திங்கள், 24 ஜூன், 2019

ஆதியின் அடுக்களையிலிருந்து…





சென்ற சில நாட்களில் நான் செய்த சில சமையல் முயற்சிகளின் தொகுப்பு இந்தத் திங்களில்! எங்கள் பிளாக் ”திங்க”க் கிழமைக்கு போட்டியாக வெளியிடப்பட்ட பதிவு அல்ல என்பதை நீங்கள் கேட்பதற்கு முன்னரே சொல்லி விடுகிறேன்!

ஐஸ்க்ரீம் சோடா:



தலைநகர் தில்லி சென்றிருந்த சமயத்தில் ஒரு கடையில் இந்த ஐஸ்க்ரீம் சோடா சுவைத்தோம்.  அப்போதே ஊருக்குச் சென்று நம்ம ஊர் பன்னீர் சோடாவில் இந்த ஐஸ்க்ரீம் சோடாவை முயற்சிக்க வேண்டும் என முடிவெடுத்திருந்தேன். திருவரங்கம் வந்து சேர்ந்து சில நாட்களிலேயே செய்து சுவைத்தோம். செய்வது ஒன்றும் பெரிய கம்பசூத்திரமல்ல!

கால் டம்ளருக்கு பன்னீர் சோடா விட்டு, ஐஸ்க்ரீம் சேர்க்கணும். அது மேலே ஏதாவது எசென்ஸ் விட்டு திரும்ப சோடா விட்டால் நுரைத்து ரெடியாகி விடும். கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து ருசித்து சுவைக்க வேண்டியது தான்! நீங்களும் வீட்டில் செய்து சுவைத்துப் பாருங்களேன்!

மட்கா மேங்கோ குல்ஃபி – மகளின் கைவண்ணத்தில்:



மாம்பழ சீசன் என்பதால் அதை வைத்து மண்குவளையில் செய்த குல்ஃபி!! செய்வது மிகவும் சுலபம்.

தேவையான பொருட்களை நான் வரிசையாக எடுத்து கொடுக்க, இது மகள் செய்த குல்ஃபி!!

செய்முறை:-

1) ஒரு மாம்பழத்தை விழுதாக்கி கொள்ளவும்.
2) ஃப்ரெஷ் க்ரீம் 250 ml ஐ ஒரு பாத்திரத்தில் விட்டு பீட் செய்யணும்.
3) அதனுடன் கண்டென்ஸ்டு மில்க் கால் கப் சேர்க்கவும்.
4) மாம்பழ விழுதையும் அதனுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
5) இதை குல்ஃபி மோல்ட்டில் விட்டு, அலுமினியம் ஃபாயிலால் மூடி, ஐஸ்க்ரீம் குச்சிகளை சொருகி ஃப்ரீசரில் 8 மணிநேரம் வைத்து எடுக்கவும். விருப்பப்பட்டால் உலர்பழங்களும் சேர்க்கலாம். சுவையான மாம்பழ குல்ஃபி தயார்.

ஹோம் மேட் ஃப்ரூட்டி:



இணையத்தில் நிறைய சமையல் குறிப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. நான் அடிக்கடி பார்க்கும் வீடியோ தளம் ஒன்று Hebber’s Kitchen. அந்தத் தளத்தில் பார்த்து செய்த மேங்கோ ஃப்ரூட்டி! எப்படிச் செய்வது என்பதை நீங்களும் பார்க்கலாம்!



சாக்லேட் ஸ்டீம் கேக்:



முட்டை போடாமல், Oven-இல் வைக்காமல் செய்யப்பட்ட கேக்! இதுவும் Hebber's kitchen தளத்தில் பார்த்துச் செய்தது தான். செய்முறை இங்கே...



லஞ்ச்பாக்ஸ் – பீட்ரூட் பூரி:



பீட்ரூட் பூரியுடன் ஆலு சப்ஜி!! அடிக்கும் வெயிலுக்கு நீர் மோர்!! மகளின் மதிய உணவுக்காக செய்தது – நீங்களும் வாங்க சாப்பிடலாம்!!

