குஜராத் பயணங்களில் தேப்லாவுடன் ஆம் கா சுண்டா சாப்பிட்டதுண்டு.
ஒரு குஜராத்தி நண்பரிடம் சொல்ல, அவரது மனைவியின் கைப்பக்குவத்தில் ஆம் கா சுண்டா ஒரு
பாட்டில் நிறைய தந்தார். சில நாட்கள் வரை பழேத்துப் பொட்டியில் [இந்தப் பதம் தெரியாதவர்களின்
வசதிக்காக – Refrigerator என்பதே பழேத்துப் பொட்டி!] வைத்து, சப்பாத்தி, அன்று செய்த
சப்ஜியுடன் இரண்டாவது தொட்டுக்கையாக ஆம் கா சுண்டா வைத்து சாப்பிட்டதுண்டு! அந்த ஆம்
கா சுண்டா எப்படிச் செய்வது? கீழே இருக்கிறது சூட்சுமம்!
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.
Over to Adhi Venkat!
Aam ka chunda!!
மாங்காயில் இனிப்பும் சேர்த்து செய்யும்
ஊறுகாய் இது. குஜராத்தி ஊறுகாய். கிடைத்த ஒரு மாங்காயில் இணையத்தில் தேடி செய்து பார்த்தேன்.
மிகவும் ருசியாக உள்ளது. வாங்க! எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மாங்காய் - 1 கப் (துருவியது)
வெல்லம் - 3/4 கப்
உப்பு- 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – சிறிதளவு
வறுத்து அரைத்த சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
செய்முறை:-
மாங்காயை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.
அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கிளறி பத்து நிமிடம் ஊறவைக்கவும். பின்பு அதனுடன்
வெல்லம் சேர்த்து கிளறி மீண்டும் சிறிது நேரம் ஊறவைக்கவும். வாணலியை அடுப்பில் ஏற்றி
இந்த கலவையை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். கொதிக்க ஆ்ரம்பிக்கும் சமயம் ஒற்றை
கம்பி பதம் பார்த்து அடுப்பை நிறுத்தவும். ஆறியவுடன் மிளகாய்த்தூளும், சீரகத்தூளும்
சேர்த்து கிளறி பாட்டிலில் பத்திரப்படுத்தி வைக்கலாம்.
சூடான சப்பாத்தி, பராட்டாக்களுக்கு
மற்றும் தேப்லாவிற்கு [என்னவரின் பதிவு!] தோதான ஜோடியாக
இருக்கும்.
நீங்களும் செய்து பார்த்து ருசியுங்களேன்.
பின்குறிப்பு:- வெல்லத்திற்கு பதில் சர்க்கரையும் சேர்த்து செய்வார்களாம்.
உங்களுக்கு எது விருப்பமோ, சேர்த்துக் கொள்ளலாம்.
நட்புடன்
புதுவிதமான சுவையில் இருக்கும் போல.. மாங்காய் பச்சடி பாணியில் கொஞ்சம். ஆனால் சீரகம், காரம் எல்லாம்சேர்த்து!
பதிலளிநீக்குசுவையாகவே இருக்கும் ஸ்ரீராம். செய்து பாருங்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நன்றி ஸ்ரீராம் சார்..
நீக்குஅடிக்கடி பண்ணிண்டு இருந்தேன். இப்போக் குழந்தைகள் இல்லையா, பண்ணுவதே இல்லை! :) இல்லைனாலும் நாங்கல்லாம் ஆவக்காயைத் தொட்டுக் கொண்டே சப்பாத்தி, பூரி, தேப்லா, பரோட்டா போன்றவற்றைச் சாப்பிடுவோம். :)
பதிலளிநீக்குஆவக்காயைத் தொட்டுக்கொண்டே! :) சூடான சாதத்தில் ஆவக்காய் விழுதைப் போட்டு சாப்பிட்டதுண்டு!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
கருத்துக்களுக்கு நன்றி மாமி..
