காஃபி வித் கிட்டு – பகுதி – 37
அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும்
இனிய காலை வணக்கம். பொதுவாக சனிக்கிழமைகளில் தானே
காஃபி வித் கிட்டு வரும்? இன்னிக்கு வெள்ளிக்கிழமை தானே? ஆமாம்…
சனிக்கிழமைகளில் தான் இப்பதிவு – பரவாயில்லை. வெள்ளிக்கிழமையும் காஃபி குடித்தால்
தவறில்லையே! இன்றைக்கு காஃபி வித் கிட்டு பதிவில் சில விஷயங்களைப் பார்க்கலாமா!
சூடான காஃபி குடித்தபடியே!
இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:
உலகக் கோப்பையும் ஒரு முதியவரும்:
இந்தியா உலகக் கோப்பை போட்டியின்
செமி ஃபைனலில் தோற்றதற்கு அடுத்த நாள். ஒரு பெரியவரை சந்தித்தேன். வயது எண்பது
வயதிற்கு மேல்! ஆறேழு மாதத்திற்கு ஒரு முறை சந்திப்பவர் தான். வருவார், சில
நிமிடங்கள் பேசிக் கொண்டிருப்பார். அவரது
வேலை முடிந்த பிறகு சென்று விடுவார். இத்தனைக்கும் ஒவ்வொரு முறையும் கஷ்டப்பட்டு
வர வேண்டாம், நீங்கள் வீட்டில் இருந்த படியே இந்த வேலைகளைச் செய்து விடலாம் என்று
சொன்னால் கேட்க மாட்டார். தள்ளாடியபடி வந்து கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருந்து
விட்டு செல்வார். இந்த முறை வந்திருந்த
சமயத்தில் பக்கத்தில் இருந்த இருவர் உலகக் கோப்பையை இந்தியா கோட்டை விட்டது பற்றி
தங்களது கருத்துகளைச் சொல்ல, பெரியவருக்கு கோபம் வந்து விட்டது – பொரிந்து தள்ளி
விட்டார்.
இங்கே எல்லாருக்கும்
கிரிக்கெட் பைத்தியம் பிடித்து விட்டது. கிரிக்கெட் Bபேட்டையே தொடாதவன் கூட இப்படி
விளையாடியிருக்கலாம்னு பேசிட்டுத் திரியராங்க… இதெல்லாம் ஒரு விளையாட்டா? அவனுங்க
விளையாடறாங்க, காசு சம்பாதிக்கிறாங்க, நீங்க ஏண்டா பைத்தியம் பிடிச்சு அலையறீங்க!
ஹாக்கி மாதிரி விளையாட்டு எவ்வளவு நல்லது. அதில் கிடைக்கும் உடல் உறுதி இந்த
விளையாட்டில் கிடைக்குமா? நாங்க சின்ன வயசுல ஹாக்கி தான் விளையாடினோம்! இந்தியா
ஒலிம்பிக்ல கூட ஹாக்கி விளையாட்டில் தங்கப் பதக்கம் வாங்கி இருக்கே! அதை அப்படியே
ஓரங்கட்டிட்டு கிரிக்கெட் பக்கம் போய் சீரழியறாங்களே! சல்லிக்காசுக்கு
பிரயோஜனமில்லாம திரியாதிங்கடே…
ரொம்பவும் புலம்ப, தண்ணீர்
கொடுத்து ஆஸ்வாஸப்படுத்தி அனுப்பினேன்! கடந்த ஒன்றரை மாதமாக எங்கே பார்த்தாலும்
கிரிக்கெட் மயம் தானே! ஒரு வழியா முடிஞ்சது உலகக் கோப்பை!
படித்ததில் ரசித்தது:
இங்க பாருங்க. இன்னிக்கி வெய்யில்
39 டிகிரி. ரொம்பவே அதிகமா இருக்கு. நீங்க வேலைக்குப் போக வேண்டாம். லீவ்
போட்ருங்க.
.
அடியேய். தர்ம பத்தினி. சத்தியமாச்
சொல்றேண்டி. எனக்கு வடகம் போடத் தெரியாது. என்னை வுட்டுருடி. நாம் பாட்டுக்கு
ஆபீசுக்கே போயிடுறேன், ப்ளீஸ்...