பேரீச்சை_இனிப்புகள் - Dates Halwa:



Dates syrup வாங்கியது ரொம்ப நாளாக இருந்தது. மகள் பாலில் கலந்து சுவைக்க மறுத்து விட்டாள். நான் ஒருத்தியாக எவ்வளவு நாள் சாப்பிடுவது! சில நாள் முன்பு நார்த் இண்டியன் சட்னியில் பேரீச்சைக்கு பதில் இந்த ஸிரப் தான் சேர்த்தேன் :)

இப்போ இன்னும் இருப்பதையும் காலி செய்யணுமே என்று இணையத்தில் தேடியதில் கிடைத்தது தான் இந்த அல்வா. செய்வது மிகவும் எளிது. 20 நிமிடங்களே செலவானது.

மாலை பள்ளியிலிருந்து வந்த மகளுக்காக சுடச்சுட செய்து தந்தேன். அவளுக்கும் பிடித்திருந்தது. எப்படிச் செய்வது என்பதை கீழேயுள்ள சுட்டியில் பார்க்கலாம்!


என்ன நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட சமையல் குறிப்புகள் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்களுக்குப் பிடித்தவற்றை நீங்களும் செய்து, சுவைத்து, அது பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்....

நட்புடன்

ஆதி வெங்கட்

36 கருத்துகள்:

  1. குட் மார்னிங்.

    வகைவகையாக, புதிது புதிதாக முயற்சித்து அசத்துகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலை வணக்கம் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. //எங்கள் பிளாக்குக்குபோட்டியாக அல்ல//

    ஹா...ஹா...ஹா... திங்களும், திங்கறதும் எங்களுக்கு மட்டும் சொந்தமா என்ன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //திங்களும், திங்கறதும் எங்களுக்கு மட்டும் சொந்தமா என்ன?// ஹாஹா இருந்தாலும் உங்களுடையது தான் முதல் முயற்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. ஐஸ்க்ரீம் சோடா, பீட்ரூட் பூரி, மாம்பழ குல்பி

    இவை மூன்றும் என்னைக் கவர்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.... உங்களுக்குப் பிடித்த உணவுகள் என்னையும் கவர்கின்றன ஸ்ரீராம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. எல்லாமும் முகநூலிலும் பார்த்தேன். இப்போக் கொஞ்சம் ஜலதோஷம், ஜுரமாக இருப்பதால் குல்ஃபி, ஐஸ்க்ரீம் சோடா, ஃப்ரூட்டி இதெல்லாம் சாப்பிட முடியாதேனு வருத்தமா இருக்கு! :) மத்தபடி மிச்சம் எல்லாம் நல்லா இருக்கு. எ.பி.க்குப் போட்டியா ஒரு காலத்தில் "திங்க"க்கிழமைப் பதிவு நானும் போட்டுக் கொண்டிருந்தேன். :)))) இன்னிக்குக் கூடப் போடலாமானு யோசிச்சேன். போணி ஆகுமா ஆகாதானு தெரியலை! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் பிளாக்குக்கு போட்டியா நீங்களும் பதிவு போட்டது நினைவிலிருக்கிறது கீதாம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. அனைத்தும் மிக அருமை.
    அத்தனையும் முகநூலில் படித்து , பார்த்து ரசித்தவை.
    ஆதியின் ஆர்வத்தை, திறமையை பாராட்ட வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதிம்மா... முகநூலில் வந்தவை தான். இங்கேயும் ஒரு தொகுப்பாக/சேமிப்பாக...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. ஐஸ்கிரீம் சோடா வெகு சுலபமாக இருக்கிறதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐஸ்க்ரீம் சோடா செய்வது சுலபம் தான் கில்லர்ஜி. முடிந்தால் செய்து பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. அனைத்தும் அருமை. ஐஸ்க்ரீம் சோடா - அருமை.... சோடா என்ற பெயரில் கார்பண்டைஆக்சைடு உட்கொள்வது நல்லதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கார்பன் டை ஆக்ஸைடு உட்கொள்வது நல்லதா? சில சமயம் நல்லது நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  11. எல்லாமே நல்லா இருக்கு ..

    நானும் HEBBER KITCHEN FOLLOWER ...

    ஐஸ்க்ரீம் சோடா ..குறித்துக் கொள்கிறேன் ஈசி யா இருக்கு ..

    குல்பி , பிரூட்டி , கேக் எல்லாம் செஞ்சு சுவைத்தாகி விட்டது ...

    இன்னும் Dates Halwa செஞ்சது இல்லை ...

    சுவையான குறிப்புகள் ...அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்தால் டேட்ஸ் ஹல்வா செய்து பாருங்கள் அனு ப்ரேம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. எளிய இனிய குறிப்புகள்...
    மகிழ்ச்சி.. நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.

