செவ்வாய், 11 ஜூன், 2019

தில்லியிலிருந்து திருவரங்கத்திற்கு!

ரயில் பயணங்களில் – 27 May 2019


தில்லியிலிருந்து எங்களுடன் பயணித்த இரு பக்கத்து இருக்கைக்காரர்கள் இன்று காலை மத்திய பிரதேசத்தின் போபாலில் இறங்கி விட்டனர். எங்கள் இருவருக்கும் மேல் பர்த் தான் கிடைத்தது. மாற்றிக்கலாம் என்று சொன்ன போது, இல்லை வேண்டாம் என்று சொல்லிவிட்டனர். சரி! பிரச்சனையொன்றும் இல்லை என்று சொல்லி விட்டு, மேலே ஏறி எங்கள் பர்த்தில் படுத்து விட்டோம். அவர்கள் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, அவர்கள் நண்பர் ஒருவரையும் அழைத்து வந்து, பிறகு அவரும் இவர்களோடு உறங்கிப் போனார்.
 
காலை போபாலில் இவர்கள் இறங்கியதும், அங்கே ஏறிய மூவரில் இருவர் வயதான தம்பதிகள். ஒருவர் சென்னை வரைக்கும் செல்பவர். தூங்குவதற்கு மேல் பர்த் இருந்தால் நன்றாக இருக்கும். தனக்கு லோயர் பர்த். இறங்கவே மாட்டேன் என்று வயதானவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். நாங்கள் எங்களுடைய ஒரு பர்த்தை மாற்றிக் கொடுத்தோம் :)

இருவரில் தாத்தாவுக்கு வேற இடத்தில் இருக்கை. இருந்தும் பாட்டியின் அருகிலேயே அமர்ந்து கொண்டார். காலை உணவுக்கு பராட்டா, ஊறுகாய், தயிர் எடுத்து வந்து சாப்பிட்டனர். மதியம் பேல்பூரி போல் கவரில் எடுத்து வந்து ஸ்பூனால் சுவைத்தனர். அவர்கள் மஹாராஷ்ட்ராவின் நாக்பூரில் இறங்கி விட்டனர்.

பாட்டியின் இருக்கைக்கு நாக்பூரில் ஏறியுள்ளார் ஒருவர் :) பயணங்களில் சந்திக்கும் மனிதர்களில் தான் எத்தனை விதம்!!! எங்கள் கோச்சில் பெரும்பாலானோர் டெல்லி மற்றும் ஷிம்லாவுக்கு சுற்றுலா வந்தவர்கள். டெல்லிக்கு போகும் போது இருந்த பயணம் போலில்லாமல் இந்தப் பயணம் ஏனோ வெறுப்பாயிருக்கிறது.

பொழுது போகாமல் - 28 May 2019

நேற்று பொழுதும் போகாமல், எனக்கும் உடல் சற்று சரியில்லாமல் வாந்தியுடன் கடந்தது...:( இன்று ரயில் ஒண்ணே கால் மணிநேரம் தாமதமாக சென்னை வந்து ஒருவழியாக சேர்ந்தது. தம்பி வீட்டுக்கு வந்தாச்சு. நாளை தான் திருச்சிக்கு கிளம்பணும்!

அன்பு விசாரிப்புகள் – காற்றின் மொழி – ஷாப்பிங் 29 May 2019



உடல் நிலை சரியில்லை என்று முகநூலில் சொன்னதும் நலம் விசாரித்த அனைவரின் அன்பிற்கும் நன்றி. இப்போது உடல்நிலை பரவாயில்லை. அப்போது இருந்த மனநிலையும் ஒரு காரணமாக இருக்கலாம் :)

காற்றின் மொழி!!!

பயண அசதி தீர ஓய்வு எடுத்து விட்டு, மதியம் நெடுநாட்களாக பார்க்க நினைத்த, 'ஜோ'வின் நடிப்பில் 'காற்றின் மொழி' திரைப்படம் பார்த்து ரசித்தேன். ஒரு இல்லத்தரசியின் மன எண்ணங்களை அழகாக எடுத்து சொல்லியுள்ளார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்திறமைகள் வேறுபடுகின்றன.

மனதிற்கு பிடித்த வேலை எதுவாயினும், எந்த தடையுமின்றி அதில் நிலைத்திருப்பது வரம். அதற்கு குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம்!

வித்யாபாலனின் நடிப்பில் ஹிந்தியில் வெளியான "துமாரி சூலு" என்ற படத்தின் ரீ மேக் தான் இந்த காற்றின் மொழி!