ரசித்த படமும் கவிதையும்:
சமீபத்தில் படித்து ரசித்த ஒரு
கவிதை.
கனவொன்றை
வாழ நினைத்தேன்
காணாமல் போனான் அவன்
நிகழ்வொன்றில்
நித்தம் அழிந்தேன்
நேரில் வந்தான் அவன்
கனவுமின்றி
நிஜமுமின்றி
கவிதையான
காதல்
அந்தியின் செங்குருதி கசியும்
அதீத ஈர்ப்பின் இச்சையோடும்
அடைய முடியாததற்கான மனநெகிழ்ச்சியோடும்
அந்தரத்திலாடி
என் நயனங்களில்
நிறையும் இளநீலத்துக்கு
கரிப்புச் சுவையைக்
கொடுக்கிறது
" ஶ்ரீ "
ரசித்த காணொளி:
சில காணொளிகள் பார்க்கும் போதே
பிடித்து விடும். அவை விளம்பரப்படுத்தும்
விஷயம் பிடிக்காது என்றாலும் விளம்பரம் ரசிக்கும்படி அமைந்து விடுவது உண்டு! புது வருடம்
புதிய ஆரம்பம் என்று சொல்லும் இந்த காணொளி ரொம்பவும் பிடித்தது! பாருங்களேன்.
அலைபேசி ரிப்பேரா?
சரியாத் தான் கேட்டு இருக்காங்க
அம்மா!
பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:
இதே நாளில் 2013-ஆம் வருடம் எழுதிய
ஒரு ஃப்ரூட் சாலட் பதிவு…
இப்பதிவில் பகிர்ந்த ஒரு
ஸ்வாரஸ்யமான விஷயம். இங்கேயும்…
தி.ஜ.ர. என்று ஒரு பிரபலமான எழுத்தாளர்.
1901 ஆம் ஆண்டு பிறந்து 1971 [நான் பிறந்த வருடம்!] மறைந்த இவர் மஞ்சரி இதழ் ஆரம்பித்ததிலிருந்து
அதன் ஆசிரியராக இருந்தவர். எழுதுவது பற்றி
இவர் சொன்னது என்ன என்று தெரிந்து கொள்வோமா?
“எழுதுவது என்பது நீந்துகிற
மாதிரி. தண்ணீர் வெதவெதக்கிறதா, சில்லிட்டு இருக்கிறதா என்று விரலை ஆழம் விட்டுப் பார்த்துக்
கொண்டு, வேளை பார்த்துக் கொண்டிருந்தால் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியது தான்.
குதி, குதித்துவிடு!”
என்ன நண்பர்களே, இந்த வாரத்தின்
காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச்
சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
நட்புடன்
வெங்கட்
புது தில்லி
குட்மார்னிங்.
பதிலளிநீக்குஇடதுகையிலும் வாயிலும் ஒரு காஃபி, வலதுகையிலும் கண்ணிலும் உங்கள் காஃபி...!!!
காலை வணக்கம் ஸ்ரீராம்.
நீக்குஆஹா எங்கெங்கும் காஃபி! மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நல்ல வாசகம்.. இதுபோல என்னைக்கவர்ந் வாசகங்களை நானும் பார்வேர்ட் செய்யும் பழக்கம் உண்டு. முன்பு எஸ் எம் எஸ் காலம் இருந்ததல்லவா? அதில் வந்த நல்ல பல கருத்துகளைத் தொகுத்து எங்கள் தளத்தில் "உள்பெட்டியிலிருந்து" என்று கொடுத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம். நானும் சேர்த்து வைத்ததுண்டு. உங்கள் உள் பெட்டியிலிருந்து எனக்கும் நினைவிருக்கிறது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கிரிக்கெட் பற்றி அவர் சொன்னது நிஜம்தான். என்ன எல்லோரும் கிரிக்கெட் பற்றியே பேசிக்கொண்டு...
பதிலளிநீக்குஆனாலும் இங்கிலாந்து உலகக்கோப்பை பெற்றதாகச் சொல்லபப்டுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது... உண்மையில் நியூஸிலாந்துதான் கோப்பை பெற்றவர்கள்... நம்கருத்தை எல்லாம் யார் கேட்கிறார்கள்!
Absolutely right Sriram.
