சனி, 19 பிப்ரவரி, 2022

மீண்டும் மேகாலயா - பயணத் தொடர் - பகுதி நான்கு - நிர்மலா ரங்கராஜன்


 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட மீண்டும் மேகாலயா - பகுதி மூன்று பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

WITHOUT CROSSING THE WORST SITUATIONS, NO ONE CAN TOUCH THE BEST CORNERS OF LIFE.  SO DARE TO FACE ANYTHING IN LIFE!

 

******

 

மீண்டும் மேகாலயா தொடரின் நான்காம் பகுதி இந்த நாளின் வெளியீடாக…  வாருங்கள் திருமதி நிர்மலா ரங்கராஜன் அவர்கள் வார்த்தைகளில் அவர்களது அனுபவங்களை படித்து ரசிக்கலாம்  - வெங்கட் நாகராஜ், புது தில்லி. 

 

******

 

மீண்டும் மேகாலயா - பகுதி நான்கு - நிர்மலா ரங்கராஜன் 



 

Cherrapunjee ல் நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்த இடம் LAIAIKAR INN. மிகவும் ரம்மியமான இடம்.  அந்த இடத்தை பார்க்கும் போதே ஒரு அமைதியான குதூகலம் மனதுக்குள்.  அவரவர் அறையில் பொருட்களை வைத்து விட்டு தேனீர் அருந்தி க் கொண்டே கொஞ்சம் ஓய்வு எடுத்தோம். இரவு சாப்பிட ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

 

நாங்கள் சொன்றது கிருத்துவ பண்டிகை தினத்தில். எனவே அன்று நூடூல்ஸ் மட்டுமே இருந்தது. அது எப்படி நமக்கு சரிப்பட்டு வரும்? எனவே வெளியே சென்று ஏதாவது உணவகத்தில் சாப்பாடு வாங்கி வருவதாக மூன்று பேர் கிளம்பியாச்சு. அதுவரை நாம் ஏன் சும்மா இருக்க வேண்டும்? அங்கே அக்கம் பக்கம் சற்று சுற்றி பார்த்து வரலாம் என்று பெண்கள் குழு புறப்பட்டு சென்றோம். மாலை நேரத்தில் இனிய தென்றல் காற்றில் சாலையில் காலார நடப்பது எவ்வளவு இன்பமாக இருந்தது!

 

எந்த பரபரப்பும் இன்றி வாகன இடையூறும் இல்லாமல் காற்று மாசு சம்மந்தமான அவஸ்தை இல்லாமல் வெகு தூரம் நடந்தோம். ஒரு இடத்தில் நிறைய ஆண்கள் ஒரு வீட்டின் முன் வரிசை வரிசையாக சென்று கொண்டு இருந்தனர். எங்களுக்கு ஒன்றும் விளங்க வில்லை. (பிறகுதான் தெரிய வந்தது அது மதுபானம் விற்பனை மையம் என்று 🤪) நேரம் ஆக ஆக சற்று பயம் வர ஆரம்பிக்கவே நாங்கள் இருப்பிடம் நோக்கி திரும்பினோம். சற்று நேரத்தில் உணவு வரவே இரவு சாப்பாடு முடித்து அனைவரும் சற்று அரட்டை விளையாட்டு என்று நேரம் கழித்தோம். அன்றைய தினம் இனிமையாக முடியவே அடுத்த நாளை வரவேற்க சற்று ஓய்வு எடுக்கலாம் என்று உறங்க சென்றோம்.

 

பள்ளி பருவத்தில் Cherrapunjee பற்றி படிக்கும் போது அதை வைத்து எனக்குள் ஒரு கற்பனை. அங்கே மழை அதிகமாக இருக்கும் என்பதால் அங்கே உள்ள மக்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கும்?

 

எப்பொழுதும் இருளாகவே இருக்குமோ? சூரியன் எப்போது வருவார்?

 

கொஞ்சம் நாட்கள் மழை பொழியும் நம் இடத்திலேயே நாம் எவ்வளவு சிரமப்படுகிறோம்? எப்போது இந்த மழைக் காலம் முடியும் என்று இருக்கிறதே அங்குள்ளவர்களின் நிலை என்னவாக இருக்கும்?

