தொகுப்புகள்

புதன், 2 பிப்ரவரி, 2022

சிந்தனையை சிறகடிக்க வைப்போம் - ஆதி வெங்கட்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட முகநூல் இற்றைகள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

WINNING HORSE DOESN’T KNOW WHY IT RUNS IN THE RACE; IT RUNS BECAUSE OF THE BEATINGS IT GETS AND THE RESULTANT PAIN…  LIFE IS LIKE A RACE AND GOD IS YOUR RIDER. SO IF YOU ARE IN PAIN, THINK THAT GOD WANTS YOU TO WIN.

 

******


 

சிந்தனையை சிறக்கடிக்க வைத்த இட்லி மாவு! 

 

என்னது! இட்லி மாவு சிந்தனையை சிறகடிக்க வைக்குமா!!! 

 

என்னம்மா சொல்ற! 

 

அது எப்படி! 

 

நாங்களும் தான் தினமும் இட்லியும், தோசையும் சாப்பிடறோம்! அப்படி ஒண்ணும் சிந்தனைகள் வர மாட்டேங்குதே!!

 

திரும்பத் திரும்ப அதையே சாப்பிட்டு போர் தான் அடிக்குது!

 

அடடா! கொஞ்சம் இருங்க! நான் என்ன சொல்ல வரேன்னு முழுசா கேட்டுட்டு உங்க சிந்தனைகள் சிறகடிக்குதா! என்னன்னு பாருங்க!

 

அட முதல்ல சொல்லுமா! சும்மா பில்டப் எல்லாம் குடுக்கற! அப்புறம் மொக்கையா எதையாவது சொல்லப் போற...!

 

இருங்க! இருங்க! நான் சொல்லிடறேன்! அப்புறம் அது மொக்கையா என்னன்னு பாருங்க!

 

உங்களைப் போல தான் எங்க வீட்டிலும் இட்லி மாவு காலியாகும் போதே அடுத்த குண்டானை அரைத்து நிரப்பிடுவேன். இந்த இட்லி மாவு, இட்லி மிளகாய்ப் பொடி, புளிக்காச்சல், ஊறுகாய் இதெல்லாம் எப்போதும் ஸ்டாக் வெச்சிருக்கணும்! அப்போது வரும் நிறைவு இருக்கு பாருங்க! பீரோ நிறைய பணமும், நகைகளும் இருந்தாக் கூட அப்படி ஒரு நிறைவு கிடைக்காது..🙂

 

என்ன சரி தானே! ஒத்துக்கறீங்களா! அடுக்கு நிறைய அப்படி இட்லி மாவு இருந்ததுன்னு வைங்க! என்ன செய்வோம்!

 

அட என்னம்மா! கூறு கெட்டாப்ல பேசற! மாவு இருந்தா என்ன செய்வோம்! இட்லியும், தோசையும் செஞ்சு சாப்பிடுவோம்!

 

ஆங்! இப்பத் தான் நீங்க பாயிண்ட்டுக்கே வரீங்க! என்னோட சிறகடித்த சிந்தனைய சொல்றதுக்கான நேரம் வந்திடுச்சு!

 

சொல்லித் தொல!

 

இப்ப நீங்க என்ன செய்யணும்னா அடுத்த ஒரு வாரத்துக்கு இட்லிக்கு மாவே அரைக்கக் கூடாதுன்னு சபதம் எடுக்கணும்! இது தான் சாக்குன்னு கடையில வாங்கிப்போமேன்னு சொல்லக்கூடாது! 

 

அப்புறம்! என்ன தான் செய்யறது!

 

ம்ம்ம்! இப்ப ரெண்டு வேள டிபனுக்கு என்ன பண்றது!

 

யோசிங்க! யோசிங்க! இட்லி, தோசையும் தவிர்த்து என்னவெல்லாம் செய்யலாம்னு லிஸ்ட் போடுங்க!

