ஞாயிறு, 9 ஜூன், 2019

தேசிய போர் நினைவுச் சின்னம் – நிழற்பட உலா



 போர் நினைவுச் சின்னமும் இந்தியா கேட்டும்...

அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை போர் பற்றிய ஒரு ஆங்கில மேற்கோளுடன் ஆரம்பிக்கலாம் வாருங்கள்.

THE SOLDIER ABOVE ALL OTHERS PRAYS FOR PEACE, FOR IT IS THE SOLDIER WHO MUST SUFFER AND BEAR THE DEEPEST WOUNDS AND SCARS OF WAR – Douglas MacArthur.

எந்தப் பிரச்சனைக்குமே போர் என்பது ஒரு தீர்வாக இருக்க முடியாது என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. போரினால் கிடைக்கும் வெற்றி/ஆதாயத்தினை விட அதனால் ஏற்படும் இழப்பு – உயிர்/பொருள் என இரண்டுமே அதிகம் தானே… இந்திய தேசத்தின் சீன எல்லைகளில் ஒன்றான Bபும்லா பாஸ் சென்றிருந்த போது அங்கே காவல் பணியில் ஈடுபட்டிருந்த பாரதத்தின் இராணுவ வீரர்களின் நிலை பார்க்கும்போது ரொம்பவே மனது சங்கடம் கொண்டது. எத்தனை சங்கடங்கள் அவர்களுக்கு – அங்கே சில மணித்துளிகள் இருந்த எங்களுக்கு மார்ச் மாதத்தின் குளிர் தாங்க முடியவில்லை. டிசம்பர்-ஜனவரி மாதங்களில் குளிர் உச்சத்தில் இருக்கும்போது அவர்களது நாட்கள் எப்படிக் கழியும் என்று தெரிந்து கொண்டபோது மனதில் வலி உண்டானது.

ஆனால், எல்லா தேசங்களிலும் போர் அவ்வப்போது நடந்தபடியே இருக்கிறது – அடுத்தடுத்த தேசங்கள் போரிட்டபடியே இருக்கின்றன – எத்தனை எத்தனை உயிரிழப்பு. நம் பாரத தேசமும் இப்படி பல வீரர்களை போரில் இழந்திருக்கிறது. சுதந்திர இந்தியா எதிர்கொண்ட சில போர்களிலும், எல்லை மற்றும் தீவிரவாத தாக்குதல்களிலும் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு தலைநகர் தில்லியில் இந்த வருடத்தின் ஃபிப்ரவரி மாதம் ஒரு நினைவுச் சின்னம் திறந்து வைக்கப்பட்டது. சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் இந்தியா கேட் வளாகத்திற்கு அருகே அமைக்கப்பட்ட இந்த நினைவுச் சின்னத்தில் போரில் உயிரிழந்த 25,942 போர் வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. பரம்வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் வெண்கலச் சிலையும் இந்த வளாகத்தில் வைத்திருக்கிறார்கள் – சிலைக்கு அருகிலேயே அவரின் சாதனையும் கல்வெட்டுகளாக வைத்திருக்கிறார்கள்.

சமீபத்தில் அந்த போர் நினைவுச் சின்னம் சென்ற போது எடுத்த படங்கள் சிலவற்றை இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தலைநகர் வந்தால் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக இந்த போர் நினைவுச் சின்னத்தினைச் சேர்த்துக் கொள்ளலாம். வாரத்தின் எல்லா நாட்களிலும் திறந்திருக்கும் இவ்விடத்தில் மாலை கொடியிறக்கத்திற்குப் பிறகு உள்ளே செல்ல அனுமதி இல்லை. வாருங்கள் படங்களைப் பார்க்கலாம்.


வளாகத்தில் நீரூற்றுகள்...


பரம் வீர் சக்ரா பற்றிய தகவல்கள்...


பரம் வீர் சக்ரா விருது பெற்ற ஒரு வீரர்...


அந்த வீரரின் பராக்ரமச் செயல்...


வளாகத்தில் பூத்திருந்த பூக்கள்.....


வளாகத்தில் இரை தேடும் பறவைகள்...


நல்ல இடம் பார்த்து உட்கார்ந்து இருக்கே.... 
அவற்றின் கழிவுகளையும் தினம் தினம் சுத்தம் செய்கிறார்கள்...


ஒரு பறவை - கொஞ்சம் கிட்டப் பார்வையில்...



வளாகத்தில் இருக்கும் மரங்களும் பூத்துக் குலுங்குகின்றன...


செல்ஃபி எடுக்க ரொம்பவே அதிக வாய்ப்பு இங்கே...


கொஞ்சம் கிட்டப் பார்வையில் நினைவுச் சின்னம்....


வளாகத்தில் போர்க் காட்சிகள்...


இன்னும் ஒரு போர் காட்சி...


போர் நினைவுச் சின்னம்...


போர் நினைவுச் சின்னத்திலிருந்து இந்தியா கேட்..


வீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கற்கள்...


மாலைச் சூரியன் மின்னும் நேரத்தில்
போர் நினைவுச் சின்னமும் இந்தியா கேட்டும்...


கொடியிறக்கத்திற்காகச் செல்லும் வீரர்கள்... 


