ஞாயிறு, 21 ஜூலை, 2019

தேசிய அருங்காட்சியகம் – சிற்பங்களும் சிலைகளும் – நிழற்பட உலா


படம்-1: கருடன் – ராஜஸ்தானில் கி.பி. பத்தாம் நூற்றாண்டிலிருந்து….

அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இந்த ஞாயிற்றுக் கிழமையில் வழமை போல சில நிழற்படங்களின் உலா! பொதுவாக நான் எடுத்த படங்கள் வெளியிடுவதுண்டு. இந்த வாரம் மாறுதலாக, மகள் அவரது அலைபேசி மூலம் எடுத்த சில படங்கள் பதிவில். இவை அனைத்தும் தலைநகர் தில்லியில் இருக்கும் தேசிய அருங்காட்சியகத்தில் எடுக்கப்பட்டவை.
 
தேசிய அருங்காட்சியகம் – தலைநகரின் பிரபல ஜன்பத் சாலையில் அமைந்திருக்கும் இந்த அருங்காட்சியகம் பற்றி முன்னரே கூட ஒரு பதிவு எழுதி வெளியிட்டு இருக்கிறேன் – அந்தப் பதிவில் அருங்காட்சியகத்தில் நடந்த நிஜாம் நகைகளின் கண்காட்சி பற்றி எழுதி இருந்தேன். பதிவினை படிக்காதவர்கள் – கீழேயுள்ள சுட்டியைச் சொடுக்கி படிக்கலாம்!


இன்றைய பதிவில் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் எண்ணற்ற சிற்பங்கள் மற்றும் சிலைகளில் சிலவற்றை பார்க்கலாம். எத்தனை எத்தனை சிற்பங்கள்… இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் எடுத்து வரப்பட்ட சிற்பங்களை இங்கே காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். பல சிற்பங்கள் சிதை[க்க]ப்பட்டு இருப்பதைப் பார்க்கும்போது மனதில் வலி. பழைமையக் காப்பதில் நமக்கு அத்தனை பொறுப்பு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.  வாருங்களேன், இந்த வாரத்தில் தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்திருக்கும் சில சிற்பங்களையும் சிலைகளையும் – நிழற்படங்களாகப் பார்த்து ரசிக்கலாம்!



படம்-2: உமா மஹேஸ்வரா – மத்திய இந்தியாவின் ”chசேடி”யிலிருந்து. உயரம் 50 செ.மீ., அகலம் 33 செ.மீ. – காலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டு.



படம்-3: குழலூதும் கிருஷ்ணர் – கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது – தென்னிந்தியாவிலிருந்து.


படம்-4: இப்படத்தில் இருக்கும் சிதிலங்கள் மனதைக் கொஞ்சம் படுத்துகின்றவே…


படம் – 5: விஷ்ணு பகவானின் அவதாரங்கள் – ஒரே சிற்பமாக! படமாக நிறைய பார்த்திருக்க முடியும். ஆனால் இப்படி சிற்பமாக பார்ப்பது அரிது.



படம்-6: குந்துநாதா – 17-ஆவது தீர்த்தங்கரர் – வெண்கலச் சிலை – 22.6 செ.மீ உயரம், 16.0 செ.மீ. அகலம்!



படம் – 7: காளிங்க நர்த்தனம் – வெண்கலச் சிலை.


படம் – 8: ஆனைமுகத்தான் - வெண்கலச் சிலையாக....


படம் – 9: பஞ்சதீர்த்தி பரஸ்வநாதா – குஜராத்திலிருந்து – வெண்கலச் சிலை – பதினைந்தாம் நூற்றாண்டு – உயரம் 25.9 செ.மீ., அகலம் 20.9 செ.மீ.


படம் – 10:  தியான கோலத்தில் கௌதம புத்தர் - வெண்கலச் சிலையாக...


படம் – 11: எத்தனை நளினம் இந்த வெண்கலச் சிலையில்...


படம் – 12: பதினெட்டு கரங்களுடன் சுண்டா தேவி - பீஹார் நாளந்தாவிலிருந்து.... உயரம் 35.5 செ.மீ., அகலம் 16.8 செ.மீ.  


படம் – 13: சிதிலடைந்த சிற்பம் ஒன்று - பார்க்கும்போதே கஷ்டமாக இருக்கிறது அல்லவா...


படம் – 14: தேவகியும் வசுதேவரும். கட்டியிருக்கும் ஆடைகளில் முருக்குக் கூட தத்ரூபமாக சிலை வடித்திருக்கிறார்கள். தியோகட், உத்திரப் பிரதேசத்திலிருந்து...


படம் – 15:


படம் – 16:


படம் – 17:


படம் – 18:


படம் – 19:


படம் – 20: காளிங்க நர்த்தனம் சிற்பமாகவும்...

