ஞாயிறு, 30 ஜூன், 2019

தலைநகரில் பிரஹ்மோத்ஸவம் – நிழற்பட உலா



அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாள் இனிய நாளாக அமையட்டும். நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்த, கருத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இன்னும் படிக்காதவர்களும் படிக்கலாம்! 


இந்த ஞாயிறில் தலைநகரில், எங்கள் பகுதியில் திருமலா திருப்பதி தேவஸ்தானம் கட்டி இருக்கும் பாலாஜி மந்திரில் இந்த வருடம் நடந்த பிரஹ்மோத்ஸவ நிகழ்ச்சிகளில் சில நாட்கள் மட்டும் என்னால் போக முடிந்தது. அச்சமயத்தில் வெவ்வேறு வாகனத்தில் வீதி உலா, வெவ்வேறு அலங்காரத்தில் இருந்த பெருமாளையும் தாயாரையும் படம் எடுத்தேன். வேறு சில காட்சிகளும் எடுத்தேன். அந்தப் படங்கள் இந்த ஞாயிறில் ஒரு நிழற்பட உலாவாக! வாருங்கள் பார்த்து ரசிக்கலாம்!

பிரஹ்மோத்ஸவம் சமயத்தில் திருப்பதியிலிருந்தும், திருச்சானூரில் இருந்தும் பண்டிதர்கள் வந்திருந்தார்கள். இறைவனுக்கு அலங்காரம் செய்வதற்கு வந்திருந்த திரு சுரேஷ் பட்டாச்சார் அவர்கள் மிகத் திறமைசாலி! அவரது திறமையை படங்கள் சொல்லும்! கோலாட்டத்திற்காகவே சில பெண்களும் ஆண்களும் ஆந்திராவின் பல பகுதிகளிலிருந்தும் வந்து குழுவாக ஆடிப் பாடி கொண்டாட்டம் – இறைவனுக்காகவே ஆடலும் பாடலும்! தினம் தினம் சில கலை நிகழ்ச்சிகளும் – பாடல், நடனம் – என நடந்தது. கோவில் திருவிழா என்றாலே குதூகலம் தானே! தினம் தினம் உணவும் உண்டு என்றாலும் எனக்கென்னமோ, வீதி உலா முடிந்து திரும்பும் பக்தர்களுக்குக் கொடுத்த நீர் மோர் தான் தேவாம்ருதமாக இருந்தது! அடிக்கும் வெய்யிலுக்கு அந்த நீர் மோர் அம்ருதமாகத் தானே இருக்கும்!

   








































என்ன நண்பர்களே, இந்த வாரத்தில் பகிர்ந்து கொண்ட நிழற்படங்களை ரசித்து இருப்பீர்கள் என நினைக்கிறேன். படங்கள் குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

விரைவில் வேறு ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


28 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    காலையில் அழகான படங்கள் தரிசனம்.

    குழந்தைகள் அழகு.

    பெரிய சாந்துப் பொட்டு வைத்து அக்குழந்தை க்யூட்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலை வணக்கம் கீதாஜி!

      குழந்தையும் தெய்வமும் ஒன்று அல்லவா! அதான் அவ்வளவு அழகு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. நிறையப் படங்கள். மறுபடி பார்க்கணும். இரண்டு குழந்தைகளும் அழகோ அழகு! கீழிருந்து மேலாக ஐந்தாவது படத்தில் பெருமாளின் வலக்கரத்தில் இருந்து நீண்டு தொங்குவது என்ன என்றே புரியலை. நாதஸ்வர கோஷ்டி மனதில் மகிழ்ச்சியைத் தந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு வெங்கட்,
      திருமலாவின் சிறிய பதிப்பாக இந்த உத்சவம் காண்கிறேன்.
      படங்கள் வண்ணங்களோடு அற்புதம்.
      நல்ல சிரத்தையுடன் செய்திருக்கிறார்கள். பெண் குழந்தையும்
      அந்தப் பையனும் மிக அழகு.
      கோவிந்த தரிசனத்துக்கு மிக நன்றி.

      நீக்கு
    2. இப்போத் தான் மறுபடி படங்களைப் பார்த்தப்போ வாள் நீண்டு தொங்குவது புரிந்தது. கோமதியும் சொல்லி இருக்காங்க போல! காலை அவசரத்தில் புரியலை!

      நீக்கு
    3. கரத்திலிருந்து எதுவும் நீண்டு தொங்கலை. இடையில் வாள் வைத்திருப்பதுபோல செட் பண்ணியிருக்காங்க. வலக் கரம்தான் வரம் அருள் முத்திரை தருதே. அதுபோல இடது பக்கம் வில் வைத்துள்ளார்கள். அதுவும் தனியாக. இடது கைதான், என்னைச் சரணடை என்று சொல்லுதே

      நீக்கு
    4. வணக்கம் கீதாம்மா.... நாதஸ்வர கோஷ்டி இங்கே தில்லி கோவிலில் நிரந்தரமாக உண்டு. அவர்கள் இல்லாமல் நித்திய பூஜைகள் இல்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    5. திருமலை வாசனின் தரிசனம் - உங்களுக்கும் பிடித்திருக்கும் என்பதில் மகிழ்ச்சி வல்லிம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    6. ஆமாம் கீதாம்மா.... வாள் தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித அலங்காரம். அனுபவித்து, பார்த்துப் பார்த்து அலங்காரம் செய்தார் சுரேஷ் பட்டாச்சார்யார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    7. இடையில் வாள்... ஆமாம் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. படங்கள் யாவும் அழகு, துல்லியம்.ரசித்தேன். குட்மார்னிங்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலை வணக்கம் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. படங்கள் எல்லாம் மிக அழகு.
    நானும் நேரில் கலந்து கொண்ட உணர்வை தருகிறது படங்கள் .
    குழந்தைகள் மனதை கவர்ந்தார்கள்.

    பெருமாள் கையில் வைத்து இருக்கும் குறுவாள் கொஞ்சம் பெரிதாக இருக்கிறது.
    அழகர் கோவிலில் சுந்தர்ராஜபெருமாள் இடுப்பில் இருக்கும் இந்த குறுவாள்.
    பெருமாளும், தாயாரும் சிரிப்பது போல் இருக்கிறது. அத்தனை துல்லியமாய் படம் எடுத்து தரிசனம் செய்ய வைத்தமைக்கு நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படங்கள் நேரில் கலந்து கொண்ட உணர்வை தருகிறது// ஆஹா.... மகிழ்ச்சி கோமதிம்மா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. அழகிய தரிசனக்காட்சிகள் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. அருமையாகக் காட்சிப் படுத்தியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  8. அழகான படங்கள்..
    ஆஹா... அற்புத தரிசனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  9. குழந்தைகளும் தெய்வங்களும் கண்களை நிறைக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

      நீக்கு
  10. அழகிய அலங்காரங்கள். படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....