 

இப்ப...இப்ப..இப்ப தான்

 

உங்கள் சிந்தனைகள் சிறகடிக்கும்...🙂

 

ஊருக்கு மட்டும் உபதேசம் பண்ணலைங்க!

 

இட்லியும், தோசையும் தான் இருக்கு ஒலகத்துலன்னு நினைக்காதீங்க! நானும் கடந்த ஒரு வாரமா எங்க வீட்டு ரெண்டு வேளை டிபனையும் இட்லியும், தோசையும் இல்லாமயே கடந்துட்டேன்! யாரை நம்பி பொறந்தோம்னு சொல்லுங்க! மனச தேத்திகிட்டு அடுத்து என்ன பண்லாம்னு சிந்திச்சு பாருங்க! என்ன நாஞ் சொல்றது!

 

ரெடி ஜூட்! என்னை அடிக்க வர்றதுக்குள்ள ஓடிடறேன்..🙂

 

*****

 

பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்




32 கருத்துகள்:

  1. ஹா... ஹா.. ஹா.. இந்த சோதனையை நாங்கள் அடிக்கடி செய்வோமே...! அவல் உப்புமா, புலிவால், புளிப்பொங்கல், சப்பாத்தி டால், மைதா மாவு மற்றும் கோதுமை மாவு கரைத்த தோசை... இப்படி இன்னும் பலவகையில் முயற்சிப்போம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அவல் உப்புமா, புலிவால், புளிப்பொங்கல்,//


      ஹா.. ஹா.. ஹா... புலிவால் என்பதை பார்த்து நானே பயந்து விட்டேன். நீங்களும் புன்னகைத்திருப்பீர்கள்! அது 'புளி அவல்'!

      நீக்கு
    2. ஆஹா அடிக்கடி செய்யும் சோதனையா? மகிழ்ச்சி ஸ்ரீராம். இங்கே இட்லி தோசையை விட கோதுமை வைத்து செய்யும் சப்பாத்தி பரோட்டா போன்றவையே அதிகம்.

      வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. புலிவால்..... அப்பப்பா இப்படிக்கூட ஒரு உணவா? வேறு எதையோ சொல்ல வந்தது புரிந்தது. புளி அவல் என்ற விளக்கத்தினை நீங்களே சொல்லி விட்டது நிம்மதி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. அதென்னவோ கடந்த இரு வருடங்களாக புதுவீடு வந்ததிலிருந்து பழைய தோசையின் அழகும் ருசியும் வரவில்லை. கொரோனா காலத்துக்குப் பின் உளுந்து கோளாறோ, தண்ணீர்க்கோளாறோ, தவாவின் கோளாறோ அல்லது எங்கள் மேல்தான் கோளாறோ.. ஊ ஹூம் பழைய அந்த ஷேப், அழகு, ருசி மிஸ்ஸிங்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில சமயங்களில் தோசை நன்றாக வராமல் படுத்துவது உண்டு. தவறு எதில் என்பதை கண்டுபிடித்தால் சரியாக வரலாம். முயற்சி செய்யுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. ஹாஹாஹாஹா ஆதி, இங்கும் இரு வேளை டிஃபன் ..ஸோ புட்டு, இடியாப்பம், அக்கி ரொட்டி (இன்று காலை இதுதான் இங்கு) ஆப்பம், பொங்கல், ரவா பொங்கல், ரவா இட்லி, பாசிப்பருப்பு இட்லி, கொழுக்கட்டை, தவலை அடை னு, சிறுதானியம் வைச்சு....ஏதாச்சும், ஈசினா அவல் இப்படி ஓட்டிடுவோம்ல...ஹாஹாஹா

    இட்லி மாவுலயே கூட ஏதாச்சும் புதுசா...ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கி ரொட்டி ஏனோ எனக்கு பிடிப்பதில்லை. கரோல் பாக் பகுதியில் இருந்த போது பக்கத்து வீட்டில் இருந்த கன்னட நண்பரின் ஹஜ்ஜி செய்து தருவார். அவர் மனம் நோகக் கூடாது என்பதற்காக நன்றாக இருக்கிறது என்று சொல்லி சாப்பிட்டு விடுவேன்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  4. சில சமயம் ஏதேனும் கடலை வெந்து பீச் சுண்டல் போல காய் எல்லாம் போட்டு சலாட் போல பொரியும் போட்டு செஞ்சு ஓட்டிடுவோம்...