நீக்குமாங்காயைத் துண்டங்களாக நறுக்கிக் கொண்டும் இப்படிப் பண்ணலாம். ஆனால் எனக்குத் தெரிந்து குஜராத்தில் வெல்லம் சேர்த்த பின்னர் வெயிலில் 2,3 நாட்கள் வைப்பார்கள். அடுப்பில் வைத்துக் கிளறியதில்லை. துருவினால் தான் அடுப்பில் வைத்துக் கிளறுவது! கொண்டைக்கடலையில் மட்டும் ஓர் ஊறுகாய் உண்டு! :)
பதிலளிநீக்குகொண்டைக்கடலையில் ஊறுகாய்! சாப்பிட்டதாய் நினைவில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
நான் பார்த்த குறிப்புகளில் அடுப்பில் வைத்து தான் கிளறியிருந்தார்கள்.நன்றி மாமி..
நீக்குஇது நான் சாப்பிட்டு இருக்கிறேன் பெயர்தான் நினைவில் இல்லை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குநன்றி சார்..
நீக்குமாங்காய் இனிப்பு பச்சடி.. அதனுடன் மிளகாய் புதிது...
பதிலளிநீக்குஎளிய செய்முறை செய்து விடலாம்..
சுலபமான செய்முறை தான். செய்து பாருங்களேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
நன்றி சார்..
நீக்குசிறுவயது முதல் கல்லூரி நாட்கள் வரை அம்மாவின் கைவண்னத்தில் சாப்பிட்டது ..... சாப்பிட்டு 20 வருடங்கள் ஆகிவிட்டன... ஹும்ம்ம் செய்து பார்த்து சாப்பிட வேண்டும்
பதிலளிநீக்குசுலபமான செய்முறை தான் மதுரைத் தமிழன். செய்து சாப்பிடுங்களேன்!
நீக்குஅம்மாவின் கைப்பக்குவத்தில் சாப்பிட்ட எல்லாமே சுவை தான்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
செய்து பாருங்க சகோ..
நீக்குஎன்ன திங்கட்கிழமைக்குப் போட்டியா இரண்டாவது வாரமும் ரிலீஸ் பண்ணிட்டீங்களே :))
பதிலளிநீக்குகோவை2டில்லி பிளாக் அம்போவா? அவரை இங்க எழுத விட்டுட்டீங்களே!
விரைவில் செய்துபார்க்கிறேன். த ம
”திங்க” கிழமைக்கு போட்டி எல்லாம் இல்லை! :) அமைந்துவிட்டது!
நீக்குகோவை2தில்லி வலைப்பூவில் எழுதுவது வெகுவாகக் குறைந்துவிட்டது! இந்த வருடத்தில் ஒரே ஒரு பதிவு - அதுவும் ஆறு மாதத்திற்கு முன்னர்! சென்ற வருடம் முழுவதுமே வந்த பதிவுகள் ஏழே ஏழு! சரி இங்கேயாவது பகிர்ந்து கொள்ளலாம் என்பதால் தான் இங்கே!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
கருத்துக்களுக்கு மிக்க நன்றி சார்..
நீக்குஆம் கா சுண்டா இப்படித் கலந்து வெயிலில் வைத்து வைத்து எடுத்துத் செய்ததுண்டு...சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து...அடுப்பில் வைத்துக் கிளறும்..இம்முறையையும் செய்து பார்த்துவிடுகிறேன்....பகிர்விற்கு நன்றி ஜி
பதிலளிநீக்குகிட்டத்தட்ட நம் மங்காய்ப் பச்சடி.....
கீதா
செய்து பாருங்கள்...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
செய்து பாருங்கள் இந்த முறையிலும்..கருத்துக்களுக்கு மிக்க நன்றி..
நீக்குOne packet parcel plz...
பதிலளிநீக்குஅனுப்பிடுவோம்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதவன்.
மிக்க நன்றி சார்..
நீக்குமாங்காய், வெல்லம்லாம் இருக்கு. போய் செஞ்சுட வேண்டியதுதான். மாங்காயை துருவ உங்க மாப்பிள்ளையை அனுப்பங்கண்ணே
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!
நீக்குகருத்துக்களுக்கு மிக்க நன்றிங்க ராஜி..
நீக்குமாங்கா வெல்லப் பச்சடி!போன்றதே!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.
நீக்குநன்றி ஐயா..
நீக்குஆம் கா சுண்டா.....பெயர் எப்படி இருந்தாலென்ன ,நாக்குக்கு ருசியாய் இருந்தால் சரி :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!
நீக்குநன்றி சார்..
நீக்குநல்ல ரெசிபி.வாழ்த்துக்கள்,,/
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விமலன்.
நீக்குகருத்துக்களுக்கு மிக்க நன்றி சார்..
நீக்குசுவையானது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்கு