செவ்வாய், 1 பிப்ரவரி, 2022

முகநூல் இற்றைகள் - ராஜ் கச்சோடி - ஐயோ குஞ்சுமோன் எவிடே? - முன்னை இட்ட தீ


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

JUDGE NOTHING - YOU WILL BE HAPPY; FORGIVE EVERYTHING - YOU WILL BE HAPPIER; LOVE EVERYTHING - YOU WILL BE HAPPIEST.

 

******


 

ராஜ் கச்சோடி - 28 ஜனவரி 2022:


 

தினம் தினம் சமைப்பது கொஞ்சம் போரடிக்கும் வேலை. அதுவும் என்னைப் போன்று, வீட்டில் இருக்கும் நாட்களில் மூன்று வேளையும் தனித்தனியாக சமைக்க நினைத்தால், இன்னும் கடினம். அவ்வப்போது, சில நாட்களுக்கு ஒரு முறையாவது வெளியே சென்று சாப்பிடத் தோன்றும். அப்படியான ஒரு நாள் இன்றைய நாள். இன்று முழுவதுமே வெளியிலும் நண்பர் வீட்டிலும் என சாப்பிட்டாயிற்று. அப்படி வெளியில் சாப்பிட்ட ஒரு உணவுப் பதார்த்தம் தான் படத்தில். பெயர் ராஜ் கச்சோடி. 

 

ராஜ் கச்சோடி நிறைய உணவகங்களில் சுவைத்திருக்கிறேன்.  ஹல்திராம், பிகானீர் வாலா, கலேவா என பல இடங்களில் இந்த ராஜ் கச்சோடி சாப்பிட்ட நான் இன்று சுவைத்தது எங்கள் பகுதியில் இருக்கும், ISCKON Franchise ஆகிய அன்னகூட் உணவகத்தில்.  ஒரு ராஜ் கச்சோடி விலை 90 ரூபாய் மட்டும். சாப்பிட்ட இடங்களில் சிறந்தது என்று பார்த்தால் பூசா ரோட் பகுதியில் இருக்கும் ஹல்திராம்  உணவகத்துக்கு தான் முதலிடம். விலை சற்று அதிகம் (சென்றமுறை சாப்பிட்டபோது ரூபாய் 130/-) என்றாலும் தரத்திலும் சுவையிலும் அதன் உள்ளே சேர்க்கப்படும் பொருட்களிலும் நிச்சயம் முதலிடம். இன்றைக்கு சுவைத்தது நன்றாகவே இருந்தது என்றாலும் இங்கே சுவை இரண்டாம் இடம்தான். தில்லி வரும் வாய்ப்பு இருந்தால் நீங்களும் சுவைத்து பார்க்கலாமே. 

 

*******

 

ஐயோடி குஞ்சுமோன் எவிடே? - 29 ஜனவரி 2022:

 

பல அடுக்கு கொண்ட மால் என அழைக்கப்படும் இடங்களில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் எத்தனை எத்தனை. பொழுது போகாத ஒரு நாளில் அங்கே சென்று வந்தால் நிச்சயம் உங்களுக்கு பொழுது போய்விடும். தலைநகர் தில்லியில் இப்படியான மால்கள் நிறையவே இருக்கின்றன. பெரும் பரப்பளவில் இருக்கும் இந்த வணிக வளாகத்தில் பல முன்னணி Brands தங்கள் விற்பனை நிலையங்களை வைத்திருக்கிறார்கள். அவற்றில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையைப் பார்த்தால் நமக்கு மயக்கமே  வரக்கூடும். காலில் அணியும் செருப்பு/ஷூ கூட ஐந்து இலக்க  விலையில் இருப்பதைப் பார்க்கும் போது "செருப்பு கெட்டக் கேட்டுக்கு இவ்வளவு விலையா?" என்று தோன்றுவது எனக்கு மட்டும் தானா என்று புரியவில்லை. எத்தனை விலை இருந்தாலும் வாங்குவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்பதும் உண்மைதான். 

