காஃபி வித் கிட்டு – பகுதி – 34
அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும்
இனிய காலை வணக்கம். நலம் தானே! நான் நலம்!!
விடைபெறுகிறேன்….
கடந்த மாதம் 24-ஆம் தேதிக்குப்
பிறகு இப்பக்கத்தில் பதிவுகள் ஒன்றும் வெளியிடவில்லை. சற்றே இடைவெளிக்குப் பிறகு
இன்றைக்கு ஒரு பதிவு! அலுவலகத்தில் பிடுங்கப் பிடுங்க வந்து கொண்டிருக்கும்
ஆணிகள்! சற்றேறக்குறைய ஒன்பது வருடங்களாக என்னுடன் பழகிய மடிக்கணினி “ப்ளீஸ் என்னை
விட்டு விடேன், முடியல!” என்று கதறக் கதற அழுது அவ்வப்போது தானாகவே நின்று
விடுகிறது. தலைநகரின் சூடு அதற்கும் தாங்கவில்லை – சூடேறி நின்றுவிடுகிறது
தானாகவே! ”நான் விடைபெறுகிறேன்” என்று அது என்னிடம் கதறுவது கேட்கிறது! அதையே
நானும் வலையுலகிற்குச் சொல்லி விடலாமா என்ற எண்ணமும் வருகிறது! எல்லாமாகச்
சேர்ந்து பதிவுகள் எழுதுவதில் இத்தனை பெரிய இடைவெளி! ஏன் இத்தனை இடைவெளி என சில
நண்பர்களும் வீட்டிலும் கேட்டு விட்டார்கள்! சரி இந்த சனிக்கிழமையில் காஃபி வித் கிட்டு
பதிவு ஒன்றாவது எழுதலாம் என எழுதத் தொடங்கி இதோ வெளியிட்டு விட்டேன்!
எழுத வேண்டிய விஷயங்களுக்கு
ஒன்றும் குறைவில்லை! எழுதினால் எழுதிக் கொண்டே இருக்கலாம்! தினம் ஒன்று எழுத
முடியாவிட்டாலும், முடிந்த போது பதிவுகள் எழுத வேண்டும். பார்க்கலாம்!
ரசித்த வாட்ஸப் ஸ்டேட்டஸ் ஒன்று:
காலையில் ஒரு தொலைபேசி அழைப்பு –
”என்னங்க, நான்தான் பேசறேன்னு
ஆரம்பிச்சு ஒரே அழுகை. அழுதுகிட்டே என்கிட்ட மன்னிப்பு வேற கேட்டா… அழும் போதே,
இனி வாழ்நாள் முழுவதும் உங்ககிட்ட சண்டையே போட மாட்டேன்னு சொன்னா… இனிமே நீங்க
என்ன சொன்னாலும் கவனிப்பேன். என்ன சொன்னாலும் கேட்பேன்னு சொன்னா. நான் அப்படியே
ரொம்ப உணர்வு பூர்வமா கேட்டுட்டே இருந்தேன்…..
எனக்கு ஒரே மகிழ்ச்சியான உணர்வு…. தொடர்ந்து கேட்டுட்டே இருந்தேன்….
ராங் நம்பர்னு சொல்ல மனசு வரலே!
அந்த பிரமாதமான உணர்வு உண்மையாக ஆகிடாதான்னு ஒரு ஏக்கம்தான் வேறென்ன…..
ஆங்கிலத்தில் ரசித்த ஒரு வாசகம்:
Death asked Life: - Why does
everyone love you and hate me?
Life replied: - Because I am
beautiful lie and you are painful truth…..
ராஜா காது கழுதைக் காது – அவங்க மட்டும் என்ன
ஸ்பெஷல்?
சமீபத்தில் தேசிய அருங்காட்சியகம்
சென்றிருந்தோம். அங்கே ஒரு பகுதியில் மட்டும் தண்ணீர் போன்ற எதையுமே எடுத்துச்
செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு. அந்தப் பகுதி அல்லாமல் மற்ற இடங்களில்
கட்டுப்பாடு இல்லை. நாங்கள் அப்படி ஒரு இடத்தில் பார்வைக்கு வைத்திருந்தவைகளை
பார்வையிட்ட போது தாகம் தீர்த்துக் கொள்ள தண்ணீர் குடித்தோம். பின்னாலிருந்து ஒரு
குரல் – தமிழ்க் குரல்! “ அவங்க மட்டும் தண்ணீர் பாட்டில் வச்சுருக்காங்க, நமக்கு
அனுமதி தரல” என்று சண்டைக்கு வருவது போல சொல்லிக் கொண்டிருந்தார் ஒரு பெண்மணி!