ஷாப்பிங்!!

மாலை தம்பி இருக்கும் ஏரியாவிலேயே ஊர்சுற்றல். ரோஷ்ணிக்கு பள்ளித் திறக்க இன்னும் நான்கு நாட்களே உள்ளது. அவளுக்கு தேவையானப் பொருட்கள் சிலவற்றை இங்கேயே வாங்கிக் கொண்டேன். அது போக அவளுக்கு மாமாவின் அன்புப் பரிசுகளும் சேர்ந்து கொண்டன :)

திருவரங்கம் நோக்கி:

மாலை ரயிலுக்கு கிளம்பணும். ராத்திரி கூட்டுக்கு திரும்பி விடுவேன் :) ஒரு மாதத்திற்கும் மேலாக பூட்டிக் கிடக்கும் வீட்டை தூசி தட்டி, எல்லாவற்றையும் மாற்றி பழைய நிலைக்கு கொண்டு வரணும்.

பல்லவனில்… – 29 May 2019



ஏறியதிலிருந்து அடிதடி! எதற்கு சீட்டுக்கு! விடுமுறை முடியப் போகிறது என்பதாலோ என்னவோ, பயங்கர கும்பல். எங்கள் இருப்பிடத்திற்கு போவதற்கே திண்டாட்டமாகிப் போனது. Unreserved கோச்சில் ஏற வேண்டிய மக்களும் எங்களுடனேயே. வாஷ்பேசினுக்கு அடியிலும் அமர்ந்திருக்கும் மக்கள் :)

அதிலும் எதிரெதிர் இருக்கையில் எங்களுக்கு எதிரே ஒரு குடும்பம். மூவர் அமரும் இருக்கையில் மகள்களை படுக்கச் சொல்லிட்டு, நாங்கள் கால் வைக்கும் இடத்தில் அந்தம்மா அப்படியே உட்கார்ந்து கொண்டார் :) அதுவும் வீட்டில் தேங்காய் துருவும் போது ஒரு காலை சம்மணமிட்டு இன்னொரு காலை நீட்டுவோமே அப்படி :)

மகளிடம் பரிந்துரைக்கிறார் எங்களை நகரச் சொல்லிட்டு அங்கே அமரும் படி :) வருகின்ற ஐயிட்டங்களை உள்ளே தள்ளுவதும், குப்பைகளை வெளியே வீசுவதும், அப்படியே சாய்ந்து கொள்வதும் :) - எத்தனை சுகமான மனிதர்கள்?

திருவரங்கம் சேர்ந்தாச்சு… - 1 ஜூன் 2019

எங்க போய்ட்டீங்க ஆளையே காணோம்?

ஊருக்கு போயிருந்தேன்.

எந்த ஊருக்கு?

டெல்லிக்கு. 40 நாளாச்சு. இன்னிக்கு தான் வந்தேன்.

சொல்லவே இல்ல. அங்க வெயில் எப்படி?

ம்ம்ம். இங்க இருக்கறத விட ஜாஸ்தி தான் :) 47!

எப்படி இருந்தீங்க?

புழுக்கம் இல்ல. அதனால சமாளிக்க முடிஞ்சது.

ஓ!!!

அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள், மளிகைப் பொருட்கள் கொண்டு வருபவர், காய்கறி விற்பனையாளர், பால்க்காரர், என எல்லோருடைய விசாரிப்புகள்.

வீட்டுக்குத் திரும்பியாச்சு. புழுதியாக இருந்த வீட்டை சுத்தம் செய்து, துடைத்து, வைத்து விட்ட சென்ற உணவுப் பொருட்கள் என்னவாயிற்று என்று பார்த்து, திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகளை மாற்றி, பால், தண்ணீர், காய்கறி என ஒவ்வொன்றாக வாங்கி பழைய நிலைக்கு திரும்பி வருகிறேன் :)

காலை வேளையை Hello FM உடன் இணைத்துக் கொண்டாயிற்று :) குப்பைகளை வழக்கம் போல பிரித்துப் போட துவங்கியாச்சு :)

திங்கள் முதல் மகளுக்கு பள்ளி! இனி தினம் தினம் ஓட்டம் தான்! 
  
என்ன நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்....

நட்புடன்

ஆதி வெங்கட்

30 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி.

    டெல்லிக்கு போகும் போது இருந்த பயணம் போலில்லாமல் இந்தப் பயணம் ஏனோ வெறுப்பாயிருக்கிறது//

    கண்டிப்பாக இருந்திருக்கும். பின்னே வெங்கட்ஜியை விட்டு வருவது கஷ்டமாக இருந்திருக்கும் இல்லையா. அதுவும் மகள் அழுதிருப்பாரே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  2. குட்மார்னிங்.