 

எத்தனையோ கடைகள், எத்தனையோ பொருட்கள் என, பல விதங்களில் கொட்டிக் கிடக்கின்றன. அனைத்தையும் வாங்குவதற்கு யாரோ ஒருவர் இருந்து கொண்டுதான் இருக்கிறார். தலைநகரின் சுபாஷ் நகர் மெட்ரோ நிலையத்தின் அருகில் இருக்கும் பசிபிக்  மால் சமீபத்தில் சென்றிருந்தேன். அங்கே வந்திருந்த சிலர் கடன் அட்டைகளை தேய்த்து வாங்கும் பொருட்களை பார்த்தால்,  இவை அனைத்தும் இவர்களுக்கு தேவையா, இல்லை எப்போதாவது பயன்படும் என்று வாங்குகிறார்களா என்று புரியவில்லை. தள்ளுவண்டி முழுக்க பொருட்களை நிரப்பிக்கொண்டு நகரும் அவர்களை பார்க்கும் போது நமக்கு மலைப்பாக இருக்கிறது. அதுவும் சில பொருட்கள் ஒன்று வாங்கலாம் இரண்டு வாங்கலாம்,  பத்து, பதினைந்து என வாங்குகிறார்கள். 

 

வீட்டினர் அனைவரும் எதை எதையோ எடுத்து போட்டுக்கொள்ள, பணம் கட்டும் இடத்தில் இவர்கள் எடுக்கும் பொருட்கள் அம்பாரமாய் குவிந்து விடுகிறது. பட்டியலிடும் ஆளுக்கே அலுப்பு வரக்கூடும் அளவுக்கு வாங்கித் தள்ளுகிறார்கள். நான் மால் சென்றிருந்தபோது இப்படி ஒரு குடும்பத்தை சந்தித்தேன்.   பொருட்களை வாங்கி குவிப்பதில் இருந்த ஆர்வத்தில் தங்களுடன் வந்திருந்த  மகனையே மறந்து விட்டார்கள். சரியாக நான் உள்ளே நுழையும்போது, அந்த தந்தை பதறியபடி தன் மனைவியிடம்  கேட்ட கேள்வி - "ஐயோடி குஞ்சுமோன் எவிடே?

 

*******

 

முன்னை இட்ட தீ. - 29 ஜனவரி 2022:



 

நாளை உன் மகனுக்கு

இறந்த நாள்.

 

நீல நிற ஸிந்தடிக் ஃபைலை பார்த்தார். எடுத்துப் பிரித்தார். அதிர்ந்தார். முதல் பக்கம் முழுக்க வெறுமையாக இருக்க, நடுவில் இரண்டே வரிகள் சிவப்பு நிறத்தில் தெரிந்தன.

 

சங்கர் எக்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் உதயசங்கர் தான் இப்படி அதிர்ந்தது. அவரை அதிரச் செய்தது யார்? எதற்காக?

 

மனைவி, இரண்டு மகன்கள், ஒரு ஆசை மகள் என மகிழ்ச்சியான குடும்பம்.  ஏராளமான சொத்துபத்து. பணக்காரர்களுக்கு உரிய சில சில்மிஷ குணங்கள் உதய சங்கருக்கும் உண்டு. அவரை போலவே உல்லாசமாக இருக்கும் ஒரு மகன். தப்பிப் பிறந்த மற்றொரு மகன். காதலிக்கும் ஒரு மகள். வாழ்க்கை சந்தோஷமாகவே போய்க்கொண்டிருந்தது. ஆனாலும் இப்படி ஒரு அதிர்ச்சி தரும் காகிதத்தை, உதய  சங்கர் பார்க்கவேண்டிய ஃபைலில் வைத்தவர் யார்?

 

72 பக்கங்கள் கொண்ட விறுவிறுப்பான புத்தகம், நண்பர் பால கணேஷ் அவர்கள் எழுதிய முன்னை இட்ட தீ எனும் திரில்லர் படித்தால் இந்தக் கேள்விகளுக்கான விடை உங்களுக்குக் கிடைக்கும். பிம்பம் பதிப்பகம் வெளியீடான இந்த அச்சு புத்தகத்தின் விலை 70 ரூபாய் மட்டும். 

