திங்கள், 14 பிப்ரவரி, 2022

வாசிப்பனுபவம் - கத ஒண்ணு சொல்லட்டுமா - கல்யாண் ஆனந்த்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட நிழற்பட உலா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

வயது செல்லச் செல்ல தோல் சுருங்குகிறது; ஆனால் மகிழ்ச்சியை விட்டுவிட்டால் வாழ்வே சுருங்கிவிடுகிறது - சாமுவேல் ஸ்மைல்ஸ்

 

******




சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக, கடந்த ஜூன் மாதத்தில் நான் படித்த, முகநூலில் கருத்துரை பகிர்ந்து கொண்ட ஒரு மின்னூல் கல்யாண் ஆனந்த் அவர்கள் எழுதிய கத ஒண்ணு சொல்லட்டுமா எனும் நாவல். அந்த மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்! 

 

வகை: சிறுகதைத் தொகுப்பு

வெளியீடு: அமேசான் கிண்டில்

பக்கங்கள்: 100

விலை: ரூபாய் 49/-

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:

 

கத ஒண்ணு சொல்லட்டுமா: Katha onnu sollatuma (Tamil Edition) eBook : Ananth, Kalyan: Amazon.in: Kindle Store

 

******* 

 

வாசிப்புப் போட்டி - சஹானா இணைய இதழில்!  போட்டிகளில்  வெற்றி பெறுகிறோமோ இல்லையோ, நூல்களை வாசிக்க இது ஒரு வாய்ப்பு. கூடுதலாக புதிய எழுத்தாளர்களுக்கும் மேலும் எழுத, சிறப்பாக எழுத ஒரு தூண்டுதலாக அமைய இந்த வாசிப்புப் போட்டிகள் ஒரு வழியாக இருக்கும்.  புதிது புதிதாக நிறைய பேர் எழுத வருகிறார்கள்.  தொடர்ந்து அவர்களை மெருகேற்றிக் கொள்ள வேண்டியதை அவர்களும் உணர வேண்டும். தொடர்ந்து வாசிக்கவும் வேண்டும்!  அவர்களது நூல்களை வெளியிடுவதோடு, மற்றவர்களின் எழுத்தையும் வாசிக்கும்போது தான் அவர்களது எழுத்தும் மெருகேறும் - இதனை இப்போதைய இணைய எழுத்தாளர்கள் உணர்ந்து கொள்வது நல்லது!  பெரும்பாலானவர்கள், தங்களது நூல்களை வெளியிட்டு அதற்கு யாரும் வருவதில்லை என்று குறைபட்டுக் கொள்கிறார்கள் - அவர்கள் அடுத்தவர்களது எழுத்தை வாசிப்பதும் இல்லை, வாசித்தால் அது குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொள்வதும் இல்லை என்பது ஒரு விதத்தில் வேதனையே. 

 

சரி இன்றைய வாசிப்பனுபவத்திற்கு வரலாம்.  கத ஒண்ணு சொல்லட்டுமா என்ற தலைப்பில் சொல்லி விட்டு, ஒன்றாக இல்லாமல் சில சிறுகதைகளைச் சொல்ல முயற்சித்து இருக்கிறார் நூலாசிரியர் கல்யாண் ஆனந்த்.  இந்தத் தொகுப்பில் இருக்கும் கதைகள் தனது கற்பனைக் கதாபாத்திரங்களுக்கு நடந்த உண்மைச் சம்பவங்கள் என்று சொல்லி இருக்கிறார்.  கதையா இல்லை உண்மையா என்பதை நாம் ஆராயாமல் விட்டு விடலாம்!   சம்பவங்களை கதை போலச் சொல்லும் இந்த முயற்சியில் சில கதைகளில் சிறப்பாகவே எழுதி வெற்றி பெற்றிருக்கிறார்.  திருடா டாருதி என்ற கதையும் அதைச் சொன்ன பாங்கும் சிறப்பு - இப்படி முதலிருந்து படித்தால் ஒரு முடிவும், கடைசியிலிருந்து பின்னோக்கிப் படித்தால் வேறொரு முடிவும் வரும் விதமாக அமைத்த பாங்கு நன்று.  