நீக்குகிரிக்கெட் - பலருக்கும் இந்த விளையாட்டு மேல் அப்படி ஒரு மோகம். நாள் முழுவதும் கூட இதைப் பற்றி பேச முடிகிறது அவர்களால்! சிலர் இப்படி பேசுவதைக் கண்டித்ததுண்டு ஸ்ரீராம். :)
நீக்குநியூசிலாந்து தான் தகுதியானவர்கள் - அன்றைய விளையாட்டில்! ஆனால் இங்கிலாந்து வெற்றி பெற்றது என்பது சோகம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...
நீக்குவடக ஜோக்கை முன்னரேயும், கவிதையை இப்போதும் ரசித்தேன்.
பதிலளிநீக்குவடக ஜோக் மற்றும் கவிதை ரசித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
காணொளியையும் கவிதையையும் ரசித்தேன். வெங்கட்... உங்களுக்கு முதல் காதல் எதுவும் உண்டா? சும்மா சுவாரஸ்யத்துக்காகக்கேட்கிறேன். திருமதி வெங்கட் இதைப்படிக்க மாட்டார்கள்... சும்மா சொல்லுங்கள்!!!!
பதிலளிநீக்குகாணொளியும் கவிதையும் நீங்கள் ரசித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குமுதல் காதல் - அப்படி எதுவும் இல்லை.
//திருமதி வெங்கட் இதைப் படிக்க மாட்டார்கள்... சும்மா சொல்லுங்கள்!// ஹாஹா... காதல் இருந்தால் தானே சொல்ல வேண்டும்! இருந்தால் சொல்லி இருப்பேன். பயம் எதற்கு! ஹாஹா....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
படித்து விட்டேன் ஸ்ரீராம் சார்..:)) முதல் காதல்!! - சான்ஸே இல்லை என்று அடித்து சொல்ல முடியும் என்னால்..:)) இவர் Rough & Tough !! அது போக பொய் சொல்லத் தெரியாது..:)) இவையிரண்டும் போதாதா???
நீக்கு//Rough and Tough!! அது போக பொய் சொல்லத் தெரியாது....//
நீக்குஆஹாங்.... வடிவேலு குரலில் சொல்லிக் கொண்டேன்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம்
பதிலளிநீக்குவழமை போன்று பதிவு அசத்தல் தொடருகின்றேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை ரூபன். மிக்க மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
தி ஜ ர வின் பெண் வயிற்றுப்பேத்தி படிக்க என் அப்பாவும் உதவி இருக்கிறார். அவர் அவர் குடும்பத்தைமீறி காதல் திருமணம் புரிந்து சென்றது ஒரு சோகம். எழுத்தாளர் மன்னர்மன்னன் அவர்களும் இந்தக்குடும்பத்துக்கு உதவி வந்திருக்கிறார்.
பதிலளிநீக்குசில எழுத்தாளர்களின் வாழ்க்கையில் சோகம் தான் ஸ்ரீராம். முன்னரும் இது பற்றி நீங்கள் சொல்லி இருப்பதைப் பார்த்தேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பெரியவர் பேசியது நான் பேசுவது போலவே இருக்கிறது ஜி.
பதிலளிநீக்குநகைச்சுவை படம் ஸூப்பர்.
பெரியவர் பேசியது நீங்கள் பேசுவது போலவே! கில்லர்ஜி! கிரிக்கெட் பற்றி எனக்குள்ளும் இப்படியான கோபங்கள் உண்டு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஓ... இந்தத் தகவலை சுருக்கமாக பழைய பதிவிலேயே சொல்லியிருக்கிறேன்!!!
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம். பழைய பதிவிலும் உங்கள் பதில் இப்படி வந்திருக்கிறது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!
பதிலளிநீக்குசனிக்கிழமை பதிவு இன்று வெளியானாலும் நாங்க காஃபியோடுதானே வாசிப்பதே. ஹா ஹா ஹா
டவுட் வந்தா காஃபியா!! ஹ்ஹிஹிஹி அப்ப நான் நிறையவே குடிக்கணும் போல!