 

சரிதாயணம் போன்ற நகைச்சுவை நூல்கள் வெளியிட்ட பாலகணேஷ் அமானுஷ்யம் கலந்து எழுதிய ஒரு குறுநாவல் இந்த முன்னை இட்ட தீ. மிகவும் விறுவிறுப்பாகவே இருந்தது. கையில் எடுத்தபிறகு கீழே வைக்க முடியாமல் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். சம்பவங்களை சுவாரஸ்யமாக சொல்லச் சென்றிருக்கும் நண்பர் பால கணேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள். அமானுஷ்ய கதைகள் எழுதுவது எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை. ஒரு சிலரே இதில் வெற்றி பெறுகிறார்கள். நண்பர் கணேஷ் அவர்களும் இந்த முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார். அமானுஷ்ய கதைகள் நம்மில் பலருக்கும் பிடித்தவை. அதனால் இந்த புத்தகத்தை நீங்களும் நிச்சயம் வாசித்து ரசிக்கலாம்.

 

புத்தகத்தை வாசிக்க விரும்புபவர்கள் நண்பர் பால கணேஷ் அவர்களையோ, பிம்பம் பதிப்பகத்தினரையோ (9840075598) தொடர்பு கொள்ளலாம். 

 

****

 

இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

32 கருத்துகள்:

  1. கச்சோடி பேஸ்புக்கில் பார்த்தேன்.

    மால் இதுவரை நான் சென்றதே இல்லை!!  குஞ்சுமோன் எங்கே என்று படவுலகிலும் அனைவரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்!!!

    முன்னை இட்ட தீ படிக்கும் ஆர்வம் வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குஞ்சுமோன் ஜென்டில்மேன் இரண்டாம் பாகம் எடுக்கப்போவதாக சென்றவாரம் ஒரு செய்தி பார்த்தேன். பதிவு வழி சொன்ன விஷயங்கள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம். மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. இந்த நாளின் பதிவு அருமை.

    தலை நகரத்தில் இந்த இந்த உணவு இந்த இடங்களில் நல்லாருக்கும் என ஒரு பட்டியல் கொடுக்கலாமூ.. சில நாட்கள் முன்பு பெங்களூரில் ரோடி gகர் இல் நான் சாப்பிட்ட செனா பட்டூரா நல்ல சுவை. எனக்கு சோளே பிடிப்பதில்லை.

    Branded shopsல் விலையை எப்படி நிர்ணயம் செய்கிறார்கள் என எனக்குத் தெரியும். சீசன் ஆரம்பத்தில் வாங்க வரும் ஏமாளிகளிடம் ஐந்து மடங்குக்கும் மேலாக பணத்தை வாங்கிவிடுவார்கள். சீசன் முடிந்தபோது ஒன்றரை மடங்கு. புது ஸ்டாக் வந்தவுடன் ஆலாய்ப் பறந்து வாங்கும் நிறைய ஏமாளிகளைக் கண்டிருக்கிறேன். உணவகங்களிலும் கொள்ளை சொல்லி மாளாது.

    காலகணேஷ்.. பெயரைக் கேட்டு நிறைய வருடங்கள் ஆனதுபோல் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணவு பட்டியல் கொடுக்கலாம் தான். தொடர்ந்து எங்காவது சென்று வந்தால் நிச்சயம் எழுதுகிறேன் நெல்லைத் தமிழன்.

      பாலகணேஷ் இப்போதெல்லாம் முகநூலில் தான் அதிகம் எழுதுகிறார்.

      பதிவு குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. ஆஹா நேற்றைய பதிவு மிஸ் ஆகியிருக்கு. பார்த்துவிடுகிறேன் அதையும்

    இப்போது இப்பதிவிற்கு முதலில் கண்ணில் பட்டது ராஜ் கச்சோடி!!! ஹாஹாஹா ரொம்பப் பிடிக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதா ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. "செருப்பு கெட்டக் கேட்டுக்கு இவ்வளவு விலையா?" என்று தோன்றுவது எனக்கு மட்டும் தானா என்று புரியவில்லை.//

    எனக்கும் தோன்றியதுண்டு, தோன்றுவதுண்டு ஜி.

