங்கொத்தா ?
  புக்கர் ப்ரைஸ் தாருங்கள். கற்பனை கடல் போல் இருக்கிறது.
  கன்க்ராட்ஸ்.

  அது சரி, எனக்கு ஒரு ஐயம்.

  இந்தக்கிழவன் மேல் கோவித்துக்கொள்ளாமல் இருப்பதாக இருந்தால் சொல்லுவேன்.

  நீங்கள் எழுதியதை மறுபடியும் படித்தேன்.


  ///இந்த பாரினில் உள்ளவன் மேல்
  காதல் கொண்டு கலந்துவிட்டேன்
  மாலையிட மாறன் அவன் வருகிறேன் ...
  காத்திரு என்றான்
  சென்றவனை காணோம்
  ///

  Bar ல் உள்ளவன் மேல் காதல் கொண்டு.கலந்துவிட்டேன்.
  மாலையிட மாறன் அவன் வருகிறேன் காத்திரு என்றான்.

  சென்றவனைக் காணோமா ?

  அவன் எப்படி அவ்வளவு சீக்கிரம் வருவான் ? !!!

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. பார் - Bar நல்ல குறும்பு! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா....

   Delete
 12. தோழி பூவிழியன் சிறந்த கற்பனைக்கு வாழ்த்துக்கள் .மிக்க
  நன்றி சகோதரரே தங்கள் ஊக்குவிப்பிற்கு .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 13. அழகான கவிதை.
  வாழ்த்துக்கள் பூவிழி.
  பகிர்ந்தமைக்கு நன்றி நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 14. அழகிய கவிதை. சகோதரி பூவிழி அவர்கட்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ்முகில் பிரகாசம்.

   Delete
 15. ரசிக்க வைத்த ரசனையுள்ள கவிதை......அழகு.....!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....