கீதா
டவுட் வந்தா காஃபி! இப்படி நிறைய வாசகங்கள் படித்ததுண்டு. இதை இன்றைக்குப் பயன்படுத்தி இருக்கிறேன்! நீங்கள் நிறைய குடிக்கணும்! ஹாஹா கீதாஜி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமையான வாசகம்! கஷ்டமான நேரங்கள் நம்மிடம் உள்ள பவரைத் தெரிந்து கொள்ள உதவுகிறதோ இல்லையோ நம்முடன் இருக்கும் மிக மிக நெருங்கிய உறவை அடையாளம் காட்டிவிடுகிறது! ஆனால் அப்படி அடையாளம் தெரியும் போது இட்ஸ் டூ லேட்டும் ஆகிவிடுகிறது.
பதிலளிநீக்குகீதா
அடையாளம் தெரியும் போது இட்ஸ் டூ லேட்! உண்மை தான் கீதா ஜி!
நீக்குஅந்தப் பெரியவர் கில்லர்ஜியோ!! ஹா ஹாஹ் ஹா ஹாஹ் ஆ...
பதிலளிநீக்குஅப்புறம் வருகிறேன் பணிகள்...அழைக்கிறது
கீதா
ஹாஹா... உங்களுக்கும் இப்படிச் சந்தேகமா கீதாஜி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நல்ல தொகுப்பு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குதி.ஜ.ர. குடும்பம் வறுமையில் வாடியது. பலரும் உதவி செய்ததாக கேள்விப் பட்டிருக்கேன். காணொளி பார்க்கணும். மத்தியானமா வரேன். மற்றபடி இணையம் வேலை செய்யலைனா அம்மாவுக்கு உதவணும்னு தோணுதே, அதுக்கே பாராட்டுகள். :))))
பதிலளிநீக்குExactly Geetha ma. we are fortunate in that.
நீக்குஇணையம் வேலை செய்யலைன்னா அம்மாவுக்கு உதவணும்னு தோணுதே! ஆமாம் நல்ல விஷயம் தான் கீதாம்மா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.
நீக்குஅருமையான தொகுப்பு.
பதிலளிநீக்குஅனைத்தும் நன்றாக இருக்கிறது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்குவடகம் ஹா.....ஹா.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குமிக மிக அற்புதம். காணொலி சூப்பரு.
பதிலளிநீக்குகாணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஜோதிஜி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
//hidden potential power// - சும்மாச் சொல்லிக்கவேண்டியதுதான். எப்போப் பார்த்தாலும் ஊசில குத்திட்டு, உன் தாங்கும் சக்தியைச் சோதனை செய்தேன் என்று சொல்ற மாதிரிதான்.
பதிலளிநீக்குவடகம் ஜோக் ரசித்தேன்.
படமும்தான்...ஹா ஹா
ஊசில குத்திட்டு, தாங்கும் சக்தியைச் சோதனை செய்வது - அப்பாடி...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். .
//ரசித்த படமும்// - இப்படி முன்னால போறவங்களைப் பார்த்துட்டு, அப்புறம் அவங்க திரும்பும்போதோ அல்லது அவங்களை நேராப் பாக்கும்போதோ ஏமாந்திருக்கீங்களா?
பதிலளிநீக்குஹாஹா... எதிர்பார்ப்புகள் நல்லதல்ல என்பதை புரிந்து இருந்தால் ஏமாற்றம் இருக்காது நெல்லைத் தமிழன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கிரிக்கெட்டைப் பற்றி முதியவர் கூறியது சரிதான்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குஅன்பு வெங்கட், நல்லதொரு காஃபி.
பதிலளிநீக்குபெரியவர் சொல்வது பலவகையிலும் பொருந்துகிறது .குளிர்தேசத்திலிருந்து வந்தவர்கள் அறிமுகப் படுத்திய விளையாட்டு
வெய்யில் தேசத்து மனிதர்களைப் புரட்டிப் போடுகிறது.
அந்தப் பெண்ணின் புகைப்படமே ஒரு கவிதை.
காத்திருப்பதும்,கசியவைப்பதுமே காதல். எழுதியவருக்குப் பாராட்டுகள்.
வெய்யில் தேசத்து மனிதர்களைப் புரட்டிப் போடுகிறது. கடந்த இரண்டு நாட்களாக கொஞ்சம் பரவாயில்லை வல்லிம்மா... கொஞ்சம் மழை பெய்ததால் குளிர்ந்திருக்கிறது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
முதியவர் கிரிக்கட் பற்றி விமர்சித்தது நகைச்சுவையாக இருந்தது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமசாமி ஜி!
நீக்கு