என்ன நண்பர்களே, இந்த வாரம் வெளியிட்ட படங்களை ரசித்தீர்களா? படங்கள்/பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

34 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    படங்கள் அத்தனையும் அழகு...நீங்கள் எடுத்திருப்பதற்குச் சொல்லவே வேண்டாம் ரொம்ப அழகா எடுத்திருக்கீங்க

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதாஜி!.

      படங்கள் மகள் தனது அலைபேசியில் எடுத்தவை! நான் எடுத்தது அல்ல! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. ஆஹா !!! ரோஷ்ணிக்குட்டியா!!! சூப்பர்! பாராட்டுகள்! ரொம்பரொம்ப அழகாக எடுத்திருக்கிறார். அப்பாவே பல அடிகள் பாய்பவர் பெண் சொல்லணுமா...பல மடங்கு அடிகள் பாய்கிறார்!! பல கலைகள் அவர் கைவசம் இருப்பது தெரிகிறது!

      ஆர்ட்டிஸ்டிகை மைன்ட் அண்ட் ஹேன்ட்! மீண்டும் ஒரு லுகு விடுகிறேன்..

      கீதா

      நீக்கு
    3. அப்பா பல அடி - ஹாஹா... எனக்குத் தெரிந்தது கைவிரல் அளவு மட்டுமே கீதாஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. விஷ்ணு அவதாரம் அனைத்தும் ஒன்றாக அச்சிலை ரொம்ப அழகாக இருக்கிறது மேலிருந்து 5 வது படம்

    தேவகியும் வசு தேவரும் வாவ் ஆமாம் ஜி அந்த உடை முருக்கி இருப்பது கூட செம..நல்ல நுண்ணிய பார்வையில் வடிவமைக்கப்பட்டிருக்கு

    முதலில் தேவகியை ஆஞ்சு என்று நினைத்துவிட்டேன் வாய்ப்பகுதி அப்படித்தான் சொன்னது அப்புறம் முழுவதும் பார்த்ததும் தெரிந்தது பெண் சிலை என்று அப்புறம் உங்க கேப்ஷன். வாய்ப்பகுதி சிதிலம் அடைந்திருக்கு போல!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல சிலைகள் சிதிலம் அடைந்திருக்கின்றன. அதனால் என்ன சிலை என்பதை கீழே கொடுத்துள்ள குறிப்பின் மூலமே தெரிந்து கொள்ள முடியும். அவற்றையும் சேர்த்து படம் எடுத்தவற்றை இங்கே சேர்த்திருக்கிறேன். சில படங்கள் குறிப்பில்லாமல் இருந்ததால் சேர்க்க முடியவில்லை கீதாஜி.

      உடை முருக்கி இருப்பது எவ்வளவு அழகாக இருக்கிறது அல்லவா!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. கீழே லேபல் பார்க்க விட்டிருக்கிறேன் அதான்! ரோஷ்ணி பத்தி தெரியாம போயிருச்சு. வழக்கமா யார் பதிவு என்பதையும் பார்ப்பது வழக்கம்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லை கீதாஜி! அதனால் என்ன?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. குட்மார்னிங்.

    சிற்பங்களின் பழமை வியப்பூட்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம். சிற்பங்களின் பழமை வியப்பு தான். எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்னரே இப்படி திறமையானவர்கள் நம் நாட்டில் இருந்திருக்கிறார்கள்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. தசாவதாரம் ஒரே சிற்பத்தில்- ஆச்சர்யம். காளிங்க நர்த்தனம் அழகாய் இருக்கிறது. பஞ்சதீர்த்தி பரஸ்வநாதா???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தசாவதாரம் ஒரே சிற்பத்தில் - எத்தனை கலைநுணுக்கம் பாருங்கள்.... காளிங்க நர்த்தனம் பார்க்க அவ்வளவு அழகு. பஞ்சதீர்த்தி பரஸ்வநாதா - புத்த மதத்தினைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. சிதைந்த சிற்பங்கள் வருத்தத்தை உண்டாக்குகின்றன. காலத்தால் இயற்கையாய்ச சிதைந்தனவா? மக்களின்பொறுப்பின்மையால் சிதைந்தனவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில சிற்பங்கள் காலத்தினால் அழிந்தவை. சில சிதைக்கப்பட்டவை. பல சிற்பங்கள் பொறுப்பின்மையால்.... ஆனால் சிதைவுடன் பார்க்கும்போது மனதில் ஒரு வலி உண்டாவது உண்மை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. அனைத்துச் சிற்பங்களையும் மிகவும் ரசிக்க முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிற்பங்களை ரசிக்க முடிந்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. அனைத்துச் சிற்பங்களும் மனதை கொள்ளை கொள்ளகின்றன
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிற்பங்கள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. படங்கள் ஏழும், பதினொன்றும் அற்புதம் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 11-ல் எத்தனை நளினம் இல்லையா கில்லர்ஜி! எனக்கும் பிடித்தது அச்சிலை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. அருமையான படத் தொகுப்பு. என்ன சிற்பங்கள் எனக் குறிப்போடு தந்திருப்பது சிறப்பு. தற்போது அருங்காட்சியத்தில் பாதுகாக்கப்படுவதால் மேலும் இவை சிதிலமடையாதிருக்கும் என நம்புவோமாக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருங்காட்சியகத்தில் தகுந்த பாதுகாப்பு இருக்கும் என நம்புவோம். அது மட்டுமே வழி இல்லையா ராமலக்ஷ்மி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு இப்போது கணக்கிட்டுப் பார்த்தேன். ஒரு நூற்றாண்டில் மூன்று தலைமுறைகள் என்று உத்தேசமாக வைத்துக் கொண்டாலும் முப்பது தலைமுறைகள் கடந்து வந்துள்ளது. நான்கு தலைமுறைகளுக்கு முன்னால் தம் குடும்ப உறவுகளைப் பற்றி இந்தியாவில் தெரிந்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஒவ்வொரு முறையும் இதுபோன்ற சிலைகளைக் காணும் போது அப்போது இருந்தவர்களின் திறமையை புரிந்துகொள்ள முடிகின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்று தலைமுறை வரை தெரியாத பலர் இங்கே இருக்கிறார்கள். அப்பாவின் தாத்தா பற்றி தெரியாமல் பலர் உண்டு.