    //அங்கே வந்திருந்த சிலர் கடன் அட்டைகளை தேய்த்து வாங்கும் பொருட்களை பார்த்தால், இவை அனைத்தும் இவர்களுக்கு தேவையா, இல்லை எப்போதாவது பயன்படும் என்று வாங்குகிறார்களா என்று புரியவில்லை. தள்ளுவண்டி முழுக்க பொருட்களை நிரப்பிக்கொண்டு நகரும் அவர்களை பார்க்கும் போது நமக்கு மலைப்பாக இருக்கிறது. அதுவும் சில பொருட்கள் ஒன்று வாங்கலாம் இரண்டு வாங்கலாம், பத்து, பதினைந்து என வாங்குகிறார்கள்.//

    நான் இது அடிக்கடி நினைப்பது. இதை பேஸ் செய்து ஒரு கதை கூட எழுதி எபியில் போட்ட நினைவு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல சமயங்களில் இப்படி தோன்றியது உண்டு கீதா ஜி. இது கருத்தில் நீங்கள் ஒரு கதை எழுதி இருப்பது நினைவில் இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. குஞ்சுமோன் எவிடே// ஹாஹாஹா இப்படித்தான் பொருட்களை வாங்குவதில் தம் குழந்தைகளைக் கூட மறந்து...சிலர் சிறிய குழந்தைகளைப் பொருட்கள் வாங்கும் தள்ளுவண்டியில் வைத்துக் கொண்டே பொருட்களை வாங்கிக் போடுவதையும் பார்த்திருக்கிறேன். வீட்டிற்கு யாராவது வந்தால் அவர்கள் மால் போக விருப்பப்படுவார்கள். நமக்கெல்லாம் சும்மா வேடிக்கை பார்க்கவே....4 ஃபோட்டோ எடுத்து ஒரு பதிவு போடவும் தேறுமே அம்புட்டுத்தான் ஹிஹிஹிஹி. அப்படி இங்கும் உள்ளவற்றை எடுத்து வைத்திருக்கிறேன். இப்ப தொற்று சமயம் ஸோ வெளியில் போவதே அபூர்வம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைகளை மறந்து பொருட்கள் வாங்கும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். என்ன செய்வது அவர்கள் அப்படித்தான் என விட்டுவிட வேண்டியதுதான். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  7. முன்னை இட்ட தீ - ஆர்வம் மேலிடுகிறது. த்ரில்லர் எப்போதுமே என்னை ஈர்க்கும்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னை இட்ட தீ முடிந்தால் வாசித்துப் பாருங்கள் கீதா ஜி. உங்களுக்கும் பிடிக்கும். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. அன்பின் வெங்கட்

    என்றும் வளமுடன் வாழ
    பிரார்த்தனைகள்.

    கச்சோடி பார்க்கவே இனிமையாக
    இருக்கிறது. செய்முறை எவ்வாறு இருக்கும் என்று யோசிக்கிறேன்.

    உங்களை உணவு கொள்ள அழைத்த நண்பருக்கு வாழ்த்துகள்.

    மால் அனுபவங்கள் சுவாரஸ்யம்.

    அங்கே வாங்குபவர்கள் ஒரு வேளை கடை வைத்து விற்பார்களோ
    இல்லை ஈ பேயில் வியாபாரம் செய்வார்களோ என்னவோ:)

    அனாவசியமாகப் பொருள் சேர்ப்பவர்களின்
    சுபாவம் ரசிக்கும்படி இல்லை.
    அவரவர் விருப்பம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி சொன்ன விஷயங்கள் குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  9. பால கணேஷ் எழுத்து முன்பு படித்தது.
    வாழ்த்துகள்.உங்கள் விமரிசனம் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பால கணேஷ் இப்போதெல்லாம் முகநூலில் தான் அதிகம் எழுதுகிறார் வல்லிம்மா. அவரது வலைப்பூவில் எழுதுவதே இல்லை. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இன்றைய பதிவு அருமையாக உள்ளது. உணவு ராஜ் கச்சோடி பார்க்கவே நன்றாக உள்ளது. தங்கள் விளக்கமும் சாப்பிடும் ஆவலைத் தருகிறது.