 

வித்தியாசமான களங்களில் அமைத்த சிறுகதைகளை தனது இந்தத் தொகுப்பில் சேர்த்து அமேசான் வழி வெளியிட்டு இருக்கிறார்.  சில கதைகள் இன்னும் கொஞ்சம் முயற்சித்து எழுதி இருந்தால் சிறப்பாக வந்திருக்கும்.  தொகுப்பில் இருக்கும் சில கதைகள் நன்றாகவே இருக்கின்றன.  அவரே சொன்னது போன்று, இது அவரது முதல் வெளியீடு என்பதால் சில பிழைகள் இருக்கலாம்! தவறில்லை.  தனது வாசிப்பையும் விரிவு செய்து, தொடர்ந்து எழுத்தை மேம்படுத்திக் கொண்டு மேலும் பல நல்ல கதைகளை எழுதி வெளியிட, வெற்றி பெற அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள் கல்யாண்.

 

*******

 

எங்களது இல்லத்திலிருந்து, நானும், எனது இல்லத்தரசியும் இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே.  முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!  

 

சந்தித்ததும் சிந்தித்ததும்: மின்புத்தகங்கள்...

 

மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

18 கருத்துகள்:

  1. கற்பனைக் கதாபாத்திரங்களுக்கு நடந்த உண்மைச் சம்பவங்கள்!  நல்ல வார்த்தையாடல்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. நல்ல வாசிப்பனுபவம். உங்களால் நாங்களும் வாசித்த உணர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  5. வயது செல்லச் செல்ல தோல் சுருங்குகிறது; ஆனால் மகிழ்ச்சியை விட்டுவிட்டால் வாழ்வே சுருங்கிவிடுகிறது - சாமுவேல் ஸ்மைல்ஸ்//

    நல்ல வாசகம். சொன்னவரின் பெயரிலேயே ஸ்மைல்ஸ்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. அவர்களது நூல்களை வெளியிடுவதோடு, மற்றவர்களின் எழுத்தையும் வாசிக்கும்போது தான் அவர்களது எழுத்தும் மெருகேறும் - இதனை இப்போதைய இணைய எழுத்தாளர்கள் உணர்ந்து கொள்வது நல்லது! பெரும்பாலானவர்கள், தங்களது நூல்களை வெளியிட்டு அதற்கு யாரும் வருவதில்லை என்று குறைபட்டுக் கொள்கிறார்கள் - அவர்கள் அடுத்தவர்களது எழுத்தை வாசிப்பதும் இல்லை, வாசித்தால் அது குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொள்வதும் இல்லை என்பது ஒரு விதத்தில் வேதனையே. //

    யெஸ் டிட்டோ...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  7. தனது கற்பனைக் கதாபாத்திரங்களுக்கு நடந்த உண்மைச் சம்பவங்கள் என்று சொல்லி இருக்கிறார். //

    அட! வித்தியாசமான வரி!

    //திருடா டாருதி என்ற கதையும் அதைச் சொன்ன பாங்கும் சிறப்பு - இப்படி முதலிருந்து படித்தால் ஒரு முடிவும், கடைசியிலிருந்து பின்னோக்கிப் படித்தால் வேறொரு முடிவும் வரும் விதமாக அமைத்த பாங்கு நன்று. //

    ஆஹா இதுவும் வித்தியாசமாக இருக்கிறதே அதற்கேற்ப தலைப்பையும் வைத்து~!!!

    கிண்டிலில் இருந்து சில ஃப்ரீ புத்தகங்கள் எடுத்து வைத்திருக்கிறேன். வாசிக்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  8. வித்தியாசமான களத்தில் அமைந்த கதை என்று சொல்லி இருக்கிறீர்கள் படிக்க நல்லதொரு அனுபவமாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு
  9. வித்தியாசமான ஒருகதை இருப்பது தெரிகிறது உங்கள் விமர்சனத்தில்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....