விளக்கம் சொல்லலாம் என நினைத்து விட்டு விட்டேன் – வாசலிலேயே சொல்லி தான்
அனுமதித்தார்கள் - சொல்லிப் புரிய வைக்க முடியாது இவர்களுக்கு! என்று விட்டு
விட்டேன்!
ரசித்த விளம்பரம் – பிக் பஜார் – ஈத் ஸ்பெஷல் - 2016:
மூன்று வருடங்களுக்கு முந்தைய
விளம்பரம் தான் என்றாலும் இப்போதும் ரசிக்க முடியும். பாருங்களேன்.
பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:
2011-ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில்
எழுதிய ஒரு பதிவு இப்போது இங்கே மீண்டும் – சுட்டியாக!
இந்த வாரத்தின் புகைப்படம்:
சமீபத்தில் தலைநகரில் நடந்த விழா
ஒன்றில் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த சிறுவன்… தொலைநோக்குப் பார்வை என்பது
இது தானோ?
என்ன நண்பர்களே, இந்த வாரத்தின்
காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச்
சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
நட்புடன்
வெங்கட்
புது தில்லி
குட்மார்னிங் வெங்கட்.
பதிலளிநீக்குநானும் உங்கள் பதிவு இன்று வந்துவிடும், நாளை வந்து விடும் என்று பார்த்திருந்தேன். முடிந்தபோது பதிவிடுங்கள். விடவேண்டாம்.
வணக்கம் ஸ்ரீராம்.
நீக்குசரியாக இரண்டு வாரங்கள் இடைவெளி! தொடர்ந்து பதிவிட வேண்டும் - பார்க்கலாம்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
ராங் நம்பர் இன்பங்கள்! ஹா...ஹா..ஹா...
பதிலளிநீக்குஆங்கில வாசகம் அருமையோ அருமை.
தமிழர்கள்தான் எப்பவுமே உரிமைக்குரல் கொடுவார்கள்!
ராங் நம்பர் இன்பங்கள் - பல சமயங்களில் துன்பங்கள் தான்! :)
நீக்குஆங்கில வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
விளம்பரம் ஓகே... எனினும் எந்த மருத்துவரும் இப்படிச் செய்ய மாட்டார்கள்! அதுவும் அதே அறையிலேயே... ஹா.. ஹா... ஹா...
பதிலளிநீக்குஎந்த மருத்துவரும் இப்படிச் செய்ய மாட்டார்கள் - இருக்கலாம்! நான் சில மருத்துவர்களைப் பார்த்திருக்கிறேன்! அவர்கள் சூழல் அப்படி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
அந்தச் சிறுவனின் மனதுக்குள் மிகப்பெரிய கவலை எதுவோ ஒன்று அவனை வாட்டிக்கொண்டிருக்கிறது. அவனின் அன்புக்குரிய பொம்மையை வீட்டில் வைத்துவிட்டு வந்திருக்கலாம். அங்கு யாராவது அதை எடுத்துக்கொண்டு விடுவார்கள் என்கிற கவலை இருக்கலாம்...
பதிலளிநீக்குஅவன் மிக விரும்பிய எதுவோ ஒன்று அவனுக்கு மறுக்கப்பட்டிருக்கலாம். உதாரணமாக ஐஸ்க்ரீம்...
அப்படி என்ன பெரிய கவலை என்பது புரியவில்லை - விழாவில் பார்த்தபோது ரொம்பவும் முயற்சித்து தான் இந்தப் படம் எடுக்க முடிந்தது - சிறுவனின் அப்பா மொபைலிலும் நான் கேமராவிலும்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
காலையில் வந்த தொலைபேசி அழைப்பு...1970களில் வெளியான மன்மத லீலை திரைப்படத்தில் வருகின்ற ஹலோ மை டியர் ராங் நம்பர் பாடலை நினைவுபடுத்தியது.