      நீக்கு
  13. பார்த்தால் பசி தீரும் - னு ஒரு சினிமா உண்டு.
    இந்த படங்களை பார்த்தாலே பசி வரும் போல இருக்கே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்தால் பசி வரும்! ஹாஹா.... இப்படி வச்சு செய்யறாங்களேன்னு சொல்றீங்களா பத்மநாபன் அண்ணாச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  15. ஆஹா.. எளிய செய்முறைதான் என்றாலும் மெனக்கெட்டு செய்யணுமே.. எல்லாமே நாவூறவைக்கும் அசத்தல் கைவண்ணம். பீட்ரூட் பூரி ஏற்கனவே உங்க தளத்தில் பார்த்திருக்கிறேன். செய்தும் இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பீட்ரூட் பூரி ஏற்கனவே இங்கே வெளியிட்டது உண்டு. நீங்களும் அதைச் செய்து சுவைத்ததில் மகிழ்ச்சி கீதமஞ்சரி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. ஆதி வாவ் அனைத்தும் யும்மி யம்மி ரெசிப்பிஸ். எல்லாம் என் நினைவுகளை மீட்டெடுத்துவிட்டன. மகனுக்குப் பிடித்த விஷயங்கள்...அதுவும் இணையம் இல்லா வருடங்களில் செய்து சுவைத்தவை. இப்ப இணையமும் இருப்பதால் நிறைய தெரிந்து கொள்ளலாம் ஆனால் நேரம் தான் கடினம்..

    உங்கள் பதார்த்தங்கள் அனைத்தும் செமையா இருக்கு. ரொம்ப நல்லா வந்திருக்கு இல்லையா...சூப்பர் ஆதி! கலக்கறீங்க போங்க!

    ஹெப்பார் கிச்சன் நானும் பார்ப்பேன். அது போல நிஷா மதுலிகா வும் பார்ப்பதுண்டு. எக்லெஸ் பேக்கிங்கிற்கு https://www.egglesscooking.com/ மதுரம்ஸ் இது மிக மிக துல்லியமான அளவுகள் சொல்லும் தளம். எக்ஸ்பெரிமென்டல் எல்லாம் செய்து அவங்க அதைக் கரெக்டா சொல்லிருப்பாங்க.

    நான் எக்லெஸ் என்று போடாமல் நார்மல் தளங்களையும் பார்ப்பதுண்டு ஆனால் முட்டைக்குப் பதில் ஆளிவிதை/ஃப்ளெக்ஸ் சீட் பொடி ஊற வைத்து அதைச் சேர்த்துச் செய்வதுண்டு. அப்படிப் பார்க்க joy of baking தளம் மிக மிக நன்றாக இருக்கும். கேக் கவர் செய்யும் ஐஸிங்க்/ஃபாண்டன்ட் ரெசிப்பிஸ் கூட எளிதாகக் கிடைப்பததை வைத்து எப்படிச் செய்யலாம் என்று நான் எக்ஸ்பெரிமென்டல் முறையில் செய்து பார்த்து குறிப்புகள் வைத்துள்ளேன் ஆதி.

    அருமை எல்லாமே...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரிவான கருத்துரக் கண்டு மகிழ்ச்சி கீதாஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  17. சுலபமான, சுவையான ரெசிபிகள். படங்களை பார்க்கும் பொழுது நாவில் நீர் ஊறுகிறது. என்னை எடையை குறைக்க விட மாட்டீர்கள் போலிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /என்னை எடையை குறைக்க விட மாட்டீர்கள் போலிருக்கிறது// ஹாஹா... பார்த்தாலே எடை ஏறுகிறது போல உணர்வு எனக்கும் பானும்மா!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  18. வணக்கம் சகோதரி

    தங்கள் தயாரிப்பான ஐஸ்க்ரீம் சோடா, சாக்லெட் ஸ்டீம் கேக், பீட்ரூட் பூரி அனைத்தையும் பார்க்கும் போதே மிகவும் நன்றாக உள்ளது. படங்கள் கண்களை கவர்கின்றன.செய்து பார்க்க தூண்டுகிறது. பேரீச்சம்பழம் அல்லாவை முதலில் செய்து பார்க்கிறேன். அது என்னை மிகவும் கவர்ந்தது. ரோஷ்ணியின் கைவண்ணமான மாம்பழ குல்ஃபியும் மிக அருமை. அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள். சிறப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் சொன்ன விஷயங்களும், உணவுகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....