      சிலைகள் அப்போது இருந்தவர்களின் திறமையை இன்னமும் பறை சாற்றுகிறது என்பது உண்மை ஜோதிஜி...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. படங்கள் அனைத்தும் நேரில் பார்பதுபோல் உள்ளது. உங்கள் கேமரா மூலம் எங்களை தேசிய அருங்காட்சியகம் அழைத்து சென்றதிற்க்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரில் நீங்கள் சென்று பார்த்து வரலாம். இன்னமும் நிறைய சிலைகளும் கலைப் பொருட்களும் அங்கே உண்டு இராமசாமி ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. படங்கள் எல்லாம் அழகு. ரோஷ்ணிக்கு வாழ்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்குப் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. சிற்பங்கள் அருமை. அதனைச் சேதப்படுத்தியவர்களை நினைத்தால் கோபம் வருகிறது.

    ஆனால் தமிழகத்திலும் எண்ணற்ற கோவில்கள், சிற்பங்கள், சமீப காலங்களிலும் சேதப்படுத்தப்படுகின்றன. முனைவர் ஜம்புலிங்கம் சார், அத்தகைய கோவில்களைப் பற்றி நிறைய எழுதியிருப்பார் (கேட்பாரற்றுக் கிடைக்கும் புத்த சிலைகள் போன்று). சமீபத்தில், தஞ்சையில் ஒரு கோவிலையே, தங்கள் வீடாக ஆக்கிரமித்திருக்கும் அடாவடிப் படங்களைப் பார்த்தேன். அவங்க வீட்டு வாசல்ல, தஞ்சைப் பெரியகோவிலில் உள்ளதைப் போன்ற பிரம்மாண்டமான காவலர் சிற்பங்கள், கர்ப்பக்ரஹத்தையும் ஆக்கிரமித்திருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கால ஓட்டத்தில் பல சிலைகள் சிதைந்து விட்டன. பல சிதைக்கப்பட்டன. வாரணாசி நகரில் கூட பல கோவில்கள் இன்றைக்கு வீடுகளாக மாறிவிட்டன. வேணு மாதவர் கோவில் என பல கோவில்கள் அங்கே உண்டு - அப்படி வீடாக மாறிய கோவில் ஒன்றிற்கு ஒரு பயணத்தில் சென்றிருந்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  15. வட இந்திய கலாச்சாரம் அவர்களுக்கு கடவுளர் சிலையெல்லாம் பொம்மை தானே?..
    அவர்களை இந்தச் சிலைகள் கவர்கின்றனவா?..
    கவர்கின்றன என்றால் ஏன் அப்படியான சிலைகள் இருக்கும் கோயில்கள் அங்கே எழுப்பப்படுவதில்லை?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியான சிலைகள் கொண்ட கோவில்கள் இங்கே - வடக்கிலும் உண்டு ஜீவி ஐயா. ஹிமாச்சலப் பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும், உத்திரப் பிரதேசத்திலும் சிற்பங்கள் உள்ள கோவில்கள் உண்டு. என்னுடைய பதிவுகளிலும் அவை பற்றி எழுதி இருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. இந்த கலைப் படைப்புகளையும் சிதைப்பதற்கு எப்படித்தான் மனம் வருகின்றதோ மூர்க்கர்களுக்கு?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூர்க்கர்கள் - உண்மை தான் - எந்த ஒரு பழமையான விஷயத்தினையும் சிதைக்க எப்படி மனம் வருகிறதோ இந்த மனிதர்களுக்கு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....