பதிலளிநீக்குஹலோ மை டியர் ராங் நம்பர் பாடல் - ஹாஹா... நானும் கேட்டிருக்கிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
விடைபெறுகிறேன் தலைப்பைப் படித்ததும் என்னவோ ஏதோ என நினைத்துவிட்டேன். புது மடிக்கணினி வாங்க வாழ்த்துகள். இப்போத்தான் கடந்த பத்து நாட்களாகப் பழைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய டெஸ்க் டாப்பின் ஹார்ட் டிஸ்கில் இருந்து எல்லாவற்றையும் காப்பி செய்துவிட்டு அதை அழித்து டெஸ்க் டாப்பைக் கொடுத்தோம். இப்போ டெஸ்க் டாப்பே இல்லை. மடிக்கணினி மட்டும் தான்! ஆட்கள் வந்தால் அவங்களோடு உட்கார்ந்து ஒரு நாள் முழுவதும் ஆகி விடுகிறது! மற்றவற்றுக்குப் பின்னர் வருகிறேன்.
பதிலளிநீக்குடெஸ்க் டாப் - இடம் அடைத்துக் கொள்ளும் என்பதால் வாங்கும்போதே மடிக்கணினி தான் வாங்கினேன். புதியது வாங்க வேண்டும் - பழைய கணினி வேணாம் விட்டுடுன்னு சொல்ற வரைக்கும் விடறதா இல்லை! ஹாஹா...
நீக்குஉறவினர்கள் எல்லாம் வந்து போயாச்சா?
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
ஓ வெங்கட்ஜி பதிவு வந்தாச்சு...இன்று காலை பார்க்க முடியலை...கரன்ட் போய் போய் வந்து கணினி படுத்தல்...
பதிலளிநீக்குகுட்மார்னிங்க் வெங்கட்ஜி!!
வருகிறேன் பதிவு பார்க்க...
கீதா
வணக்கம்.
நீக்குஆமாம்... சரியாக இரண்டு வாரம் கழித்து இன்றைக்கு மீண்டும் ஒரு பதிவு இப்பக்கத்தில்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!
தொடர்ந்தால் மகிழ்வோம்..நானும் பெங்களூருக்கும் மதுரைக்கும் மாறி மாறி அலைவதால் மடிக்கணினியைத் தூக்கிக் கொண்டு அலைய முடியாததால் எழுதவோ பின்னூட்டமிடவோ முடியவில்லை..ஆனால் அனைவரின் பதிவுகளையும் அலைபேசி மூலம் படித்துவிடுகிறேன்.எழுத முடியாவிட்டாலும் பின்னூட்டமிட முடியாமல் இருப்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் உள்ளது ..
பதிலளிநீக்குமடிக்கணினியைத் தூக்கிக் கொண்டு அலைவது கொஞ்சம் கடினமான வேலை தான். ஊருக்கு வரும்போது அதனாலேயே எடுத்து வருவதில்லை.
நீக்குஅலைபேசி மூலம் படித்தாலும் கருத்துக்களை எழுதுவதில் சற்று சிரமம் தான். நானும் பலரது பதிவுகளை படித்தாலும் அலைபேசியில் எழுத முடிவதில்லை.
தொடர்ந்து சந்திப்போம்....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
காஃபி வித் கிட்டும் தொடரட்டும் ஜி...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குவலையுலகைவிட்டு விலகிவிட வேண்டாம் ஐயா
பதிலளிநீக்குமுடிந்தபோது பதிவிடுங்கள்
தொடர்ந்து பதிவிட வேண்டும் என்று தான் நினைத்திருக்கிறேன்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
முடிந்த போது தொடருங்கள் வெங்கட்.
பதிலளிநீக்குகாணொளி அருமை.
மற்று அனைத்தையும் ரசித்தேன்.
உற்சாகம் தரும் வார்த்தைகளுக்கு நன்றிம்மா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
இன்றைக்கு உங்கள் தலைப்பை காலையிலேயே நான் விரும்பவில்லை. அப்போவே சொல்லணும் என்று நினைத்தேன் 'விடை பெறுகிறேன்' என்பதுபோன்ற அறச்சொற்களை எப்போதும் உபயோகப்படுத்தக் கூடாது (இடுகையின் கண்டெண்ட் சரியாக இருந்தாலும்).