நீரூற்று - விளக்கொளியில்...

என்ன நண்பர்களே, இந்த ஞாயிறில் வெளியிட்ட நிழற்படங்கள் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? பதிவு/படங்கள் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன்.

மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

24 கருத்துகள்:

  1. போர் வீரர்களின் நினைவுச் சின்னம்...

    மனம் கலங்குகின்றது...

    தாய் நாட்டிற்காக தன்னுயிர் நீத்த மாவீரர்களுக்கு வீர வணக்கம்..

    ஜெய்ஹிந்த்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம். அந்த இடத்திற்கு சென்ற போது, உயிர் நீத்த வீரர்களின் குடும்பத்தினர் நினைவு மட்டுமே எனக்குள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.

      நீக்கு
  2. அனைத்துப் படங்களையும், அதன் வரிகளையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. ஒரு நாட்டின் பட்ஜெட்டில் முக்கிய இடம் பிடிப்பது ராணுவத்துக்குச் செய்யும் செலவுதானே? இந்தியாவில் எதோ ஒரு கிராமத்தில் வீடுகளுக்கு கதவே கிடையாதாம். அந்த ஊரில் திருட்டே கிடையாதாம். அவர்களின் கட்டுப்பாடு, நேர்மை, நம்பிக்கை. அதுபோல நாடுகளுக்கிடையே நம்பிக்கை வருமா? எந்த நாடாவது ராணுவம் இல்லாமல் இருக்க முடியுமா? எல்லா நாடுகளும் அணுஆயுதங்களை சேர்த்துக்கொண்டே இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குத் தெரிந்து மஹாராஷ்ட்ராவின் சனி சிங்க்னாபூரில் தான் வீடுகளுக்குக்கதவே இல்லை, பூட்டுப் போடுவதில்லை, திருட்டுப் புரட்டு இல்லை என்பார்கள்! வேறே கிராமம் இருக்கானு தெரியலை!

      நீக்கு
    2. ராணுவத்திற்கு ஆகும் செலவு பல நாடுகளில் அதிகம் தான்.

      கீதாம்மா சொல்லி இருப்பது போல ஷனி ஷிங்ணாபூரில் கதவுகளும் பூட்டுகளும் இல்லை. சமீப காலங்களில் சில வணிகத் தலங்களில் பூட்டு போடுகிறார்கள் - வெளியூர் ஆட்களால் தொல்லையாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. வேறு ஊர் இருப்பதாக எனக்கும் தெரியவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  4. இனியகாலை வணக்கம் வெங்கட்ஜி. இன்று தாமதமாகிவிட்டது. இல்லை என்றால் காலையில் ஐந்தரைக்கு இங்கும் 6 மணிக்கு எபியிலும் லேன்ட் ஆகியிருப்பேன்!!!

    படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது.

    மைனாக்கள் அழகு. அந்தப் பறவையும் அழகு. பெயர் மனதில் இருக்கு சட்டென்று நினைவுக்கு வரமாட்டேங்குது..

    ஒவ்வொரு படத்திற்கான வரிகளும் சிறப்பு ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாஜி. சில நாட்களில் தாமதம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. படங்கள் எல்லாம் அழகோ அழகு! மைனாக்கள் கத்தாமல், சண்டை போடாமல் சமர்த்தாகப் படம் எடுக்க போஸ் கொடுத்திருக்கின்றன! :)) இங்கே ஜன்னலில் ஒரே அமர்க்களம், கூச்சல்! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கேயும் கூச்சல் உண்டு. Zoom செய்து எடுத்த படங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  6. படங்கள் அருமை. சமிபத்தில் நாங்களும் சென்று வந்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா நீங்களும் சென்று வந்தீர்கள் என்று அறிந்து மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  7. படங்கள் அருமை
    ஆனாலும் நாட்டிற்காக இன்னுயிர் ஈந்தவர்களை நினைக்கும்பொழுது மனம் கனக்கத்தான் செய்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்களுக்கும் மனம் கனத்தது ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  8. போர் தேவைகளை குறைக்கலாம் ஜி
    ஆனால் இதைத் தீர்மானிப்பவர்கள் பெரிய அதிகாரிகளே இறப்பவர்கள் இருநாட்டு சிப்பாய்களே அதிகம்.

    நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.

    புகைப்படங்கள் அருமை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போர் வேண்டும் எனத் தீர்மானிப்பவர்கள் போர்க்களம் செல்வது இல்லை! உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  9. நல்ல பதிவு.
    பரம் வீர் சக்ரா விருது பெற்ற ஒரு வீரர்களுக்கு வணக்கம்.
    போரில் தங்கள் உயிரை கொடுத்து நாட்டை காத்த அனைத்து வீரர்களுக்கும் வணக்கம்.
    பறவைகள் படம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  10. விருது பெற்ற ஒவ்வொரு வீரருக்கும் ராயல் சல்யூட்! நம் நாட்டைக் காக்க ஒவ்வொருவது வெயில் பனி மழை என்று பொருட்படுத்தாமல் நம்மை எல்லாம் காக்கும் வீரர்கள் எல்லோருக்கும் வணக்கம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....