    ஆனா பெரியவங்க இருந்தாங்கனா அவங்களுக்கு ஏற்றாற்போல செய்யணும்...ஒன்று அதே உணவு எல்லாருக்கும் இல்லைனா அவங்களுக்கு மட்டும் ஒன்று நமக்கு வேறன்னு...இதுல என்னன்னா சில பெரியவங்க நாம சாப்பிடறது என்னன்னு பார்த்து அப்ப எனக்கும் மட்டும் ஏன் தனின்னு கேட்கும் பெரிய குழந்தைகளும் உண்டு!! ஹாஹாஹாஹா ஸோ சமாளிக்கணும்!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரியவர்களை சமாளிப்பது கொஞ்சம் கடினம்தான். அவர்களுக்கு நல்லது என்று நாம் சில விஷயங்கள் செய்தாலும் அவர்களை மேலும் படுத்துவதாக அவர்கள் நினைத்து விடுகிறார்கள்.

      உங்கள் உணவுப் பழக்கங்களையும் இங்கே பகிர்ந்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  5. நாங்களும் புதிதாக முயற்சி செய்வோம். பிடித்த புதிய ஒன்று, நெய்யில் லேசாக வறுத்து உப்பு மிளகு போட்ட சக்கரை வள்ளி கிழங்கு. try பண்ணிப்பாருங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெய்யில் லேசாக வறுத்து உப்பு மிளகு போட்ட சர்க்கரைவள்ளிக்கிழங்கு..... ஆஹா கேட்கும்போதே சாப்பிடத் தோன்றுகிறது Bandhu ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. எனக்கும் சிந்தனைகள் இப்படி தினமும் சிறகடித்து பறந்து கொண்டுதான் உள்ளது. "காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி" என்பது போய், இன்றைய கேள்வியே பெரிதாக உள்ளது. இட்லி, தோசைகளை தினமும் தொடர முடியாத நிலைகள் எப்படியோ வந்து விடுகின்றன. நன்றாக அனுபவித்து எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. பதிவு குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  8. இளைய சமூகம் இட்லி தோசையை விரும்புவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய இளைய சமூகத்திற்கு ஃபாஸ்ட் ஃபுட் மட்டுமே பிடித்திருக்கிறது. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  9. //புலிவால் பொங்கல்,//

    கூடிய விரைவில் இதன் செய்முறையை எபி யின் வெள்ளித் திரையில் காண்க!..
    :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூடிய விரைவில் புலிவால் பொங்கல் செய்முறை எங்கள் பிளாக் பக்கத்தில்..... ஆஹா நானும் படிக்க காத்திருக்கிறேன் துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  10. அரிசி/மாவு மில்லில் பச்சரிசி நனைத்து பொடித்து வறுத்த மாவு இங்கு கிடைக்கும், கிலோ 50 ரூ. அதே போல் புட்டு மாவு என்று தனியாக கிலோ 60 ரூ க்கு கிடைக்கும்.