பதிலளிநீக்குஅவங்க அங்க வந்திருந்தபோதும் தொடர்ந்து இடுகையை வெளியிட்ட நீங்க (பதில் கொடுக்கலைனாலும்), திடுமென இடைவெளி விட்டது ஏன் என்று யோசனையாகவே இருந்தது.
தொடர்ந்து எழுதுங்கள்.
அறச் சொற்கள் பயன்பாடு - தவிர்க்க வேண்டியவை தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
காபி சுவைத்தது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குமுதலில் விடை பெறுகிறேன் என்பதைப் பார்த்ததும் ஆ என்று தோன்றிட உள்ளே வாசித்ததும் ஹப்பா என்றிருந்தது. கணினி தான் விடை பெறுகிறது...ஹப்பா புதுக் கணினி வருது வாழ்த்துகள். ஜி நீங்கள் அட்லீஸ்ட் முடிந்த போதெல்லாம் எழுதுங்கள் ஜி. எனக்கும் எழுதுவதில் சுணக்கம் இருக்கிறது. விரைவில் என்னை உத்வேகப்படுத்திக் கொண்டு எழுத வேண்டும்.
பதிலளிநீக்குகீதா
நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் கீதாஜி! நானும் முடிந்த வரை எழுதுகிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!
ராங்க் நம்பர்.......ஹா ஹா ஹா..
பதிலளிநீக்குகுழந்தை படம் ரொம்ப க்யூட்! அழகு. ஆனால் கண்களில் ஏதோ ஒரு ஏக்கம் தெரிகிறது போல இருக்கிறதே. பாவம்!! எதற்கோ?
வாசகம் அருமை...
காணொளி மற்றும் ஜில் ஜில் ரமாமணி பார்த்துவிட்டு அப்புறம் வருகிறென்...
கீதா
குழந்தையின் கண்களில் தெரியும் ஏக்கம்.... உண்மை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!
போனவாரம் உங்கள் பதிவுகள் இல்லையே என்று தேடித்தேடி பார்த்தேன்! என்னாலும் தொடர்ந்து வலைபதிவு எழுத முடியவில்லை! முயற்சிக்க வேண்டும். இன்றைய பதிவு சுவாரஸ்யமாக இருந்தது! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குசரியாக இரண்டு வாரங்கள் இடைவெளி....
நீக்குநீங்களும் முடிந்த போது எழுதுங்கள் சுரேஷ்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
புதிய கணினி வாங்கி தொடர்ந்து எழுத வாழ்த்துகள் ஜி
பதிலளிநீக்குராங்கால் ரசித்தேன்...
காஃபி வழக்கம் போல மணத்தது
புதிய கணினி - பார்க்கலாம்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
கணினிகளுக்கு ஆயுள் கம்மியே. மற்றபடி இயலும் பொழுது எழுதி வாருங்கள். பல இடங்களுக்கும் பயணிக்கும் வாய்ப்பு கொண்டிருக்கிறீர்கள். படங்களுடன் பகிரும் அனுபவங்கள் சிறப்பாக உள்ளன. தொடருங்கள்.
பதிலளிநீக்குகணினிகளின் ஆயுள் - உண்மையே.... சில கணினிகள் ரொம்பவே சீக்கிரம் கெட்டு விடுகின்றன.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
வெகு நாட்களுக்கு பிறகு உங்கள் பதிவு கண்டு மகிழ்சி அடைந்தேன். மிகவும் அருமையாக இருந்த்து. புதிய கணிணி வாங்க வாழ்த்துக்கள். தினமும் உங்கள் பதிவு படிக்கும் பழக்கம் இருப்பதால் சமிபத்தில் ஏற்பட்ட இடைவெளி சற்று சிரமமாக இருந்தது.
பதிலளிநீக்குசரியாக இரண்டு வாரங்கள் இடைவெளி. பதிவுகள் எழுத முடியாத சூழல்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.
இரண்டு வாரம் இடைவெளி என்றாலும் ஜில் ஜில் ரமாமணியோட வந்தீங்க பாருங்க, சூப்பர்.
பதிலளிநீக்குஆஹா ஜில் ஜில் ரமாமணி உங்களுக்கும் பிடித்தவர் ஆயிற்றே! :))))
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.