    ரயில் பயண அனுபவங்களைபேஸ்புக்கில் படித்தேன். இப்போது உடல்நிலை முற்றிலும் குணமாகியிருக்கும் என்றுநம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. காற்றின் மொழி அமேசானில் வந்த உடனேயே பார்த்து ரசித்து விட்டேன்.

    படிக்கும்போது தெரிகிறது, இன்றைய பதிவுகள் அனைத்தையுமே நான் இரண்டாம் முறை வாசிக்கிறேன் என்று!

    ஹிஹிஹிஹி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காற்றின் மொழி - இன்னும் பார்க்க வில்லை. பார்க்க வேண்டிய படங்கள் என சிலவற்றை பட்டியல் இட்டு வைத்திருக்கிறேன் - ஆனால் பார்க்கத் தான் முடிவதில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. திரும்பி வரும் மன நிலையினால் உடல் நலம் சரியில்லாமல் வாந்தி வந்திருக்கலாம். இப்போது குணமாயிருக்கும். பேக் டு ரொட்டின் இல்லையா?

    அடுத்த வரில நீங்களே சொல்லிட்டீங்க இதை...

    காற்றின் மொழி நன்றாக இருக்கிறதா? நான் பார்க்கவில்லை. பார்க்க வேண்டும் என்று நினைத்த ஒன்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  5. ஆதி பல்லவனும் சரி கோவை எக்ஸ்பெரெஸ், சென்னை எக்ஸ்ப்ரெஸ்,பிருந்தாவன் எல்லாமே பகல் ரயில்கள் அனைத்தும் இப்படித்தான். மக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் இவர்களை எப்படி விழிப்புணர்வு பெறச் செய்ய முடியும் என்று எனக்கு ஒவ்வொரு முறையும் தோன்றுவதுண்டு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விழிப்புணர்வு - அவர்களுக்காகத் தோன்றினால் தான் உண்டு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  6. முகநூலிலும் படித்தேன். இங்கே வந்தும் உடல்நிலை சரியில்லாமல் போய் இருந்ததே! இப்போத் தேவலையா? இந்த வெயிலுக்கு வயிறு சொன்னபடி கேட்காது! சாப்பிடவும் பிடிக்காது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெயிலுக்கு வயிறு சொன்னபடி கேட்காது - :)) உண்மை தான் கீதாம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. ஆதி! பல்லவனில் பொது வகுப்பில் தான் பயணச்சீட்டு எடுத்துப் பயணம் செய்கிறீர்களோ? ஏன் ஏசியில் போகலாமே! கொஞ்சம் வசதியாக உட்கார முடியும்! ஒவ்வொரு முறையும் இந்தப் பொது வகுப்பில் போயிட்டு நீங்கள் சிரமப்படுவதைக் குறித்து எழுதும்போதெல்லாம் நினைத்துக் கொள்வேன்! இதுக்காகத் தான் நாங்க ஏசியிலேயே பயணச்சீட்டு முன்பதிவு செய்கிறோம். நிறையப் பட்டாச்சு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குளிரூட்டப்பட்ட பெட்டி ஒத்துக் கொள்வதில்லை - அடைத்து வைத்தால் உமட்டல் - நீண்ட தூரம் என்றால் மட்டுமே வேறு வழியின்றி அதில் பயணம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  8. முகநூலில் படித்து விட்டாலும் இங்கும் படிக்க தூண்டும் எழுத்து.
    போகும் போது பயணம் உற்சாகம், வரும் போது உடல்நிலை சரியில்லை மனம் தான் காரணம்.
    இனி எப்போதும் போல் கடமைகள் அதில் நேரம் சரியாகிவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  9. உடல் நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனானி.

      நீக்கு
  10. விடுமுறையை அழகாக கடத்தியமைக்கு வாழ்த்துகள் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  12. விடுமுறை அழகாகக் கழிந்துவிட்டது...இனி ரெகுலர் வாழ்க்கை.... பயணத்தில் நிறையப் பகிர்ந்துகொண்டீர்கள். வாழ்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  13. கோவை டு டெல்ஹி அண்ட் டு ஸ்ரீரங்கம் ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  14. இரயில் பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  15. இயல்பு நிலைக்கு திரும்பி விட்டீர்களா? ஒருமாதமாக உங்களோடு இருந்து விட்டு இப்போது வெங்கட்டிற்கும் கஷ்டமாகத்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....