      இட்லி சட்னி/கார சட்னி/பொடி/கொஸ்து/தக்காளி சட்னி சாம்பார், தோசை/குழி கார பணியாரம்,  பொங்கல் சாம்பார், பூரி கிழங்கு,  புட்டு கடலை, இடியாப்பம் குருமா, ரவா தோசை தேங்காய் சட்னி, தவள அடை, கொழுக்கட்டை, அவல்/ரவா/அரிசி/சேமியா/ராகி சேமியா/கம்பு சேமியா/வரகு சேமியா/சாமை/ தினை/குதிரைவாலி  உப்புமா, ஆப்பம் தேங்காய் பால், பாஸ்தா/மக்கரோனி இப்படி மாறுதலாக ஒவ்வொன்று ஒவ்வொரு நாளைக்கு செய்வோம். அடுத்த நாள் டிபன் முதல் நாள் இரவு தீர்மானிக்கப்படும். புட்டு கடலை என்றால் கடலை ஊறப் போடப்படும். அடை, கொழுக்கட்டை என்றால் அரிசி பருப்பு போன்றவை ஊறப்போடப்படும். சாம்பார். குருமா என்றால் அதற்கான காய்கள் நறுக்கி  வைக்கப்படும்.  ஆனால் வாரத்தில் இரண்டு நாள் இட்லி செய்யப்படும். இட்லி மாவு கடையில்  வாங்குவதில்லை. ஒரு நாளைக்கு வேண்டியது மட்டும் கிரைண்டரில் அரைக்க முடியாது. ஆக இட்லி மாவு எப்போதும் பிரிட்ஜில் இருக்கும். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அனுபவங்களை மற்றும் பழக்கவழக்கங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  11. இப்படி விதம் விதமான சேமியா அணில்  தயாரிப்பு. ஆன்லைனில் ஆர்டர் கொடுத்து வாங்கிவிடுவோம். 

    https://www.theanilgroup.com/contact

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அணில் சேமியா தயாரிப்புகள் பயன்படுத்துவது உண்டு. வீட்டின் அருகே இருக்கும் கடைகளில் வாங்கி விடுவோம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  12. பதிவும் படங்களும் நன்றாக இருக்கிறது.

    இட்லி, தோசை வயிற்றுக்கு கேடு இல்லை.
    இட்லி, தோசை மாவு கை வசம் இருந்தால் நல்லது , மகிழ்ச்சி.

    ஆனால் இட்லி தோசைதானா எப்போதும் என்று கேள்வி கேட்க்கும் பேரன் , பேத்திகளுக்கு கொஞ்சம் அவர்களுக்கு பிடித்த உணவுகள் இடம்பெறும் வீட்டில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி கோமதிம்மா. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  13. ஆயிரம்தான் சொன்னாலும் இட்லிமாவு கைவசம் இருந்தால் உலகமே நம் கையில் என்பது போல ஒரு பீலிங்கு
    ஹிந்தியில் துனி யா முட்டி மே ஹே என்பார்களே அதுபோல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துனியா முட்டி மே எனும் உணர்வு சரிதான் அபயா அருணா ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  14. நான் தனியாக இருந்த போது அடிக்கடி செய்வது உப்புமா!

    தோசை மிகவும் பிடிக்கும். வீட்டில் புட்டு, ஆப்பம், தோசை, தான் பெரும்பாலும். இரவு என்றால் கஞ்சி, அல்லது சப்பாத்தி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உப்புமா செய்வது சுலபமாக இருப்பதால் அதனையே பலரும் செய்கிறார்கள். எனக்கு அவ்வளவாக பிடிப்பது இல்லை. வேறு வழி இல்லை என்றால் மட்டுமே உப்புமா. புட்டும் கடலைக் கறியும் சாப்பிட்டு நிறைய வருடங்கள் ஆகிவிட்டன. கேரளாவிற்கு தான் வரவேண்டும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  15. ஹா....ஹா....திப்பிச வேலையா? கீதா சாம்பசிவம் அவர்கள்தான் ஞாபகத்துக்கு வருகிறார்கள்.:)
    எங்கள் வீட்டில் வாரத்துக்கு இரண்டு மூன்று தடவை புட்டு இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திப்பிசம் என்று சொல்ல முடியாது! தோசை மாவு இல்லாமல் எப்படி நாட்களை நகர்த்தலாம் என்ற யோசனைகளுக்கான பதிவு மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....