    இப்போதெல்லாம் எங்கும் வெளியில் செல்வதேயில்லை. அதனால் மால் போன்ற இடங்களுக்கும், (சும்மா பொழுது போவதற்காக சனி, ஞாயிறு நாட்களில் குடும்பத்துடன் செல்வோம். ) சென்றே இரு வருடங்கள் ஆகி விட்டன.

    இப்படி தன் குழந்தையையே காணோமே என தேடும் அளவுக்கு மாலில் பொருட்களை பார்க்கும் வாங்கிக் குவிப்பவர்களை நானும் பார்த்து வியந்திருக்கிறேன். பாவம்..! அந்த குழந்தை பத்திரமாக கிடைத்திருக்க வேண்டும்.

    பாலகணேஷ் அவர்கள் எழுதிய கதை ஸ்வாரஸ்யமாக இருக்கும் எனத் தோன்றுகிறது. நல்லதொரு நூல் அறிமுகத்திற்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. பதிவு வழி சொன்ன விஷயங்கள் குறித்த தங்களது மேலான கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  11. //அனைத்தையும் வாங்குவதற்கு யாரோ ஒருவர் இருந்து கொண்டுதான் இருக்கிறார்//

    இதுதான் ஜி உண்மை.

    கதம்பம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  13. ஒரு பெரிய பாணி பூரிக்கு 130 ரூபாய்? அப்போ சோலே  பட்டூராவிற்கு? முழு சாப்பாட்டிற்கு? 
    எப்படித் தான் ஒரு வருமானத்தில் இரண்டு குடித்தனம், ஊருக்கு  வந்து போகும் செலவு, மகள் படிப்பு, மற்றும் மகள் கல்யாணத்திற்கு  சேமிப்பு என்று சமாளிக்கிறீர்களோ?
    இதற்கு இடையில் ஊர் சுற்றும் செலவு வேறு கூடுதல். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  14. ராஜ் கச்சோடி முகநூலில் படித்தேன்.
    //எத்தனையோ கடைகள், எத்தனையோ பொருட்கள் என, பல விதங்களில் கொட்டிக் கிடக்கின்றன. அனைத்தையும் வாங்குவதற்கு யாரோ ஒருவர் இருந்து கொண்டுதான் இருக்கிறார்.//

    உண்மை. மால்களில் சும்மா கிடைப்பது போல அள்ளி செல்பவர்களை

    பார்த்து கொண்டுதான் இருந்தேன் மகன் ஊரில். வாங்க வைக்க மாலும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்கிறார்கள். சிலருக்கு கடைக்கு போவது நல்ல பொழுது போக்கு.

    பாலகணேஷ் அவர்கள் எழுதிய கதைக்கு விமர்சனம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி சொன்ன விஷயங்கள் குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  15. ராஜ் கச்சோடி சாப்பிட்டதில்லை. இங்கிருப்பதால் வட இந்திய உணவுகள் அதிகம் பழக்கம் இல்லை

    மால்கள் - இங்கு எங்கள் ஊரில் கிடையாது. எர்ணாகுளத்தில் இருக்கும் லுல்லு மால் தான் குழந்தைகள் செல்ல விரும்புவார்கள். மால்களில் அத்தனை விலை கொடுத்து அதுவும் சில பொருட்களின் விலையைப் பார்க்க எனக்குத் தலை சுற்றும். ஆனால் அதையும் வாங்க மக்கள் இருக்கிறார்கள் தான், நீங்கள் சொல்லியிருப்பது போல்.

    பாலகணேஷ் அவர்களின் கதைக்கான விமர்சனம் நன்று

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வட இந்திய உணவுகள் உண்ண வாய்ப்பு கிடைத்தால் சாப்பிட்டு பாருங்கள் துளசிதரன் ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  16. பாலகணேஷ் கதை படிக்க தூண்டுகிறது அவருக்கு வாழ்த்துகள்.

    இப்போதைய தலைமுறை சொப்பிங் அடிக் ஆகவே போய்க்கொண்டு இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது படித்துப் பாருங்கள் மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....