We
two – Me and my RE Thunderbird 500 – Toll Free Traveller
படம்: இணையத்திலிருந்து.....
பயணங்கள்
எனக்குப் பிடித்தவை என்பது உங்கள் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். பயணங்கள் மட்டுமல்ல,
பயணம் செய்பவர்களையும் எனக்குப் பிடிக்கும். பயணம் செய்வதை மிகவும் விரும்பும் ஒருவர்
பற்றிய தகவல் தான் இன்றைய பகிர்வு.
மும்பையில்
வக்கீலாக சில வருடங்கள் பணி புரிந்து, சொந்த ஊரான சென்னைக்குத் திரும்பி, பயணம் தான்
தனது லட்சியம் என்பதை உணர்ந்த இவர் தன்னுடைய மோட்டார்சைக்கிளில் செய்த பயணங்கள் ஒவ்வொன்றும்
அற்புதமானவை. சென்னையிலிருந்து லடாக் வரை, 2016-ஆம் ஆண்டு சென்று வந்த பயணம் பற்றி
படிக்கும் போதும், காணொளியாக பார்க்கும்போதும், எனக்குள் இருக்கும் பயணி, கொஞ்சம் பொறாமையுடன்
எட்டிப் பார்க்கிறான். அவர் பயணித்த பாதை என்று
எழுதி இருப்பதைக் கீழே கொடுத்திருக்கிறேன் பாருங்கள்!
Chennai
- Bengaluru - Dharwad - Belgaum - Pune - Mumbai - Ahmedabad - Mount Abu - Pali
- Ajmer - Jaipur - New Delhi - Panchkula - Kasauli - Kunihar - Mandi - Prashar
- Palampur - Mcleodganj - Banikhet - Dalhousie - Chandi - Bairagarh - Satrundi
- Banikhet - Nainikhad - Uddhampur - Patnitop - Kishtwar - Sinthan Top - Daksum
- Anantnag - Pahalgam - Aru - Anantnag - Srinagar - Dodhpatri - Srinagar -
Sonmarg - Zoji La - Drass - Kargil - Mulbek - Namika La - Fotu La - Leh -
Khardung La - Khalsar - Sumur - Diskit - Hunder - Turtuk - Leh - Chang La -
Pangong Tso - Chushul - Khaltse - Tsaga La - Nyoma - Karzok - Sumdo -
Polokongka La - Tso Kar - Pang - Lachung La - Naki La - Sarchu - Baralacha La -
Jispa - Keylong - Rohtang La - Manali - Kasol - Tosh - Shimla - Chandigarh -
New Delhi - the rest is still to come.
New
Delhi - Jaipur - Jodhpur - Gandhidham - Rann of Kutch - Kawda - Lakhpat -
Koteshwar - Mandvi - Gandhidham - Somnath - Diu - Alang - Bhavnagar - Vadodara
- Mumbai - Igatpuri - Bhandardara - Pune - Mulshi - Harihareshwar - Dapoli -
Dabhol - Guhagar - Jaigadh - Ganpatipule - Ratnagiri - Rajapur - Sindhdurg -
Vengurla - Tiracol - Goa - Karwar - Marawanthe - Mangalore - Hassan - Kunigal -
Bengaluru - Chennai.
அதுவும்
இத்தனை தொலைவு Royal Enfield Thunderbird 500-ல் பயணிக்க எப்படி இருந்திருக்கும், எத்தனை
எத்தனை மனிதர்களைச் சந்தித்து இருப்பார், பல வித அனுபவங்கள் கிடைத்திருக்கும் என்று
யோசிக்கும்போதே பிரமிப்பாக இருக்கிறது அல்லவா?
இந்த
இரண்டு பயணங்கள் பற்றிய காணொளி தொகுப்புகள் கீழே….
சென்னையிலிருந்து
லடாக் சென்று தலைநகர் தில்லி வரை….
தலைநகர்
தில்லியிலிருந்து சென்னை திரும்பிய பாதை…..
சென்ற
வருட பயணத்தில் இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு பயணம் என்றால், தற்போது,
இந்தியாவின் கிழக்குப் பகுதிகளுக்கு Tour of 2017 என்று பயணம் செய்து கொண்டிருக்கிறார்.
சென்னையிலிருந்து கொல்கத்தா வரை வந்து, அங்கிருந்து வடகிழக்கு மாநிலங்களுக்குப் பயணம்
செய்து கொண்டிருக்கிறார். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இந்தப் பயணம் தொடர்ந்து
கொண்டிருக்கிறது. பயணத்தினை ரொம்பவும் ரசிக்கும்
ஒருவரால் மட்டுமே இப்படி தொடர்ந்து பயணிக்க முடியும். ஒன்றிரண்டு நாட்கள் பயணித்தால் கிடைக்கும் அனுபவங்களே
மறக்க முடியாதவையாக இருக்கும் போது, இப்படித் தொடர்ந்து பயணிப்பதில் கிடைக்கும் அனுபவங்கள்
பற்றி என்ன சொல்ல…..
Toll
Free Traveller என்ற பெயரில் ஒரு வலைப்பூவும், Youtube, Facebook, Twitter, Instagram
பக்கங்களும் இவருக்கு இருக்கிறது. இவரது அனுபவங்களை இப் பக்கங்களில் தொடர்ந்து பகிர்ந்து
கொண்டு வருகிறார். Youtube-ல் இருக்கும் காணொளிகள்
பார்த்து நீங்களும் ரசிக்கலாம்.
Toll
Free Traveller பற்றி மேலும் தெரிந்து கொள்ள அவரது பக்கங்கள் கீழே….