 

என்றெல்லாம் நினைத்து கொள்வேன். என் சந்தேகங்களை எல்லாம் நேரில் பார்த்து தெளிவு பெற போவதாக நினைத்துக் கொண்டு தான் Cherrapunjee புறப்பட்டேன்.(இதற்குதான் Cherrapunjee போக ஆசை பட்டேன்.)ஆனால் நாங்கள் திரும்பும் வரையிலும் கூட மழையே இல்லை. Cherrapunjee போய் மழையே பார்க்காமல் வந்தது கொஞ்சம் ஏமாற்றம் தான். இருந்தாலும் ஒரு புறம் மகிழ்ச்சி 🤗

 

மழை இல்லாததால் எந்த இடையூறும் இன்றி சுற்றி பார்க்க முடிந்தது👍



 

பயணத்தின் மூன்றாவது நாள் Cherrapunjee யிலிருந்து பங்களாதேஷ் எல்லையான Dawki செல்ல வேண்டும். காலையில் சிற்றுண்டியை (உண்மையிலேயே அதுதாங்க சிற்றுண்டி. ரொட்டி துண்டுகள் வெண்ணெய் ஜாம்) முடித்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம்.  சென்று சேர்ந்த இடம் Jingmaham Living Root Bridge. வாகனத்தில் இருந்து இறங்கிய பின்னர் நடந்து செல்ல வேண்டும்.  பெரிய பெரிய கூழாங்கற்களால் அமைக்கப்பட்ட  படிகள். சாதாரணமாக நடக்கும் போதே வழுக்கி விடுகிறது. கவனமாக இறங்க வேண்டும்.  சிலருக்கு அது சற்று சிரமமானதாக இருக்கும். சிரமத்தை பார்த்தால் அற்புதமான ஒரு இயற்கை அதிசயத்தை பார்க்க முடியாமல் போனதற்கு வருந்த வேண்டி வரும். 



 

அங்கே பாலத்தில் காவலுக்கு நிற்பவர்கள் நம்மை ஒரு நிமிடம் கூட அந்த பாலத்தில் நிற்க விடுவதில்லை. Jeruganti நிலைமைதான். மற்ற இடங்களில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஆட்டம் போடலாம். சின்ன சின்னதாய் கொட்டும் அருவியின் அருகே நின்று உட்கார்ந்து என்று நிறைய புகைப்படங்கள். தண்ணீரில் நடந்து நனைந்து குழந்தைகள் மிகவும் சந்தோஷமாக இருந்தார்கள். மேலும் எங்கே சென்றோம், என்ன அனுபவங்கள் கிடைத்தன போன்றவற்றை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  பயணத்தில் தொடர்ந்து வாருங்கள் நண்பர்களே

 

நட்புடன்

 

நிர்மலா ரங்கராஜன்

புது தில்லி.

 

*****

 

இந்நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

16 கருத்துகள்:

  1. மதுக்கடைகளுக்கு எங்கும் குறைவில்லை என தெரிகிறது!!!

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கும் நிறைந்திருக்கிறது மதுக் கடைகள்... இதற்கு எங்கேயும் குறைவே இல்லை ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. அங்கும் டாஸ்மாக் ?
    சுவாரஸ்யமான தொடர்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடரின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. கிடைத்ததை சாப்பிட்டு பயணம் இனிமையாக தொடர்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிமையான பயணம் தான் தனபாலன். பயணத்தில் தொடர்ந்து வருவதற்கு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பாலமும் அருவியும் கொண்டாட்டமான இடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி தரும் இடங்கள் தான் மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. சிரபுஞ்சி...பாடப்புத்தகங்களில் படித்ததை இங்கு காணும் வாய்ப்பு. மிகவும் சிறப்பு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்த விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. சுவிட்சர்லாந்தை விட மேகாலயா , சிக்கிம் போன்ற பகுதிகள் மிகவும் அழகு என்று கேள்வி பட்டுள்ளேன். அது உண்மை தான் போல் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தியாவில் நிறைய அழகான இடங்கள் உண்டு குமார் ராஜசேகர் ஜி. ஹிந்தியில்/உருதுவில் “ஜன்னத்” என்று சொல்வதுண்டு - அப்படியான அழகான இடங்கள் இந்தியாவில் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. மலை உச்சிக்குப் போனால் கூட மதுக்கடை இருக்கும் போல!!

    அழகான இடம்...அழகான பயணம்..உங்கள் விவரிப்பும் அருமை.

    லிவிங்க் ரூட் ப்ரிட்ஜ் - இதை ஒவ்வொருவர் விவரிக்கும் போதும் - வெங்கட்ஜி அதன் பின் மேகங்களின் ஆலயம் மேகாலயா என்று பயணத் தொடர் எழுதிய சுப்ரமணியன் ஜி - பார்க்கும் போது எப்போது இங்கு செல்ல வாய்ப்பு கிடைக்குமோ என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது.. தொடர்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலை உச்சியிலும் மதுக்கடை - உண்மை தான். எங்கேயும் எப்போதும் கிடைப்பது மது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  8. சிரபுஞ்சி பூகோளப் பாடத்திலும், பொது அறிவிலும் படித்த இடம். அது எப்படி இருக்கும் என்று நானும் வியந்ததுண்டு. உங்கள் பதிவின் படங்கள் மூலம் இப்போது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....