ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

தலைநகர் தில்லி - நிழற்பட உலா - பகுதி இரண்டு

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

கடந்தகாலம் உங்களை இன்னும் சிறந்தவனாக தான் மாற்ற வேண்டும், கசப்பானவனாக அல்ல.

 

******

 


சென்ற வாரமும் அதற்கு முன்னரும் தில்லியிலும் ஹரியானாவிலும் நான் எடுத்த சில படங்களை பகிர்ந்து கொண்டது நினைவில் இருக்கலாம்.  அந்த இரண்டு பதிவுகளை இங்கேயும் இங்கேயும் பார்க்கலாம்! வாருங்கள், இந்த ஞாயிறில் இன்னும் சில நிழற்படங்களை பார்த்து ரசிக்கலாம்!

 


க்ரானைட் கல்லில் குக்கர் - லடாக் விழா, தில்லி ஹாட்


சுந்தர் நர்சரி, தில்லி



ஒரு செல்லம், சுந்தர் நர்சரி, தில்லி


வெட்கத்தில் தலைகுனிந்த ரோஜா... 
சுந்தர் நர்சரி, தில்லி


பூக்கள்...
சுந்தர் நர்சரி, தில்லி


சுந்தர் நர்சரி, தில்லி


சுந்தர் நர்சரி, தில்லி


சுந்தர் நர்சரி, தில்லி


ஹுனர் ஹாட், 2021, தில்லி


ஹுனர் ஹாட், 2021, தில்லி


ஹுனர் ஹாட், 2021, தில்லி


ஹுனர் ஹாட், 2021, தில்லி


ஹுனர் ஹாட், 2021, தில்லி


ஹுனர் ஹாட், 2021, தில்லி


தங்க இழைகள் கொண்டு தயாரித்த முகக் கவசம்...
ஹுனர் ஹாட், 2021, தில்லி


கார்பெட்... 
ஹுனர் ஹாட், 2021, தில்லி

*****

 

இந்நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

22 கருத்துகள்:

  1. படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக, தெளிவாக இருக்கிறது ஜி ‌‌.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்திருந்தது அறிந்து மகிழ்ச்சி கில்லர்ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. சுந்தர் நர்சரி கட்டிடம், செல்லம், ரோஜா, மெகாமேளம் ஆகியவை சட்டென கவனத்தைக் கவர்பவை.  அனைத்தையுமே ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறிப்பிட்ட சில படங்களும் மற்றவையும் பிடித்திருந்தது அறிந்து மகிழ்ச்சி ஸ்ரீராம். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. பதிவின் வழி பகிர்ந்துகொண்ட மலர்களின் நிழற்படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  4. தங்க இழைகள் கொண்டு தயாரித்த முக்கவசம் சூப்பர்.... சந்தனம் மிஞ்சினால்... பழமொழி நினைவுக்கு வருது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைவுக்கு வந்த பழமொழி.... ஹா ஹா ஹா ஹா... அளவுக்கு மிஞ்சினால்... என்ற பழமொழியும் நினைவுக்கு வருகிறது. பதிவு குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி நெல்லைத் தமிழன். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. படங்களை தாங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  6. அழகான படங்களுடன் அழகான பதிவு..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் பதிவும் தங்களுக்கும் பிடித்திருந்தது அறிந்து மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. பதிவின் படங்களும் மிக அழகுடன் கூடியவையாக உள்ளது. மலர்கள் படங்கள் அவ்வளவு அழகாக உள்ளது. பிரம்மாண்ட மிருதங்கம் வியக்க வைக்கிறது. அதைவிட தங்க இழைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட முக கவசம் வியப்பு. இனி இதிலும் பணக்காரர்கள் போட்டி போடலாம்..:)

    படங்கள் அத்தனையும் தெளிவான விபரங்களுடன் அழகாக உள்ளன. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. இன்றைய வாசகமும் பதிவு வழி பகிர்ந்துகொண்ட படங்களும் உங்களுக்கும் பிடித்தது தெரிந்து மகிழ்ச்சி. தங்க இழைகள் கொண்டு முகக் கவசம் தயாரிப்பது தமிழகத்தில் இருந்து வந்த ஒரு கண்காட்சியாளர். அவரிடம் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தோம். இதற்கு வரவேற்பும் இருப்பதாக சொன்னார். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  8. க்ரானைட் கல்லில் குக்கர் பாரமாக இருக்குமல்லவா?
    எப்படி எல்லாம் செய்கிறார்கள் தங்க இழை முகக் கவசம் ? . முகக் கவசம் ஒரு தடவை உபயோகித்து வீசவேண்டிய பொருள் அல்லவா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குக்கர் ஒரு மாதிரி தான். சிறிய அளவில் இருந்தது. அதுவே பாரமாகவே இருந்தது. முகக் கவசம் ஒரு முறை உபயோகித்து வீச வேண்டியதுதான் என்றாலும் இந்த மிகக் கவசம் தங்க இழைகள் கொண்டு தயாரிக்கப்பட்டது என்பதால் வீசி விட வாய்ப்பில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி மாதேவி.

      நீக்கு
  9. படங்கள் அத்தனையும் செம வெங்கட்ஜி!

    கிரானைட்டில் குக்கர்!!!!!!!, சுந்தர் நர்சரி அந்த ஆங்கிளில் எடுத்த படம், ரோஸ், செல்லம்!!!, மிருதங்கம்? மத்தள்ம? பூக்கள் இவை அனைத்தும் டக்கென்று பார்க்க வைத்தது. ஷோகேஸ் பொருட்களும் செம அட்ராக்டிவ்!

    தலைகுனிந்த ரோஸ் - ஜப்பானிய ஸ்டைலில் வெல்கம் சொல்கிறதோ?!!!!

    அனைத்தும் ரசித்தேன் ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் பகிர்ந்து கொண்ட நிழற்படங்கள் உங்களுக்கும் பிடித்தது அறிந்து மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  10. முதல் படம் ஆச்சரியம். ரொம்ப வெயிட்டாக இருக்குமோ தூக்க முடியுமா?

    சுந்தர் நர்ஸரி கட்டிடம் மிக அழகாக இருக்கிறது. எடுத்த விதமும்.

    எல்லாமே அழகாக வந்திருக்கிறது. ரசனை மிக்க படங்கள்

    துளசிதரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிரானைட் கல் குக்கர் சிறியதுதான். ஒரு மாதிரிக்காக செய்து வைத்திருந்தார்கள் துளசிதரன் ஜி. மற்ற நிழற்படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி.

      நீக்கு
  11. தங்க இழைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட முகக்கவசம் - ஆஆஆஆஅ செம விலையா இருக்கும் என்று நினைக்கிறேன். இப்படியும்.....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகக் கவசம் விலை அதிகம் தான் இருக்கும். கேட்பதற்கே காசு கேட்பார் என்று நினைத்ததால் விலையை கேட்கவில்லை.... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....