Blog – Toll Free Traveller
Youtube
Channel - Toll Free Traveller
Twitter
Handle - Toll Free Traveller
Facebook - Toll Free Traveller
Instagram - Toll Free Traveller
என்றைக்காவது
ஒரு நாள் இப்படி ஒரு பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கும் உண்டு! ஆனால் அதற்கு முதலில்
ஒரு வண்டி வாங்க வேண்டும்! பார்க்கலாம்! தில்லியிலிருந்து திருச்சி வரை பேருந்தில்
பயணிக்கும் எண்ணம் உண்டு – ஆங்காங்கே தங்கி அங்கே இருக்கும் இடங்களைப் பார்த்த பிறகு
தான்! பார்க்கலாம் எப்போது நேரம் கிடைக்கிறது என.
நாளை
வேறு ஒரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை….
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி.
பயணங்களே நல்ல அனுபவம்..
பதிலளிநீக்குநல்ல அறிமுகம்..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வக்குமார்....
நீக்குபயண அனுபவங்கள் சுகமானவையே...
பதிலளிநீக்குகாணொளி பிறகு கணினியில் காண்பேன் ஜி
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குபயணங்கள் முடிவதில்லை...! உங்கள் விருப்பம் விரைவில் ஈடேற வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பிரசாத் ஜி!
நீக்குவெங்கட்ஜி இப்படிக் காதுல புகை வர வைக்கிறீங்களே!!ஹ்ஹஹஹ ஆம் பொறாமையாகத்தான் இருக்கு ஜி. எனக்கும் பயணம் என்றால் மிக மிகப் பிடிக்கும்...எத்தனை இடங்களைப் பார்த்துக் கொண்டே ரசித்துக் கொண்டெ, மனிதர்கள், இயற்கை, இடங்கள், அந்த ஊர் கல்சர், கலை, பாரம்பரியம், சாப்பாடு என்று பல வகை...ஆங்காங்கே தங்கி....சிறிய ஊர்கள்ம் கிராமங்கள் என்று எல்லாம் பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் உண்டு. அதுவும் இப்படி பைக்கில் (பைக் ஓட்டத் தெரியும்!!! ஆனால் எனக்கு அந்த வெயிட்டை இப்போது ஹாண்டில் செய்ய முடிவதில்லை...) செல்வதும் பிடிக்கும். இப்போது இருக்கும் எனது சாதாரண டிவிஎஸ் எக்செல் வண்டியில் செல்வதையே ட்ராஃபிக் இல்லாத இடம் என்றால் காற்றையும் சுற்றுப் புறத்தையும் ரசித்துச் செல்வேன்...பாடிக் கொண்டே!!!!
பதிலளிநீக்குகிழக்குக் கடற்கரைச் சாலைப் பயணம் மிகவும் பிடிக்கும்...பயணம் சுகம் மற்று நல்ல அனுபவம்...இதம்...பாடம்!!
கீதா
காதுல புகை! :) ஹாஹா.... இங்கே ஃபைர் இஞ்சின் வர வைக்கும் அளவுக்கு புகை!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
காணொளிகள் குறித்துக் கொண்டேன் பார்க்கிறேன் நிதானமாக....
பதிலளிநீக்குகீதா
முடிந்த போது பாருங்கள். இரண்டுமே நன்றாக இருக்கிறது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
அருமை
பதிலளிநீக்குதம+2
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மொஹம்மத் அல்தாஃப்.
நீக்குஎன் மச்சினனின் மகன் இம்மாதிரி மோட்டார் சைக்கிளில் இந்தியா முழுவதும் பயணித்திருக்கி றார் கொஞ்சம் சங்கோஜப் பேர் வழி அனுபவங்களை எழுதித் தருகிறேன் என்றார் இன்னும் தருகிறார் இப்போது ஆஸ்திரேலியாவில்
பதிலளிநீக்குஆஹா... அவரும் தனது அனுபவங்களை எழுதலாம்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.
நல்ல பதிவு. பயணக் கட்டுரை நூலாசிரியர் என்ற முறையில் அவரையும் உங்களையும் பெரிதும் பாராட்டுகிறேன். அவருடைய பெயர் கண்ணில் படவில்லையே.
பதிலளிநீக்குஅப்படியே உங்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள். இப்போது கனடா நாட்டில் என் இளைய மகளுடன் தங்கியுள்ளேன். என் வலைப்பக்கத்திற்குச் சற்றே வந்து ஓர் ஊக்க வரியினை உதிர்த்தால் மகிழ்ச்சி அடைவேன்.
இதோ உங்கள் வலைப்பூவிற்கு வந்து கொண்டே இருக்கிறேன்.
நீக்குஅவரது பெயர் எங்கேயும் குறிப்பிடவில்லை!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவிந்தராஜூ அருணாச்சலம் ஐயா.
ஆசை நிறைவேற வாழ்த்துகள் ஜி...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஇரண்டாவது காணொளி கண்டேன் ஜி
பதிலளிநீக்குசெல்ஃபியாக அவரே காணொளி எடுத்து இருக்கிறார் ஸூப்பர்
முதலாவது பிறகு காண்பேன் நன்றி
முடிந்த போது முதலாம் காணொளியும் பாருங்கள் கில்லர்ஜி....
நீக்குதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி
பயணங்கள் என்றுமே இனிமையானவை. வாழ்க்கையின் சலிப்பான பக்கங்களுக்கு புதுப்புது அர்த்தங்கள் கொடுப்பவை! உங்களின் ஆசை விரைவில் நிறைவேற மனங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.
நீக்குபயணங்கள் இனிமையானவையே! ஆனால் இம்மாதிரிப் பயணிக்க முடியாது. சகல சௌகரியங்களும் இருக்கணும்! :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
நீக்கு