ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

தலைநகர் தில்லி - நிழற்பட உலா - பகுதி ஒன்று

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

நாம் காட்டும் பணிவிற்கும் மரியாதைக்கும் பிரதிபலனாக ஏதேனும் ஒரு நன்மையைப் பெறவேண்டும் என்று எதிர்பார்ப்போம் எனில் நம்மிடம் உண்மையான அன்பு உருவாகாது - சுவாமி விவேகானந்தர்.


******

 

சில வாரங்களுக்கு முன்னர் (டிசம்பர் மாத கடைசியில்) எனது மூத்த சகோதரியும், அவரது மகன், மகள் என மூவராக தலைநகர் தில்லி வந்திருந்தார்கள்.  அவர்கள் வந்த சமயத்தில், தலைநகரிலும், அருகில் உள்ள சில இடங்களிலும் சுற்றி வந்தோம். அந்த சமயத்தில், நானும், எனது சகோதரியின் மகனும் எடுத்த சில புகைப்படங்கள் இந்த ஞாயிறும், அடுத்த ஞாயிறும் வெளிவரும்.  ஏற்கனவே அவர்கள் வந்த சமயத்தில் சாப்பிட்ட/எடுத்த உணவுப் பண்டங்களின் படங்களை இந்தப் பதிவில் பகிர்ந்து கொண்டது நினைவில் இருக்கலாம்! வாருங்கள், இந்த ஞாயிறில் சில நிழற்படங்களை பார்த்து ரசிக்கலாம்!


 


தேநீர் குடிக்கலாமா? என யோசிக்கிறாரோ?


வியர்வையைத் துடைத்துக் கொண்டு செல்கிறாரோ?


சம்மட்டியால் அடித்து வேலை செய்யும் ஒரு பெண்மணி...


விஸ்வகர்மா சிலை...


நுழைவாயிலில் அலங்காரங்கள்...


வாயிலில் பொம்மைகள்...


நுழைவாயில் அலங்காரங்கள் இன்னுமொன்று...


பங்க்ளாசாஹேப் குருத்வாரா நுழைவாயில்...


நிலம் முழுவதும் கடுகுச் செடி - பூத்துக் குலுங்குகிறது...


ஏனிந்த தண்டனை...


இதுவும் கடுகுச் செடிதான்....


ஒற்றைக்கால் தவமோ?


குடும்பத்துடன் ஒரு உலா!


கழைக்கூத்தாடி - வயிற்றுப் பிழைப்புக்காக!




ஒட்டகம் - வாயில் கட்டு!


டீ கெட்டில்!

*****

 

இந்நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

28 கருத்துகள்:

  1. முதலில் இருப்பது சிலை இல்லை என்று நினைக்கிறேன்!!  (தேநீர் குடிக்கக் காத்திருக்கும் பெரியவர்)  எல்லாப் படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் படம் சிலை அல்ல. தனது கடைக்கு வெளியில் அமர்ந்திருந்த பெரியவர். படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பானும்மா. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய வாசகம் அருமை. அனைத்துப் படங்களும் அழகாக உள்ளது.

    விஸ்வகர்மா சிலை, நுழைவாயில் குடை, மற்றும் மஞ்சள் பூ அலங்காரங்கள். மற்ற சிலைகள் என அத்தனையும் நன்றாக உள்ளது.

    "ஏன் இந்த தண்டனை" பாவம்..! பொம்மையாக இருந்தாலும் குரலெழுப்பி கேட்கிறது.

    அந்த வாத்திற்கு ஒற்றை காலில் நின்றபடி என்ன பிரார்த்தனையோ?

    வயிற்று பிழைப்பிற்காக கழைக்கூத்தாடி என்னவெல்லாம் செய்து கஸ்டப்பட வேண்டியுள்ளது? பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. படங்கள் குறித்து தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி. ஹிந்தியில் "பாபி பேட் கா சவால் ஹே!" என்று சொல்வது உண்டு. தமிழில் "எல்லாம் இந்த ஒரு ஜான் வயிற்றுக்காக தான்" என்று சொல்வது போல... எல்லா உழைப்பாளிகளும் இப்படி கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கே.பி. ஜனா ஐயா

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி சீனி.

      நீக்கு
  6. எல்லாப் படங்களும் அழகு ஜி! கடுகுச் செடிகள் நிலப்பரப்பு முழுவதும் அந்தப் படம் செம...மஞ்சள் குடைகள் வாவ் என்ன ஒரு கற்பனை!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. மஞ்சள் குடைகள் நல்ல கற்பனை தான். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. முதல் படம் - அப்பெரியவர் ஆராம்ஸே!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் படம் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதா ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. கழைக்கூத்தாடி எப்படி இப்படி பேலன்ஸ் செய்கிறார் ஆச்சரியம்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கழைக்கூத்தாடி படமாக மட்டுமல்ல காணொளி ஆகவும் எடுத்திருக்கிறோம். முடிந்தபோது பதிவில் சேர்க்கிறேன் கீதா ஜி. கடினமான உழைப்பு தான். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  10. படங்கள் மிகவும் அழகாக, தெளிவாக இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் தங்களுக்கும் பிடித்த விதத்தில் அமைந்தது அறிந்து மகிழ்ச்சி கில்லர்ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  11. படங்கள் அனைத்தும் அழகு.. அருமை..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் தாங்களும் ரசிக்கும்படி அமைந்தது அறிந்து மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  12. படங்கள் அனைத்தும் அழகாக இருக்கின்றன. குடைகளுக்கு இப்படியும் ஒரு கலைவடிவ பயனுண்டு என்று தெரிகிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவைகளுக்கு இப்படியும் ஒரு கலை வடிவ பயன் இருப்பது நல்லது. எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் இல்லையா? படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்திருந்தது அறிந்து மகிழ்ச்சி மாதேவி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  14. அருமையான படங்கள். கடுகுச் செடிகள் கண்களைக் கவருகின்றன. கழைக் கூத்தாடிகள் திறமை மிகுந்தவர்கள். தேவையான அளவுக்கு வருமானம் வருவது கேள்விக் குறியாக இருப்பினும் வேடிக்கைக் காட்டும் தொழிலை விடாமல் தொடருகிறார்கள். வாய் கட்டப்பட்ட ஒட்டகம்!

    நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....